Search
  • Follow NativePlanet
Share
» »வெறும் ரூ. 900க்கு PTDC டூர் பேக்கேஜ் – காரைக்கால் மாங்கனி திருவிழா, திருநள்ளார் மற்றும் திருக்கடையூர்!

வெறும் ரூ. 900க்கு PTDC டூர் பேக்கேஜ் – காரைக்கால் மாங்கனி திருவிழா, திருநள்ளார் மற்றும் திருக்கடையூர்!

63 நாயன்மார்களில் ஒரே பெண் நாயன்மார் என்ற பெருமையை கொண்டவார் காரைக்கால் அம்மையாரின் வாழ்க்கை வரலாற்றை முன்னிறுத்தி ஆண்டுதோறும் 'மாங்கனி திருவிழா' வெகு விமர்சியாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்தாண்டு இவ்விழா ஜூன் 30-ம் தேதி தொடங்க உள்ளது. மாங்கனிகளை வீசி இறைத்து வழிபடுதல் நிகழ்ச்சியானது ஜூலை 2-ம் தேதி பிரமாண்டமாக நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவில் கலந்துக்கொள்ள தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

பக்தர்களின் வசதிக்காக புதுச்சேரியிலிருந்து புதுச்சேரி சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (PTDC) சார்பில் இருந்து டூர் பேக்கேஜ் வழங்கப்படுகிறது. காரைக்கால் அம்மையார் மாங்கனி திருவிழா மட்டுமின்றி, திருநள்ளார் சனீஸ்வரன் கோவில் மற்றும் திருக்கடையூர் அபிராமி அம்மன் கோவிலையும் நீங்கள் தரிசிக்கலாம். இந்த அசத்தலான பேக்கேஜை புக் செய்வது எப்படி மற்றும் கூடுதல் விவரங்கள் இதோ!

1

மாங்கனி திருவிழா 2023

63 நாயன்மார்களில் சிறப்பிடம் பெற்றவரும், இறைவனால் அம்மையே என்று அழைக்கப்பட்டவருமான காரைக்கால் அம்மையாருக்கு காரைக்கால் பாரதியார் சாலையில் தனிக் கோயில் உள்ளது. இங்கு, அம்மையார் வரலாற்றை நினைவுகூரும் விதமாக ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழா சிறப்பான வகையில் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான ஜூன் 30 ஆம் தேதி மாப்பிள்ளை அழைப்புடன் தொடங்குகிறது. ஜூலை 1 ஆம் தேதி திருக்கல்யாணமும், ஜூலை 2 ஆம் தேதி விமர்சியாக மாங்கனி இறைத்தல் நிகழ்வும் நடைபெறவுள்ளது.

2

ஆண்டு தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் திருவிழா

காரைக்காலுக்கு அருகிலுள்ள பகுதிகளிலிருந்தும், புதுச்சேரியிலிருந்தும், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் திரளான பக்தர்கள் கலந்து கொள்வது பழக்கம். பக்தர்களின் வசதிக்காக விழா நேரத்தில் சிறப்பு பேருந்துகளும் காரைக்காலுக்கு இயக்கப்படுகின்றன. தேவஸ்தான அறங்காவல் குழுவும், காரைக்கால் மாவட்ட நிர்வாகமும் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்து வருகின்றன. முந்தைய ஆண்டுகளை போலவே இந்த ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

3

நீங்கள் எதற்காக செல்ல வேண்டும்

சிவபக்தையான புனிதவதிக்கு சிவபெருமான் காட்சி கொடுத்து அவரை ஆட்கொண்டு, இன்று முதல் நீ 'காரைக்கால் அம்மையார்' என்று அன்புடன் அழைக்கப்படுவாய் என்றும், உன் நியாபகமாக ஆண்டுதோறும் இங்கு மாங்கனி திருவிழா நடைபெறும் என்றும் கூறினார். மாங்கனி இறைப்பவர்கள் பெரும்பாலும் அன்னையிடம் ஏதேனும் வேண்டி அது நடந்த பின்னர், அம்மைக்கு நன்றி செலுத்தும் விதமாக மாங்கனி இறக்கின்றனர். நீங்களும் மனமுருகி அன்னையிடம் ஏதேனும் வேண்டிக் கொண்டால் அது கட்டாயம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

4

PTDC அசத்தலான ஒரு நாள் சுற்றுலா பேக்கேஜ்

இத்தகைய சிறப்பு வாய்ந்த மாங்கனி திருவிழாவிற்கு நீங்களும் செல்ல வேண்டும் என்று தோன்றுகிறதா? உங்களுக்காகவே PTDC அசத்தலான ஒரு நாள் சுற்றுலா பேக்கேஜை அறிமுகப்படுத்தியுள்ளது. ஜூலை 2 ஆம் தேதி அதிகாலையில் தொடங்கும் இந்த சுற்றுலா பேக்கேஜின் விவரங்கள் கீழே

புறப்படும் நாள்: 02.07.2023

புறப்படும் இடம்: PTDC அலுவலகம், எண்-2, லால் பகதூர் சாஸ்திரி வீதி, புதுச்சேரி

புறப்படும் நேரம்: அதிகாலை 5 மணி

கட்டணம்: ஒரு நபருக்கு ரூ.900 மதிய உணவு உட்பட

தரிசனம்

1. ஸ்ரீ காரைக்கால் அம்மையார் கோவில்

2. திருநள்ளார் ஸ்ரீ தர்பாரண்யேஸ்வர ஸ்வாமி கோவில்

3. காரைக்கால் கடற்கரை (மதிய உணவு)

4. மாங்கனி இறைத்தல் விழா

5. திருக்கடையூர் ஸ்ரீ அபிராமி அம்மன் சமேத ஸ்ரீஅமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

5

இதர தகவல்கள்

காரைக்காலில் நடைபெறும் மாங்கனி திருவிழாவில் கலந்துக் கொண்டு மேற்கூறப்பட்ட பிரசித்திபெற்ற ஸ்தலங்களையும் நீங்கள் தரிசித்து விட்டு வரலாம். 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு டிக்கெட் கிடையாது. ஒரே நாளில் இத்தனை ஆலயங்களையும் தரிசித்து விட்டு இரவு புதுச்சேரி திரும்பி விடலாம். இந்த பேக்கேஜை புக் செய்ய வேண்டுமென்றால் 0413 2339497/ 75980 84497/ 99947 25888 என்ற எண்களை தொடர்பு கொள்ளவும். அல்லது லால் பகதூர் சாஸ்திரி வீதியில் இருக்கும் PTDC அலுவலகத்தை நேரில் தொடர்பு கொள்ளவும்.

மாங்கனி திருவிழாவே பெரு பெரிய சிறப்பம்சம் தான்! மாங்கனி திருவிழாவில் பங்கேற்று அம்மையை தரிசிப்பதே பெரிய புண்ணியம் தான்! அதனால் இந்த பேக்கேஜை புக் செய்து நீங்களும் சென்று தான் பாருங்களேன்!

More News

    Read more about: karaikal puducherry
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+