Search
  • Follow NativePlanet
Share
» »ராமாயணத்தில் வரும் முக்கியமான இடங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான பயணம்

ராமாயணத்தில் வரும் முக்கியமான இடங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான பயணம்

ஆயிரக்கணக்கான வருடங்களாக நம் வாழ்வுடன் கலந்துவிட்ட காவியம் ராமாயணம். வட இந்தியாவில் தொடங்கி ஏறத்தாழ இந்தியா முழுமைக்கும் பயணித்து தென்கோடி முனையான ராமேஸ்வரத்தில் இருந்து கடல் மேல் பாலம் அமைத்து கவர்ந்து செல்லப்பட்ட தன் காதல் மனைவி சீதையை மீட்டு தன் சொந்த நாடான அயோத்திக்கு திரும்புவதாய் ராமாயணம் நீளும். ராமாயணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்கள் இன்றும் இருக்கின்றன. வாருங்கள் அந்த இடங்களுக்கு ஒரு சுற்றுலா சென்று வரலாம்.

Goibibo தளத்தில் உள்ள அனைத்து கூப்பன்களையும் இங்கே இலவசமாக பெற்றிடுங்கள்

அயோத்தி, உத்திர பிரதேசம்:

அயோத்தி, உத்திர பிரதேசம்:

சரயு நதியின் வலது கரையில் அமைந்திருக்கும் அயோத்தி நகரம் ராமாயணத்தில் உள்ள குறிப்புகள் படி 9000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும். ராமாயணத்தின் நாயகன் ராமனின் பிறப்பிடமான இந்நகரம் 15-16ஆம் நூற்றாண்டுகளில் நடந்த முகலாயர்களின் படையெடுப்புகள் காரணமாக சர்ச்சைக்குரிய நகரமாக இருக்கிறது.

Photo: Wikipedia

அயோத்தி, உத்திர பிரதேசம்:

அயோத்தி, உத்திர பிரதேசம்:

இங்கு தான் சர்ச்சைக்குரிய பாபர் மசூதி அமைந்திருக்கிறது. மிக மிக அதிகமாக பாதுகாக்கப்படும் இடமாக இருப்பதால் சுற்றுலாப்பயணிகள் இதனுள் செல்ல முடியாது. இதை தவிர இங்குள்ள ஹனுமான் கரிஹ் என்ற கோயில் ஆஞ்சநேய பக்தர்களிடையே மிக பிரபலமான கோயிலாகும்.

அயோத்தி, உத்திர பிரதேசம்:

அயோத்தி, உத்திர பிரதேசம்:

ஒவ்வொரு ஆண்டும் இங்குள்ள சரயு நதிக்கரையில் ராமனின் பிறந்தநாளான ராமநவமி மிகச்சிறப்பாக கொண்டாடப்படுகிறது. ராமநவமி கொண்டாடப்படும் ஒன்பது நாட்களும் நதிக்கரை ஆயிரக்கணக்கான தீபங்களின் ஒளிவெள்ளத்தில் ஜொலிக்கிறது. பழமையான தன் அடையாளங்களை பெரிதாக மாற்றிக்கொள்ளாத இந்த அயோத்தி நகருக்கு கட்டாயம் ஒருமுறை சென்று பாருங்கள்.

அயோத்தி, உத்திர பிரதேசம்:

அயோத்தி, உத்திர பிரதேசம்:

சரயு நதிக்கரை.

லேபாக்ஷி, ஆந்திரபிரதேசம்:

லேபாக்ஷி, ஆந்திரபிரதேசம்:

சீதையை தீடி ராமன் அலைந்து கொண்டிருக்கையில் சீதையை ராவணன் தான் கவர்ந்து சென்றான் என்பதை அவருக்கு முதன்முதலில் தெரிவித்தது ஜடாயு என்ற கழுகளின் அரசனாகும். சீதையை மீட்க ராவணனுடன் போரிட்டு இறந்து போகும் தருவாயில் ராமன் வருகிறான் 'லே, பக்ஷி' (எழு பறவையே) என கூறி ஜடாயுவுக்கு மோட்சம் அளிக்கிறார். இதனாலேயே லேபாக்ஷி என பெயர் பெற்றிருக்கிறது இந்த கோயில்.

லேபாக்ஷி, ஆந்திரபிரதேசம்:

லேபாக்ஷி, ஆந்திரபிரதேசம்:

விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்ட இக்கோயில் கட்டிடக்கலையில் உச்சம் தொட்ட ஒரு படைப்பாகும். இக்கோயிலில் உள்ள நந்தி சிலை ஒரே கல்லினால் குடையப்பட்ட மிகப்பெரிய நந்தி சிலைகளில் ஒன்றாகும். மேலும் இக்கோயிலில் எதன் துணையுமில்லாமல் அந்தரத்தில் மிதக்கும் தூண் ஒன்றை காணலாம். அதே போல இங்குள்ள தூண்களில் பிரம்மிப்பூட்டக்கூடிய வகையில் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.

லேபாக்ஷி, ஆந்திரபிரதேசம்:

லேபாக்ஷி, ஆந்திரபிரதேசம்:

பெங்களுருவில் இருந்து 120 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் இக்கோயில் நிச்சயம் சென்று பார்க்கவேண்டிய இடங்களில் ஒன்றாகும். லேபாக்ஷி பற்றிய மேலதிக தகவல்களை இங்கே அறிந்து கொள்ளுங்கள்.

Photo:Vinay332211

 ராமேஸ்வரம் :

ராமேஸ்வரம் :

தமிழ்நாடு மாநிலத்தின் கிழக்கு கிடற்கரையில் உள்ள கறைபடாத, அமைதியான நகரம் பாம்பன் தீவின் ஒரு பகுதியாக உள்ள இராமேஸ்வரம் நகரமாகும். பாம்பன் கால்வாய் வழியாகவே இந்த நகரம் நாட்டின் பிற பகுதிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. காசி விஸ்வநாதர் கோயிலுக்கு அடுத்தபடியாக ஹிந்துக்களின் புனிதஸ்தலமாக இக்கோயில் திகழ்கிறது.

 ராமேஸ்வரம் :

ராமேஸ்வரம் :

இலங்கையில் ராவணனை வதம் செய்த பிறகு இந்தியாவுக்கு திரும்பிய ராமன் பிராமணனான ராவணனை கொன்ற பாவத்தை போக்கும் பொருட்டு ஒரு லிங்கத்தை ஸ்தாபித்து தங்களின் பாவம் போக்க வழிபாடு செய்துள்ளனர். அந்த லிங்கமே இன்றும் ராமலிங்கேஸ்வரராக இருப்பதாக நம்பப்படுகிறது.

 ராமேஸ்வரம் :

ராமேஸ்வரம் :

ராமேஸ்வரம் தீவில் அமைந்திருக்கும் இக்கோயிலின் வெளி பிரகாரங்கள் மற்றும் கோபுரங்கள் 12 ஆம் நூற்றாண்டில் பாண்டிய மன்னர்களால் கட்டப்பட்டதாகும். இங்குள்ள ஆயிரங்கால் மண்டபம் தான் ஆசியாவிலேயே மிகநீளமான கோயில் நடைபாதையாகும்.

 ராமேஸ்வரம் :

ராமேஸ்வரம் :

இங்கு வரும் பக்தர்கள் 24 புனித தீர்த்தங்களில் நீராடி இறைவனை வழிபடுகின்றனர். மகா சிவராத்திரி இக்கோயிலில் கொண்டாடப்படும் முக்கிய பண்டிகையாகும். ராமேஸ்வரம் கோயிலுக்கு சென்ற பிறகு அப்படியே தனுஸ்கோடி நகருக்கும் சென்று வர வேண்டும்.

தனுஸ்கோடி:

தனுஸ்கோடி:

ராமேஸ்வரத்தில் இருந்து 19 கி.மீ தொலைவில் அமைந்திருக்கும் தனுஸ்கோடி நகரம் 1964 புயலுக்கு பிறகு கைவிடப்பட்ட நகரமாக மாறிப்போன இங்கிருந்து தான் இலங்கை செல்ல கடலின் மேல் கற்பாலம் அமைத்ததாக நம்பப்படுகிறது. இங்கே கிடைக்கும் சில பாறைகள் தண்ணீரில் மிதக்கும் தன்டையுடையதாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

தனுஸ்கோடி:

தனுஸ்கோடி:

இந்த தனுஸ்கோடி நகரில் ஏற்பட்ட பெரும் புயலின் சான்றாக இன்றும் எஞ்சி நிற்கும் சர்ச்,மற்றும் ரயில் நிலையத்தை காணலாம்.அலைகளின் ஓசை மட்டுமே நிறைந்திருக்க இங்கு நிலவும் தனிமை ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

தனுஸ்கோடி:

தனுஸ்கோடி:

மிதக்கும் கல்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+