Search
  • Follow NativePlanet
Share
» »குவாலியர் கோட்டையின் பின்னணி வரலாறு தெரியுமா?

குவாலியர் கோட்டையின் பின்னணி வரலாறு தெரியுமா?

By Udhaya

இந்தியாவின் புகழ்பெற்ற பெருமைமிக்க நினைவுச்சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும், குவாலியர் கோட்டை குவாலியர் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. ஒரு குன்றின் உச்சியில் அமைந்திருப்பதால், மலையடிவாரத்திலுள்ள குவாலியர் நகரம் மற்றும் அழகிய பள்ளத்தாக்கின் கவின் மிகு காட்சியைக் கண்டு இன்புற முடியும். இது சுற்றுலாத் தளமாக மட்டுமல்லாமல், ஒரு வரலாற்று சான்றாகவும் இருக்கிறது. இந்த பகுதியில் நாம் குவாலியருக்கு எப்படி செல்லலாம், அங்கு என்னவெல்லாம் இருக்கிறது காணவேண்டிய இடங்கள், எப்போது செல்வது சிறந்தது, மற்றும் அதன் வரலாற்று சிறப்புகளைப் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

 கட்டிடக் கலைநுணுக்கம்

கட்டிடக் கலைநுணுக்கம்

கோட்டைக்குச் செல்வதற்கான குறுக்கும் நெடுக்குமான பாதை நெடுகிலும், ஜைன தீர்த்தங்கரர்களால் பிரம்மாண்டமான பாறைகளில் செதுக்கப்பட்ட கல்வெட்டுக்கள் உள்ளன. தோமார் வம்சத்தினைச் சேர்ந்த ராஜா மான்சிங் தோமார் என்பவரால் இப்போதுள்ள குவாலியர் கோட்டை கட்டப்பட்டது. இந்திய கட்டிடக்கலை நுணுக்கத்தில், சீன கட்டிடக்கலையின் தாக்கம் ஏற்பட்டிருப்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குவது, இக்கோட்டையின் தனித்தன்மை வாய்ந்த கட்டிடக் கலைநுணுக்கமாகும்.

Gyanendrasinghchauha...

 சீன டிராகன் உருவங்கள்

சீன டிராகன் உருவங்கள்

குவாலியர் கோட்டையின் தூண்களில் செதுக்கப்பட்டுள்ள சீன டிராகன் உருவங்கள் அக்காலத்தில் நிலவிய இந்திய சீன உறவுக்கு சான்றாக விளங்குகின்றன. மத்திய கால இந்திய கட்டிடக்கலைக்கு சிறப்பான எடுத்துக்காட்டாக இக்கோட்டை விளங்குகிறது. இக்கோட்டை, "இந்தியாவின் ஜிப்ரால்டர்" என்று அழைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக இக்கோட்டை பல ராஜ வம்சங்களின் அரசாட்சியைக் கண்டு நிற்கிறது. ஆங்கிலேயர் காலத்தில், ஜான்ஸியின் ராணி லட்சுமி பாய்க்கும், தாந்தியா தோபேக்கும் ஆங்கிலேயருக்கு எதிரான போர்க்களமாக குவாலியர் கோட்டை விளங்கியது.

Shobhit Gosain

 கூர்ஜரி மஹால்

கூர்ஜரி மஹால்

குவாலியரில் உள்ள கூர்ஜரி மஹாலானது, இந்தியாவிலுள்ள பழமையான தொல்லியல் அருங்காட்சியகங்களில் ஒன்று ஆகும். இக்கட்டிடம் உண்மையில் ஒரு அரண்மனை ஆகும். கூர்ச்சர (குஜ்ஜார்) இளவரசியும் ராஜா மான் சிங்கின் மனைவியுமான மிருங்கநயனி என்பவருக்கு மன்னர் கட்டிக்கொடுத்த அரண்மனைதான் இது. அதனால் தான் இவ்வரண்மனைக்கு கூர்ஜரிமஹால் என்று பெயர் வந்தது.

Gyanendrasinghchauha...

அரண்மனை அருங்காட்சியகம்

அரண்மனை அருங்காட்சியகம்

1922-ஆம் ஆண்டு தொல்பொருள் துறையினரால் இந்த அரண்மனை அருங்காட்சியகமாக மாற்றப்பட்டது. இந்த அருங்காட்சியகத்தில் 9000 அரிய பொருள்கள் 28 கேலரிகளில் வைக்கப்பட்டுள்ளன. முதலாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரிய பொருள்களும் இங்கு உள்ளன. விலையுயர்ந்த மணிகள், நகைகள், சுடுமண் பொருள்கள், ஆயுதங்கள், சிற்பங்கள், ஓவியங்கள், கல்வெட்டுக்கள், பானைகள் ஆகியவை இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

Kmohankar

சிற்பங்கள்

சிற்பங்கள்

சிற்பங்களில் உலகப்புகழ்பெற்ற ஷலபஞ்சிகா யக்ஷி, திருமூர்த்தி நடராஜர், அர்த்தநாரீஸ்வரர், எமராஜன் ஆகியோரின் சிற்பங்களும் இங்கு உள்ளன. குவாலியரின் மது மற்றும் தர் ஆகிய பகுதிகளின் 75 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட அரிய புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளன. இப்பகுதியில் கி.பி.15 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த தான்சேன் என்னும் இசைக்கலைஞரின் வாழ்க்கை பற்றிய ஆவணங்களும் உள்ளன. வரலாற்று ஆர்வலர்களும் இந்திய வரலாற்றினைப்பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வமுடையவர்களும் அவசியம் சென்று பார்க்கவேண்டிய அருங்காட்சியகம் இதுவாகும்.

Kmohankar

 கவுஸ் முகம்மது கல்லறை

கவுஸ் முகம்மது கல்லறை

கவுஸ் முகம்மது என்பவர் கி.பி 15-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த சூஃபி துறவி ஆவார். அவர் முதலில் ஒரு ஆப்கானிய இளவரசராக இருந்து பின்னாளில் துறவியாக மாறியவர். இவர் புகழ்பெற்ற இந்துஸ்தானி இசைக்கலைஞர் தான்சேனின் குரு ஆவார். மன்னர் பாபருக்கு ஆலோசகராகவும் இருந்தார்.

கவுஸ் முகம்மதுவின் கல்லறையானது மத்தியகால முகலாயக் கட்டிட வகைக்கு சிறந்ததொரு எடுத்துக்காட்டாகும். இக்கல்லறை மிகப்பிரம்மாண்டமாகவும் ஆடம்பரமாகவும் வடிவமைக்கப்பட்டு, மனதை மயக்கும் அழகிய சிற்ப வேலைப்பாடுகளுடன் விளங்குகிறது.

கவுஸ் முகம்மது எந்தவொரு அதிகாரத்திலும் இருந்ததில்லை. ஆனால் பேரரசர் அக்பர் உள்பட எல்ல முகலாய அரசர்களும் கவுஸ் முகம்மதுவின் நினைவாக அவரது கல்லறையை அழகுபடுத்துவதிலும் போற்றிப் பாதுகாப்பதிலும் வருடக்கணக்கில் தமது கவனத்தையும் கருத்தையும் செலுத்தினர். அவர் முகலாய ஆட்சியாளர்கள் மனதில் எத்தகைய இடத்தில் குடிகொண்டிருந்தார் என்பதையே இது காட்டுகிறது. தான்சேன் கல்லறையும் இதற்கு அடுத்தாற்போலவே அமைந்துள்ளது.

Kumar shakti

மன்மந்திர் அரண்மனை

மன்மந்திர் அரண்மனை

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு அரண்மனை மன்மந்திர் அரண்மனையாகும். இதயமேயில்லாத பல ஆதிக்க சக்திகளால் உருவான பல நெஞ்சைத்தொடும் சம்பவங்கள் இந்த அரண்மனையில் நடந்துள்ளன. இந்து கட்டிடக்கலையும் மத்தியகாலக் கட்டிடக் கலையும் கலந்து பின்பற்றப்பட்ட கட்டிடபாணிக்கு இது சிறந்த உதாரணமாகும்.

Jolle

அமைப்பு

அமைப்பு

வட்ட வடிவில் அமைந்துள்ள இது நான்கு அடுக்கு மாளிகையாகும். இரண்டு தளங்கள் தரைக்குக்கீழே உள்ளன. கி.பி. 15 ஆம் நூற்றாண்டில் தோமார் வம்ச அரசரன ராஜா மான் சிங் தோமார் என்பவரால் கட்டப்பட்டது. பின்னர் இந்த அரண்மனை ராஜபுத்திரர்கள், டில்லி சுல்தான்கள், முகலாயர்கள், ஆங்கிலேயர்கள், சிந்தியாக்கள் என்று பல்வேறு வம்சத்தினரின் ஆளூகையின்கீழ் இருந்தது.

Jolle

சித்திரங்களின் மாளிகை

சித்திரங்களின் மாளிகை

மன்மந்திர் அரண்மனை சித்திரங்களின் மாளிகை என்றும் அழைக்கப்படுகிறது. ஏனெனில், இவ்வரண்மனையின் சுவர்களில், வண்ணமயமான, மலர்கள், இலைகள், விலங்குகள், மனிதர்கள் ஆகிய சித்திரங்கள் தீட்டப்பட்டுள்ளன. அரண்மனையின் உள்ளே வட்டவடிவில் ஒரு சிறைச்சாலையும் உள்ளது. இந்த சிறைச் சாலையில்தான் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப் தனது உடன்பிறந்த சகோதரன் மூரத் என்பவரைக் கொன்றார். உள்ளே ஜௌகார் குளம் என்ற குளம் ஒன்று உள்ளது. இங்குதான் இறந்து போன ராஜபுத்திர மன்னர்களின் மனைவியர் சதி என்னும் உடன்கட்டை ஏறித் தம் உயிரை மாய்த்துக்கொள்வார்களாம்.

nirod

இந்தியாவின் கோட்டை

இந்தியாவின் கோட்டை

இந்தியாவின் புகழ்பெற்ற பெருமைமிக்க நினைவுச்சின்னங்களில் ஒன்றாகக் கருதப்படும், குவாலியர் கோட்டை குவாலியர் நகரத்தின் மையத்தில் அமைந்துள்ளது. ஒரு குன்றின் உச்சியில் அமைந்திருப்பதால், மலையடிவாரத்திலுள்ள குவாலியர் நகரம் மற்றும் அழகிய பள்ளத்தாக்கின் கவின் மிகு காட்சியைக் கண்டு இன்புற முடியும். மத்திய கால இந்திய கட்டிடக்கலைக்கு சிறப்பான எடுத்துக்காட்டாக இக்கோட்டை விளங்குகிறது. இக்கோட்டை, "இந்தியாவின் ஜிப்ரால்டர்" என்று அழைக்கப்படுகிறது. பல நூற்றாண்டுகளாக இக்கோட்டை பல ராஜ வம்சங்களின் அரசாட்சியைக் கண்டு நிற்கிறது. ஆங்கிலேயர் காலத்தில், ஜான்ஸியின் ராணி லட்சுமி பாய்க்கும், தாந்தியா தோபேக்கும் ஆங்கிலேயருக்கு எதிரான போர்க்களமாக குவாலியர் கோட்டை விளங்கியது.

YashiWong

Read more about: travel madhya pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more