Search
  • Follow NativePlanet
Share
» »பூவார் கடற்கரைக்கு ஒரு பூரிப்பூட்டும் பயணம் போலாமா!

பூவார் கடற்கரைக்கு ஒரு பூரிப்பூட்டும் பயணம் போலாமா!

கேரள தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் இயற்கை துறைமுகத்துக்கு வெகு அருகிலேயே பூவார் கிராமம் அமைந்திருக்கிறது. இந்த சிறிய கிராமம் பண்டைய காலத்தில் வெட்டுமரம், யானை தந்தம், சந்தனமரம் போன்ற ப

By Udhaya

கேரள தலைநகர் திருவனந்தபுரம் மாவட்டத்தில் விழிஞ்சம் இயற்கை துறைமுகத்துக்கு வெகு அருகிலேயே பூவார் கிராமம் அமைந்திருக்கிறது. இந்த சிறிய கிராமம் பண்டைய காலத்தில் வெட்டுமரம், யானை தந்தம், சந்தனமரம் போன்ற பொருட்களை விற்கும் புகழ்பெற்ற வர்த்தக மையமாக திகழ்ந்து வந்தது. பூவார் கிராமம் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருவதற்கு மூல முதல் காரணம் பூவார் பீச்தான். வாருங்கள் இந்த இடத்துக்கு ஒரு பூரிப்பூட்டும் பயணம் சென்று வருவோம்.

முதல் பயணமா?

முதல் பயணமா?

பூவாருக்கு முதல் முறையாக வரும் பயணிகள் பரபரப்பு மிகுந்த நகர வாழ்க்கையிலிருந்து மாறுபட்டு காட்சியளிக்கும் இந்த கடற்கரையின் பேரமைதியை வெகுவாக விரும்புவார்கள். பூவார் கிராமம் அளவில் மிகவும் சிறியதாக இருப்பதால் இங்கு வெகு சில வீடுகள் தான் இருக்கின்றன. ஆனால் இரைச்சல், கூச்சல், சந்தடி ஏதுமற்ற தனிமையும், அமைதியும் இந்த கிராமத்தை அற்புத சுற்றுலாத் தலமாக திகழச் செய்து கொண்டிருக்கிறது.

Midhun Subhash

சூரிய உதயம்

சூரிய உதயம்

பூவார் கிராமத்தின் உப்பங்கழிகளில் அமைந்திருக்கும் ரிசார்ட்டுகள் மற்றும் குடில்களில் இருந்தவாறு சூரிய உதயத்தையும், அஸ்த்தமனத்தையும் பார்த்து ரசிக்கும் அனுபவம் மிகவும் அலாதியானது. அதோடு இந்த உப்பங்கழிகளில் படகுப் பயணம் செய்து நீங்கள் பொழுதை இன்பமயமாக கழிக்கலாம்.

Abhis 24

இஸ்லாமிய குடியிருப்புகள்

இஸ்லாமிய குடியிருப்புகள்

பூவார் கிராமத்தில் இந்தியாவின் மிகவும் தொன்மை வாய்ந்த இஸ்லாமிய குடியிருப்புகள் பல இருக்கின்றன. இந்த குடியிருப்புகள் 1400 ஆண்டுகள் பழமையானவைகளாக கருதப்படுகின்றன. இங்கு உள்ள பிரதான மசூதி மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வந்த மாலிக் இப்னே தீனர் என்ற இஸ்லாமிய அறிஞரால் எழுப்பப்பட்டது. அதோடு இந்தியாவில் முகாலய படையெடுப்புக்கு முன்பே இஸ்லாமியத்தை போதித்த பழம்பெரும் பகுதியாக பூவார் கிராமம் பிரபலமாக அறியப்படுகிறது.

Shivamsp182

பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலம்

பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலம்

பூவார் கிராமம் பிரசித்திபெற்ற சுற்றுலாத் தலமாக விளங்கி வருவதற்கு மூல முதல் காரணம் பூவார் பீச்தான். இங்கு முதல் முறையாக வரும் பயணிகள் பரபரப்பு மிகுந்த நகர வாழ்க்கையிலிருந்து மாறுபட்டு காட்சியளிக்கும் இந்த கடற்கரையின் பேரமைதியை வெகுவாக விரும்புவார்கள்.

Arindambasu2

நெய்யார் நதி

நெய்யார் நதி

பூவார் கடற்கரையையும், கோவளம் கடற்கரையையும் நெய்யார் நதியின் முகத்துவாரம் பிரிக்கிறது. இந்த முகத்துவாரத்தில் கடல், ஏரி மற்றும் நதி என்று மூன்றின் நீரும் ஒன்றாக கலக்கும் அபூர்வ காட்சியை நீங்கள் கண்டிப்பாக தவற விட்டுவிடக் கூடாது. பூவார் பீச்சில் நிறைய ரிசார்ட்டுகள் அமைந்திருக்கின்றன. எனவே அலுத்துப் போன உங்கள் இயந்திர வாழ்க்கைக்கு மிகச் சிறந்த அருமருந்தாக திகழும் பூவார் கிராமத்துக்கு நீங்கள் வரும் போது உங்கள் தேவைக்கேற்றபடி சிறந்த தங்குமிடங்களை தேர்வு செய்து கொள்ள முடியும். மேலும் ஆயுர்வேத சிகிச்சை, ஷாப்பிங், உணவு வகைகள் போன்றவற்றுக்காக பூவார் பீச் பயணிகளிடையே மிகப்பிரபலம். ஆனால் இங்கு கடல் மிகவும் ஆக்ரோஷமாக காணப்படுவதால் நீங்கள் உங்கள் விருப்பப்படி கடலில் நீந்துவது ஆபத்தில் முடியலாம்.

Rishi121970

More News

    Read more about: இந்தியா travel
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+