Search
  • Follow NativePlanet
Share
» »வாசகர் கேள்விகள் - எது பெஸ்ட் ஊட்டியா? கொடைக்கானலா?

வாசகர் கேள்விகள் - எது பெஸ்ட் ஊட்டியா? கொடைக்கானலா?

By Udhaya

மலைகளின் அரசி என்று அழைக்கப்படும் ஊட்டியும் சரி, கோடைக்கு உகந்த கொடைக்கானலும் சரி இந்தியாவின் சிறந்த 10 மலைப் பிரதேச சுற்றுலாத் தளங்களில் வந்துவிடும் என்பதில் யாருக்கும் ஆச்சர்யம் இருக்காது. ஆனால், இந்த இரண்டில் எது பெஸ்ட் என்ற சந்தேகம் நம்மில் எல்லாருக்கும் வரும். பள்ளி கல்லூரியில் சுற்றுலா செல்ல ஏற்பாடு நடக்கும்போது, நம்மில் சிலர் கொடைக்கானலுக்கு போகலாம் என்போம். சிலர் ஊட்டிக்கு போகலாம் என்போம். அப்படி பழைய நினைவுகளை கொஞ்சம் திரும்பி பார்த்தபடியே ஆழ்ந்து யோசித்தால் இரண்டுமே சிறப்பான இடங்கள்தானே.. பெஸ்ட் எது என்று எப்படி சொல்வது என்று நமக்குள்ளேயே குழப்பம் உருவாகும்.

பச்சை பசேலென்ற மலைகளும், காடுகளும், வெள்ளியை உருக்கி வெளியேற்றிவிட்டாற் போல வரும் அருவிகளும், மரங்களும், விலங்குகளும், பாடி திரியும் பறவைகளும் ஊட்டியிலும், கொடைக்கானலிலும் சிறப்பாகவே இருக்கின்றன. எல்லாம் சரி ஆனா ஒரு இடத்துக்குதான் போகணும்.. எந்த இடத்துக்கு போகலாம் என்றால், வாருங்கள் ஊட்டி கொடைக்கானலில் சுற்றுலா செல்ல எந்த இடம் சிறந்தது என்று இந்த பதிவில் காண்போம்.

ஊட்டி

ஊட்டி

நீலகிரி மலையால் சூழப்பட்ட ஒரு சூப்பரான நகரம் இது. காதலர்கள் அதிகம் விரும்பும் ஒரு அழகான நகரம் ஊட்டி. கோயம்புத்தூரிலிருந்து அதிக அளவில் வருகை தரும் இளைஞர்கள் ஊட்டியில் சுற்றித் திரிந்துவிட்டு, பொழுது சாய்ந்ததும் திரும்புகிறார்கள். இது காதலை வளர்க்கும் நகரமாகவும், ஹனிமூனுக்குகந்த நகரமாகவும் உள்ளது.

12 வருடங்களுக்கு ஒரு முறைப் பூக்கும் நீல நிறம் கொண்ட குறிஞ்சிப் பூ, இங்கு பூத்துக் குலுங்கும் போது, மலை முழுதும் நீல நிறமாக காட்சி அளிக்கிறது.

 கொடைக்கானல்

கொடைக்கானல்

ஊட்டியைப் போலவே கொடைக்கானலும் தமிழகத்தின் மிக முக்கிய கோடை வாழிடமாகவும், மலைச் சுற்றுலாத் தளமாகவும் உள்ளது. மழையை அழகாக்கும் மலைகளையும், மலையில் நின்று அழகை ரசிக்கும் மழையையும் இங்கு ஒரு சேரக் கண்டால் மிகவும் புத்துணர்ச்சியாக இருக்கும்.

ஊட்டி Vs கொடைக்கானல்

ஊட்டி Vs கொடைக்கானல்

கோயம்புத்தூர் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு ஊட்டி அருகில் இருப்பதால் சென்று வர எளிதாகிறது. அதே நேரத்தில் தென் தமிழகத்து மக்கள் கொடைக்கானலையே அதிகம் விரும்புகின்றனராம்.

ஊட்டியில் அதிக சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. அதே நேரத்தில் கூட்டம் அதிகமாக இருப்பது போல் உணர்வதாக மக்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் கொடைக்கானலில் அந்த அளவுக்கு கூட்டம் இருப்பதில்லை. பொறுமையாக சுற்றிப்பார்த்துவிட்டு வரலாம் என்கிறார்கள்.

ஊட்டி மலைகளின் அரசி என்று அழைக்கப்படுகிறது. கொடைக்கானலுக்கு மலைகளின் இளவரசி என்று பெயர்.

ஊட்டியில் எத்தனை இடங்கள்

ஊட்டியில் எத்தனை இடங்கள்

1 ஊட்டி மலர் கண்காட்சி

2 வென்லாக் டவுன்ஸ்

3 கிளென்மார்க்

4 தாவரவியல் பூங்கா

5 பனிச்சரிவு ஏரி

6 முக்கூர்த்தி

7 ஊட்டி ஏரி

8 பைக்காரா ஏரி

9 தொட்டபெட்டா

என ஒன்பது இடங்கள் நீங்கள் ஊட்டியில் கட்டாயம் காணவேண்டிய இடங்களாக இருக்கின்றன. இன்னும் சில இடங்கள் இருந்தாலும் உங்கள் நேர மேலாண்மையைப் பொறுத்து அவற்றிற்கு முன்னுரிமை கொடுக்கலாம்.

மலர் கண்காட்சி

மலர் கண்காட்சி

ஊட்டியில் மலர் கண் காட்சி, வருடா வருடம் மே மாதம் பொடானிக்கல் கார்டனில் நடைபெறும். பல்வேறு வகையான மலர்கள் வைக்கப்படுவதால் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் இதைக் காண வருகின்றனர். 150 வகையான உள்நாட்டு மற்றும் இறக்குமதி செய்யப்பட்ட மலர்கள் இந்தக் கண்காட்சியில் உள்ளதால் நீலகிரி மலர் கண் காட்சி மிகவும் பிரபலமாக உள்ளது. வித்தியாசமான மற்றும் அரிய மலர்கள் கூட இங்கு இருக்கும்

ChefAnwar1

வென்லாக் டவுன்ஸ்

வென்லாக் டவுன்ஸ்

வென்லாக் டவுன்ஸ், ஊட்டியின் அருகில் படப்பிடிப்புகளுக்குப் பெயர் போன ஒரு அழகான இடம். திரண்டிருக்கும் மலைகள், பச்சைப் பசேல் வயல்கள், திறந்த வெளிகள் என முடிவில்லாமல் பரந்திருக்கும் பசுமை உங்கள் இதயத்தை நிரப்பும். வென்லாக் டவுன்ஸ் சுமார் 20,000 ஏக்கர் பரப்பளவில், கம்பீரமாக நிற்கும் யூக்கலிப்டஸ் மரங்களின் மத்தியில் உள்ளது.

San95660

க்ளென்மார்கன்

க்ளென்மார்கன்

க்ளென்மார்கன் - ஊட்டியில் இருந்து சுமார் 35 கிமீ தொலைவில் அமைந்துள்ள இந்த கண்ணுக்கினிய கிராமம், சுற்றுலா பயணிகள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ளது. கிராமத்தில் சிறப்பு தேயிலை தோட்டங்கள் உள்ளன. க்ளென்மார்கன் கிராமத்தில் ஒரு பிரபலமான ஈர்ப்பு மின் நிலையத்திலிருந்து கிராமத்திற்கு செல்லும் ஒரு கயிற்றுப்பாதை. 3 கி.மீ. நீண்டுள்ள இந்தக் கயிற்றுப்பாதை 980 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.

Kishore1902

 கொடைக்கானலில் எத்தனை இடங்கள்

கொடைக்கானலில் எத்தனை இடங்கள்

1 கொடைக்கானல் ஏரி

2 ப்ரயான்ட் பூங்கா

3 பேரிஜம் ஏரி

4 பைன் காடுகள்

5 தற்கொலை முனை

6 தூண் பாறைகள்

7 கரடி அருவி

8 கோக்கர்ஸ் வாக்

9 குனா குகை

10 வட்டக்கனல் அருவி

11 தலையாறு அருவி

12 கொடைக்கானல் பழனி டிரெக்கிங்

13 டால்பின் நோஸ்

14 மோயர் முனை

15 அமைதிப் பள்ளத்தாக்கு

16 வெள்ளி நீர்வீழ்ச்சி

17 குறிஞ்சி கோயில்

18 கொடைக்கானல் நுண்ணோக்கு மையம்

19 அப்பர் லேக் காட்சிமுனையம்

என அதிக இடங்கள் சுற்றிப்பார்க்க இருக்கின்றன. நேர மேலாண்மையைப் பொறுத்து இவை அனைத்தையும் பார்க்கலாம்.

பியர் ஷோலா நீர்வீழ்ச்சி

பியர் ஷோலா நீர்வீழ்ச்சி

பியர் ஷோலா நீர்வீழ்ச்சி காப்புக் காட்டினுள் அமைந்துள்ளது. இந்த உயரமான நீர்வீழ்ச்சி பேருந்து நிலையத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் உள்ளது. இந்த அருவி இப்பெயர் பெறக்காரணம், முன்னாட்களில் கரடிகள் இங்கே தண்ணீர் பருக வந்து செல்லுமாம். மிகவும் அமைதி சூழ்ந்த அழகான இடம் இது. இந்த அருவியை வந்தடைய கூறிய நடைபாதையில் ஏறிச் செல்ல வேண்டும். இயற்கை விரும்பிகள் செல்ல ஏற்ற இடம் இதுவாகும். பருவக்காலத்தின் போது எழில்மிகுந்து காணப்படும் இந்த அருவிக்கு அந்நேரம் செல்வதே மிகவும் பொருத்தமாக இருக்கும்.

தூண்பாறை

தூண்பாறை

தூண்பாறை கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. கொடைக்கானலில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களில் இதுவும் ஒன்று. இங்கே செங்குத்தாக காணப்படும் மூன்று பாறாங்கல்லை வைத்தே இந்த தலம் இப்பெயரைப் பெற்றது.

இந்த தூண்கள் 400 மீட்டர் உயரத்தில் உள்ளன. இந்த தூண்களின் உச்சியில் இருந்து பார்த்தால் இயற்கை வனப்புடைய நிலங்களைக் கண்டு மகிழலாம். இந்த தூண்களுக்குள்ள இடுக்குகள் மிகவும் ஆழமானது.

பிரையண்ட் பூங்கா

பிரையண்ட் பூங்கா

பிரையண்ட் பூங்கா, பேருந்து நிலையத்திலிருந்து 0.5 கி.மீ. கிழக்கே உள்ளது. இது நன்று பராமரிக்கப்பட்டு வரும் தாவரப் பூங்காவாகும். இந்த பூங்காவை திட்டமிட்டு 1908-ல் கட்டிமுடித்த எச்.டி. பிரையண்ட் என்ற காட்டிலாகா அதிகாரியின் பெயராலேயே இது அழைக்கப்படுகிறது. இப்பூங்காவில் பல வகையான குறுஞ்செடிகள், மரங்கள் மற்றும் கள்ளிச்செடிகள் வளர்க்கப்படுகின்றன. உச்ச பருவத்தின் போது வண்ணமயமான பூக்கள் இங்கு பூத்து குலுங்கும்.

Aruna

 தற்கொலை முனை

தற்கொலை முனை

தற்கொலை முனை என்ற பள்ளத்தாக்கு மிகவும் ஆழமான பள்ளத்தாக்கு. இதுவும் மிக ஆபத்தான இடம். இந்த பள்ளத்தாக்கு 5000 அடி ஆழம் கொண்டது. கொடைக்கானல் ஏரிக்கு மிக அருகாமையில் 5.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்த தலம். வைகை அணையை இங்கு இருந்தே கண்டு களிக்கலாம். இங்கு சுற்றித் திரியும் ஏரளமான குரங்குகள் சுற்றுலாப் பயணிகளை கவர்ந்திழுக்கும். முனையின் உச்சிக்கு படிகள் வழியாக ஏறிச் செல்ல வேண்டும்.

Parthan

ஊட்டி சாதகங்கள்

ஊட்டி சாதகங்கள்

ஊட்டியில் நிறைய சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. ஏரிகள், கண்காட்சிமுனையங்கள், நீர்வீழ்ச்சிகள், படகு சவாரி, குதிரையேற்றம் உள்ளிட்டவை சிறப்பானதாகும்

ஊட்டிக்கு அருகிலேயே பல சுற்றுலாத் தளங்கள் இருக்கின்றன. குன்னூர், கோத்தகிரி, பந்திப்பூர், கிளென்மார்கன் உள்ளிட்டவை அவற்றுள் சில.

உலகப் புகழ் வாய்ந்த நீலகிரி ஊட்டி மலை ரயிலில் நீங்கள் பயணிக்கலாம்

தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள் ஆகியவை மிகவும் எளிதாக கிடைக்கின்றன. இதனால் நம் பயணத்திட்டத்தை வெகு எளிதில் திட்டமிடலாம்.

Giri charan007

கொடைக்கானல் சாதகங்கள்

கொடைக்கானல் சாதகங்கள்

ஊட்டியை ஒப்பிடும்போது அதிகம் மாசுபடாத ஒரு இடம்.

சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அதிகம் இருக்காது.

கிராமங்களும் பொருளாதாரமயமாகிவிட்ட இந்த காலத்தில் கொடைக்கானல் கொஞ்சம் இயற்கைக்கு அருகில் இருக்கிறது. ஊட்டியை விட அதிக அளவில் இயற்கையை உணரமுடியும்.

குறைந்த கட்டண விடுதிகள், உணவுகள், பயணக் கட்டணம் பெரிய அளவில் இல்லை. அதனால் எளிதாக மக்கள் சுற்றுலா செல்வர்.

Shibulal1989 -

 பாதகங்கள்

பாதகங்கள்

ஊட்டி மிகவும் பொருளாதாரமயம், நகர்மயமாகிவிட்டது. இயற்கை அழிக்கப்பட்டு நவீனம் புகுத்தப்பட்டு வருகிறது. அதிக கூட்டம் இருப்பதால், அந்த அளவுக்கு ரிலாக்ஸாக இருக்கமுடியாது. அடுத்து அடுத்து என்று பரபரத்துக்கொண்டே இருக்கவேண்டும். கொடைக்கானலை ஒப்பிடும்போது கொஞ்சம் அதிகம் செலவாகும். பட்ஜெட் சுற்றுலாவுக்கு ஏற்றதல்ல.

அதே நேரத்தில் கொடைக்கானல், நிறைய சுற்றுலாத் தளங்களைக் கொண்டுள்ளது. அதனால் அனைத்தையும் பார்க்கமுடியாது. இல்லை எனில் அவசரப்பட்டு ஓடவேண்டும். விடுதிகள், உணவகங்கள், பயண கட்டணம் குறைவாகவே இருந்தாலும் அதிக அளவில் இல்லாதது நமக்கு சற்று ஏமாற்றத்தை தரும்.

சரி இதையெல்லாம் வச்சி நீங்க டூர் போக முடிவு பண்ணும்போது அலசி ஆராய்ஞ்சி எந்த ஊருக்கு போகணும்னு முடிவு பண்ணுங்க.. இப்ப பிளான் பண்ணீங்கன்னா கொடைக்கானலுக்கு போங்க. அடுத்த கோடை விடுமுறையில ஊட்டிக்கு போங்க...

இதுபோன்ற நிறைய கேள்விகள் உங்களுக்குள்ளயும் இருக்கும். தயங்காம கேளுங்க பதிலளிக்க நாங்க தயாரா இருக்கோம். மறக்காம மேல உள்ள பெல் பட்டன அழுத்தி நம்மள சப்ஸ்கிரைப் பண்ணிடுங்க. நோட்டிபிகேசன் தானா உங்கள தேடி வரும். உங்களுக்கு எந்த டிராவல் பிளேஸ் பத்தி தெரிஞ்சிக்கணும்னா நம்மளோட முகநூல் பக்கத்துல (தமிழ் நேட்டிவ் பிளானட்) கேளுங்க

Wikitom2

Read more about: travel ooty kodaikanal
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X