Search
  • Follow NativePlanet
Share
» »இனி கன்னியாகுமரி செல்ல வேண்டாம்...சன் ரைஸ், சன்செட் பார்க்க மைசூருவிலேயே இத்தனை இடங்கள் இருக்கே

இனி கன்னியாகுமரி செல்ல வேண்டாம்...சன் ரைஸ், சன்செட் பார்க்க மைசூருவிலேயே இத்தனை இடங்கள் இருக்கே

சன்ரைஸ், சன்செட் ஆகியவற்றின் அழகை கண்டு ரசிக்க வேண்டும் என்றால் நமக்கு கன்னியாகுமரி தான் நினைவிற்கு வரும். ஆனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கலாச்சார நகரமான மைசூருவில் சன்ரைஸ், சன்செட் ஆகியவற்றை கண்டு ரசிக்க ஒன்று அல்ல ஏழு அற்புதமான இடங்கள் உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? பிரம்மாண்ட அரண்மனைகளுக்கு பெயர் பெற்ற மைசூருவில் சன்ரைஸ், சன்செட் கண்டு மகிழ எங்கெல்லாம் செல்லலாம் என்ற தகவல் இதோ உங்களுக்காக...

Perfect places to watch sunrise and sunset in Mysuru

1. சாமுண்டி ஹில்ஸ்

மைசூரில் சன்ரைஸ் பார்க்க ஏற்ற இடங்களில் முக்கியமானது சாமுண்டி ஹில்ஸ். இது ஆன்மீக தலமாகவும், இயற்கை விரும்பிகளுக்கு விருப்பமான இடமாகவும் விளங்குகிறது. இதன் மலை உச்சியில் இருந்து சூரிய உதயத்தின் அழகை கண்டு ரசிக்கலாம். ஒருவேளை உங்களுக்கு அதிகாலை நேரத்தில் சாமுண்டி ஹில்ஸில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக இந்த அழகை கண்டு ரசிக்க மிஸ் பண்ணிடாதீங்க. காலை 06.30 முதல் 7 மணிக்குள் சன்ரைஸ் பார்க்க முடியும். அது மட்டுமல்ல இந்த மலை உச்சியில் இருந்து பார்த்தால் ஒட்டுமொத்த மைசூர் நகரத்தையும் பார்க்க முடியும்.

Perfect places to watch sunrise and sunset in Mysuru

2. கே ஆர் எஸ் பேக்வாட்டர்ஸ்

அமைதியாக சன்செட்டை ரசித்து மகிழ வேண்டுமென்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் கே ஆர் எஸ் எனப்படும் கிருஷ்ணராஜ சாகர் நீர்த்தேக்கம் தான். இந்த அணையில் நிரம்பி இருக்கும் தண்ணீருக்கு பின்னால் சென்று சூரியன் மறைவதை போல் மிக அழகான காட்சியை கண்டு ரசிக்க முடியும். இதுவரை எங்கும் அனுபவிக்காத ஒரு அற்புதமான அமைதியை இங்கு உணர முடியும். மைசூரு நகரில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மாலை 6 மணிக்கு சென்றால் சூர்ய அஸ்தமனம், பறவைகள் கூட்டில் அடையும் சத்தம் போன்ற இயற்கையான விஷயங்களை கண்டு ரசிக்க முடியும்.

3. குக்கரஹள்ளி ஏரி

உள்நாடு மட்டும் அல்ல வெளிநாட்டுப் பயணிகளையும் மைசூருவில் அதிகம் கவர்ந்த இடம் இந்த குக்கரஹள்ளி ஏரி தான். இங்குள்ள அமைதியான சூழ்நிலை, சூரியனின் கதிர்கள் பட்டு பிரதிபலிக்கும் நீர்நிலைகள் ஆகியவை அனைவரையும் ரசிக்க வைக்கும். சன் ரைஸ், சன்செட் இரண்டையும் பார்த்து ரசிப்பதற்கு ஏற்ற இடம். இந்த ஏரியை சுற்றி நடந்து வருவதற்கு சுமார் நான்கு கிலோமீட்டர் தூரத்திற்கு பாதை அமைத்துள்ளனர். இங்கு சன்ரைசை பார்த்து ரசிக்க வேண்டும் என்றால் காலை 06.30 மணிக்கும், சன் செட்டை பார்க்க வேண்டும் என்றால் மாலை 6 மணிக்கும் வரலாம். இங்கு வெளிநாட்டுப் பறவைகள் குளிர்காலங்களில் அதிகம் வருவதுண்டு. அதனால் சூரியனின் அழகை ரசித்தபடியே ஏரியை சுற்றி வந்து பல விதமான பறவைகளையும் இங்கு ரசிக்க முடியும்.

Perfect places to watch sunrise and sunset in Mysuru

4. கரிகாட்டா மலை

மைசூரில் அதிகாலை அழகை ரசிக்க வேண்டும் என்றால் நீங்கள் செல்ல வேண்டிய இடம் கரிகாட்டா மலை. இங்கு சன்ரைஸ் பார்ப்பது மிகவும் அற்புதமான ஒரு அனுபவம். டிரக்கிங் செல்ல நினைப்பவர்கள் இந்த மலைக்கு சூப்பரான ஒரு ட்ரிப் சென்று விட்டு வரலாம். இது நிறைவான ஒரு சுற்றுலா உணர்வை உங்களுக்கு அளிக்கும். இதன் மலை உச்சியில் இருந்து சன்ரைஸ் பார்ப்பது, பசுமையான நிலப்பரப்புகள் ஆகியவற்றை கண்டு ரசிக்க முடியும் மைசூரில் இருந்து 21 கிலோ மீட்டர் தூரம் பயணித்தால் இந்த மலையை அடையலாம். கடல் மட்டத்திலிருந்து 2697 அடி உயரத்தில் இந்த மலை அமைந்துள்ளது. இங்குள்ள விஷ்ணு ஆலயம் மிகவும் பிரபலமானது.

5. ரங்கன்திட்டா பறவைகள் சரணாலயம்

மைசூரில் இயற்கையாக பறவைகளின் அழகை ரசித்து மகிழவும், சன் செட்டின் அழகையும் முழுவதுமாக கண்டு ரசிக்க ஏற்ற இடம் இந்த ரங்கன்திட்டா பறவைகள் சரணாலயம். பலவிதமான பறவைகளை இங்கு காண முடியும். காவிரி ஆற்றின் கரையில் இந்த பறவைகள் அழகாக வசித்து வருகின்றன. பறவைகளின் சத்தத்துடன் சன் செட்டை ரசிப்பது புதிய அனுபவமாக இருக்கும். மைசூரில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் இந்த சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு சன் செட் பார்ப்பதற்கு ஏற்ற சரியான நேரம் மாலை 5:30 மணி முதல் 6.30 மணி வரை.

Perfect places to watch sunrise and sunset in Mysuru

6. நந்தி ஹில்ஸ்

மைசூர் செல்பவர்கள் அவசியம் பார்க்க வேண்டிய இடம் நந்தி ஹில்ஸ். சன் ரைஸ் பார்ப்பதற்கு மிகவும் ஏற்ற இடம். இயற்கை அழகு நிறைந்த இந்த இடத்தில் புகைப்படம் எடுக்க விரும்புபவர்கள், இயற்கை விரும்பிகள் ஆகியோருக்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. இது மைசூரில் இருந்து 150 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்குள்ள நந்தி கோவில் சுற்றலா பயணிகள் அவசியம் பார்க்க வேண்டிய ஒன்று.

7. கவலேதுர்கா கோட்டை

வித்தியாசமான அனுபவத்துடன் சன்ரைஸ் பார்க்க வேண்டும் என நீங்கள் நினைத்தால் ஒரு அவசியம் கவலேதுர்கா கோட்டைக்கு சென்று விட்டு வாருங்கள். கோட்டையின் உச்சியில் நடந்து சென்ற படியே சூரிய உதயத்தை பார்ப்பதே ஒரு விசித்திரமான அனுபவத்தை தரும். மைசூரில் இருந்து 130 கி.மீ., தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சன்ரைஸ் பார்க்க ஏற்ற இடம் காலை 6 மணி. இந்த கோட்டை 9ம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாக சொல்லப்படுகிறது. மிக பழையான இந்த கோட்டைக்கு செல்பவர்கள் உங்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு செல்வது நல்லது.

More News

    Read more about: mysuru mysore karnataka
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+