Search
  • Follow NativePlanet
Share
» »குருவாயூர் அருகே இருக்கும் இந்த யானை முகாமுக்கு போலாமா?

குருவாயூர் அருகே இருக்கும் இந்த யானை முகாமுக்கு போலாமா?

யானைகள் என்றாலே குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் பார்க்கும் ஆர்வம் வந்துவிடும். அதன்படி யானைகளின் புத்துணர்வு முகாம்களில் அதிக யானைகள் இருக்கும் இடத்துக்கு செல்வதும், புதுவிதமான சுற்று

By Udhaya

யானைகள் என்றாலே குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல், பெரியவர்களுக்கும் பார்க்கும் ஆர்வம் வந்துவிடும். அதன்படி யானைகளின் புத்துணர்வு முகாம்களில் அதிக யானைகள் இருக்கும் இடத்துக்கு செல்வதும், புதுவிதமான சுற்றுலா அனுபவத்தை தரும். வாருங்கள் கேரள மாநிலம் குருவாயூர் அருகில் உள்ள இந்த யானைகள் முகாமுக்கு சென்று வருவோம்.

யானை முகாம்

யானை முகாம்

குருவாயூரப்பன் கோயிலிலிருந்து 3 கி.மீ தூரத்தில் புன்னத்தூர் கொட்டா எனுமிடத்தில் இந்த யானை முகாம் அமைந்துள்ளது. இந்தியாவிலேயே மிகப்பெரிய யானை முகாம் இதுவே என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடம் புன்னத்தூர் அரச வம்சத்துக்கு சொந்தமானதாகும்.

குருவாயூரப்பன்

குருவாயூரப்பன்

10 ஏக்கர் பரப்பளவில் பரந்து காணப்படும் இந்த காப்பகத்தில் சுமார் 60 யானைகள் பராமரிக்கப்படுகின்றன. இங்குள்ள யானைகள் பக்தர்களால் குருவாயூரப்பன் கோயிலுக்கு காணிக்கையாக வழங்கப்பட்டவை என்பது ஒரு ஆச்சரியமான தகவலாகும். குருவாயூர் பத்மநாபன் மற்றும்ம் குருவாயூர் கேசவன் போன்ற பிரசித்தி பெற்ற கோயில் யானைகள் இந்த காப்பகத்தில் வளர்க்கப்பட்டவை என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த யானைகள் ஏராளமான பக்தர்களை ஈர்க்கின்றன.

Jigesh

திருவிழாக்கள்

திருவிழாக்கள்


திருவிழாக்கள் மற்றும் ஊர்வலங்களின் போது இந்த யானைகளின் மீது கோயில் விக்கிரகங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன. மேலும் இந்த யானைக்காப்பகத்தில் இருக்கும் யானைகள் கோயில் நிர்வாகத்தால் நடத்தப்படும் யானைப்பந்தயங்களிலும் பங்கேற்கின்றன.

 ஆனயோட்டம்

ஆனயோட்டம்


ஆனயோட்டம் என்று அழைக்கப்படும் இந்த ஓட்டப்பந்தயத்தில் வெற்றிபெறும் யானைக்கு குருவாயூரப்பன் சிலையை எடுத்துச்செல்லும் பெருமையான அந்தஸ்து அளிக்கப்படுகிறது. பார்த்து ரசிக்கக்கூடிய இந்த நிகழ்ச்சி பல பயணிகளை குருவாயூர் நோக்கி ஈர்க்கிறது.

மாம்மியூர் மஹாதேவா கோயில்

மாம்மியூர் மஹாதேவா கோயில்

பிரசித்தமான குருவாயூரப்பன் கோயிலுக்கு அருகிலேயே அமைந்துள்ள இந்த மாம்மியூர் மஹாதேவா கோயிலின் பெயரிலிருந்தே இது சிவனுக்கான கோயில் என்பது எளிதில் விளங்கும். அற்புதமான சுவரோவியங்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள இக்கோயிலில் மஹாவிஷ்ணுவின் பெண் அவதாரமான மோகினி சித்தரிக்கப்பட்டுள்ள ஓவியங்களை காணலாம். மாம்மியூர் மஹாதேவா கோயிலுக்கு விஜயம் செய்யாமல் குருவாயூர் பயணம் நிறைவடைவதில்லை என்பதாக ஐதீகம். எனவே குருவாயூரப்பன் கோயிலுக்கு வருகை தரும் ஆயிரக்கணக்கான பயணிகள் இந்த சிவன் கோயிலுக்கும் விஜயம் செய்கின்றனர். முன்பு தான் எழுந்தருளியிருந்த இடத்தை குருவாயூரப்பன் கோயிலுக்கு அளித்துவிட்டு இந்த புதிய இடத்தில் சிவபெருமான் எழுந்தருளியதாக தலபுராணம் கூறுகிறது. இந்த சிவன் கோயிலின் கருவறையில் பார்வதியின் சிற்பங்களையும் காணலாம். கணபதி, சுப்ரமணியர், அய்யப்பா மற்றும் விஷ்ணு ஆகிய கடவுள்களின் சன்னதிகளும் இந்த மாம்மியூர் மஹாதேவா கோயில் வளாகத்தில் அமைந்துள்ளன.

 பார்த்தசாரதி கோயில்

பார்த்தசாரதி கோயில்

குருவாயூரின் முக்கியமான சுற்றுலா அம்சங்களில் இந்த பார்த்தசாரதி கோயிலும் ஒன்று. இங்கு கிருஷ்ண பஹவானின் மற்றொரு வடிவமான பார்த்தசாரதி குடி கொண்டுள்ளார். குருஷேத்திர யுத்தத்தில் அர்ஜுனனுக்கு சாரதியாகவும் வழிகாட்டியாகவும் உருவெடுத்த ஸ்ரீகிருஷ்ணரே பார்த்தசாரதி என்றழைக்கப்படுகிறார். இந்த கோயிலின் விக்கிரகம் ஸ்ரீ ஆதி சங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது. இந்த கோயிலில் ஆதி சங்கரருக்கும் ஒரு சிலை உள்ளது. மிக விசேஷமான அம்சமாக இக்கோயிலின் கருவறையானது ஒரு தேர் போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. மிக நுணுக்கமாக வடிக்கப்பட்டுள்ள குதிரைகளையும் சக்கரங்களையும் இந்த அமைப்பில் பார்க்க முடியும். ஒட்டுமொத்தமான பார்த்தசாரதி கோயிலின் தோற்றமானது பிரமிக்க வைக்கும் கலையம்சத்துடன் பார்வையாளர்களை வசியப்படுத்தும் விதத்தில் வீற்றிருக்கிறது. இக்கோயிலின் சுவர்களிலும் நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள் காட்சியளிக்கின்றன.

More News

    Read more about: travel temple
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+