Search
  • Follow NativePlanet
Share
» »உலகிலேயே யுத்த தந்திரத்துடன் அமைக்கப்பட்ட முதல் கோட்டை

உலகிலேயே யுத்த தந்திரத்துடன் அமைக்கப்பட்ட முதல் கோட்டை

சிந்து என்ற சொல்லுக்கு கடல் என்று பொருள், அதே போல் துர்க் என்ற சொல் கோட்டை கொத்தளத்தை குறிப்பதாகும். அதனாலேயே இக்கோட்டைக்கு ‘கடலில் உள்ள கோட்டை’ என்ற பொருளைத்தரும் சிந்துதுர்க் என்ற பெயர் வந்த்து. மரா

By Udhaya

சிந்து என்ற சொல்லுக்கு கடல் என்று பொருள், அதே போல் துர்க் என்ற சொல் கோட்டை கொத்தளத்தை குறிப்பதாகும். அதனாலேயே இக்கோட்டைக்கு 'கடலில் உள்ள கோட்டை' என்ற பொருளைத்தரும் சிந்துதுர்க் என்ற பெயர் வந்த்து. மராட்டிய மாமன்னரான சத்ரபதி சிவாஜியால் இந்த கோட்டை கட்டப்பட்டுள்ளது. கடல் வழியாக வரும் அன்னிய எதிரிகளை சமாளிப்பதற்காகவும், முருட்ஜஞ்சிரா பகுதியில் இருந்த சித்தி இனத்தவரை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவும் பாறைகளான இந்த தீவில் சிந்துதுர்க் கோட்டையை யுத்த தந்திரத்துடன் மாமன்னர் சிவாஜி எழுப்பியதாக வரலாறு கூறுகிறது. இந்த கோட்டையின் விசேஷ அம்சங்கள் குறித்தும், சுற்றுலா செல்வது குறித்தும் இந்த கட்டுரையில் காண்போம்.

உலகிலேயே யுத்த தந்திரத்துடன் அமைக்கப்பட்ட முதல் கோட்டை

உலகிலேயே யுத்த தந்திரத்துடன் அமைக்கப்பட்ட முதல் கோட்டை

அரபிக்கடலின் வழி வரும் எதிரிகள் எளிதில் இந்த கோட்டையை தூரத்திலிருந்து பார்க்க முடியாதவாறு கட்டியிருப்பதுதான். இங்குள்ள பிரதான சுற்றுலா அம்சம் இங்குள்ள அழகான கடற்கரையாகும். இங்குள்ள மற்ற எண்ணற்ற கோட்டைகளை பற்றி சொல்லவே தேவையில்லை. ஏனெனில் கோட்டை என்ற பெயரில்தான் இந்த இடமே அழைக்கப்படுகிறது. சிந்துதுர்க் கோட்டையானது வளைந்து நெளிந்து செல்லும் வெளிச் சுற்றுச்சுவரால் சூழப்பட்டுள்ளது. இந்த சுற்றுச்சுவரில் 42 தாக்குதல் கோபுரங்கள் எதிரிகளை சமாளிக்க அமைக்கப்பட்டுள்ளன. இந்த கோட்டையின் கட்டுமானத்திற்காகவே 73000 கிலோ இரும்பு பயன்படுத்தப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Dinesh Valke

 கோட்டை

கோட்டை

கடல் வழிப்பயணம் ஹிந்து மறைகளின் படி தடை செய்யப்பட்டிருந்த காலத்தில் கடலுக்குள் இப்படி ஒரு கோட்டையை சத்ரபதி சிவாஜி எழுப்பியிருப்பது அவரது புரட்சி மனப்பான்மைக்கும் வீரத்துக்கும் சான்றாக விளங்குகிறது. இன்றும் உலகெங்கிலுமிருந்து மராட்டிய பெருமையின் அடையாளமாக விளங்கு பத்மாகர் கோட்டையை பார்ப்பதற்கு வருகின்றனர். இது சிந்து துர்க் கோட்டையை ஒட்டியே உள்ளது. மேலும், தேவ்பாக் என்ற இடத்தில் அமைந்துள்ள விஜய்துர்க் கோட்டை மற்றும் திலாரி அணை, நவதுர்கா கோயில் போன்றவை சிந்துதுர்க் கோட்டைப்பகுதியில் பார்க்க வேண்டிய இடங்களாகும்.

Rudolph.A.furtado

 யாத்ரிக தளங்கள்

யாத்ரிக தளங்கள்

இதுதவிர இந்தியாவிலேயெ பழையான சாய்பாபா கோயில்களும் சிந்துதுர்க் பகுதியில் காணப்படுகின்றன. மஹாராஷ்டிரா மாநிலத்தில் கொங்கண் பிரதேசத்தில் சிந்து துர்க் கோட்டைப்பகுதி அமைந்துள்ளது. இந்த கோட்டையானது மால்வண் கடற்கரையை ஒட்டியுள்ள சிறு தீவில் ரத்னகிரி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலைத்தொடர் ஒரு புறமும் அரபிக்கடல் மற்றொரு புறமும் இருக்க சிந்து துர்க் கோட்டை அதன் இயற்கை அழகிற்கும், அமைதியான கடற்கரைக்கும், அருவிகளுக்கும், கோட்டைகளுக்கும் யாத்ரிக தலங்களுக்கும் புகழ் பெற்று விளங்குகிறது. .

Rudolph.A.furtado

 இயற்கை எழில்

இயற்கை எழில்

கம்பீரமாய் உயந்து நிற்கும் மலைகள், மயங்க வைக்கும் கடற்கரை மற்றும் அற்புதமான இயற்கைக்காட்சிகளை கொண்ட சிந்துதுர்க் கோட்டைப்பகுதியில் அல்போன்ஸா மாம்பழங்கள், முந்திரி மற்றும் நாவற்பழங்கள் போன்றவை கிடைக்கின்றன. தெளிவான பகற்பொழுதில் இங்கு 20 அடி ஆழத்திற்கு கீழே கடல் மணல் தூய்மையாக தெரிவதை அழகாக காணலாம். ஸ்கூபா டைவிங் மற்றும் ஸ்னார்கெலிங் போன்ற நீர் மூழ்கு விளையாட்டுகளுக்கு இந்த இடம் இந்திய மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளிடையே பிரசித்தி பெற்றதாகும். அதற்கேற்ற பவளபாறைகள் மற்றும் சுத்தமான கடற்பரப்பு இங்கு காணப்படுவதால் சுற்றுலா பயணிகள் அவற்றை ரசிப்பதற்கும் இந்த நீர் விளையாட்டுகளில் ஈடுபடுவதற்கும் வருகின்றனர்.

Deepak Patil

உயிரினங்கள்

உயிரினங்கள்

சிந்துதுர்க் பகுதியை சுற்றிலும் அடர்ந்த காடுகளும் அவற்றுள் பல்வேறு வகையான காட்டுயிர்களும் காணப்படுவது இயற்கை ரசிகர்களுக்கு பெரிதும் மகிழ்ச்சியைக் கொடுக்கும் அம்சங்களாகும். சிறுத்தை, காட்டுப்பன்றி, முள்ளம்பன்றி, காட்டுமுயல், யானைகள், காட்டெருமை மற்றும் குரங்குகள் போன்ற விலங்குகள் இப்பகுதியிலுள்ள காடுகளில் காணப்படுகின்றன. மேலும் சிந்துதுர்க் பகுதி அங்குள்ள மால்வாணி உணவு முறைக்கு மிகவும் புகழ்பெற்றது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் யாவருக்கும் இங்கு கிடைக்கும் கடல் உணவு வகைகள் -குறிப்பாக மீன் இறால் போன்றவை அவற்றின் உள்ளூர் சுவை மற்றும் தனித்தன்மைக்காக - மிகவும் பிடித்தமானதாக உள்ளது.

कोल्हापुरी

 எப்படி செல்லலாம் எப்போது செல்லலாம்?

எப்படி செல்லலாம் எப்போது செல்லலாம்?

சிந்துதுர்க் - அறிமுகம் சிந்துதுர்க் பகுதி ஈரப்பதமான தட்பவெப்பத்தை கொண்டிருப்பதால் கோடைக்காலம் மிகவும் உஷ்ணமாக காணப்படுகிறது. ஆகவே சுற்றுலாப்பயணிகள் குளிர் காலத்தில் இங்கு பயணம் மேற்கொள்வது சிறந்தது. குறிப்பாக டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் இப்பகுதி குளுமையாக காணப்படுவதால் அதுவே இங்கு விஜயம் ஏற்ற காலம் ஆகும். மும்பையிலிருந்து 400 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள சிந்துதுர்க் கோட்டைப்பகுதி விமானம், ரயில் மற்றும் சாலை மூலமாக எளிதில் செல்லும் வகையில் அமைந்துள்ளது.

கோவா சிந்துதுர்க்கிலிருந்து 80 கி. மீ தூரத்தில் அருகிலேயே உள்ளது. சிந்துதுர்க் வந்தால் நீங்கள் காலார ஏகாந்தமாக கடற்கரையில் நடந்து மகிழலாம், சரித்திரத்தை நினைவு படுத்தும் கோட்டைப்பகுதிகளை சுற்றிப்பார்த்து காலத்தில் பின்னோக்கி பயணிக்கலாம், நீருக்கடியில் மூழ்கி பவளப்பாறைகளையும் மீன்களையும் பார்த்து ரசிக்கலாம் அல்லது எதையும் செய்யாமல் சூழ்ந்துள்ள இயற்கை அம்சங்களை ரசித்தபடி ஓய்வெடுக்கலாம். இப்படி பல அம்சங்கள் எல்லாவகையான சுற்றுலாப்பயணிகளுக்கும் ஏற்ற வகையில் சிந்துதுர்க் பகுதியில் நிறைந்து காணப்படுகின்றன.


Amol.Gaitonde

Read more about: travel fort
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X