» »உத்தரகண்ட்டில் இருக்கும் சிகரங்களைப் பற்றி தெரியுமா?

உத்தரகண்ட்டில் இருக்கும் சிகரங்களைப் பற்றி தெரியுமா?

Written By:

இந்தியாவின் வடபகுதியில் உள்ள இந்த உத்தரகண்ட் மாநிலமானது உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பிரசித்தமான சுற்றுலா கேந்திரமாக புகழ் பெற்று விளங்குகிறது. இந்த மாநிலத்தைத் தொட்டே இமயமலை அமைந்துள்ளதால் இங்கு வருடம் முழுவதும் நல்ல வானிலையும், அதிக அளவு சுற்றுலா அம்சங்களும் இருக்கின்றன. சில சமயங்களில் இயற்கைப் பேரழிவுகள் நிகழலாம். ஆனால், அதை தவிர்த்துவிட்டு பார்க்கும்போது இமயமலைக்கு மட்டுமல்ல இந்த எட்டு இடங்களுக்கும் நாம் கட்டாயம் சென்று பார்க்கவேண்டும். என்ன போகலாமா?

லால் டிப்பா

லால் டிப்பா

சிறப்பு - காட்சிமுனை, புகைப்பட தலம், இயற்கை காட்சிகளை ரசிக்கலாம்

நுழைவுக் கட்டணம் - இல்லை

பார்வை நேரம் - 24 மணி நேரமும் திறந்திருக்கும் என்றாலும் காலை 8 மணிக்கு மேல் மாலை 7 மணிக்குள் செல்வதே சிறந்தது.

செலவிடும் நேரம் - அரை மணி முதல் ஒரு மணி நேரம் வரை இங்கு செலவிடலாம்.

வருடாந்திர பார்வையாளர்கள் - சராசரியாக ஒரு லட்சம் பேர்

டிப்போட் ஹில் எனப்படும் லால் டிப்பா முசூரியில் இருப்பதிலேயே உயரமான சிகரமாகும். முசூரியில் அதிகமான ஜனத்தொகை கொண்ட லாண்டார் பகுதியில் இவ்விடம் அமைந்துள்ளது. லால் டிப்பா பகுதியில் 'டிப்போ' எனப்படும் சேகரிப்பு மையம் அமைந்துள்ளதால் டிபோட் ஹில் என்றும் கருதப்படுகிறது. அனைந்திந்திய வானொலி மற்றும் தூர்தர்ஷனில் டவர்களும் இங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்திய ராணுவ முகாமும் இந்தக் குன்றில் அமைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக 1967ல் அமைக்கப்பட்ட தொலைநோக்கியின் (தொலைநோக்கி) வழியாக பந்தர்பஞ்ச், கேதர்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களை கண்டு ரசிக்கலாம். பாம்பின் முனை என அழைக்கப்படும் நாக் டிப்பா குன்றும் முசூரியில் அமைந்துள்ளது .சுற்றுலாப் பயணிகள் சாகச விளையாட்டுகளில் ஈடுபட்டு மகிழலாம். சூரிய உதயத்தையும், மறைவையும் இங்கிருந்து கண்டுகளிக்கலாம். அதுமட்டுமல்லாது ஆங்கிலேயர் காலத்து வீடுகள் மற்றும் கட்டிடங்களையும் இங்கிருந்து கண்டுகளிக்கலாம்.

சுற்றுலா டிப்ஸ் - இந்த இடம் புகைப்பட பிரியர்களுக்கு மிகச் சிறந்த வாய்ப்பாக அமையும். மறக்காமல் கேமரா அல்லது மொபைலை முழு சார்ஜ் உடன் எடுத்து செல்லுங்கள்.

எப்போது செல்லலாம்

கடல் மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் இருக்கும் இந்த இடத்துக்கு ஏப்ரல் ஜூன் மாதங்களில் செல்வது சிறந்தது.

எப்படி செல்வது

லிப்ரரி எனும் இடத்திலிருந்து 7 கிமீ தொலைவில் அமைந்துள்ளது லால் டிப்பா. அருகிலுள்ள ரயில் நிலையம் டேராடூன். இது 38கிமீ தொலைவில் உள்ளது. அருகிலுள்ள விமான நிலையம் ஜோலி கிராண்ட்.

PC: Sumod K Mohan

நைனா பீக்

நைனா பீக்

சிறப்பு - காட்சி முனை, புகைப்பட பிரியர்களுக்கு உகந்த தலம், இயற்கை விரும்பிகளுக்கு பிடித்த இடம், மலையேற்றம் செய்ய சிறந்த இடம்.

அனுமதி கட்டணம் - இல்லை

பார்வை நேரம் - 24 மணி நேரமும் அனுமதிக்கப்பட்டாலும் காலை 8 முதல் மாலை 7 மணி வரை செல்வதே சிறந்தது.


செலவிடும் நேரம் - ஒரு மணி முதல் இரண்டு மணி நேரங்கள் வரை இங்கு செலவிடலாம்.

வருடாந்திர பார்வையாளர்கள் - சராசரியாக ஒரு லட்சம் பேர்

நைனித்தால் பகுதியின் மிக உயரமான சிகரமாக வீற்றிருக்கும் இந்த நைனா பீக் நைனித்தால் நகரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ளது. சைனா பீக் என்றும் அழைக்கப்படும் இது கடல் மட்டத்திலிருந்து 2611மீ உயரத்திற்கு எழும்பியுள்ளது. ஸ்னோ வியூ அல்லது மல்லித்தால் ஆகிய இடங்களிலிருந்து மட்டக்குதிரை மூலம் பயணிகள் இந்த சிகரத்திற்கு சென்றடையலாம்.

எப்போது செல்வது

2084 அடி உயரம் கொண்ட மலைப்பகுதி இது. இங்கு மார்ச் முதல் ஜூன் வரை செல்வது மிகச் சிறப்பானதாகும்.

எப்படி செல்வது

நைனித்தால் தல்லிட்டன் பேருந்து நிலையத்திலிருந்து 17கிமீ தொலைவில் அமைந்துள்ளது இந்த சிகரம். அருகிலுள்ள ரயில் நிலையம் காத்கோடம். விமான நிலையம் 75கிமீ தூரத்தில் உள்ள பாட்நகர் விமானநிலையமாகும்.

PC: Anirban c8

 கேதார் மாசிப்

கேதார் மாசிப்

சிறப்பு - வழிபாடு, ஆன்மீகம், காட்சி முனை, புகைப்பட பிரியர்களுக்கு உகந்த தலம், இயற்கை விரும்பிகளுக்கு பிடித்த இடம், மலையேற்றம் செய்ய சிறந்த இடம்.

அனுமதி கட்டணம் - மாற்றத்துக்குரியது

பார்வை நேரம் - 24 மணி நேரமும் அனுமதிக்கப்பட்டாலும் காலை 8 முதல் மாலை 7 மணி வரை செல்வதே சிறந்தது.


செலவிடும் நேரம் - ஒரு மணி முதல் இரண்டு மணி நேரங்கள் வரை இங்கு செலவிடலாம்.

வருடாந்திர பார்வையாளர்கள் - சராசரியாக 50000 பேர்


கேதார் மாசிப் எனும் இந்த இடம் கேதார்நாத், கேதார்நாத் கலசம் மற்றும் பரதேகுந்தா எனும் மூன்று மலைகளுக்கு நடுவில் அமைந்திருக்கிறது. கடல் மட்டத்திலிருந்து 6000 மீ உயரத்தில் வீற்றிருக்கும் இந்த இடத்தின் வழியாகத்தான் பனிமலைகள் உருகி ஓடிவருகின்றன.

மந்தாகினி ஆறும் இவ்வழியாகத்தான் ஓடி வருகிறது. கேதார்நாத் மலையும் கேதார்நாத் கலசமலையும் ஒன்றோடொன்று ஒரு ஆழமான ஆற்றுப்பிளவால் இணைக்கப்பட்டிருப்பதும் குறிப்பிடத்தக்கது. கடல் மட்டத்திலிருந்து 6831 மீ உயரத்தில் வீற்றிருக்கும் கேதார்நாத் மலைச்சிகரத்திற்கு மலையேற்றம் செய்வது ஒரு கடினமான சாகச சாதனையாகும்.

அதிக உயரம் காரணமாக இந்த மலையுச்சியில் ஆக்சிஜன் அளவும் குறைவாகவே இருக்கும். கேதார்நாத் கோயிலுக்கு பின்னால் பரதேகுண்டாவை நோக்கி செல்லும் மலையேற்றப்பாதை வழியாக பயணிகள் மலையேற்றம் செய்யலாம். கேதார் மாசிப் பகுதியில் காணப்படும் பள்ளத்தாக்குப்பகுதியில் சோரபாரி தால் எனும் ஏரியும் அமைந்திருக்கிறது.

PC: Sanjoy

லரியாகன்டா

லரியாகன்டா

சிறப்பு - காட்சி முனை, புகைப்பட பிரியர்களுக்கு உகந்த தலம், இயற்கை விரும்பிகளுக்கு பிடித்த இடம், மலையேற்றம் செய்ய சிறந்த இடம்.

அனுமதி கட்டணம் - இல்லை

பார்வை நேரம் - 24 மணி நேரமும் அனுமதிக்கப்பட்டாலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை செல்வதே சிறந்தது.

செலவிடும் நேரம் - அரை மணி முதல் இரண்டு மணி நேரங்கள் வரை இங்கு செலவிடலாம்.

வருடாந்திர பார்வையாளர்கள் - சராசரியாக ஒரு லட்சம் பேர்

எப்படி செல்வது

நைனித்தால் நகரிலிருந்து 6 கி.மீ தூரத்தில் உள்ள இந்த லரியாகன்டா எனும் சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2481 மீ உயரத்தில் வீற்றிருக்கிறது. இந்த சிகரத்திலிருந்து நைனித்தால் பகுதியின் முழு அழகையும் பயணிகள் நன்றாக பார்த்து ரசிக்க முடியும்.

PC: "Nipun Sohanlal"

கேதார்நாத்

கேதார்நாத்

சிறப்பு - வழிபாடு, ஆன்மீகம், காட்சி முனை, இயற்கை விரும்பிகளுக்கு பிடித்த இடம், மலையேற்றம் செய்ய சிறந்த இடம்.

அனுமதி கட்டணம் - மாற்றத்துக்குரியது

பார்வை நேரம் - காலை 8 முதல் மாலை 7 மணி வரை செல்லலாம். இடையில் மாலை 3 மணி முதல் 5 மணி வரை நடை சாத்தப்படும்.

செலவிடும் நேரம் - ஒரு மணி முதல் இரண்டு மணி நேரங்கள் வரை இங்கு செலவிடலாம்.

வருடாந்திர பார்வையாளர்கள் - சராசரியாக ஆண்டுக்கு 2 முதல் 3 லட்சம் பேர் வருகை தருகிறார்கள்.

கேதார்நாத் மலைகள் இமலயமலையின் மேற்கு கார்வால் மலைப்பிரதேசத்தில் அமைந்திருக்கின்றன. கேதார்நாத் மற்றும் கேதார்நாத் கலசம் எனப்படும் இரண்டு சிகரங்கள் இந்த மலைகளில் எழும்பியுள்ளன.

கேதார்நாத் கலசம் என்பது பிரதான சிகரத்திற்கு 2கி.மீ வட மேற்கே அமைந்துள்ள துணைச்சிகரமாகும். இந்த இரண்டு சிகரங்களும் கங்கோத்ரி பனிமலையின் தெற்கு பகுதியில் உள்ள முக்கியமான மூன்று சிகரங்களில் அடங்குகின்றன.

கேதார்நாத் கலச சிகரத்தின் வடமேற்குபகுதியில் பனிச்சறுக்கு விளையாட்டிற்கான பாதைகளும் அமைந்துள்ளன. சாகசப்பிரியர்களிடையே இந்த இடம் பிரசித்தமாக அறியப்படுகிறது.

எப்படி செல்வது

ஹரித்வாரிலிருந்து 15கிமீ தூரத்தில் உள்ள கௌரிகுந்திலிருந்து எளிதில் கேதார்நாத்தை அடையலாம்.

எப்போது செல்வது

மே முதல் அக்டோபர் வரை கேதார்நாத் கோயில் திறந்திருக்கும். இந்த காலக் கட்டங்களில் செல்வது சிறப்பாகும்.

PC: varunshiv

அப்பாட் மலை

அப்பாட் மலை

சிறப்பு - காட்சி முனை, இயற்கை விரும்பிகளுக்கு பிடித்த இடம், மலையேற்றம் செய்ய சிறந்த இடம், புகைப்படங்கள் எடுக்க சிறந்த இடம்.

அனுமதி கட்டணம் - மாற்றத்துக்குரியது

பார்வை நேரம் - 24 மணி நேரமும் அனுமதிக்கப்பட்டாலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை செல்வதே சிறந்தது.

செலவிடும் நேரம் - ஒரு மணி முதல் இரண்டு மணி நேரங்கள் வரை இங்கு செலவிடலாம்.

வருடாந்திர பார்வையாளர்கள் - சராசரியாக ஆண்டுக்கு 2 முதல் 3 லட்சம் பேர் வருகை தருகிறார்கள்.

ஆங்கிலேய தொழிலதிபரான திரு.ஜான் ஹரால்டு அப்பாட் என்பவரின் பெயரையே அப்பாட் மலை தாங்கியுள்ளது. இந்த இடம் பனியை உடுத்தியிருக்கும் மாபெரும் இமயமலையின் காட்சிகளை அழகுற காட்டும் வசதியுள்ள இடமாகும். இந்த மலையின் மீதிருக்கும் 13 தனியார் குடில்களும் ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டவை.

இவற்றில் ஒரு மாளிகையை, அடர்ந்த ஓக் மற்றும் மரங்களுக்கிடையில், 1914-ம் ஆண்டு திரு.ஜான் ஹரால்டு அப்பாட் கட்டியுள்ளார். சுற்றுலாவின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு பல்வேறு விளையாட்டுகளும், நிகழ்வுகளும் இந்த இடத்தில் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த இடத்திற்கு 3 கிமீ தூரத்திற்கு மலையேற்றம் செய்து மற்றும் மாரோரகான் அல்லது லோஹக்ஹாட் இடங்களில் இருந்து 7 கிமீ தூரம் பயணம் செய்தும் அடைந்திட முடியும். இந்த இடத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மீன் பிடித்தல், பறவைகளை கவனித்தல், புகைப்படம் எடுத்தல் மற்றும் மலையேற்றம் போன்ற பல்வேறு பொழுதுபோக்குகளை அனுபவித்திட முடியும்.


சாலை வழியாக செல்வதென்றால், டெல்லியிலிருந்து மொராடாபாத், ராம்பூர், ருத்ராபூர், காட்டிமா, தனக்பூர், லோகாகாட் வழியாக 437 கிமீ பயணம் செய்து அபாட் மலையை அடையலாம்.

அருகிலுள்ள ரயில் நிலையம் - தனக்கபூர் 80 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. லோககாட்டிலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.

விமான நிலையம் - பாட்நகர் 180 கிமீ

PC: Kailas98

சக்கும்பா

சக்கும்பா


சிறப்பு - காட்சி முனை, இயற்கை விரும்பிகளுக்கு பிடித்த இடம், மலையேற்றம் செய்ய சிறந்த இடம், புகைப்படங்கள் எடுக்க சிறந்த இடம்.

அனுமதி கட்டணம் - இல்லை

பார்வை நேரம் - 24 மணி நேரமும் அனுமதிக்கப்பட்டாலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை செல்வதே சிறந்தது.

செலவிடும் நேரம் - ஒரு மணி முதல் இரண்டு மணி நேரங்கள் வரை இங்கு செலவிடலாம்.

வருடாந்திர பார்வையாளர்கள் - சராசரியாக ஆண்டுக்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் வருகை தருகிறார்கள்.

பவுரியில் இருக்கும் முக்கிய சுற்றுலா பகுதி சக்கும்பா ஆகும். இந்த சக்கும்பாவிலிருந்து பார்த்தால் இமயமலையின் உயரமான சிகரங்கள், அவற்றில் பாய்ந்து ஓடும் பனியாறுகள் போன்றவற்றை தெள்ளத் தெளிவாகப் பார்க்க முடியும். இந்த பகுதி முழுவதும் ஓக் மரக்காடுகளால் சூழப்பட்டுள்ளது. மற்றும் வண்ணமயமான த்வாரில் மரங்களால் இந்த பகுதி சூழப்பட்டிருக்கிறது. சக்கும்பா பகுதிகளுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளில் மூழ்கித் திளைத்து தங்களையே மறக்கலாம்.

எப்படி செல்வது

சாலை வழியாக செல்வதென்றால், பத்ரிநாத்திலிருந்து மிகவும் நேர்த்தியான இணைப்பு இருக்கிறது. டெல்லியிலிருந்து பத்ரிநாத் பேருந்து அல்லது டாக்ஸி மூலமாக எளிதில் பயணிக்கலாம். ஹரித்வார் மற்றும் ரிஷிகேஸ் இரண்டும் அருகாமை பகுதிகளாகும்.

ரயில் மூலமாக பயணிக்க விரும்பினால், ஹரித்வாரில் ரயில் நிலையம் அமைந்துள்ளது.

அருகிலுள்ள விமான நிலையம் - டேராடூன்

PC: Paul Hamilton

 குஞ்ஜாபுரி

குஞ்ஜாபுரி

சிறப்பு - காட்சி முனை, இயற்கை விரும்பிகளுக்கு பிடித்த இடம், மலையேற்றம் செய்ய சிறந்த இடம், புகைப்படங்கள் எடுக்க சிறந்த இடம்.

அனுமதி கட்டணம் - இல்லை

பார்வை நேரம் - 24 மணி நேரமும் அனுமதிக்கப்பட்டாலும் காலை 10 முதல் மாலை 5 மணி வரை செல்வதே சிறந்தது.

செலவிடும் நேரம் - ஒரு மணி முதல் இரண்டு மணி நேரங்கள் வரை இங்கு செலவிடலாம்.

வருடாந்திர பார்வையாளர்கள் - சராசரியாக ஆண்டுக்கு 1 லட்சம் பேர் வருகை தருகிறார்கள்.

குஞ்ஜாபுரி, கடல் மட்டத்திலிருந்து 1676 மீ உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு பிரபலமான மற்றும் பண்டைய கோவில் ஒன்று உள்ளது. அது குஞ்ஜாபுரி தேவிக்காக கட்டப்பட்ட கோவிலாகும்.

இந்த கோவிலுக்கு ஒவ்வொரு ஆண்டும் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகின்றனர். சுற்றுலா பயணிகள் இந்த கோவிலில் இருந்து வலிமைமிக்க இமயமலையின் பனி படர்ந்த சிகரங்கள் மற்றும் பாகீரதி பள்ளத்தாக்கு போன்றவற்றின் அழகிய காட்சிகளை கண்டு களிக்கலாம்.

எப்படி செல்வது

ரிஷிகேஸிலிருந்து 25கிமீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த இடம். நரேந்திர நகரிலிருந்து 8 கிமீ தூரத்தில் உள்ளது. வாடகை டாக்ஸி மூலம் ரிஷிகேஸ் அல்லது நரேந்திரநகரிலிருந்து குஞ்சாதேவி கோயிலை அடையலாம். இதன் அருகாமை ரயில் நிலையம் ரிஷிகேஷ். விமான நிலையம் டேராடூன்.

Wiki

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்