» »பாஜக வெற்றிக்காக மோடி சென்ற எட்டு முக சிவன் கோயில் பற்றி தெரியுமா?

பாஜக வெற்றிக்காக மோடி சென்ற எட்டு முக சிவன் கோயில் பற்றி தெரியுமா?

Written By:

இந்தியாவில் எந்தவொரு தனிநபருக்கும் தனக்குரிய எந்த ஒரு விசயத்தையும் தேர்ந்தெடுத்துக்கொள்ள உரிமை உண்டு. தான் எந்த மதத்தை பின்பற்ற வேண்டும், எந்த சாமியை கும்பிடவேண்டும் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விருப்பம். அதே நேரத்தில் ஒருவரை இதைத்தான் செய்யவேண்டும் என்று யாராலும் கூற முடியாது. ஆனால் பொதுவாழ்க்கை என்று வந்துவிட்டால், எல்லா மதத்தினரையும் எல்லா இனத்தவர்களையும் அரவணைத்தே செல்லவேண்டும். தேர்தலை மனதில் வைத்து ஒரு சாராருக்கு சாதகமாகவும், மறுசாராருக்கு முதுகில் குத்தியும் இருக்கவும் கூடாது. கர்நாடக தேர்தல் நாள் நெருங்கிவிட்டது. இந்நிலையில் இங்கு எப்படியாவது ஆட்சியைப் பிடித்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் மோடி ஒரு கோயிலுக்கு சென்று வழிபடவிருக்கிறார் என்ற தகவல் தெரியவந்துள்ளது. அவர் எந்த கோயிலுக்கு செல்கிறார் தெரியுமா?

 பசுபதி நாத் லிங்க கோயில்

பசுபதி நாத் லிங்க கோயில்

சிவன் கோயில்தான். ஆனால் வீர சைவர்கள் லிங்காயத்துகள் கும்பிடும் வித்தியாசமான சிவன் கோயில் இது. இப்போது அரசு முறை பயணமாக நேபாளம் சென்றுள்ள மோடி, இந்த கோயிலுக்கு செல்லவிருக்கிறார் என்பது கூடுதல் தகவல்.

பாகமதி ஆற்றின் கிளையாற்றில் அதன் கரைகளில் அமைந்துள்ளது இந்த சிவன் கோயில். பசுபதி நாத் கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னம் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.

ஒரே நேரத்தில் 8 லட்சம் பேர் வரை இங்கு வருகை தருகிறார்கள். அந்த நாள் மஹாசிவராத்திரி ஆகும். பன்னிரெண்டு ஜோதிர்லிங்கங்கள் இந்தியாவில் இருப்பது உடல்பாகம். அதன் தலையாக காத்மண்டுவில் இருக்கும் பசுபதி நாத் கோயில்தான் இருக்கிறது. இந்த கோயில் நேபாளத்தில் இருப்பது சரி. இதுமாதிரி இந்தியாவில் வேறு கோயில்களே இல்லையா என்று கேட்பவர்களுக்காக இந்த பதிவு.

Bijay chaurasia

இந்தியாவில் இருக்கும் பசுபதி நாத் கோயில்கள்

இந்தியாவில் இருக்கும் பசுபதி நாத் கோயில்கள்

அருள்மிகு பசுபதி நாத் கோயில் மண்ட்சவுர், பசுபதிநாத் கோயில் தம்கூரு, அருள்மிகு பசுபதிநாத் கோயில் பைரேலி, பசுபதி நாத் கோயில் சாரவல்லி, பிச்சுடு பசுபதிநாத் கோயில், டெல்லி பசுபதி நாத கோயில், அஹமதாபாத் பசுபதிநாத் கோயில், கொல்கத்தா பசுபதி நாத் கோயில், ஜெய்ப்பூர் பசுபதி நாத் கோயில், நேபாளி கோயில் வாரணாசி, அருள்மிகு பசுபதி கோயில் ராஜஸ்தான், ஆகர் பசுபதி கோயில் என இந்தியா முழுவதும் இருக்கிறது இந்த பசுபதி நாத் கோயில். ஒவ்வொரு கோயிலுக்கும் ஒவ்வொரு சிறப்பு அம்சங்கள் இருக்கின்றன. வாருங்கள் கோயிலுக்கு சென்று பார்க்கலாம்.

மண்ட்சவுர் பசுபதி நாத் கோயில்

மண்ட்சவுர் பசுபதி நாத் கோயில்

மண்ட்சவுர் பசுபதி நாத் கோயில் மத்திய பிரதேச மாநிலம் , மண்ட்சவர் பகுதியில் அமைந்து உள்ளது.

எட்டுமுக சிவபெருமான் அழகாக அமர்ந்து அருள் புரியும் இந்த கோயில் மிகவும் சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. இங்கு சென்று வருபவர்களுக்கு நினைத்ததை நடத்தி வைப்பார் பசுபதி நாதர் என்கிறார்கள் இங்கு வருகை தரும் பக்தர்கள்,.

எப்படி செல்வது

இது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்தாலும், இது ராஜஸ்தான் எல்லைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்தூரிலிருந்து 200 கிமீ தொலைவிலும், உதயகிரி குகைகளிலிருந்து 340 கிமீ தொலைவிலும், ஷமலாஜியிலிருந்து 220 கிமீ தொலைவிலும் அமைந்துள்ளது இந்த இடம்.

Cpbaherwani

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

காஜ்ரானா கணேசர் கோவில்

இராணி அஹில்யாபாய் ஹோல்காரால் கட்டப்பட்ட காஜ்ரானா கணேசர் கோவில் இந்தூரில் உள்ள புகழ் பெற்ற மத வழிபாட்டுத்தலமாகும். இந்த கோவிலின் கடவுளாக உள்ளவர் கணேச பெருமான். இந்த கோவிலில் பிரார்த்தனை செய்து வேண்டிக் கொண்டால், அந்த வேண்டுதல் கண்டிப்பாக நிறைவேறும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக இருப்பதால், அவர்களுக்கு மிகவும் முக்கியமான கோவிலாக இது உள்ளது. எனவே, அதிகளவிலான பக்தர்கள் வந்து செல்லும் இந்த கோவில் எப்பொழுதும் மிகுந்த கூட்டத்துடன் காணப்படும். ஒவ்வொரு புதன் கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இந்த கோவிலுக்கு பெருமளவிலான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த கோவிலில் வேறு சில தெய்வங்களின் சிலைகளும் வைக்கப்பட்டுள்ளன. கணேச பெருமானை ஆராதிப்பதற்காக கொண்டாடப்படும் விநாயகர் சதுர்த்தி திருவிழா, இந்த கோவிலின் மிகப்பெரிய பண்டிகையாகும். காஜ்ரானா கோவில் உள்ளூரில் மட்டும் புகழ் பெற்ற சுற்றுலா தலமாக இல்லாமல், வெளியூர் பயணிகளும் பெருமளவில் வந்து செல்லும் புகழ் மிக்க சுற்றுலா தலமாக உள்ளது. இந்தூருக்கு வந்து செல்லும் ஒவ்வொரு சுற்றுலா பயணியின் சுற்றுலா வரைபடத்திலும், காஜ்ரானா கோவில் கண்டிப்பாக இடம் பெற்றிருக்கும்

லால் பாக் அரண்மனை

கான் நதிக்கரையில் பிரமிக்கத்தக்க வகையில் மூன்று அடுக்குகளில் அமைந்துள்ள அற்புதமான இடம் தான் லால் பாக் அரண்மனையாகும். இந்த அரண்மனையை மகாராஜா சிவாஜி ராவ் ஹோல்கார் என்பவர் கட்டினார். ராஜ குடும்ப நிகழ்ச்சிகள் நடத்தப்படும் இடமாக இந்த அரண்மனை விளங்கியது. லால் பாக் அரண்மனையின் தனித்தன்மையான கட்டிடக்கலையின் காரணமாகவே அது இந்தூரின் புகழ் பெற்ற பார்வையிடங்களில் ஒன்றாக உள்ளது. ஹோல்கார் அரசர்களின் இராஜ மற்றும் படோடபமான வாழ்க்கையை பிரதிபலிப்பதாக இந்த மாளிகை உள்ளது. இந்தியாவிலேயே மிகவும் சிறந்த ரோஜா தோட்டங்களை இந்த மாளிகை கொண்டிருக்கிறது. இந்த மாளிகையின் நுழைவாயில் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப் பட்டுள்ளது. மேலும், இந்தியா மற்றும் இத்தாலியைச் சேர்ந்த ஓவியங்கள் மற்றும் சிற்பங்களால் இந்த மாளிகை முழுமையும் அலங்கரிக்கப் பட்டுள்ளது. இந்த மாளிகையின் சுவர்கள் மற்றும் கூரைகளில் இருக்கும் சிற்பங்கள் தனிச்சிறப்பு வாய்ந்தவையாகும். சுமார் 28 ஏக்கர் பரப்பளவில் விரிந்திருக்கும் இந்த அரண்மனையில் ஒரு அருங்காட்சியகமும் உள்ளது.

கிருஷ்ணாபுரா சாட்ரி

கான் நதிக்கரையில் இருக்கும் கிருஷ்ணாபுரா சாட்ரி, ஹோல்கார் மன்னர் குடும்பத்தவர்களுக்கான கல்லறைகள் கட்டப்பட்டு நினைவிடங்களாக இருக்கும் இடமாகும். துல்லியமான மற்றும் கூர்ந்த வேலைப்பாடுகள் இந்த சாட்ரிகளின் சிறப்பம்சமாகும். இந்த நினைவிடங்கள் மராத்திய கட்டிடக்கலையில் கட்டப்பட்டுள்ளன. கூம்பு போன்ற உயரமான வடிவமைப்புகள் மற்றும் வட்ட வடிவமான கூரைகள் ஆகியவற்றைக் கொண்டிருக்கும் இந்த நினைவிடங்கள் காண வரும் அனைவரின் கண்களுக்கும் அற்புதமான காட்சிகளை இன்றளவும் விருந்தாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நினைவிடங்கள் அமைக்கப்பட்டு, காலங்கள் கடந்து சென்றாலும் இவற்றின் அழகும், வசீகரமும் இன்றும் மக்கள் மனதில் கம்பீரமாக உள்ளன. இன்றைய காலத்திலும் கூட பெருவாரியான மக்கள் இந்த கட்டிடக்கலை அதிசயங்களை கூட்டம் கூட்டமாக வந்து கண்டு இரசித்து செல்கின்றனர்

மேக்தூத் உப்வான்

இந்தூரில் உள்ள மிகப்பெரிய பூங்காவாக மேக்தூத் உப்வான் உள்ளது. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் என அனைவரிடமும் மிகவும் புகழ் பெற்றுள்ள பூங்காவாக இது உள்ளது. இந்த பூங்காவில் வாரம் முழுவதும் கூட்டமாக இருந்தாலும், வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறை நாட்களில் கூட்டம் மிகவும் நிரம்பி வழியும். தங்களுடைய குடும்பம் மற்றும் குழந்தைகளுடன் இந்த இடத்தில் தங்களுடைய விடுமுறை நாட்களை கழித்திடுவதில் உள்ளூர் மக்களுக்கு அலாதியான பிரியமாகும். செழிப்பான புல்வெளிகள், சிறப்பான தோட்ட தளங்கள், அலங்கரிக்கப்பட்ட நீரூற்றுகள், சுழலும் நீரூற்றுகள் மற்றும் பல கண்கவரும் பார்வையிடங்களை இந்த பூங்கா கொண்டுள்ளது. இந்தூரின் பொக்கிஷத்தில் உள்ள மிகச்சிறந்த அணிகலமான மேக்தூத் உப்வான் உள்ளது. மேலும், இந்த பூங்காவின் அமைதியான மற்றும் ஓய்வெடுக்கத் தகுந்த சூழலின் காரணமாக பல்வேறு குடும்பங்கள் இங்கு இன்ப சுற்றுலாவிற்கு வந்து, தங்களுடைய பரபரப்பான வாழ்க்கை நிகழ்வுகளுக்கு விடுமுறை அளிக்கின்றனர். மேலும், மேக்தூத் உப்வான் பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள், அதற்கு அருகேயுள்ள பொழுதுபோக்கு பூங்காவான மங்கல் மெர்ரி லாண்ட்-ற்கும் குடும்பத்துடன் சென்று வரலாம்.

அன்னப்பூர்ணா கோவில்

இந்தூரில் உள்ள பிரமிக்க வைக்கும் கோவிலாக அன்னப்பூர்ணா கோவில் உள்ளது. சில காரணங்களுக்காக மிகவும் புகழ் பெற்ற கோவிலாக இது உள்ளது. இந்தூரில் உள்ள மிகவும் பழமையான கோவிலாகவும், 9-ம் நூற்றாண்டில் ஆரிய மற்றும் திராவிட கட்டிடக்கலையில் கட்டப்பட்டதாகவும் இந்த கோவில் உள்ளது. இந்த கோவில் 100 அடி உயரத்தை விடவும் அதிகமானமதாக உள்ளது. இந்து மதத்தில் உணவின் கடவுளாக கருதப்படும், அன்னப்பூர்ணா தேவிக்கான கோவிலாக இது உள்ளது. இந்த கோவிலின் கட்டிடக்கலை, உலகப் புகழ் பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோவிலின் கட்டிடக்கலையை அடையாளமாக வைத்து உருவாக்கப்பட்டதாகும். இந்த கோவிலின் நுழைவாயில் சிறந்த காட்சியைக் தருவதாக இருக்கும். நான்கு பெரிய யானைகள் தாங்கி பிடிப்பது போன்று இங்கிருக்கும் அலங்காரமான கதவு உள்ளது. இந்த கோவிலிற்குள் அன்னப்பூர்ணா தேவி, சிவ பெருமான், அனுமான் மற்றும் கால பைரவர் ஆகியவர்களுக்கு தனித்தனியாக கோவில்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோவிலின் வெளிப்புற சுவர்களில் புராண காலப் பாத்திரங்கள் ஓவியங்களாக வரையப்பட்டுள்ளன. இந்த கோவிலின் முதன்மையான பார்வையிடமாக 14.5 அடி அளவுள்ள காசி விஸ்வநாதரின் சிலை, தாமரை வடிவத்தில் உள்ளது.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்