» »உலகின் பணக்கார கோவிலுக்கு ஒரு விசிட்!

உலகின் பணக்கார கோவிலுக்கு ஒரு விசிட்!

Written By: Staff

ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவில்

இந்தியாவின் மிகப் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவில்; அதுமட்டுமல்ல: தங்கம், வைரம், இன்னும்பிற பொக்கிஷங்களை குவியல் குவியலாக கொண்டிருக்கும் உலகின் மிகப் பணக்கார இந்துக் கோவில். சில வரலாற்று ஆய்வாளார்கள், இதுதான் உலகின் பணக்கார கோவில் என்றும்கூட சொல்கின்றனர்.

திருவனந்தபுரத்தின் முக்கிய ஈர்ப்பான ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவில் தினமும் எண்ணற்ற பக்தர்கள், சுற்றுலா பயணிகளை தன் வசம் ஈர்க்கிறது.

Padmanabha swamy temple

Sri Padmanabha Swamy Temple : PC :

கோவிலின் கட்டுமான அமைப்பு திராவிட-கேரள பாணி ஆகிய இரண்டின் கட்டுமான அமைப்புகளையும் கலந்து கட்டப்பட்டது. ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவிலின் சாயல் ஏறத்தாழ‌ கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆதிகேசவ பெருமாள் கோவில் போல் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

கோவிலில் உள்ள தங்கம் மற்றும் இன்னும் பிற ஆபரணங்களின் மதிப்பு 22 பில்லியன் டாலர்கள். இதில் இன்னொரு சுவாரஸ்யம்: மொத்தம் உள்ள 8 சுரங்க கிடங்குகளில் ஐந்துதான் திறக்கப்பட்டிருக்கிறது. ஏனைய மூன்றும் திறக்கப்படாமலேயே இது உலகின் பணக்கார கோவில் ஆகியது குறிப்பிடத்தக்கது.

Temple premises

Temple Premises - PC : Photo Courtesy: P.K.Niyogi

கோவிலின் பிரதான கடவுள் விஷ்ணு; சர்பமான ஆதிசேஷன் மீது அனந்த சயனமாக படுத்து கொண்டு பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார் விஷ்ணு.

கோவிலின் பிரதான சுவற்களில் இந்து புராணங்களான பிரம்மன் புராணம், வரஹ புராணம், ஸ்கந்த புராணம் மற்றும் மகா பாரதம் ஆகியன பொறிக்கப்பட்டிருக்கிறது.

வருடந்தோறும் இக்கோவிலில் பல திருவிழாக்கள் நடைபெறுகின்றன. இதில், மிகப் புகழ்பெற்றது லட்ச தீபத்திருவிழா.
காரணம் : கோவில் அலங்கரிக்கப்படும் அழகை காணவே பலர் வருகின்றனர். லட்சம் தீபங்களின் விளக்கொளியால் ஸ்ரீ பத்மநாபசுவாமி திருக்கோவில் கண்களை கூசும் அளவிற்கு பிரகாசித்து பார்ப்பவர்களை பிரமிக்க செய்கிறது.

Padmanabha temple

The temple at night! Photo Courtesy: Kerala Tourism

அறை எண் 6'இல் கடவுள் ?

இந்தக் கோவிலில் மர்மமாக இருப்பது அறை எண் 6; ஏன் ? இந்தக் அறையில்தான் பத்மநாபநாத சுவாமியின் தங்கச்சிலை, ஸ்ரீ சக்கிரம் மற்றும் ஏராளமான தங்கம் மற்றும் விலை மதிப்பில்லா ஆபரணங்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. இந்த அறையை இதற்கு முன் திறக்க எத்தனையோ முயன்றபோதும் கைகூடவில்லை. இந்த அறையைத் திறப்பவர் எவருக்கும் பெரிய தீங்கு வரும் என ஐதீகம் இருக்கிறது. இதனால் இன்று வரை இதை திறப்பதற்கு யாரும் துணியவில்லை.

அடுத்த முறை திருவனந்தபுரம் சொல்லும்போது வழக்கமான கோவில்தானே இதில் புதிதாய் பார்ப்பதற்கு என்ன இருக்கிறது என்று ஒரு வரலாற்று பிரமாண்டத்தை தவற விட்டுவிடாதீர்கள்.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்