Search
  • Follow NativePlanet
Share
» »“ஜுவல் ஆஃப் பே ஆஃப் பெங்கால்” என்றழைக்கப்படும் கடற்கரை எதுவென்று உங்களுக்கு தெரியுமா?

“ஜுவல் ஆஃப் பே ஆஃப் பெங்கால்” என்றழைக்கப்படும் கடற்கரை எதுவென்று உங்களுக்கு தெரியுமா?

ஒப்பீட்டளவில் மிகவும் அறியப்படாத ருஷிகொண்டா கடற்கரை அமைதியின் மையமாக உள்ளது, இயற்கையான பாறைகள் கடலின் தெளிவான நீரில் சாய்ந்து கிடக்கின்றன, சுற்றியுள்ள மலைகளும் பாறைகளும் அரிதான மற்றும் அழகான கடற்கரை நிலப்பரப்பை உருவாக்குகின்றன என்பதில் எந்த ஆச்சர்யமும் இல்லை!

இந்தியாவில் ப்ளூ சர்டிபிகேஷன் பெற்ற சில இந்திய கடற்கரைகளில் இதுவும் ஒன்றாகும். இங்கே நீங்கள் ஸ்கூபா டைவிங் செய்து டால்பின்களைக் கண்டு மகிழலாம். இந்த அழகான கடற்கரை ஜாகிங் செய்பவர்கள், நடைபயணம் மேற்கொள்ளுபவர்கள் மற்றும் யோகா ஆர்வலர்களுக்கு ஏற்ற இடம்.

அழகான ருஷிகொண்டா கடற்கரை

அழகான ருஷிகொண்டா கடற்கரை

பெருநகரங்களின் தினசரி சலசலப்பில் இருந்து சிறிது நேரம் ஓய்வெடுக்க நீங்கள் விரும்பினால், ரிஷிகொண்டா கடற்கரை என்றும் உச்சரிக்கப்படும் ருஷிகொண்டா கடற்கரை, கண்டிப்பாக பார்க்க வேண்டிய ஒன்றாகும். இது விசாகப்பட்டினத்தின் மையத்திலிருந்து சுமார் 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு அழகிய வெள்ளை மணல் கடற்கரையாகும்.

சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகள் இருவரும் தெளிவான நீல வானத்தைப் பார்க்கவும், சூரிய ஒளியில் ஈடுபடவும், நீந்தவும் அல்லது பறவைகளைக் கண்காணிக்கவும் கடற்கரைக்கு வருகிறார்கள். நுரைத்த நீலக் கடல் மற்றும் மரகதப் பசுமைக்கு நடுவில் அமைந்துள்ள இந்தக் கடற்கரையின் இயற்கைக் காட்சிகள் மெய்சிலிர்க்க வைக்கிறது.

ருஷிகொன்டாவில் உள்ள சுவாரஸ்யமான விளையாட்டுகள்

ருஷிகொன்டாவில் உள்ள சுவாரஸ்யமான விளையாட்டுகள்

நீர் விளையாட்டு பிரியர்களுக்கு கடற்கரை ஒரு சொர்க்கமாக உள்ளது. சர்ஃபிங் மற்றும் ஜெட் ஸ்கீயிங் போன்ற பல்வேறு வகையான செயல்பாடுகள் இங்கு வழங்கப்படுவதால், சாகச விரும்பிகளுக்கு இந்த இடம் மிகவும் பிடித்தமானது. வாட்டர் சர்ஃபிங், மோட்டார் படகில் வேகப் படகு சவாரி ,வாட்டர் ஸ்கீயிங் மற்றும் விண்ட்சர்ஃபிங் ஆகியவை இந்த கடற்கரையில் கண்டிப்பாக முயற்சிக்க வேண்டிய சில சாகச செயல்களாகும். கடற்கரை விரும்பிகளுக்கு புகலிடமாகக் கருதப்படும் இக்கடற்கரையில் ஸ்கூபா டைவிங், ஸ்நோர்கெல் மற்றும் கடல் கயாக் போன்ற பிற நடவடிக்கைகளிலும் ஈடுபடலாம்.

இவை எல்லாவற்றிற்க்கும் மேல், படகில் சென்று டால்பின்களையும் நாம் கண்டு களிக்கலாம். ருஷிகொண்டா கடற்கரை மாசுபடாத மற்றும் இயற்கை அழகைக் கொண்ட சில கடற்கரைகளில் ஒன்றாகும், எனவே சுற்றுலாப் பயணிகள் தங்கள் அன்புக்குரியவர்களுடன் அமைதியான நாளை அனுபவிக்க மற்றவர்களை விட இந்த கடற்கரைக்கு வருகை தர விரும்புகிறார்கள். கடற்கரையின் பசுமை, தெளிவான நீல நீர் மற்றும் தங்க மணல் ஆகியவை நாடு முழுவதும் இருந்து சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கத் தவறுவதில்லை.

கடற்கரையைச் சுற்றியுள்ள விஷயங்கள்

கடற்கரையைச் சுற்றியுள்ள விஷயங்கள்

நீங்கள் கடற்கரை கைப்பந்து போன்ற செயல்களையும் முயற்சி செய்யலாம் அல்லது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் அமைதியான சுற்றுலாவில் மகிழலாம். சுவையான கடல் உணவுகளுக்கு, கடற்கரைக்கு அருகில் உள்ள சில உள்ளூர் கடல் உணவு உணவகங்களுக்குச் செல்லவும். இங்கு எளிதாகக் கிடைக்கும் புதிய தேங்காய் நீர் மற்றும் பூட்டாஸ் ஆகியவற்றைப் சுவைக்க மறக்காதீர்கள். வங்காள விரிகுடாவின் அலைகளையும் தங்க மணலையும் புகைப்படம் எடுக்க மறக்காதீர்கள்.

அதோடு இங்கு இருக்கும் பிற செயல்களாக, நீங்கள் கைலாசகிரி மலையுச்சிக்கு ரோப்வேயில் சவாரி செய்யலாம், அழகிய நகரமான விசாகத்தைக் காண பொம்மை ரயிலில் பயணம் செய்யலாம். அருகில் அமைந்துள்ள நீர்மூழ்கிக் கப்பல் அருங்காட்சியகம் உங்களுக்கு கிடைக்கும் ஒரு போனஸ் ஆகும். ருஷிகொண்டா கடற்கரையில் இஸ்கான் கோயிலும் உள்ளது, இங்கு சுற்றுலாப் பயணிகள் பிரார்த்தனை செய்யவும், சர்வவல்லவரின் ஆசீர்வாதத்தைப் பெறவும் செல்கிறார்கள்.

ருஷிகொண்டா கடற்கரையை எப்படி அடைவது

ருஷிகொண்டா கடற்கரையை எப்படி அடைவது

அமைதியான வார விடுமுறைக்கு ஏற்ற இடமான ருஷிகொண்டா கடற்கரை விசாகப்பட்டினத்திலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. சாலை மார்க்கமாக கடற்கரையை எளிதில் அணுகலாம். உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே அதன் அபரிமிதமான பிரபலத்திற்கு கடற்கரையின் இயற்கையான வசீகரமும் ஒரு முக்கிய காரணமாகும்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X