» »காந்தி 5 இடங்களில் முன்னரே கொல்லப்பட்டிருக்கலாம்! அதிர்ச்சி தகவல்கள்!

காந்தி 5 இடங்களில் முன்னரே கொல்லப்பட்டிருக்கலாம்! அதிர்ச்சி தகவல்கள்!

Written By: Udhaya

1948ம் ஆண்டு ஜனவரி 30ம் நாள் மாலை நேரத்தில் இந்து மகாசபை உறுப்பினரான நாதுராம் கோட்சே என்பவரால் சுட்டுக்கொல்லப்பட்டார் நம் தேசத்தின் தந்தை எனப் போற்றமப்படும் காந்தியடிகள். இவர் சுட்டுக்கொல்லப்பட்ட இடம் தற்போதைய காந்தி சமாதி இருக்கும் இடம்தான். இது அப்போது பிர்லா மாளிகை என்று அழைக்கப்பட்டு வந்தது. ஆனால் வரலாற்றில் பெரிய அளவுக்கு தெரிந்திராத இந்த ஐந்து இடங்களிலும் காந்தி சுட்டுக்கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் உங்களுக்கு சற்றே அதிர்ச்சியைத் தரலாம். தற்போது இந்திய சுற்றுலாத் தளங்களாக விளங்கும் அந்த 5 இடங்கள் குறித்தும் பார்க்கலாம் வாருங்கள்.

புனே மாநகராட்சி அரங்கம்

புனே மாநகராட்சி அரங்கம்

1934ம் ஆண்டு ஒருமுறை காந்தி, தன் மனைவியுடன் புனேவுக்கு பயணமானார். அப்போது அவர் வந்த காரில் கையெறிகுண்டுகள் வெடித்ததாகவும், இதனால் காந்திக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இது பற்றி கப்பூர் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாகவும் தெரிகிறது. இந்த இடம் தற்போது நாகரிக மாற்றத்தில் நன்கு வளர்ச்சியடைந்து விட்டது. தற்போது இந்த இடத்தில் மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இங்கே அருகில் பல முக்கிய இடங்கள் அமைந்துள்ளன. அவற்றின் சுற்றுலா அம்சங்கள் குறித்து காண்போம்.

அருகிலுள்ள சுற்றுலா அம்சங்கள்

அருகிலுள்ள சுற்றுலா அம்சங்கள்

பேஷ்வா மியூசியம், அகா கான் மாளிகை, சனிவர்வாடா, முல்ஷி ஏரி , முல்ஷி அணை, பன்ட் பூங்கா, தேசிய போர் அருங்காட்சியகம், ஓஷோ ஆசிரமம், பார்வதி மலைக்கோயில், சின்ஹாகாட், பூலே அருங்காட்சியகம், சின்டே சட்ரி, பாட்டாளேஸ்வர் குகைக் கோயில், தேகு, காட்ராஜ் பாம்பு பூங்கா, பழங்குடியின அருங்காட்சியகம் என எக்கச்சக்க இடங்கள் உள்ளன.

Mukul2u

அகா கான் அரண்மனை

அகா கான் அரண்மனை

சுல்தான் முகமது ஷா அகா கான் அவர்களால் கட்டப்பட்ட இந்த கோட்டை புனேயின் வரலாற்றுச் சின்னங்களுள் ஒன்றாகும்.

1892ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த கோட்டை, கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இது 19 ஏக்கர் பரந்துவிரிந்து காணப் படுகிறது. இது தற்போது காந்தி தேசிய நினைவகத்தின் தலைமையிடமாக உள்ளது. இங்கு சுதந்திரப் போராட்ட புகைப்படங்கள் நிறைய உள்ளன.

Ramnath Bhat

சனிவர் வாடா கோட்டை,

சனிவர் வாடா கோட்டை,

மகராஷ்டிரத்தின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்று இந்த சனிவர் வாடா கோட்டை ஆகும். இது பேஸ்வா பாஜிராவ் என்பவரால் கட்டப்பட்டது. இது 625 ஏக்கர் பரந்து விரிந்தது. முதலாம் பாஜிராவின் சிலை உங்களை இந்த கோட்டையின் முன்புறத்தில் வரவேற்கும். இப்படிப்பட்ட ஒரு வரலாற்று சிறப்புமிக்க இடம் தற்போது பேய் பங்களாவாக காட்சியளிக்கிறது. பாஜிராவும் அவரது மனைவி காசியும் இங்குதான் இறந்ததாக கூறுகின்றனர். இதனால் இங்கு பேய் திரிவதாகவும் நம்பப்பட்டு வருகிறது.

Abhicherath

முல்ஷி ஏரி மற்றும் அணை

முல்ஷி ஏரி மற்றும் அணை


முல்ஷி அணையின் நீர்பிடிப்புப் பகுதி முல்ஷி ஏரி ஆகும். மிக அழகாக காட்சிதரும் இந்த அணை இயற்கை ஆர்வலர்களுக்கு மிகவும் பிடிக்கும். சயாத்ரி மலைகள், கோரைஹத், தங்காட் கோட்டை ஆகியன இயற்கை ஆர்வலர்களுக்கு சரியான வேட்டையாக அமையும். இங்கு வந்து இயற்கையை ரசித்து செல்வது சிறப்பாக பார்க்கப்பட்டு வருகிறது.

Vishalsdhumal

தேசிய போர் அருங்காட்சியகம்

தேசிய போர் அருங்காட்சியகம்

விடுதலைப் போராட்டத்தின் முக்கிய நிகழ்வுகளை இங்கு காட்சிப்படுத்தியுள்ளனர். மேலும் இந்திய ராணுவத்தைப் பற்றியும், அவர்களின் போர் வெற்றிகள் பற்றியும் நிறைய விழிப்புணர்வு செய்திகளும் காணக்கிடைக்கின்றன.

Chinmay26r

பார்வதி மலைக்கோயில்

பார்வதி மலைக்கோயில்

பேஸ்வாக்களின் கோயில்கள் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். பாலாஜி பாஜி ராவ் கட்டிய 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த கோயில்கள் மிகவும் முக்கியமானவை. அதிலும் இந்த பார்வதி கோயில், மலை மீது அமைந்துள்ளது. 108அடி உயரத்தில் இருந்து நகரத்தின் அழகை பார்த்து ரசிக்கலாம்.

Siddhesh Nampurkar

பஞ்ச்கனி

பஞ்ச்கனி


1944ம் ஆண்டு அகா கான் அரண்மனையில் விடுவிக்கப்பட்ட காந்தி, பஞ்ச்கனி எனும் இடத்தில் தங்கவைக்கப்பட்டார். அங்கும் அவர் தாக்குதலுக்கு ஆளானார் என்றும் கூறப்படுகிறது.

மகராஷ்டிர மாநிலத்தின் சாட்டாரா மாவட்டத்தில் அமைந்துள்ளது இந்த பஞ்ச்கனி. இது ஒரு அழகான மலைப்பிரதேசமாகும். இங்கு சுற்றுலா அம்சங்களாக, கிருஷ்ணா நதி, ஐந்துமலைகள், சிட்னிமுனை, டேபிள் லேண்ட், பார்ஸி முனை, டெவில்ஸ் கிச்சன் ஆகிய இடங்கள் அமைந்துள்ளன.

Akhilesh Dasgupta

சிட்னி முனை

சிட்னி முனை

இது கிருஷ்ணா பள்ளத்தாக்கை நோக்கிய சிறிய மலைக்குன்றில் அமைந்துள்ளது. இப்பகுதியிலிருந்து, தோம் அணை, பாண்டவ்காட் மாந்தார்டியோ ஆகியவற்றின் நீரின் அழகை கண்டு ரசிக்கலாம்.

Hyderabaduser

 டோபிள் லேண்ட்

டோபிள் லேண்ட்

ஆசியாவிலேயே இரண்டாவது பெரிய மலைப் பீடபூமி இதுவாகும். செந்நிறப் பாறையின் தட்டையான நீண்ட பரந்தவெளியாகும். இங்கிருந்து பல குகைகளைப் பார்க்கமுடியும்.

JakilDedhia

டெவில்ஸ் கிச்சன்

டெவில்ஸ் கிச்சன்


டேபிள் லேண்ட்டின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள இது தொன்மவியலைக் கொண்ட அற்புத இடமாகும. மகாபாரத காவியத்தில் பாண்டவர்கள் இங்கு வந்து தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. பிறகு பாண்டவ்காத் குகைகள் இதன் வாயிலுக்கு அருகில் அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

சேவாகிராம் ஆசிரமம்

சேவாகிராம் ஆசிரமம்

அதே ஆண்டில், முகமது அலி ஜின்னாவுடன் பேச்சு வார்த்தை நடத்துவதற்காக சேவாகிராம் ஆசிரமத்தை விட்டு மும்பை சென்றார். அப்போது இடைமறித்த சிலர் காந்தியை கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

நேரல் - கர்ஜட்

நேரல் - கர்ஜட்

1946ம் ஆண்டு மும்பையிலிருந்து சிறப்பு தொடர்வண்டியில் அழைத்துச் செல்லப்பட்ட காந்தி, அப்போது தாக்கப்படலாம் என்றும் தகவல் வெளியாகியிருந்தது. சொன்னபடியே, நேரல் மற்றும் கர்ஜட்க்கு இடையே தொடர்வண்டி தடம்புரண்டது. இது காந்தியை கொல்ல முயன்ற சதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

பிர்லா மாளிகை

பிர்லா மாளிகை

1948ம் ஆண்டு, ஜனவரி 20ம் தேதியும் காந்தியைக் கொல்வதற்கு சதி நடந்தேறியது. இந்த முறை அவர் பேசும் மேடைக்கு அருகே குண்டு வைத்து அவரை கொல்ல திட்டம் தீட்டப்பட்டதாக தெரிகிறது. ஆனால், குண்டு வெடிக்கவில்லை. இந்தமுறை காந்தி தப்பினாலும், சரியாக பத்தாவது நாளில் சுட்டுக்கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Read more about: travel, india