Search
  • Follow NativePlanet
Share
» »அரக்கு பள்ளத்தாக்கில் என்னவெல்லாம் பார்க்கலாம் தெரியுமா?

அரக்கு பள்ளத்தாக்கில் என்னவெல்லாம் பார்க்கலாம் தெரியுமா?

சீமாந்திரா மாநிலம் விசாகப்பட்டணம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலமான அரக்கு பள்ளத்தாக்கு கிழக்கு தொடர்ச்சி மலைகள் சூழ கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பெருமைகளை சுமந்து கொண்டு கம்பீ

By Udhaya

சீமாந்திரா மாநிலம் விசாகப்பட்டணம் மாவட்டத்தில் அமைந்திருக்கும் பிரசித்திபெற்ற மலைவாசஸ்தலமான அரக்கு பள்ளத்தாக்கு கிழக்கு தொடர்ச்சி மலைகள் சூழ கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பெருமைகளை சுமந்து கொண்டு கம்பீரமாக காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. இந்த பள்ளத்தாக்கு பகுதி இதுவரை வணிகமயமாக்கலின் பிடியில் சிக்காமல் இருப்பதனால் தன் கன்னிமை மாறா அழகு காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வருகிறது. இந்த இடத்துக்கு இந்த சீசனில் சென்று வரலாம் வாங்க..

திட்டமிடல்

திட்டமிடல்

அரக்கு பள்ளத்தாக்கு சென்னையிலிருந்து 878 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. மேலும் இந்த பயணத்துக்கு 16 மணி நேரங்கள் ஆகிறது. அதே நேரத்தில் இந்த அரக்கு பள்ளத்தாக்கு , விசாகப் பட்டினத்திலிருந்து 3 மணி நேரப் பயணத்தில் அமைந்துள்ளது.

வழித்தடங்கள்

இந்த ஊருக்கு விசாகப்பட்டினத்திலிருந்து செல்ல இரண்டு வழித்தடங்கள் இருக்கின்றன.

முதல் வழித்தடம்

விசாகப்பட்டினத்திலிருந்து தேசிய நெடுஞ்சாலை எண் 16 வழியாக காசிம் கோட்டை, கே ஜே புரம், ஒனுரு வழியாக இந்த வழித்தடத்தில் செல்ல முடியும்.

இந்த வழித்தடம் 140 கிமீ தூரம் பயணிக்கிறது. இதன் பயண நேரம் 4 மணி நேரம் ஆகும்.

இரண்டாவது வழித்தடம்

முன்னதை விட இந்த வழித்தடம் நமக்கு ஒரு மணி நேரத்தை மிச்சப்படுத்தும். 114 கிமீ தூரத்தை அடைய 3 மணி நேரம் ஏறக்குறைய ஆகும்.

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

ரயில் மூலமாக

அரக்கு நகரம் மற்றும் அரக்கு பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் இரண்டு ரயில் நிலையங்களும் விசாகப்பட்டணத்துடன் நல்ல ரயில் தொடர்பு கொண்டுள்ளன. அரக்கு பள்ளத்தாக்குக்கு அருகிலேயே ஷிமிலிகுடா ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையம் கடல் மட்டத்திலிருந்து 996 மீட்டர் உயரத்தில் அமைந்திருப்பத்துடன், இந்தியாவின் உயரமான அகல ரயில்பாதை தடமாகவும் கருதப்படுகிறது.

பேருந்து மூலமாக

ஷிமிலிகுடா கிராமத்திலிருந்து அரக்கு பள்ளத்தாக்கு செல்லும் சாலையும் நல்ல நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. மேலும் சீமாந்திராவின் பிற பகுதிகளிலிருந்து வாடகை கார்கள் மூலம் பயணிகள் அரக்கு பள்ளத்தாக்கை சுலபமாக அடைந்து விட முடியும். அதோடு ஹைதராபாத், விசாகபட்டணம் நகரங்களிலிருந்து அரக்கு பள்ளத்தாக்குக்கு டீலக்ஸ் மற்றும் வால்வோ பேருந்துகள் இயக்கப்படுவதுடன், மற்ற பகுதிகளிலிருந்தும் எண்ணற்ற பேருந்துகள் அரக்கு பள்ளத்தாக்குக்கு இயக்கப்படுகின்றன.

AVI3347

சுங்கரிமெட்டா பாதுகாப்பு காடுகள்

சுங்கரிமெட்டா பாதுகாப்பு காடுகள்

அரக்கு பள்ளத்தாக்கு ஒரிசா மாநில எல்லைக்கு வெகு அருகில், விசாகபட்டணத்திலிருந்து 114 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருக்கிறது. இந்தப் பள்ளத்தாக்கு அனந்தகிரி மற்றும் சுங்கரிமெட்டா பாதுகாப்பு காடுகளை உள்ளடிக்கியது. அதோடு ரக்தகொண்டா, சிட்டமகொண்டா, கலிகொண்டா, சுங்கரிமெட்டா போன்ற பிரம்மாண்ட மலைகள் அரக்கு பள்ளத்தாக்கை சூழ்ந்து காணப்படுகின்றன. இதில் சீமாந்திராவின் உயரமான குன்றாக கலிகொண்டா மலைப்பகுதி கருதப்படுகிறது.

AVI3347

காப்பித் தோட்டங்கள்

காப்பித் தோட்டங்கள்

அரக்கு பள்ளத்தாக்கு அதன் காப்பித் தோட்டங்களுக்காக பிரத்தியேகமாக அறியப்படுகிறது. இதன் காரணமாக நீங்கள் அரக்கு பள்ளத்தாக்கில் காலடி எடுத்து வைத்தவுடன் காற்றில் மிதந்து வரும் காப்பிக் கொட்டையின் நறுமணம் உங்களுக்கு அற்புதமான வரவேற்பை கொடுக்கும். இந்த காப்பித் தோட்டங்கள ஏராளமான பழங்குடியினருக்கு மறுவாழ்வு அளித்து வருகிறது. இந்தியாவின் முதல் கரிம காப்பி நிறுவனம் 2007-ஆம் ஆண்டு பழங்குடி மக்களை கொண்டு தொடங்கப்பட்டது. இந்த நிறுவனம் 'அரக்கு எமரால்ட்' என்று பெயரிடப்பட்டதுடன், உலகம் முழுக்க புகழ்பெற்று திகழ்ந்து வருகிறது. இன்று இந்த காப்பி நிறுவனத்தில் ஆயிரக்கணக்கான பழங்குடி மக்கள் காப்பி பயிரிடும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

Raj

பழங்குடி அருங்காட்சியகம்

பழங்குடி அருங்காட்சியகம்

அரக்கு பள்ளத்தாக்கின் முக்கிய சுற்றுலா அம்சங்களாக டிரைபல் மியூசியம் (பழங்குடி அருங்காட்சியகம்), டைடா, போரா குகைகள், சங்க்டா அருவி, பத்மபுரம் பொட்டானிகல் கார்டன்ஸ் போன்றவை அறியப்படுகின்றன. இவை தவிர இயற்கையோடு உறவாடும் பசுமை மிக்க காப்பித் தோட்டங்களுக்கு நீங்கள் அரக்கு பள்ளத்தாக்கு வரும் போது கண்டிப்பாக சென்று வர வேண்டும். மேலும் அரக்கு பள்ளத்தாக்கின் எந்த ஒரு சுற்றுலாப் பகுதியுமே அதன் சரித்திர மற்றும் கலாச்சார முக்கியத்துவம் காரணமாக கட்டாயம் பார்க்க வேண்டியவை.

AVI3347

 காலநிலை

காலநிலை

அரக்கு பள்ளத்தாக்கில் ஆண்டு முழுவதும் மிதமான வானிலையே நிலவும். இந்த மலைவாசஸ்தலத்திற்கு கோடையில் சுற்றுலா வருவதற்கே பயணிகள் பெரிதும் விரும்புகின்றனர். எனினும் பனிக் காலங்களில் உறையவைக்கும் பனிப்பொழிவின்றி இதமான வெப்பநிலை நிலவுவதால் அரக்கு பள்ளத்தாக்கை சுற்றிப் பார்க்க பனிக் காலங்களே சிறந்தது. ஏனெனில் ஹைக்கிங், டிரெக்கிங், ரேப்பெலிங் (இரண்டு கயிர்களை கொண்டு செங்குத்தான மலையில் இருந்து கீழ் இறங்குதல்) போன்ற சாகச பொழுதுபோக்குகளில் ஈடுபடுவதற்கு பனிக் காலங்களே சிறந்த தேர்வாக அமையும்.

AVI3347

More News

    Read more about: travel araku valley
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+