Search
  • Follow NativePlanet
Share
» »புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும் என்று அறிவிப்பு – புதுச்சேரி மக்களுக்கு குட் நியூஸ்!

புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும் என்று அறிவிப்பு – புதுச்சேரி மக்களுக்கு குட் நியூஸ்!

புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் நீண்ட வருடங்களாக இயங்கி வந்த பேருந்து நிலையத்தில் ஜூன் 2024 முதல் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் ஸ்மார்ட் சிட்டி நகரத் திட்டப் பணிகள் நடைபெறுவதையொட்டி, ஜூன் 16 ஆம் தேதி முதல் தற்காலிக பேருந்து நிலையமாக AFT மைதானம் செய்லபட்டு வருகிறது. இதனால் புதுவை மக்களும், புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் இனி AFT மைதானத்தை தான் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் தயாராகி வரும் புதிய பேருந்து நிலையம் விரைவில் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது!

அதிகரித்து வரும் புதுச்சேரி சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை

வார இறுதிகளிலும், விடுமுறை நாட்களிலும் புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது. எத்தனை பேருந்துகள் இயக்கப்பட்டாலும் புதுச்சேரி பேருந்து நிலையம் மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. இதற்கிடையில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தை புதுப்பித்து வருகின்றனர். புதுச்சேரி மறைமலை அடிகள் சாலையில் இயங்கி வந்த புதுவை பேருந்து நிலையம் பராமரிப்பு பணிகளால் ஜூன் 2024 முதல் மூடப்பட்டுள்ளது.

சீரமைக்கப்படும் புதுச்சேரி பேருந்து நிலையம்

புதுச்சேரியில் 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் பல்வேறு திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் ரூ.30 கோடியில் கட்ட திட்டமிடப்பட்டு, பூமிபூஜை போடப்பட்டது. இதில் முதல்கட்டமாக பேருந்து நிலையத்தின் மைய பகுதியில் கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக மைய பகுதியைச் சுற்றிலும் தடுப்புகள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

Puducherry bus stand is going to be opened shortly in maraimalai adigal salai temporary AFT mill Puducherry bus stand is to be shifted to old bus stand in November first week when Pondicherry new bus stand will be opened

புதுவை பேருந்து நிலையமாக இயங்கி வந்த AFT மைதானம்

புதுச்சேரி புதிய பேருந்து நிலையத்தில் பொலிவுறு நகரத் திட்டப் பணிகள் நடைபெறுவதையொட்டி, ஜூன் 16 ஆம் தேதி முதல் தற்காலிக பேருந்து நிலையமாக AFT மைதானம் செயல்பட துவங்கியது. புதுச்சேரி மக்களும் புதுச்சேரிக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளும் AFT மைதானத்தை புதுவை பேருந்து நிலையமாக பயன்படுத்தி வருகின்றனர். ஆனால், இங்கே கடைகள், கழிவறைகள், பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் இல்லாததால் அனைத்தும் தற்காலிகமாக தயார் செய்யப்பட்டன.

புதிய பேருந்து நிலையத்தில் உள்ள வசதிகள்

4 ஏக்கர் பரப்பளவு கொண்ட பேருந்து நிலையத்தின் மையப்பகுதியில் உணவகம் டிக்கெட் புக்கிங் ஆபீஸ், போக்குவரத்து அலுவலகம், விசாரணை அலுவலகம், சிசிடிவி கண்காணிப்பு அறை, டைமிங் அலுவலகம், நிர்வாக அலுவலகம், பாலூட்டும் தாய்மார் அறை, மூன்று வெயிட்டிங் ஹால், ஏசி காத்திருப்பு அறை மற்றும் மின்சார அறை உள்ளிட்ட 31 கடைகள் அமைக்க திட்டமிட்டனர்.

பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டு வரும் மேம்பாடுகள்

புதிதாக கட்டப்பட்டு வரும் பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 46 பேருந்துகள் நிறுத்த முடியும் எனவும் அதற்கான அனைத்து வசதிகளையும் செய்துள்ளனர் ஆனால் பழைய பேருந்து நிலையத்தில் 32 பேருந்துகள் வரை மட்டுமே நிறுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதே போல, பேருந்து நிலையத்தின் இடது புறத்தில் இருசக்கர கார் பார்க்கிங் ஆம்னி பேருந்துகள் நிற்கும் இடம் ஆகியவை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது. பேருந்து நிலையத்தை சுற்றிலும் 33 மின் விளக்குகளும் உயரமானமின் கம்பம் நடும் பணியும் செய்யப்பட்டு வருகிறது.

கூடிய சீக்கிரத்தில் திறக்கப்படும் புதிய பேருந்து நிலையம்

புதிய பேருந்து நிலையத்தின் தரைதளம் அமைக்கும் பணி முடிவடையும் நிலையில் பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வந்து செல்லும் நுழைவாயிலில் இரும்பிலான வளைவுகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. தற்காலிக பேருந்து நிலையம் சேறும் சகதியுமாக காணப்படுவதால் பயணிகள் மிகவும் சிரமம் அடைகின்றனர். அதனால் புதிய பேருந்து நிலைய கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என புதுச்சேரி நகராட்சி மற்றும் ஸ்மார்ட் சிட்டி திட்ட அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர், இறுதி கட்டத்தை நெருங்கினாலும் பணிகள் முடிவடைய ஒரு மாதம் ஆகும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More News

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+