Search
  • Follow NativePlanet
Share
» »பிளாஸ்டிக்கே இல்லாம சுற்றுலாவா! ஓ இப்ப இதுகூட இருக்கா?

பிளாஸ்டிக்கே இல்லாம சுற்றுலாவா! ஓ இப்ப இதுகூட இருக்கா?

பிளாஸ்டிக் இல்லா சுற்றுலா செல்ல அற்புதமான வழிமுறைகள் இவை! நெகிழிகளைத் தவிர்ப்போம்.

புது வருடம் பிறந்ததிலிருந்து தமிழகம் பிளாஸ்டிக் இல்லாத புரட்சி மாநிலமாக ஆக முயற்சி செய்துகொண்டுள்ளது. எல்லாத் துறைகளிலும் பிளாஸ்டிக்கை தவிர்க்க பலர் முயன்று வருகின்றனர். அதிலும் பிளாஸ்டிக்கின் தீமை குறித்து பாமர மக்களுக்கும் நன்கு விழிப்புணர்வு வந்துள்ளது. ஆனாலும் சுற்றுலாவின் போது பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தவிர்ப்பது எப்படி எனும் யோசனை பலருக்கு தெரியாமலே இருக்கிறது. நீங்களும் நெகிழி அரக்கனை எதிர்த்துப் போரிடப்போகிறீர்களா? பிளாஸ்டிக்கே இல்லாமல் ஒரு அற்புத சுற்றுலா செல்ல அட்டகாசமான யோசனைகள் சிலவற்றை உங்களுக்குத் தருகிறோம்.

 வழக்கமான சுற்றுலா

வழக்கமான சுற்றுலா

வழக்கமாக நாம் சுற்றுலா செல்வோமேயானால் கையில் பல திணிப்புகளுடனும், பொதி சுமையுடனும், மறக்காமல் ஒரு ஸ்மார்ட் போனுடனும் கிளம்பிவிடுவோம். நம்ம சுத்தியும் பிளாஸ்டிக்கால் பொதிக்கப்பட்ட பல பொருள்களயும் வச்சிட்டிருப்போம். அட பிளாஸ்டிக்தான் கேடாச்சே அப்றம் ஏன் அத பயன்படுத்துறனு கேட்டா.. அதுதான் வசதியா இருக்கு.. என்ன பண்றதுனு திருப்பி கேப்போம். சரி சுற்றுலாவுல பிளாஸ்டிக்கே இல்லாம இருந்தா, பிளாஸ்டிக் கண்டுபிடிக்காமலே இருந்துருந்தா எப்படி இருந்துருப்போம் வாங்க பிளாஸ்டிக், லக்கேஜ், செல்பி இல்லாத அற்புத சுற்றுலாவை அனுபவிக்கலாம்.

 பிளாஸ்டிக் எனும் நெகிழி

பிளாஸ்டிக் எனும் நெகிழி

பிளாஸ்டிக் அப்படி ஒரு பொருளுக்கு தமிழில் நெகிழி என்று பெயர். இதை மக்கள் வழக்கில் பெரும்பாலும் பயன்படுத்துவதில்லை. சுற்றுலா செல்பவர்கள் சில இடங்களில் நெகிழி தவிர் பதாகைகள் வைக்கப்பட்டிருப்பதை காணமுடியும். மிக முக்கியமாக அதுபோன்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டிருக்கும் இடங்களில் பிளாஸ்டிக் தவிர்க்கவேண்டும்.

 தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக் தடை

தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக பிளாஸ்டிக் தடை

நீங்கள் தற்போது எந்த சுற்றுலாத் தளமாக இருந்தாலும் அங்கு பிளாஸ்டிக் கொண்டு செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலாத் தளம் தமிழகத்தில் இல்லை என மற்ற மாநிலங்களுக்கு செல்லும் போது பிளாஸ்டிக் பயன்படுத்துவதும் குற்றமே. மலை ஏற்றங்களில் பிளாஸ்டிக் பயன்பாடுதான் காட்டுத் தீ போன்ற இடர்பாடுகளுக்கும் காரணமாக அமைகிறது.

 குழந்தைகளுக்கு அறிவுறுத்துங்கள்

குழந்தைகளுக்கு அறிவுறுத்துங்கள்

குழந்தைகள் சமூகத்திலிருந்து கற்றுக் கொள்வதை விட பெற்றோர்களிடமிருந்தே அதிகம் கற்றுக் கொள்கின்றன. அதிலும் தமிழகத்து குழந்தைகளைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. முதலில் மாற்றத்தை குழந்தைகளிடமிருந்தே ஆரம்பிப்போம். அவர்களுக்கு தேவையான உணவு மற்றும் விளையாட்டு பொருள்களிலும் பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்கலாம். முக்கியமாக சுற்றுலா செல்லும் மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு பசிக்கும் என பிளாஸ்டிக்கில் பொதியப்பட்ட உணவுகளைத் தான் அதிகம் எடுத்துச் செல்கின்றனர்.

சுற்றுலாவில் பிளாஸ்டிக்கின் பாதிப்புகள்

சுற்றுலாவில் பிளாஸ்டிக்கின் பாதிப்புகள்

மலையேற்றம் மற்றும் மலைக் கிராமங்களில் பயணிப்பவர்கள் பிளாஸ்டிக்கை அங்கேயே விட்டுவிட்டு வந்துவிடுகின்றனர்.

பிளாஸ்டிக் தேங்கி மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது.

சுற்றுலா செல்பவர்களின் பிளாஸ்டிக் உபயோகத்தால் சுற்றுலாத் தளங்களே தனது பொலிவை இழந்து விடுகிறது.

சுற்றுலாத் தளங்களிலுள்ள விலங்குகள் பிளாஸ்டிக்கால் பொதியப்பட்டு பயணிகளால் பாதியில் வீசப்பட்ட உணவுக்காக பிளாஸ்டிக் கவர்களையும் சேர்த்தே சாப்பிடுகின்றன.

சரி பிளாஸ்டிக் இல்லாத சுற்றுலா?

சரி பிளாஸ்டிக் இல்லாத சுற்றுலா?

சுற்றுலாவைத் திட்டமிட்டுக் கொள்ளுங்கள். பிளாஸ்டிக்கை அறவே தவிர்க்க முயற்சி செய்யுங்கள்.

கைக்குழந்தைகளுக்கு தேவையான பால் புட்டிகள் உள்ளிட்ட சில அத்தியாவசிய பொருள்களைத் தவிர்த்து மற்ற பிளாஸ்டிக் பொருள்களைக்கு நோ சொல்லிவிடுங்கள்.

துணிப் பைகளை பயன்படுத்தத் தொடங்குகள். சுற்றுலாவின் போது துணிகளை பெட்டிகளில் கொண்டு செல்ல முயற்சிக்கலாம்.

உணவுப் பொருள்களை பாத்திரங்களில் கொண்டு செல்லலாம். செல்லும் வழியில் உணவு வாங்குதலைத் தவிர்ப்பது உடல் நலத்துக்கும் நல்லதுதானே.

பெண்களே சுற்றுலாப் பயணிகளே

பெண்களே சுற்றுலாப் பயணிகளே


உயர்ந்துகொண்டிருக்கும் வாகன எரிபொருள்கள், தன்னந்தனியே வீறு கொண்டு பறக்கும் சுற்றுலா பெண்கள், சுற்றுசூழலைப் பற்றி அக்கறை இல்லாதவர்கள் இவர்களெல்லாம் பாராட்டும்படி நாம் இந்த வருடத்தில் ஒரு கொள்கையை கையில் எடுப்போம்.

சுற்றுலாவில் நெகிழியைத் தவிர்ப்பதே அது.

சே நோ டு செல்ஃபி

சே நோ டு செல்ஃபி

செல்ஃபி மாயையிலிருந்து வெளியே வாருங்கள். நண்பா.. நம்ம செல்ஃபி எடுக்குற நேரத்துல பல அருமையான தருணங்கள மிஸ் பண்ணிடறோம். அந்த பேர்ல இருக்குறது போலவே செல்ஃபிஸ் ஆ நம்மள மாத்திடும். பயணப்படுங்க.. நிறைய சுத்துங்க.. கையில போன் இருக்குறதுக்காக நூறு நூத்தம்பது செல்பி எடுத்துட்டு நேரத்த இழந்துட்டு, பாக்கவேண்டிய இடங்கள பாக்காம திரும்பிடாதீங்க.

உண்மையான சுற்றுலா

உண்மையான சுற்றுலா

சுற்றுலா என்பது நீங்கள் ஒரு இடத்துக்கு சென்றிருக்கிறீர்கள் என்பதை மற்றவர்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுவதற்காக என்ற எண்ணத்தை நிறுத்துங்கள். நிச்சயமாக அது உங்களுக்கான சுற்றுலா. நண்பர்களுடனோ, தனியாகவோ சுற்றுலா செல்லும் நீங்கள் பெயருக்கு ரெண்டு புகைப்படங்கள் எடுத்துட்டு மற்ற காட்சிகளை ரசிக்க சென்றுவிடலாம். அதை விட்டுவிட்டு எல்லா இடத்திலும் நாலு செல்பி எடுத்து தாமதமாகிவிட்டது வீட்டுற்கு செல்வோம் நாம்னு திரும்பி வர்றது இல்ல சுற்றுலா.

பூரிப்பும் புத்துணர்வும்

பூரிப்பும் புத்துணர்வும்


நீங்க சுற்றுலா போயிட்டு திரும்பி வரும்போது ரொம்ப களைச்சி போய்டுறீங்கதானே.

தெரியுமே.. செல்ஃபிக்கு போஸ் குடுத்து மூட்டை மூட்டையா தூக்கி சுமந்து கையும் தோளும் வலிக்க வீட்டுல வந்து விழுவீங்க. அதுக்கு பேரா சுற்றுலா...?

சுற்றுலா போனா மகிழனும், ஆர்ப்பரிக்கணும், உணர்ச்சி கடல்ல குளிச்சி முத்தெடுக்கணும். கொண்டாடனும் மகிழனும். நினைவுகள நினச்சி நினச்சி மகிழனும்.. புகைப்படங்கள்ல பாத்துட்டு வாட்ஸ்அப்ல ஷேர் பண்றது இல்ல நினைவுகள். மகிழ்ந்திருங்கள் மற்றவர்களையும் மகிழ வையுங்கள்.. மறக்காம தமிழ் நேட்டிவ் பிளானட் இணையதளத்த பின்தொடருங்க....

Read more about: travel tips
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X