Search
  • Follow NativePlanet
Share
» »இந்தியாவில் கம்பீரமான புலிகளை எங்கு காணலாம் தெரியுமா?

இந்தியாவில் கம்பீரமான புலிகளை எங்கு காணலாம் தெரியுமா?

இந்தியாவில் கம்பீரமான புலிகளை எங்கு காணலாம் தெரியுமா?

உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த இயற்கை அழகு நிறைந்த பிலிபிட் நகரம் அடர்ந்த வனப்பகுதியாகும். சுற்றுலாவிற்கு மிகவும் ஏற்ற இடமாக இருந்தாலும் நேபாளத்துடன் பகிரப்படும் 54கிமீ தூர எல்லையால் பாதுகாப்புப் பிரச்சினைகளும் அதிகமாக இருக்கிறது. இப்பகுதியின் கலாச்சார, பாரம்பரிய விசயங்களை பறைசாற்றும் வண்ணம் இங்கு ஏராளமான வரலாற்றுச் சின்னங்கள் உள்ளன. மேலும் பல யாத்ரீக ஸ்தலங்களும் இயற்கை சூழலில் அமைந்துள்ளன. வாருங்கள் பிலிபட்டின் அழகிய சுற்றுலாத் தளங்களை ரசிக்கலாம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

 பிலிபிட் அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

பிலிபிட் அருகிலுள்ள சுற்றுலா தலங்கள்

பிலிபிட் புலிகள் சரணாலயத்தில் கம்பீரமான புலிகளைக் காணலாம். அதுமட்டுமல்லாது கோமட் தால், தேவா-காக்ரா சங்கம் மற்றும் ராஜா வேணு கா திலா ஆகிய இயற்கை தளங்களும் உள்ளன.

மாஹோஃப் வனப்பகுதியில் இருக்கும் சுக்கா கடற்கரையில் இருந்து சூரியமறைவைப் பார்ப்பது மதிமயக்கும் அழகிய அனுபவமாகும். கெளரி சங்கர் கோவில் என்ற 450ஆண்டு பழமையான கோவில் பிலிபிட்டில் அமைந்துள்ளது.

சாத்தவி பட்ஷாஹி குருத்வாரா, தர்ஹா ஹஜ்ரத் ஷா, ஷேர் மியான் கீ, ஜம்மா மஸ்ஜித், மெதடிஸ்ட் தேவாலயம், அர்த்தநாரீஸ்வரர் கோவில், ஜைஷாந்த்ரி கோவில் ஆகியவையும் இங்கு உள்ளன. 15ஆம் நூற்றாண்டு வரை பழமையான வரலாறு கொண்ட் பழைட பிலிபிட் மக்களால் வண்ணமயமாக நிரம்பி வழிகிறது.

Rtndeep889

 சாத்தவி பத்ஷாஹி

சாத்தவி பத்ஷாஹி

ஆறாவது சீக்கிய குருவுக்கு இந்த குருத்வாரா அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 400 ஆண்டுகள் பழமையான இக்குருத்வாராவிற்கு வருடம் முழுதும் ஏராளமான பக்தர்கள் மரியாதை செலுத்தவும், ஆசீர்வாதம் பெறவும் வருகிறார்கள். நானக்மடத்திற்கு செல்லும் வழியில் குரு கோவிந்த் சிங் இங்கு ஓய்வெடுத்ததாக நம்புகிறார்கள்

Rtndeep889

சுக்கா கடற்கரை

சுக்கா கடற்கரை


ஷாரதா கால்வாய்க்கும் ஷாரதா சாகர் அணைக்கும் இடையில் மஹாஃப் வனப் பகுதியில் அமைந்துள்ள இக்கடற்கரை பிலிபிட்டின் முக்கியமான சுற்றுலா தளமாகும். சூரிய மறைவிற்கு பெயர்போன இவ்விடத்தின் வனப்பகுதி அழகுக்கு அழகு சேர்ப்பதாய் இருக்கிறது.

mangranaphotoghraphe

 கோமத் தால்

கோமத் தால்

உத்தரப் பிரதேசத்தின் முக்கியமான நகரங்களில் வழியாக ஓடும் இந்தியாவின் புனிதமான நதிகளில் ஒன்றான கோம்தி நதி, பிலிபிட் வழியாக ஓடும் போது வஷிஷ்டரின் மகள் என அறியப்படுகிறது. இந்துக்களுக்கு புனிதமாக கருதப்படும் கோமத் தால் வருடம் முழுதும் ஏராளமான பக்தர்களை ஈர்க்கிறது. குறிப்பாக சூரிய கிரகணத்தின் போது நீரில் குளிக்க பக்தர்கள் வருகை தருகிறார்கள். குருஷேத்ர நதியில் குளிப்பதைப் போன்ற புண்ணியத்தை கோமத் தால் நதி கொடுப்பதாக நம்புகிறார்கள்..

Makks2010

 அர்த்தநாரீஸ்வரர் கோவில்

அர்த்தநாரீஸ்வரர் கோவில்

சிவனுக்கும் பார்வதிக்கும் இக்கோவில் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அர்த்தநாரீஸ்வரர் என்றால் பாதி ஆண், பாதி பெண் என்று பொருள். இங்கிருக்கும் சிலை ஆணாகவும், பாதி பெண்ணாகும் அமைக்கப்பட்டுள்ளது. சிலைக்கு அருகில் உள்ள கல்லில் தெய்வங்களின் வாகனங்களாக எருது, சிங்கம் ஆகியவை வரையப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாது அனுமார், பைரவர் ஆகிய கடவுள் சிலைகளும் இங்கு உள்ளன.

Shamikh Faraz

 தர்கா

தர்கா

சாத்தவி பத்ஷாஹி குருத்வாராவைப் போலவே இந்த தர்காவின் மண்டபம் அனைத்து மதத்தினரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் பெயரிடப்பட்டுள்ளது. இந்த தர்காவைப் பற்றி பல கதைகள் இருந்தாலும் முழு நம்பிக்கையுடன் வேண்டினால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை பலரை ஈர்க்கிறது.

Shamikh Faraz

More News

Read more about: travel
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+