Search
  • Follow NativePlanet
Share
» »புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு சென்னை வழியாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விரைவில் தொடக்கம்!

புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு சென்னை வழியாக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விரைவில் தொடக்கம்!

நாடு முழுவதும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் வந்தே பாரத் விரைவு ரயில்களால் லட்சக்கணக்கான மக்கள் நன்மையடைந்துள்ளனர். இப்போது புதிதாக புதுச்சேரியிலிருந்து விழுப்புரம், சென்னை வழியாக திருப்பதிக்கு வந்தே பாரத் ரயில் சேவை துவங்கவுள்ளது. இனி புதுச்சேரியிலிருந்து சென்னைக்கும், திருப்பதிக்கும் மிக விரைவாக வந்து செல்லலாம்!

சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழியும் புதுவை

காலனித்துவ மரபு, பிரெஞ்சு கட்டிடக்கலை, வண்ணமயமான கடற்கரைகள், ஆசிரமங்கள், ஆன்மீக மையங்கள், துடிப்பான கஃபேக்கள், அட்டகாசமான ஷாப்பிங், நாவை சுண்டி இழுக்கும் உணவுகள் என புதுச்சேரி அனைத்து தரப்பினருக்குமான சுற்றுலாத் தலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. விடுமுறை நாட்களிலும், நீண்ட வார இறுதி நாட்களிலும் சுற்றுலாப் பயணிகளால் புதுச்சேரி நகரமே நிரம்பி வழிகிறது.

1

புதுச்சேரியின் சுற்றுலா மேம்படும்

புதுச்சேரியில் அறிமுகப்படுத்தப்படும் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையானது சுற்றுலாவை மேம்படுத்துதல், பொருளாதார நடவடிக்கைகளை ஆதரித்தல் மற்றும் குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான அத்தியாவசிய போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் முக்கிய பங்கு வகிக்கும். இது பிராந்தியத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் முன்னேற்றத்திற்கும் பங்களிக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

புதுச்சேரி-சென்னை-திருப்பதி வந்தே பாரத்

புதுச்சேரியின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பாதை, திருப்பதி மற்றும் புதுச்சேரி இடையே 340 கி.மீ தூரத்தை கடக்கும். இந்த வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் சேவையின் அறிமுகம், இந்தப் பிராந்தியங்களில் உள்ள பயணிகளுக்கான மேம்பட்ட இணைப்பு மற்றும் பயண விருப்பங்களுக்கு பங்களிக்கும். பாண்டிச்சேரி முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் பாதையானது பாண்டிச்சேரி, சென்னை மற்றும் திருப்பதி ஆகிய மூன்று முக்கிய நகரங்களை இணைக்கும்.

2

இனி விரைவாக செல்லலாம்

புதுச்சேரியிலிருந்து கிளம்பும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மதுராந்தகம், விழுப்புரம் சந்திப்பு, எம்ஜிஆர் சென்னை சென்ட்ரல் மற்றும் அரக்கோணம் சந்திப்பு ஆகிய இடங்களில் நின்று கடைசியாக திருப்பதியை அடையும். இனி இந்த இடைப்பட்ட நகரங்களுக்கு செல்லும் மக்கள் மிகவும் விரைவாக அவர்களின் இலக்குகளுக்கு சென்றடையலாம். புதுச்சேரியிலிருந்து சென்னை செல்லும் மக்கள் இனி வந்தே பாரத் ரயில் மூலம் விரைந்து செல்லலாம்.

பிப்ரவரி 2024 க்குள் முதல் வந்தே பாரத்

தென்னிந்திய ரயில்வே தற்போது பாதை, கால அட்டவணை மற்றும் தொடக்க தேதியில் வேலை செய்கிறது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்து முடிந்தவுடன், புதுச்சேரியின் முதல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பிப்ரவரி 2024 க்குள் தொடங்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

More News

    Read more about: vande bharat pondicherry
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+