» »ராகு எப்படி உருவானது தெரிஞ்சிக்கணுமா? இந்த கோயிலுக்கு போங்க!

ராகு எப்படி உருவானது தெரிஞ்சிக்கணுமா? இந்த கோயிலுக்கு போங்க!

Written By: Udhaya

சர்ப தோஷம் என்பது என்னவென்றால், திருமணத்தில் தடைகள், திருமணம் அமைவதில் தடைகள், திருமண வாழ்க்கையில் சின்னச் சின்ன வாக்குவாதங்கள், கணவன்-மனைவி இடையே விட்டுக் கொடுக்க முடியாத ஈகோ பிரச்சனைகள் இவையெல்லாம் சர்ப தோஷம் சாதாரணமாக உருவாக்கும்.

இதுமாதிரி பல சிக்கல்கள் தீருவதற்காகவே நாக தலங்கள் தமிழகத்தில் பல இடங்களில் காணப்படுகின்றன.

திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்

திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில்

திருநாகேசுவரம் நாகநாதசுவாமி கோயில் சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் பாடப் பெற்ற சிவாலயமாகும். தேவாரப்பாடல் பெற்ற காவிரி தென்கரைத்தலங்களில் 29ஆவது சிவத்தலமாகும்.

Rsmn

 எப்படி செல்லலாம் ?

எப்படி செல்லலாம் ?

தஞ்சை மாவட்டத்தில் கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 6 கி.மி. தொலைவில் திருநாகேஸ்வரம் தலம் அமைந்துள்ளது.

 திருவிண்ணகர்

திருவிண்ணகர்


இத்தலத்தின் அருகில் வைணவத் தலமான திருவிண்ணகர் (ஒப்பிலியப்பன்) திருக்கோயிலும் உள்ளது. கும்பகோணத்தில் இருந்து தென்கிழக்கில் காரைக்கால் செல்லும் நெடுஞ்சாலையில் 8 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. கும்பகோணத்தில் இருந்து நகரபேருந்து வசதி உள்ளது.

Raji.srinivas

 கோயிலின் சிறப்பு

கோயிலின் சிறப்பு

இது சேக்கிழார் திருப்பணி செய்த தலம்.திருநாகேஸ்வரம், இங்கு திருப்பணிகள் செய்த சேக்கிழார், தான் பிறந்த சென்னை - குன்றத்தூரிலும் இதே பெயரில் ஒரு கோயிலை கட்டி அதற்கு திருநாகேஸ்வரம் என்று பெயர் சூட்டினார்

Arunasank

 சிறப்பு தலம்

சிறப்பு தலம்

நவக்கிரகத் தலங்களில் ராகு பகவானுக்குரிய சிறப்பு தலம் என்ற பெருமை உடையதாகும். செண்பக மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இந்தப் பகுதி செண்பகாரண்ய தலம் என்று அழைக்கப்பட்டு வந்தது.

Rsmn

வரலாறு

வரலாறு

ராகுவின் பிறப்பு வரலாறும் கிரகச்சிறப்பும் சுவை நிரம்பியவை. ராஜவம்சத்து மன்னன் ஒருவனுக்கும் அசுரகுலப் பெண்ணொருத்திக்கும் மகனாகப் பிறந்தவன் ராகு.

Ramanarayanadatta astri

ராகு

ராகு

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது அசுரனாகிய ராகு உருமாறி தேவர்கள் வரிசையில் சேர்ந்து மகாவிஷ்ணுவிடமிருந்து அமிர்தத்தைப் பெற்று உண்டு விட்டான்.

Arkrishna

ராகு

ராகு

உண்மை அறிந்த மகாவிட்ணு கையிலிருந்த அகப்பையால் அவனது மண்டையில் அடிக்க தலை வேறு உடல் வேறாகி விழுந்தான்.

LigerCommon

ராகு

ராகு

ஆனாலும் அமிர்தம் உண்ட மகிமையால் அவன் தலைப்பகுதியில் உயிர் இருந்தது. ராகுவும் தவறுக்கு வருந்தி இறைவனை வேண்டி நிற்க இறைவன் பாம்பின் உடலை அவனுக்குக் கொடுத்து அவனை ஒரு நிழல் கிரகமாகவும் ஆக்கினார்.

 சிவராத்திரி சிறப்பு

சிவராத்திரி சிறப்பு


நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன

Read more about: travel, temple
Please Wait while comments are loading...