Search
  • Follow NativePlanet
Share
» »தித்திக்கும் சுற்றுலா அனுபவம் பெற சாங்க்லி செல்வோம்! #மராத்திஉலா 1

தித்திக்கும் சுற்றுலா அனுபவம் பெற சாங்க்லி செல்வோம்! #மராத்திஉலா 1

மஹாரஷ்டிரா மாநிலத்தின் முக்கியமான நகரமான இந்த சாங்க்லி நகரம் மஞ்சள் நகரம் என்ற சிறப்புப்பெயரை கொண்டுள்ளது. சாங்க்லி எனும் பெயர் 'சஹா கலி' எனும் சொல்லிலிருந்து பிறந்துள்ளது. 'ஆறு பாதை' என்பது இந்த சொல்லின் பொருளாகும். நாட்டியபண்டரீ எனப்படும் மராத்தி நாடகக்கலையின் பிறப்பிடமாக கருதப்படும் இந்த சாங்க்லி நகரம் ஒரு காலத்தில் அந்த பெயராலேயே அறியப்பட்டுள்ளது. சாங்க்லி பற்றியும், அதன் சுற்றுலா அம்சங்கள் பற்றியும் இந்த பதிவில் விரிவாகக் காண்போம் வாருங்கள். இது மஹாராஷ்டிரத்தின் மதிமயக்கும் சுற்றுலாத் தொடரின் முதல் பாகம்.

எங்களது பதிவுகள் தொடர்ந்து கிடைக்க மறக்காமல் இந்த பக்கத்தின் வலது பக்க மேல் முனையில் இருக்கும் பெல் ஐகானை சொடுக்கி சப்ஸ்கிரைப் செய்துகொள்ளுங்கள். மேலும் எங்களது தமிழ் நேட்டிவ் பிளானட் முகநூல் பக்கத்தையும் மறக்காமல் பாலோ செய்யுங்கள்.

அறிமுகம்

அறிமுகம்

ராஜவம்ச நகரம் சாங்க்லி நகரத்துக்கு அருகிலேயே உள்ள ஒரு சிறு நகரம் 12ம் நூற்றாண்டில் சாளுக்கிய வம்சத்தினரின் தலைநகரமாக விளங்கியுள்ளது. இது ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் 11 துப்பாக்கி மரியாதை கொண்ட அரச ராஜ்யங்களில் ஒன்றாக திகழ்ந்திருக்கிறது.

மராத்தா ஆட்சி

மராத்தா ஆட்சி

மராத்தா ஆட்சியின்போது இது மராத்தா ஜாகீர்களில் ஒன்றாகவும் விளங்கியிருக்கிறது. சுதந்திரத்துக்கு முந்தைய காலத்தில் இது பட்வர்தன் ராஜகுடும்பத்தால் ஆளப்பட்டுள்ளது.

Marle Hale

சுற்றுலா

சுற்றுலா

சாங்க்லியில் தவறாமல் பார்க்க வேண்டிய முக்கிய சுற்றுலா அம்சங்கள் சாங்க்லி நகரம் பல எண்ணற்ற கோயில்கள், பாலங்கள் மற்றும் காட்டுயிர் சரணாலயங்களை கொண்டுள்ளது. இங்குள்ள சகரேஷ்வர் காட்டுயிர் சரணாலயம் முக்கியமான சுற்றுலா அம்சமாக புகழ் பெற்றுள்ளது. 52 வகையான உயிரினங்கள் இந்த சரணாலயத்தில் காணப்படுகின்றன.

Charles J Sharp

 ஆன்மீகம்

ஆன்மீகம்

இதற்குள்ளேயே பல கோயில்களும் வழிபாட்டுத்தலங்களும் அமைந்துள்ளன. சங்கமேஷ்வர் கோயில் மற்றும் கணபதி கோயில் போன்றவை இந்த பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களாக உள்ளன. இவற்றில் முதலாவது கோயில் சிவன் கோயிலாகவும், இரண்டாவது கோயில் கருங்கல்லால் உருவாக்கப்பட்டு இரண்டு ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் அமைந்ததாகவும் உள்ளன. இந்த இரண்டு கோயில்களுமே முக்கிய சுபதினங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் விஜயம் செய்யும் திருத்தலங்களாக புகழ் பெற்று விளங்குகின்றன. பல்வகை கோயில்களுக்கு நடுவே மீரஜ் தர்க்கா எனும் ஸ்தலமும் பல மதத்தினரும் ஒன்று கூடி வணங்கும் ஆன்மீகத்தலமாக விளங்குகிறது.

Pratish Khedeka

வரலாற்று நினைவுச் சின்னங்கள்

வரலாற்று நினைவுச் சின்னங்கள்

மராத்தா காலத்தில் கட்டப்பட சாங்க்லி கோட்டை ஒரு வரலாற்றுச்சின்னமாக உள்ளது. தற்சமயம் இதில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் இயங்குகிறது. இங்குள்ள தண்டோபா மலை வனச்சரகப் பகுதியில் மலை ஏற்றம் மற்றும் நடைப்பயணம் போன்ற சாகச பொழுது போக்குகளில் ஈடுபடுவதற்கான இயற்கை அமைப்புகள் உள்ளன.

Whiz2526

மஞ்சள் உற்பத்தி

மஞ்சள் உற்பத்தி

சாங்க்லி நகரத்தின் விசேஷம் சாங்க்லி பிரதேசம் ஆசியாவிலேயே மஞ்சள் அதிகம் உற்பத்தியாகும் இடமாக அறியப்படுகிறது. இங்கு மஹாவீர் நகரிலுள்ள ‘ஸ்பைசஸ் எக்ஸ்சேஞ் கார்னர்' எனும் இடத்திலிருந்து பயணிகள் ஊர் திரும்பும்போது மஞ்சள் வாங்கிச்செல்லலாம். இந்த சாங்க்லி நகரம் ஒரு முக்கியமான ‘ஷாப்பிங்க் சென்டர்' என்பது பிரசித்தமான யாவரும் அறிந்த உண்மை. எல்லாவகை அங்காடிகளும் இங்கு நிறைந்துள்ளன.

Tushar Vhankate

ஷாப்பிங்க் செல்வோமா?

ஷாப்பிங்க் செல்வோமா?

நகை வாங்க வேண்டுமெனில் இங்குள்ள சரஃப் பஜாருக்கு செல்லலாம். கபத் பேத் பகுதியில் ஆயத்த ஆடைகளும் துணி வகைகளும் கிடைக்கின்றன. மாருதி சாலையில் நவீன ரக ஆடைகள் மற்றும் காலணிகள் வாங்கலாம். அழகு சாதன பொருட்களும் இங்கேயே கிடைக்கின்றன. மேலும் வசந்த் மார்க்கெட் வளாகத்தில் பலவித உலர் பழங்களும், மீரஜ் மார்க்கெட்டில் இசைக்கருவிகளும் கிடைக்கின்றன. சாங்க்லி நகரம் மராத்திய இசை மற்றும் நாடகத்துறைகளில் பாரம்பரியமாக சிறந்து விளங்கியுள்ளது.

wikimedia.org

 எப்போது எப்படி செல்லலாம்

எப்போது எப்படி செல்லலாம்

இதமான சீதோஷ்ண நிலை இனிமையான சூழல் போன்றவற்றைக்கொண்ட குளிர்காலமே சாங்க்லிக்கு விஜயம் செய்வதற்கு ஏற்றதாக உள்ளது.

சாங்க்லி நகரத்துக்கு விமானம், ரயில், சாலை போன்ற மூவழி மார்க்கங்களின் மூலமாகவும் எளிதாக பயணிக்கலாம். விமானத்தில் செல்வதென்றால் கோலாப்பூர் விமான நிலையம் அருகில் உள்ளது. ரயில் மூலமாக எனில் சாங்க்லி ரயில் நிலையம் பல முக்கிய நகரங்களுக்கும் ரயில் இணைப்புகளை கொண்டுள்ளது.

மும்பை, புனே, ஹைதராபாத், கொச்சி மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களிலிருந்து மிக எளிதாக ரயில் மூலம் சாங்க்லி நகரத்துக்கு வருகை தரலாம்.

சாலை மார்க்கமாக எனில் மும்பை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை மர்றும் ரத்னகிரி-நாக்பூர் நெடுஞ்சாலை போன்றவை சாலைப்போக்குவரத்துக்கு மிக வசதியாக அமைந்துள்ளன.

Nomad Tales

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more