Search
  • Follow NativePlanet
Share
» »உலகின் எத்தனை நாடுகள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறது என்று பாருங்களேன் – வியப்பாக இருக்கிறது அல்லவா?

உலகின் எத்தனை நாடுகள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுகிறது என்று பாருங்களேன் – வியப்பாக இருக்கிறது அல்லவா?

தமிழ் மக்களின் அறுவடைத் திருநாளான பொங்கல் பண்டிகை, உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களால் மிகுந்த ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் கொண்டாடப்படுகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் குடியேறியுள்ள தமிழர்களால் பொங்கல் பண்டிகையின் முக்கியத்துவத்தை உணர்ந்த பல்வேறு இன மக்களும் கூட பொங்கல் பண்டிகையை மிகவும் மகிழ்ச்சியுடன் கொண்டாடுகின்றனர். தமிழர்களின் பண்டிகைகள் மற்றும் கலாச்சாரம் பல இடங்களில் உள்ளூர் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. அது எப்படி என்றும் எந்தெந்த நாடுகளில் பொங்கல் பண்டிகை மிக உற்சாகமாக கொண்டாடப்படுகிறது என்பது பற்றியும் இங்கே காண்போம்!

உலகின் ஒவ்வொரு மூலையிலும் வசிக்கும் தமிழ் மக்கள்

உலகின் ஒவ்வொரு மூலையிலும் வசிக்கும் தமிழ் மக்கள்

இந்தியாவில் இருந்து புலம் பெயர்ந்த சுமார் 75 மில்லியன் மக்கள் அமெரிக்கா, பிரான்ஸ், ஆஸ்திரேலியா, கனடா, சிங்கப்பூர், கரீபியன் தீவுகள், ஜப்பான், மலேசியா, இலங்கை, இந்தோனேஷியா தாய்லாந்து என உலகின் பல்வேறு நாடுகளில் குடியேறியுள்ளனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் தமிழர்கள். தமிழர்களின் முக்கிய பண்டிகைகளான தீபாவளியும் பொங்கலும் உலகின் பல்வேறு பகுதிகளில் கொண்டாடப்படுவதற்கு இவர்களே முக்கிய காரணமாகும். தாய்நாட்டில் இருந்து வெகு தூரத்தில் இருந்தாலும் கூட, தங்கள் மரபுகளையும் பாரம்பரியத்தையும் அவர்கள் தங்களுடன் எடுத்துச் செல்கிறார்கள்.

பாரம்பரியம் மாறாத பொங்கல் கொண்டாட்டம்

பாரம்பரியம் மாறாத பொங்கல் கொண்டாட்டம்

வீடு வாசலை சுத்தம் செய்து, ரங்கோலி கோலமிட்டு, பட்டுப் புடவைகள் அணிந்த பெண்கள், பாரம்பரிய வேஷ்டியணிந்த ஆண்கள், வாழை இலைகள், இஞ்சி கொத்து, மஞ்சள் மற்றும் இனிக்கும் கரும்புகள் வைத்து, மகிழ்ச்சி பொங்க பொங்கலை வைத்து கொண்டாடுகின்றனர். தாங்கள் வைத்த பொங்கலையும், இனிப்புகளையும் தங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இருக்கும் வெளிநாட்டு நண்பர்களிடம் கொடுத்து மகிழ்கின்றனர். இவர்களின் உற்சாகத்தையும் ஆரவாரத்தையும் பார்த்து பல வெளிநாட்டினர் கூட பொங்கல் கொண்டாடுகின்றனர்.

உலகெங்கிலும் பொங்கல் கொண்டாட்டம்

உலகெங்கிலும் பொங்கல் கொண்டாட்டம்

ஏராளமான தமிழர்கள் வசிக்கும் இலங்கை போன்ற அண்டை நாடுகளைத் தவிர, ஆஸ்திரேலியா, ஐரோப்பிய நாடுகள் மற்றும் கணிசமான தமிழ் சமூகம் வசிக்கும் அமெரிக்காவிலும் கூட பொங்கல் கொண்டாட்டங்களைக் காணலாம். வெளிநாடு வாழ் தமிழர்களின் இளைய தலைமுறையினர் கூட இந்த அறுவடை திருவிழாவின் வளர்ச்சிக்கு பங்களிக்க முன்வருவது குறிப்பிடத்தக்கது. பொங்கலைக் கொண்டாடுவதில் பல்வேறு பங்களிப்புகள் மூலம், புலம்பெயர்ந்த தமிழர்கள் கலாச்சார தனித்துவத்தைப் பேணி வளர்த்து வருகின்றனர்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பொங்கல்

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பொங்கல்

கணிசமான தமிழ் மக்கள் வசிக்கும் தென்கிழக்கு ஆசியாவின் பல்வேறு நாடுகளில் இந்தியத் தொடர்பின் காரணமாக பொங்கல் மிகுந்த மரியாதையுடன் கொண்டாடப்படுகிறது. இந்தோனேசியா, சிங்கப்பூர், மலேசியா மற்றும் மியான்மர் போன்ற நாடுகளில், தேசிய அளவில் கொண்டாடப்படும் மிகப்பெரிய இந்து பண்டிகைகளில் பொங்கல் பண்டிகையும் ஒன்றாகும்.

இந்த சிறிய மற்றும் வேறுபட்ட புலம்பெயர்ந்த நாடுகளில் எண்ணற்ற இந்து கோவில்கள் பரவியுள்ளன. தமிழக மக்கள் போலவே தெற்காசியாவின் பிற பகுதிகளில் உள்ள தமிழர்களும் நான்கு நாள் பொங்கல் பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடுகிறார்கள். தெற்காசியாவின் பல நாடுகளில் பொங்கல் பண்டிகையன்று பொது விடுமுறை அளிக்கப்படுகிறது.

அமெரிக்கா மற்றும் கனடாவில் பொங்கல் கொண்டாட்டம்

அமெரிக்கா மற்றும் கனடாவில் பொங்கல் கொண்டாட்டம்

ஒரு மில்லியன் தமிழர்களில் மூன்றில் ஒரு பகுதியினர் அமெரிக்காவிலும் கனடா போன்ற பிற அமெரிக்க நாடுகளிலும் வசிக்கின்றனர். ஜமைக்கா, டிரினிடாட் மற்றும் டொபாகோ போன்ற நாடுகளிலும், கரீபியன் தீவுகளிலும், தென் அமெரிக்காவின் கயானா மற்றும் சுரினாம் போன்ற இடங்களிலும் தமிழர்களின் பெரும் குடியேற்றம் உள்ளது.

இந்த தொலைதூர நிலங்களில் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வரும் தமிழ் வம்சாவளியினர் தங்கள் கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை இன்னும் கடைப்பிடித்து வருகின்றனர். இங்குள்ள பல கலாச்சார சங்கங்கள் பொங்கல் பண்டிகையின் போது பிரமாண்டமான விழாக்களை ஏற்பாடு செய்வதில் முன்முயற்சி எடுத்து, சடங்குகள் மற்றும் பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப பண்டிகை மிகவும் சந்தோஷமாகக் கொண்டாடப்படுகிறது.

வளைகுடா நாடுகளில் பொங்கல் கொண்டாட்டம்

வளைகுடா நாடுகளில் பொங்கல் கொண்டாட்டம்

பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா மற்றும் குவைத் போன்ற வளைகுடா நாடுகளில், பொங்கல் பண்டிகையானது இந்து சமூகம் சிறிது நேரம் ஒன்றாகச் செலவழிக்கவும், கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தைக் கொண்டாடவும் வாய்ப்பளிக்கிறது. இந்த நாளில் இந்தியர்கள் கூடி, விரிவான உணவு ஏற்பாடு செய்யப்படுகிறார்கள். இந்த புனித நாளில் சமூக மையங்களில் பாரம்பரிய நடனங்கள் மற்றும் பாடல் நிகழ்ச்சிகள் அரங்கேறுகின்றன.

ஐரோப்பாவில் பொங்கல் கொண்டாட்டம்

ஐரோப்பாவில் பொங்கல் கொண்டாட்டம்

ஐரோப்பாவில் பொங்கல் கொண்டாட்டங்கள் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, சுவிட்சர்லாந்து மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில் மிக கோலாகலமாக கொண்டாடுவதை நாம் பார்க்கலாம். பிரித்தானியாவிலும், பிரான்சிலும் இந்துக் கோவில்கள் தமிழ் சமூகத்தினருக்காக பொங்கல் விழாவை ஏற்பாடு செய்கின்றன. பொதுவாக, மற்ற வெளிநாடுகளைப் போலவே, இங்கும் பொங்கல் என்பது தற்போதுள்ள தமிழர்களிடையே உறவு உணர்வை ஏற்படுத்துவதற்காக ஒரு சமூக விழாவாக கடைபிடிக்கப்படுகிறது.

ஆப்பிரிக்காவில் பொங்கல் கொண்டாட்டம்

ஆப்பிரிக்காவில் பொங்கல் கொண்டாட்டம்

மொரிஷியஸ், நைஜீரியா மற்றும் தென்னாப்பிரிக்கா போன்ற ஆப்பிரிக்க நாடுகளில் பொங்கல் பண்டிகை மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இங்கு தமிழர்கள் அதிக அளவில் வசிப்பதால், இங்கு பொங்கல் பண்டிகை பொது விடுமுறையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. திருவிழாவுடன் தொடர்புடைய அனைத்து சம்பிரதாயங்களையும் மக்கள் ஒன்று கூடி செய்து மகிழ்கின்றனர், மேலும் பிராந்தியம் முழுவதிலும் இருக்கும் இந்தியர்கள் இந்த விழாக்களில் கலந்து கொள்கிறார்கள்.

புலம்பெயர்ந்த தமிழர்களின் காரணமாக உலகம் முழுவதும் பொங்கல் கொண்டாட்டங்கள் மிகவும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. இந்தியாவாக இருந்தாலும் சரி, வேறு எந்த நாட்டிலும் சரி, விழாவைச் சுற்றியுள்ள கொண்டாட்டங்களும் மகிழ்ச்சியும் இன்று வரை மாறாமல் இருந்து வருகிறது மக்களே!

Read more about: pongal celebration tamilnadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X