அடிக்கிற வெயிலுக்கு எங்கயாச்சும் ஆறு, குளம் இல்ல நீர்வீழ்ச்சியில போல நல்லா ஆட்டம் போடணும் போல இருக்கு இல்ல! கவலையே வேண்டாம். சென்னைக்கு பக்கத்தில இருக்கிற இந்த ஆரே நீர்வீழ்ச்சிக்கு சூப்பரா ஒரு ட்ரிப் பிளான் பண்ணலாம் வாங்க! சென்னையில் இருந்து வெறும் 90 கிமீ தொலைவில் அமைந்துள்ள நாகலாபுரம் பல நீர்வீழ்ச்சிகளுடன், கண்கவர் இயற்கை சூழலால் நம் மனதை மயக்குகிறது. இந்த வார இறுதியில எப்படி அந்த நீர்வீழ்ச்சிக்கு போகலாம் என்று பார்ப்போமா?

சென்னைக்கு அருகிலுள்ள அழகிய நாகலாபுரம்
ஆந்திரப் பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நாகலாபுரம் நீர்வீழ்ச்சி ஒரு சின்ன ட்ரெக்கிங் ஸ்பாட் ஆகும். கிழக்குத் தொடர்ச்சி மலைகளின் அழகான சூழலால் அலங்கரிக்கப்பட்டுள்ள நாகலாபுரத்தில் மூன்று நீர்வீழ்ச்சிகள் உள்ளன. சிறியதா ஒரு ட்ரெக்கிங் பண்ணினா போதும், அந்த அழகான ஸ்பாட்களில் நாம என்ஜாய் பண்ணலாம். இந்த இடத்தில் இருக்கிற பசுமையும், சிறு சிறு ஓடைகளும், குளங்களும், அழகான நீர்வீழ்ச்சிகளும் பயணிகளுக்கு தனித்துவமான அனுபவத்தை வழங்குகிறது.
சென்னையிலிருந்து எப்படி செல்வது?
நீங்கள் சென்னையில் இருந்து அதிகாலையிலேயே கிளம்பினால் வெயிலால் சிக்கி கொள்ளாமல் நாகலாபுரத்தை அடைய முடியும். இந்த இடத்திற்கு பேருந்து அல்லது மற்ற போக்குவரத்துகளில் செல்வதை விட இரு சக்கர வாகனங்களில் செல்வது தான் பெஸ்ட். நீங்கள் உங்கள் பிரண்ட்ஸ் கேங்கை அழைச்சிட்டு காலையிலே 6 மணிக்கு எல்லாம் கிளம்பிடுங்க. Google maps இல் ஆரே நீர்வீழ்ச்சி (Aare falls) என்று டைப் செய்தால் சரியான வழி காண்பிக்கப்படுகிறது. அதனைப் பின் தொடர்ந்து அப்படியே செல்லுங்கள்

பைக் பார்க்கிங்கில் இருந்து ட்ரெக்கிங் தொடக்கம்
உங்களுடைய பைக்கை பார்க் பண்ணிட்டு அந்த இடத்தில் இருந்து ட்ரெக்கிங்கை ஸ்டார்ட் பண்ணுங்கள். பைக் பார்க்கிங்கிற்கு ரூ.50, உங்களுக்கு நுழைவுக்கட்டணமாக ரூ.50 வசூலிக்கப்படும்.டிக்கெட்டை வாங்கிய பின்னர் பார்க்கிங்கில் இருந்து நடக்க ஆரம்பிக்கவும். நீங்கள் கடைசி ஸ்பாட்டை அடைய 6 கிமீ தூரம் நடக்க வேண்டும். ஆனால் வழியிலேயே பல அழகான இடங்களை நீங்கள் கடந்து செல்வீர்கள்.
வழி முழுக்க மனதை மயக்கும் காட்சிகள்
எங்கு பார்த்தாலும் பசுமையான மரங்கள், சிறு சிறு ஓடைகள், நீர்வீழ்ச்சிகள், கூழாங்கற்கள் என அந்த இடம் முழுவதுமே மிகவும் ரம்மியமாக இருக்கிறது. முதல் நீர்வீழ்ச்சியை நீங்கள் 20 நிமிட நடைப்பயணத்திலேயே அடைந்து விடுவீர்கள். ஆனால் அங்கேயே நின்று விடாமல் அடுத்தடுத்த இடங்களுக்கு செல்லுங்கள். அவை எல்லாம் இன்னும் கூட அழகாக இருக்கின்றன. உங்களுக்கு நீச்சல் தெரிந்தால் நீங்கள் தாரளாமாக நீந்திக் குளிக்கலாம். நீச்சல் தெரியவில்லை என்றாலும், அங்கே பாதுகாப்பு கயிறு போடப்பட்டிருக்கும் இடத்தில் நின்று குளிக்கலாம் அல்லது சிறு சிறு குளங்களில் குளிக்கலாம்.

நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டியவை
நீங்கள் ஒரு செட் மாற்றுத்துணி, வழுக்காத செருப்பு, டவல், பிஸ்கட், சாக்லேட், தண்ணீர் பாட்டில்கள், சிற்றுண்டி எடுத்து செல்வது அவசியம். ஏனெனில் அங்கு எதுவும் கிடைக்காது. அதே நேரத்தில் இவ்வளவு மெனக்கெட்டு வந்த இடத்தில் அமர்ந்து ரசித்தால் தானே நன்றாக இருக்கும். அதே போல நீங்கள் காலை மற்றும் மதிய உணவை செல்லும் வழியில் உள்ள கடைகளில் சாப்பிட்டு கொள்ளலாம்.
எப்படி செல்வது?
காலையில் நீங்கள் 7 மணிக்கெல்லாம் கிளம்பினால் தான் சரியாக இருக்கும். சென்னையில் இருந்து NH 16 வழியாக புழல், ரெட்ஹில்ஸ் வழியாக, திருப்பதி சாலையில் இடது புறமாக சென்றால் ஊத்துக்கோட்டையை அடைவீர்கள். அங்கிருந்து பிச்சாத்தூர் வழியாக சென்றால் அரை மணி நேர்த்தில் செக் போஸ்டிற்கு வந்திடலாம். அனைத்து நீர்வீழ்ச்சிகளையும் பார்த்து விட்டு மாலை 5 மணிக்கு கிளம்பினாலும் கூட சீக்கிரம் சென்னை வந்தடையலாம்.
மேற்கூறப்பட்ட ரூ.600 பட்ஜெட் என்பது ஒரு 8 பேர் கொண்ட நண்பர்கள் 4 பைக்குகளில் ஷேர் பண்ணி செல்வதற்கு கொடுக்கப்பட்ட செலவாகும். இதில் பெட்ரோல், நுழைவுக்கட்டணம், டீ, மதிய உணவு ஆகியவை அடங்கும். இந்த அழகான ஸ்பாட்டுக்கு நீங்க எப்போ போக போறீங்க?



Click it and Unblock the Notifications





