Search
  • Follow NativePlanet
Share
» »முசூரியில் பார்க்கவேண்டிய பத்து இடங்கள்

முசூரியில் பார்க்கவேண்டிய பத்து இடங்கள்

உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள மூசூரி, 'மலைகளின் ராணி' என அழைக்கப்படுகிறது. இமயமலை அடிவாரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1880மீ உயரத்தில் அமைந்துள்ளது முசூரி. சிவாலிக் மலைகள

By Udhaya

உத்தரகண்ட் மாநிலத்தின் டெஹ்ராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ள மூசூரி, 'மலைகளின் ராணி' என அழைக்கப்படுகிறது. இமயமலை அடிவாரத்தில், கடல் மட்டத்தில் இருந்து 1880மீ உயரத்தில் அமைந்துள்ளது முசூரி. சிவாலிக் மலைகள் மற்றும் டூன் பள்ளத்தாக்கின் எழில்மிகு தோற்றத்தை முசூரியில் இருந்து காணலாம். மேலும் மத ஸ்தலங்களான யமுனோத்ரி மற்றும் கங்கோத்ரி ஆகிய இடங்களின் நுழைவாயில் என்றும் முசூரி அழைக்கப்படுகிறது. மன்சூர் என வழங்கப்படும் ஒரு மூலிகைச் செடி இங்கு அதிக அளவில் காணப்படுவதால் அப்பெயரில் இருந்தே இவ்விடத்திற்கு முசூரி என்ற பெயர் வந்தது. உள்ளூர் மக்கள் இவ்விடத்தை மன்சூரி என்றே அழைக்கிறார்கள். முதல் முறையாக முசூரி செல்பவர்கள் கட்டாயம் பார்க்கவேண்டிய பத்து இடங்கள் இவைதான்

லால்டிப்பா

லால்டிப்பா


முசூரியில் அதிக அளவு மக்கள் தொகை கொண்ட இடமான லால்டிப்பாதான் மூசூரியின் மிக உயரமான இடமாகும்.

இங்கு டிப்போ சேகரிப்பு மையமும், அனைந்திந்திய வானொலி, தூதர்ஷன் ஆகியவற்றின் கோபுரங்களும் (டவர்) அமைந்துள்ளன.

முசூரியின் லால் டிப்பா பகுதியிலிருந்து தொலைநோக்கி வழியாக பார்த்தால் பந்தர்பஞ்ச், கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களை கண்டுரசிக்கலாம்.

சாகசபயணத்துக்காகவும், சூரிய உதயம், மறைவு, ஆங்கிலேயர் காலத்து வீடுகள் ஆகியவற்றைக் காணவும் இங்கு வருகை தருகின்றனர் சுற்றுலாப் பயணிகள்.

Lahirjairams

கன் ஹில்

கன் ஹில்


கடல் மட்டத்திலிருந்து 2122மீ உயரத்தில் அமைந்துள்ளது. இது முசூரியின் இரண்டாவது உயரமான இடம்.

இந்த மலை உச்சியிலிருந்து இமயமலையையும், முசூரியின் கடை வீதியையும் காணமுடியும்.

ரோப் கார் உதவியுடன் கன் ஹில்லின் உச்சியை அடையலாம். அல்லது நடந்து செல்லும் வாய்ப்பும் இங்கு அமைந்துள்ளது.

Harshanh

கெம்ப்டி நீர்வீழ்ச்சி

கெம்ப்டி நீர்வீழ்ச்சி

கடல் மட்டத்தில் இருந்து 4500 கிமீ உயரத்தில் அமைந்திருக்கும் கெம்ப்டி நீர்வீழ்ச்சி முசூரி வரும் சுற்றுலாப்பயணிகளிடையே புகழ்பெற்று விளங்குகிறது. மலையில் இருந்து 40அடி உயரத்தில் விழுகும் இந்நீர்வீழ்ச்சியே முசூரியின் மிகப் பெரிய நீர்வீழ்ச்சியாகும். யமுனாத்ரி சாலையில் இருந்து 15கிமீ தொலைவில் இந்நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.

Rajeev kumar

க்ளவுட்ஸ் எண்ட்

க்ளவுட்ஸ் எண்ட்

க்ளவுட்ஸ் எண்ட் (மேகத்தின் எல்லை), பெயருக்கு ஏற்றபடி மூசூரியின் கடைசிப் பகுதியாக விளங்குகிறது. லைப்ரரி எனப்படும் புகழ்பெற்ற கடைவீதியில் இருந்து 6கிமீ தொலைவில் இவ்விடம் அமைந்துள்ளது.

மதிமயக்கும் அழகிய காட்சிகளை அள்ளி வழங்கும் இவ்விடத்திற்கு செல்ல அடர்ந்த காடுகளில் பயணிகள் நடந்து செல்ல வேண்டும். வழியில் பலவகையான மிருகங்கள் மற்றும் செடிகளை உள்ளடக்கிய பினாக் சரணாலயம் அமைந்துள்ளது.

நகரத்தின் மையப்பகுதியில் இருந்து வாடகை கார்கள் மூலம் இவ்விடத்தை அடையலாம். மேலும் நடப்பதில் ஈடுபாடு கொண்டவர்கள் ஹேப்பி பள்ளத்தாக்கில் இருந்து தொடங்கும் ஹாதிப்பன் சாலை வழியாகவும் இவ்விடத்தை அடையலாம்.

Vipinwobbled

பட்டா நீர்வீழ்ச்சி

பட்டா நீர்வீழ்ச்சி

முசூரியில் இருந்து 7கிமீ தொலைவில் முசூரி-டெஹ்ராடூன் சாலையில் உள்ள பட்டா கிராமத்தில் அமைந்துள்ளது பட்டா நீர்வீழ்ச்சி. முசூரியில் இருந்து வாடகை காரின் மூலம் இவ்விடத்தை எளிதில் அடையலாம். பட்டா கிராமத்தில் இருந்து 3கிமீ நடந்தாலே சுலபமாக அடைய முடிந்த இந்நீர்வீழ்ச்சி நீர் விளையாட்டுகளுக்கு சிறந்த இடமாக திகழ்கிறது.

மொசி நீர்வீழ்ச்சி

மொசி நீர்வீழ்ச்சி

அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட மொசி நீர்வீழ்ச்சி முசூரியில் இருந்து 7கிமீ தொலைவில் அமைந்துள்ளது. பலஹிசாரில் அல்லது பர்லோகஞ் வழியாக செல்லும் சாலையில் பயணிப்பதன் மூலம் மொழி நீர்வீழ்ச்சியை அடையலாம்.
Shajidsaifi

மலையேற்றத்திற்கு

மலையேற்றத்திற்கு

முசூரியில் ஏராளமான மலைக்குன்றுகள் இருப்பதால், மலையேற்றத்திற்கு ஏற்ற இடமாக புகழ்பெற்று விளங்குகிறது. அக்லார் நதி, பார்க் எஸ்டேட், பத்ராஜ் காடுகள், லால் டிப்பா, நாக் டிப்பா ஆகிய இடங்களுக்கு பயணிகள் மலையேற்றத்தின் மூலம் பயணிக்கலாம்.

இமாலய சாகச பயிற்சிப்பள்ளி நதி தாண்டுதல், பாறை ஏற்றம், இயற்கைக் கூடாரம் அமைத்தல் ஆகியவற்றுடன் மலையேற்றத்திற்கான வசதிகளையும் செய்து தருகிறது.

Omipriyankaverma

மால்

மால்

முசூரியின் மையப் பகுதியில் அமைந்திருக்கும் 'மால்' முசூரியின் புகழ்பெற்ற கடைவீதியாக விளங்குகிறது. காலனி காலத்து பலகைகளும், விளக்குத்தூண்களும் சாலையோரத்தில் அமைந்திருப்பது மேலும் அழகு சேர்ப்பதாக இருக்கிறது. 1980கள் காலத்தைய வீடியோ கேம் கடைகளும், ஸ்கேட்டிங் மைதானங்கலும், மெதடிஸ்ட் தேவாலயங்களும் இங்கு முக்கியமான இடங்களாக கருதப்படுகின்றன. திபெத் பாரம்பரிய உடைகளை அணிந்த திபெத்தியர்கள் இங்கு கம்பளி, உலோக பாத்திரங்கள், மர சாமான்கள், சுவர் அலங்காரங்கள் மற்றும் பிற வெளிநாட்டு சாமான்கள் விற்பதைக் காணலாம். மேலும் கைத்தடிகள், நகைகள், கிண்ணங்கள், தாம்பூலங்கள், மூங்கில் கூடைகள் ஆகியவற்றையும் பயணிகள் வாங்கலாம்.

Paul Hamilton

 முசூரி ஏரி

முசூரி ஏரி

நகர கூட்டமைப்பும், முசூரி டெஹ்ராடூன் வளர்ச்சிக் கழகமும் இணைந்து முசூரி ஏரியை அழகிய சுற்றுலா மையமாக சமீபத்தில் உருவாக்கியிருக்கிறார்கள். முசூரி டெஹ்ராடூன் சாலையில் அமைந்திருக்கும் ஏரியில் பயணிகள் படகு சவாரி செய்து மகிழலாம். டூன் பள்ளத்தாக்கு மற்றும் அருகில் உள்ள அழகிய கிராமங்களையும் இங்கிருந்து காண முடிகிறது.

Neha Dhawan

ஹேப்பி பள்ளத்தாக்கு

ஹேப்பி பள்ளத்தாக்கு

லைப்ரரி பாயிண்டிற்கு மேற்குப் பக்கம் அமைந்துள்ள ஹேப்பி பள்ளத்தாக்கு க்ளவுட்ஸ் எண்ட் வரையில் தொடர்கிறது. இங்கு புகழ்பெற்ற ஐ.ஏ.எஸ் பயிற்சிப்பள்ளி ஒன்றும், நகராட்சித் தோட்டமும், திபெத்திய கோவில்களும் அமைந்துள்ளன. பயணிகள் ஹேப்பி பள்ளத்தாக்கில் இருந்து ஹதிபோன் பூங்கா வரை கலா பள்ளி வாயிலாக நடைப்பயிற்சியில் ஈடுபடலாம்.

Mohithdotnet

Read more about: travel india
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X