Search
  • Follow NativePlanet
Share
» »சென்னைக்கு பக்கத்தில ரோப் காருடன் செல்லக்கூடிய வசதி – அழகான யோக நரசிம்மர் கோயில்!

சென்னைக்கு பக்கத்தில ரோப் காருடன் செல்லக்கூடிய வசதி – அழகான யோக நரசிம்மர் கோயில்!

சென்னைக்கு பக்கத்தில ஒரு ஒன்றரை மணி நேர பயண தூரத்தில சோளிங்கூர் எனும் ஊரில் யோக நரசிம்மர் கோயில் உள்ளது. மலைக்கு மேலே இயற்கை எழில் கொஞ்சும் சோலைக்குள் அமைந்திருக்கும் இந்த கோயிலுக்கு நீங்கள் உங்கள் குடும்பத்தினருடன் வருகை தர வேண்டும். ஏனென்றால் இந்த கோயிலுக்கு செல்ல, நீங்கள் ரோப் காரில் பயணிக்கலாம். கட்டணம் ஒரு ஆளுக்கு வெறும் ரூ.100 மட்டுமே. ஒரு புது வித அனுபவத்தை உங்கள் வீட்டாருக்கு வழங்குவதுடன் யோக நரசிம்மரின் ஆசீர்வாதத்தை பெறலாம்!

சென்னைக்கு அருகில் உள்ள கோயில்

சென்னையிலிருந்து வெறும் 115 கிமீ தூரத்தில் ராணிப்பேட்டை அருகே சோளிங்கூர் கிராமத்தில் அழகிய யோக நரசிம்மர் கோயில் உள்ளது. இந்த கோயிலை நீங்கள் உங்கள் சொந்த வாகனத்திலும், பொது போக்குவரத்திலும் அடையலாம். ஆனால், 1305 படிகள் ஏறி இறைவனை தரிசனம் செய்வது என்பது அனைவருக்கும் எளிதானது அல்ல.

ropecartemplenearchennai

ரோப் காரில் பயணம்

சோளிங்கர் கோவிலின் நரசிம்ம சுவாமியின் பக்தர்கள் தங்கள் கனவு நனவாகும் என்பதால் இப்போது மகிழ்ச்சி அடைவார்கள். சென்னை அருகே சோளிங்கூரில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ லக்ஷ்மி நாராயண ஸ்வாமி கோவிலில் ரோப் கார் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த கோயில் சென்னைக்கு அருகாமையில் இருப்பதால் 'ரோப் கார் கோயில்' தற்போது வைரலாகி வருகிறது.

பல வசதிகளை திறந்து வைத்த தமிழக முதல்வர்

தமிழக முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் பக்தர்களின் வசதிக்காக 8.34 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கயிறு பராமரிப்பு மையத்தை ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். காத்திருப்பு கூடம், கழிப்பறைகள், லிப்ட் போன்ற பல வசதிகளையும் அவர் திறந்து வைத்துள்ளார்.

1305 படிகள் ஏறுவது எளிதல்ல

இந்த மலைக்கோயிலில் 1305 படிகள் ஏறுவது எளிதல்ல என்பதும், பல முதியவர்கள் அல்லது பக்தர்கள் எழுபது டோலிகளை மட்டுமே நம்பியிருப்பதும் குறிப்பிடத்தக்கது. 24 பிப்ரவரி 2024 அன்று, ரோப் கார் வசதியின் சோதனை ஓட்டம் நடைபெற்றது, தற்போது இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

sholinguryoganarasimhatemple

கட்டணம் ஒரு நபருக்கு ரூ.100 மட்டுமே

நீங்கள் மலையடிவாரத்தை அடைந்தவுடன், அங்கே இருக்கும் கவுண்டரில் டிக்கெட் வாங்கிய பின்னர் காத்திருப்பு அறையில் உங்கள் டோக்கன் நம்பர் கூப்பிடும் வரை காத்திருக்கவும். உங்களது டோக்கன் நம்பர் வந்தவுடன் நீங்கள் ரோப் காரில் ஏறி பயணம் செய்யலாம். ஒரு காருக்குள் மொத்தமாக 4 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். நீங்கள் எத்தனை பேர் வந்துள்ளீர்களோ அதற்கு ஏற்றார்போல், டிக்கெட் புக் செய்து கொள்ளுங்கள். மேலே சென்று கீழே இறங்க ஒரு ஆளுக்கு ரூ.100 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

நீங்கள் எப்போது செல்லப் போகிறீர்கள்?

நீங்கள் ரோப் காரில் பயணம் செய்யும் போது 750 அடி உயரத்தில் சுற்றி இருக்கும் இயற்கை அழகை ரசித்தப்படி நீங்கள் பயணம் செய்யலாம். கோவிலை அடைந்தவுடன் நீங்கள் ஒரு லிப்ட்டை காண்பீர்கள், அதில் ஏறி 2 ஆவது தளத்தை அடைந்து யோக நரசிம்மரை மனதார தரிசனம் செய்யுங்கள். பின்னர் அங்கேயே பிரசாதமாக வழங்கப்படும் புளியோதரை, லட்டு, முறுக்கு போன்றவற்றை சுவைக்க மறக்காதீர்கள். ரோப் காரில் இருந்து இறங்கிய இடத்திற்கு சென்று, அங்கிருந்து கீழே செல்லுங்கள்.

வித்தியாசமான அனுபவத்துடன் ஒரு குடும்ப அவுட்டிங் செல்ல இது ஒரு நல்ல சாய்ஸ் என்பதை மறந்துடாதீங்க!

More News

Read more about: chennai tamilnadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+