Search
  • Follow NativePlanet
Share
» »பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட மாட்டோம் – வினோத தமிழக கிராமத்தின் தீபாவளி கொண்டாட்டம்!

பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாட மாட்டோம் – வினோத தமிழக கிராமத்தின் தீபாவளி கொண்டாட்டம்!

தீபாவளி என்றாலே இனிப்புகளும், புத்தாடைகளும் எந்த அளவிற்கு முக்கியமோ அதை விட முக்கியம் பட்டாசு வெடிப்பது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பட்டாசு வெடிக்க அனைவருக்குமே பிடிக்கும். ஆனால், தமிழகத்தின் கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள கிட்டாம்பாளையம் கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளி கொண்டாடும் வினோத பழக்கத்தை கொண்டுள்ளனர். இது இன்று, நேற்று வந்த பழக்கம் இல்லை, 15 ஆண்டுகளாக இப்படித்தான் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது!

தீபாவளியன்று பட்டாசு வெடிக்காத வினோத கிராமம்

15 ஆண்டுகளுக்கும் மேலாக, கோவை மாவட்டத்தில் உள்ள கிட்டம்பாளையத்தில் வசிப்பவர்கள் பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று தேர்வு செய்துள்ளனர், இது 4384 மக்கள் வசிக்கும் ஒரு சிறிய கிராமமாகும். கிட்டாம்பாளையத்தின் ஆலமரங்கள் மற்றும் புளிய மரங்களில் நிரந்தரமாக தங்கியுள்ள 3700 வவ்வால்களைப் பாதுகாப்பதற்காகவே இத்தைகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கிராம மக்கள் கூருகின்றனர்.

Kittampalayam village

ஆலமரத்தில் இருந்து வெளியே வந்த விருந்தாளிகள்

15 ஆண்டுகளுக்கு முன்பு, கிட்டாம்பாளையம் கிராமத்தில் உள்ள ஒரு ஆலமரத்தில் இருந்து பலத்த அலறல் சத்தம் கேட்டு எழுந்ததாக அந்த கிராம மக்கள் கூறுகின்றனர். அவர்கள் வெளியே வந்து பார்த்த போது சுமார் 50 வௌவால்கள் மரத்தின் மீது சௌகரியமாக உட்கார்ந்து ஊஞ்சல் ஆடி கொண்டிருந்தனவாம். அதனைக் கண்ட கிராம மக்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

ஒன்று கூடி முடிவெடுத்த கிராம மக்கள்

இதுபோன்ற நிகழ்வுகள் கிராமத்தில் அரிதாக இருந்ததால் மக்கள் தங்கள் புதிய அண்டை வீட்டாரை விரும்பினர். அதே போல ஒரு வருடம் கழித்து 70 வௌவால்கள் கொண்ட மற்றொரு காலனி வந்தபோது, பஞ்சாயத்து மற்றும் கிராம மக்கள் இருவரும் இணைந்து தீபாவளியை பட்டாசு இல்லாத விழாவாக அறிவித்து அவற்றை பாதுகாக்க முடிவு செய்தனர்.

Kittampalayam village diwali

பட்டாசு இல்லதா தீபாவளி கொண்டாட்டம்

அதிக ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதை மட்டும் தவிர்க்க வேண்டும் என்பது பேசப்படாத உடன்படிக்கையாகக் கூறப்பட்டாலும், 2006 ஆம் ஆண்டு எந்த வகையான பட்டாசுகளையும் வெடிப்பதை முற்றிலும் தவிர்ப்பதற்கு கிராம வாசிகள் ஒப்புதல் அளித்தனர். பறவைகளையும் சுற்றுசூழலையும் பாதுகாக்க ஒவ்வொரு ஆண்டும் இப்படியே இங்கு தீபாவளி கொண்டாடப்பட்டு வருகிறது.

தீப ஒளி பண்டிகை தான், தீப ஒலி பண்டிகை இல்லை

இந்த கிராம மக்களின் கொண்டாட்டம் என்பது தீபாவளியன்று புத்தாடை அணிந்து, இனிப்புகளை பரிமாறிக் கொள்வது மட்டும் தான். வௌவால்கள் மற்றும் பறவைகள் எழுப்பும் சத்தமே போதும், பட்டாசு சத்தம் வேண்டாம் என்று கிராம மக்கள் விரும்புகின்றனர். இது தீப ஒளி பண்டிகை தானே தவிர, தீப ஒலி பண்டிகை இல்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

சுற்றுச்சூழல் முக்கியத்துவத்தை குழந்தைகளுக்கு கற்பிக்கும் பெரியோர்கள்

சிறு வயதிலிருந்தே, வவ்வால்களுக்கு உணவளிப்பதைத் தொந்தரவு செய்யக்கூடாது என்று குழந்தைகளுக்கு கற்பிக்கப்படுகிறது. வெளவால்கள் பழங்களை உண்பதில் திறமையானவை, அவற்றைத் தாங்களாகவே நிர்வகிக்க முடியும் என்பதை குழந்தைகளுக்கு அவர்கள் சொல்லி கொடுக்கிறார்கள். சுற்றுச்சூழல் காப்பதையே பிரதான நோக்கமாக இருக்க வேண்டும் என்றும் கொண்டாட்டங்கள் எந்த வகையிலும் சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்க கூடாது என்பதையும் குழந்தைகளுக்கு கற்பிக்கின்றனர்.

இதைப்பற்றிய உங்களுடைய கருத்து என்ன?

More News

    Read more about: travel tamil nadu coimbatore
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+