Search
  • Follow NativePlanet
Share
» »பீச்சி அணையும் பிரபலமான படகு சவாரியும்....

பீச்சி அணையும் பிரபலமான படகு சவாரியும்....

எழில் நிரம்பிய பீச்சி அணைப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதி பீச்சி காட்டுயிர் சரணாலயம் என்று அழைக்கப்படுகிறது. பலாளிள்ளி காடுகள் மற்றும் நெல்லியம்பதி காடுகள் ஆகியவற்ற உள்ளடக்கிய இந்த சரணாலயம் 125 ச.கி.மீ

By Udhaya

எழில் நிரம்பிய பீச்சி அணைப்பகுதியை ஒட்டியுள்ள வனப்பகுதி பீச்சி காட்டுயிர் சரணாலயம் என்று அழைக்கப்படுகிறது. பலாளிள்ளி காடுகள் மற்றும் நெல்லியம்பதி காடுகள் ஆகியவற்ற உள்ளடக்கிய இந்த சரணாலயம் 125 ச.கி.மீ பரப்பளவில் பரந்து காணப்படுகிறது. 19ம் நூற்றாண்டு வரையில் தனியார் உரிமையில் இருந்து வந்த இப்பிரதேசம் 1958ம் ஆண்டு காட்டுயிர் சரணாலயமாக அறிவிக்கப்பட்டுள்ளது. திரிசூர் நகரிலிருந்து 23 கி.மீ தூரத்தில் உள்ள இந்த சரணாலயத்திற்கு காட்டு விலங்குகளை பார்ப்பதற்காக மட்டுமன்றி இயற்கை செழுமையை ரசிப்பதற்காகவே அதிக அளவில் பார்வையாளர்கள் விஜயம் செய்கின்றனர். இங்குள்ள நீர்த்தேக்கத்தில் படகுச்சவாரி மேற்கொள்ளும்போது கரைகளில் நீர் அருந்த வரும் யானைக்கூட்டங்களையும் பார்த்து ரசிக்க வாய்ப்புண்டு. பீச்சி வனப்பகுதிக்கு செல்ல ஏராளமான தனியார் பேருந்துகள் திரிசூர் நகரத்திலிருந்து இயக்கப்படுகின்றன.

 அழகிய படகு சவாரி

அழகிய படகு சவாரி


இந்தியாவில் பெரும்பாலான நீர் நிலை சுற்றுலாத் தளங்களுக்கு சென்றால் அங்கு முதன்மையாக இருப்பது போட்டிங் எனப்படும், படகு சவாரி ஆகும். அப்படி திரிச்சூரிலிருந்து மிக அருகிலுள்ள பீச்சி வழனி காட்டுயிர் சரணாலயமும் சுற்றுலாவுக்கான எல்லா அம்சங்களையும் கொண்டது. முக்கியமாக படகு சவாரிக்கு சிறந்த சுற்றுலாத் தளமாக உள்ளது.

இயற்கையின் அமைப்பில், 125 சகிமீ அளவுக்கு பரந்து விரிந்துள்ள இந்த பகுதியில் நடுவே ஓடும் ஆற்றில் அழகான படகு சவாரிக்கு நீங்க தயாரா?

Rameshng

எங்கே உள்ளது

எங்கே உள்ளது

திரிச்சூர் நகரத்திலிருந்து வெறும் 20 கிமீ தொலைவில் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது இந்த பீச்சி காட்டுயிர் சரணாலயம். பீச்சி - வழனி அணைகளின் நீர்ப் பிடிப்பு பகுதிகள்தான் இந்த சரணாலயத்தின் முக்கிய பகுதி ஆகும். கோடைக் காலத்தில் கூட பசுமை மாறாத அழகை கொண்ட இந்த காட்டு பகுதிகள் நெல்லியம்பதி காடுகளுடன் இணைந்ததாகும். இவை சிம்மினி காட்டுயிர் சரணாலயத்துக்கு வடக்குபுற எல்லையாக அமைந்துள்ளது.

Rameshng

படகு சவாரிகளுடன் கூடிய அழகிய சுற்றுலா

படகு சவாரிகளுடன் கூடிய அழகிய சுற்றுலா

பீச்சி வழனி சரணாலயம் உங்களுக்கு அழகிய பல சுற்றுலா அம்சங்களை தருகிறது. 923 மீ உயரமான இந்த மலைகள் இங்கிருந்து காணும்போது அழகிய சமவெளிகளை மிக சிறப்பான காட்சியாக காண வழி வகுக்கின்றன.

50 வகையான மூலிகைகள், அரிய வகை தாவரங்கள், தேக்கு, ஈட்டி மரங்களும் காணப்படுகின்றன. சிங்கம், புலி, சிறுத்தை என 25 வகையான பாலூட்டி விலங்கினங்களை இங்கு காணமுடியும். 100 வகையான பறவைகளும் இங்கு வாழ்ந்து வருகின்றன.

Rameshng

 பீச்சி காட்டுயிர் சரணாலயத்தில் எங்கு தங்கலாம்

பீச்சி காட்டுயிர் சரணாலயத்தில் எங்கு தங்கலாம்

காட்டுயிர் சரணாலயத்துக்கு அருகே சொல்லிக்கொள்ளும் அளவில் சிறப்பான விடுதிகள் இல்லை. இங்குள்ள விடுதிகளில் உணவுகளுக்கு பிரச்னை இல்லை. நல்ல சுவையான உணவுகள் கிடைக்கின்றன. எனினும் தங்க வசதிகளுடன் கூடிய விடுதிகளுக்கு திரிச்சூரே சிறந்தது. வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது. மேலும் குறைந்த விலை விடுதிகளும் திரிச்சூரில் நிறைய காணப்படுகின்றன.

Rameshng

 பீச்சி அணை காணும் நேரங்கள்

பீச்சி அணை காணும் நேரங்கள்


மற்ற அணைகளைப் போலவே இந்த அணைகளை பாதுகாக்கவும் அமைப்புகள் இருக்கின்றன. பீச்சி அணை ஓரளவுக்கு மழை பெய்யும் பகுதியில் அமைந்திருப்பதால், நீர் வரத்து சற்று அதிகமாகவே காணப்படுகிறது. திரிச்சூரில் காணவேண்டிய இடங்களுள் முதல் 5 இடங்களில் இதுவும் ஒன்றாகும். இதற்காக கட்டணம் எதுவும் பெறப்படுவதில்லை. காலை 8 மணி முதல் மாலை 6.30 மணி வரை இந்த அணையை பொதுமக்கள் பார்வையிடலாம். இங்கு 1 மணி நேரம் முதல் 2 மணி நேரங்கள் வரை பொழுதை கழிக்கலாம்.

Manojk

படகு சவாரி

படகு சவாரி


போட்டிங் எனப்படும் படகு சவாரி செய்ய திரிச்சூர் அருகே சிறந்த தளம் இதுதான். மேலும் இங்கு படகு சவாரியுடன் அருகாமையில் பல இடங்களை கண்டு ரசிக்கலாம்.

Rameshng

 புத்தேன் பள்ளி

புத்தேன் பள்ளி

புத்தேன் பள்ளி அல்லது அவர் லேடி ஆஃப் டாலர்ஸ்' சர்ச் என்று அழைக்கப்படும் இந்த தேவாலயமானது கிழக்கத்திய மற்றும் மேற்கத்திய கலையம்சங்கள் நிரம்பியதாகவும், திரிசூர் நகரத்தின் பன்முக கலாச்சாரத்தை பிரதிபலிப்பதாகவும் காட்சியளிக்கிறது.

பல வருடங்கள் கட்டப்பட்ட இந்த தேவாலயத்தின் வடிவமைப்பில் பல்வேறு குழுக்களின் பங்களிப்பு இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்தியாவில் உள்ள குறிப்பிடத்தக்க இந்தோ-காதிக் பாணி தேவாலயங்களில் இதுவும் ஒன்று எனும் பெருமையையும் இது பெற்றுள்ளது.

ஆன்மீக அடிப்படையில் மட்டுமல்லாமல் கலைப்படைப்பாகவும் இது பிரமிப்பூட்டும் பிரகாசத்தை கொண்டுள்ளது. 25,000 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பஸிலிகா தேவாலயம் இந்தியாவிலேயே மிகப்பெரியதாகவும், ஆசியாவிலேயே மூன்றாவது உயரமான தேவாலயமாகவும் கீர்த்தியுடன் அறியப்படுகிறது.

Rameshng

பரமேக்காவு பகவதி கோயில்

பரமேக்காவு பகவதி கோயில்

கேரளாவில் உள்ள மிகப்பழமையான கோயில்களில் ஒன்று இந்த பரமேக்காவு பகவதி கோயில் ஆகும். ஆயிரம் வருடங்களுக்கும் முந்தையதாக கருதப்படும் இக்கோயில் துர்க்கா மாதாவின் அவதாரமான பகவதி அம்மனுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பகவதி அம்மன் தெய்வம் ஒவ்வொரு வருடமும் கோலாகலமாக கொண்டாடப்படும் பூரம் திருவிழாவின் போது வடக்கும்நாதன் கோயிலுக்கு விஜயம் செய்து சிவபெருமானை சந்திப்பதாக ஒரு ஐதீகமும் நிலவுகிறது. பூரம் திருவிழாவில் பங்கு கொள்ளும் இரண்டு முக்கியமான கோயில்களில் இந்த பரமேக்காவு பகவதி கோயில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. பூரம் திருவிழா பிரம்மாண்ட கோலாகல யானை ஊர்வலங்களோடு கொண்டாடப்படுவதோடு திரிசூர் நகரின் பாரம்பரிய அடையாளமாகவும் அறியப்படுகிறது. இந்த பகவதி அம்மன் கோயில் காலை 4.30 மணி முதல் 10.30 மணி வரையிலும், பின்னர் மாலை 5 மணி முதல் 8.30 மணி வரையிலும் பக்தர்களுக்கு திறக்கப்படுகிறது.

Dvellakat -

திரிசூர் ஸ்டேட் மியூசியம்

திரிசூர் ஸ்டேட் மியூசியம்

திரிசூர் ஸ்டேட் மியூசியம் என்று அழைக்கப்படும் இந்த அரசு அருங்காட்சியகம் 1885ம் ஆண்டிலேயே உருவாக்கப்பட்டதாகும். 13.5 ஏக்கர் பரப்பில் அமைந்துள்ள இந்த அருங்காட்சிக வளாகம் ஓய்வாக நடை பயிலுவதற்குக்கூட ஏற்ற ஸ்தலமாகும்.

அருங்காட்சியகக்கட்டிடம் அவ்வளவு பெரியதாக இல்லாவிட்டாலும் இங்கு பல்வேறு காலகட்டங்களை சேர்ந்த வரலாற்று பொக்கிஷங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. கதகளி நடனச்சிலைகள், உலோகச்சிற்பங்கள் மற்றும் பாரம்பரிய கேரள விளக்குகள் போன்றவற்றை இங்கு பார்த்து ரசிக்கலாம்.

மேலும், பலவிதமான கேரள பாரம்பரிய ஆபரணங்கள், விசேஷமான கற்கள் மற்றும் பதனம் செய்யப்பட்ட அழகிய பட்டாம்பூச்சி வகைகள் போன்றவையும் இங்கு அழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அன்றும் இன்றும் கேரளாவின் அடையாளங்களாக திகழும் பல பாரம்பரிய அம்சங்களை இந்த அருங்காட்சியகத்தில் ஒரு சுற்று வருவதன் மூலமே தரிசித்து விடலாம். நகரின் மையத்திலேயே உள்ள இந்த அரசு அருங்காட்சியகத்துக்கு எளிதில் சென்றடையலாம்.

Rameshng

 பைபிள் டவர்

பைபிள் டவர்


பைபிள் டவர் எனப்படும் இந்த பிரம்மாண்ட கோபுர அமைப்பு ‘அவர் லேடி ஆஃப் டாலர்ஸ்' என்று அழைக்கப்படும் ரோமன் கத்தோலிக்க ‘பஸிலிகா' சர்ச் (புத்தேன் பள்ளி) வளாகத்திலுள்ள ஒரு முக்கியமான முக்கியமான சிறப்பம்சமாகும்.

இதன் உச்சியில் பெரிய சிவப்பு சிலுவை ஒன்றும் பொருத்தப்பட்டுள்ளது. 2007ம் ஆண்டில் திறக்கப்பட்ட இந்த கோபுர கட்டமைப்பு கேரளாவிலேயே உயரமானதாக கருதப்படுகிறது.

கேராளாவின் எல்லா இடத்திலிருந்தும் இந்த சிலுவைக்கோபுரத்தை பார்க்கலாம் என்பதாக நம்பப்படுகிறது. இங்கு மரச்செதுக்கு வேலைப்பாடுகள், வண்ணப்பூச்சு செய்யப்பட்ட கண்ணாடி அலங்காரங்கள், பித்தளை வடிவமைப்புகள் போன்றவற்றில் ஏசு கிறிஸ்து மற்றும் செயிண்ட் தாமஸ் போன்ற அபோஸ்தலர்களின் வாழ்க்கை வரலாற்று சித்தரிக்கப்பட்டுள்ளன.

பஸிலிகா தேவாலயத்தின் பலவருட பாரம்பரியம் மற்றும் கிறிஸ்துவ மதகுருமார்களின் ஒருங்கிணைந்த உழைப்பு போன்றவற்றை இக்கோபுரத்தின் பிரம்மாண்டம் பிரதிபலிக்கிறது.

Rameshng

Read more about: travel temple kerala forest dam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X