» »திருநெல்வேலி அருகே இரண்டு சூப்பர் சுற்றுலா தலங்கள்!

திருநெல்வேலி அருகே இரண்டு சூப்பர் சுற்றுலா தலங்கள்!

Written By: Staff

கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம்

Koondhankulam

Photo Courtesy : K. Harikrishnan

கூந்தன்குளம், நாங்குநேரி அருகே இருக்கும் ஒரு சிறிய கிராமம். இந்த ஊரில் இருக்கிறது கூந்தன்குளம் பறவைகள் சரணாலயம். 1994 'ஆம் ஆண்டு முன்பு வரை பாதுகாக்கப்பட்ட இடமாக இருந்தது; 1994'இல்தான் பறவைகள் சரணாலயமாக அதிகாரப்பூர்வமாக மாற்றப்பட்டது.

திருநெல்வேலியில் இருந்து 33 கி.மீ தொலைவில் இருக்கிறது கூந்தன்குளம்.

koondhankulam

Photo Courtesy : Wikipedia

மொத்தம் 129.33 ஏக்கரில் பரந்து விரிந்துள்ள இந்த சரணாலயத்தில் 43 வகையான பறவை இனங்கள் இருக்கின்றன. சைபீரிய பகுதியில் இருந்து வருகை தரும் பட்டைத்தலை வாத்து, ஊசிவால் வாத்து, தட்டை வாயன், செண்டு வாத்து, முக்குளிப்பான் உள்ளிட்ட பல்வேறு உப்புக் கொத்திகள், செங்கால் நாரை, மஞ்சள் மூக்கு நாரை, மூன்று விதமான கொக்குகள், கரண்டி வாயன் என ஆண்டு தோறும் பறவைகள் வருகின்றன‌.

இந்தப் பகுதி மக்கள், பறவைகளைத் துன்புறுத்தக்கூடாதென தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள்கூட‌ வெடிப்பது கிடையாது.

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்

Tiger

Photo Courtesy : Wikipedia

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம் தமிழகத்தின் இரண்டாவது மிகப்பெரிய காப்பகம்.

திருநெல்வேலி அருகே மேற்கு தொடர்ச்சி மலைத்தொடரில் அமைந்திருக்கிறது இந்த காப்பகம்.

வெறும் புலிகள் மட்டுமல்ல, சிறுத்தை, மான், மிளா, யானை போன்ற பிற‌ விலங்கினங்கள், உலகில் வேறெங்கும் இல்லாத தாவர வகைகளும் உள்ளன.

இதுமட்டுமல்ல, பாபநாசம் அணை, பாணதீர்த்த அருவி, சேர்வலாறு அணை, அகத்தியர் அருவி, மணிமுத்தாறு அணை என்று பல சுற்றுலா தலங்கள் இதனருகே இருக்கின்றன.

ரோஜா படத்தில் வரும் சின்ன சின்ன ஆசை என்ற பாடல், இங்குள்ள பாணதீர்த்தம் அருவியில் தான் படம்பிடிக்கப்பட்டது

வனத்துறையிடம் அனுமதியோடு நீங்கள் மலையேற்றத்தில் ஈடுபடலாம். காட்டுக்குள் தங்குவதற்கு தமிழ்நாடு வனத்துறை விருந்தினர் மாளிகை, அம்பாசமுத்திரத்தில் பொதுப்பணித்துறை ஓய்வு இல்லம் ஆகியவை இருக்கின்றன.

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்