» »அயோத்தி ராமர் கோவிலின் அரிய உண்மைகள் !

அயோத்தி ராமர் கோவிலின் அரிய உண்மைகள் !

Posted By: Udhaya

இந்தியாவின் மிகப்பெரிய சிக்கல்களுள் ஒன்றுதான் இந்த பாபர் மசூதி இடிப்பும், ராமர் கோயில் தொடர்பான குழப்பங்களும். தற்போதுள்ள அந்த இடத்தில் ராமர் கோயில் இருந்ததாக பெரும்பான்மையான மக்கள் நம்புகின்றனர். அதை இடித்துதான் பாபர் என்னும் முகலாய மன்னர் மசூதியை  எழுப்பியதாக கூறப்படுகிறது.

இதனால் ஏற்பட்ட பிரச்னைகளில், பாபர் மசூதியை  சிலர் இடித்து, அங்கு ராமர் கோயில் கட்டவேண்டும் எனவும் கோரிக்கை வைத்தவண்ணம் உள்ளனர்.

ஆனால் பலருக்கும் தெரியாத உண்மைகளை போட்டு உடைத்தது இந்திய தொல்லியல் துறை. அது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை தந்தது. அப்படி தொல்லியல்துறை தந்த முடிவுகள்தான் என்ன? அந்த பகுதியை சுற்றி என்னவெல்லாம் இருக்கிறது என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.

எங்குள்ளது

எங்குள்ளது

இந்தியாவின் தலையாய பிரச்சனை அயோத்தி. இது உத்திரப்பிரதேசமாநிலம் லக்னோ விலிருந்து 136 கிமீ தொலைவில் உள்ளது.

மகாவிஷ்ணு

மகாவிஷ்ணு

மகாவிஷ்ணுவின் இருப்பிடமான வைகுண்டத்தின் ஒரு பகுதிதான் அயோத்தி என்று நம்பப்படுகிறது.

 சரையூ நதி

சரையூ நதி

இதை மனு, பூலோகம் கொண்டுவந்து சரையூ நதியின் தெற்கு கரையில் நிறுவியதாக புராணங்கள் கூறுகின்றன.

மண்ணுலகில் ஏற்படுத்தப்பட்ட சொர்க்கம்

மண்ணுலகில் ஏற்படுத்தப்பட்ட சொர்க்கம்

அதர்வன வேதப்படி, அயோத்தி நகரம் தேவர்களால் மண்ணுலகில் ஏற்படுத்தப்பட்ட சொர்க்கம் என்று கூறப்படுகிறது.

வணிக மையம்

வணிக மையம்

இது குப்தர்கள் காலத்தில் மிகப் பெரிய வணிக மையமாக திகழ்ந்திருக்கிறது.

புத்தர்

புத்தர்

புத்தர் மற்றும் சீன யாத்ரிகர்கள் சிலர் அயோத்திக்கு வந்திருப்பதாக குறிப்புகள் சொல்கின்றன.

 முக்தி

முக்தி

இந்துக்களால் முக்தி தரும்னு நம்பப்படும் ஏழு புனித நகரங்கள்ல ஒன்று இந்த இடம்.

புத்த, சமண மதங்களும்

புத்த, சமண மதங்களும்

இங்கு புத்தமதம், சமண மதங்களும் ஓங்கி வளர்ந்துள்ளது.

ராமர்

ராமர்

இங்கு மகாவிஷ்ணுவின் அவதாரமான ராமர் மனிதர்களுடன் மனிதர்களாக பிறந்து வளர்ந்து வாழ்ந்திருக்கிறார் என்று நம்பப்படுகிறது.

100 கணக்கான கோயில்கள்

100 கணக்கான கோயில்கள்

ராமாயணத்தோடு தொடர்புடைய 100 கணக்கான கோயில்கள் அயோத்தியில் இன்றும் காணப்படுகிறது.

பதினாறாம் நூற்றாண்டு

பதினாறாம் நூற்றாண்டு

இந்த இடம் இந்து மதக் கடவுளான இராமர் பிறந்த இடமென்றும், இங்கு பதினாறாம் நூற்றாண்டு வரை அவருக்கு ஒரு கோவில் இருந்ததென்றும் இந்துக்களில் பலரும் நம்புகிறார்கள்.

பாபர் மசூதி

பாபர் மசூதி

இந்த இடத்தில் 1528ல் முகலாய மன்னர் பாபர் இந்த இடத்தில் மசூதி ஒன்றை கட்டுவித்தார். அது அவரது பெயரால் பாபர் மசூதி என்று வழங்கப்பட்டது.

இராமர் கோவில்

இராமர் கோவில்

பத்தொன்பதாம் நூற்றாண்டில் மசூதிக்கு அருகில் இராமர் கோவில் ஒன்றைக் கட்ட வேண்டும் என்று குரல்கள் எழுந்தன. இந்திய விடுதலைக்குப் பிறகு 1948ல் மசூதி இருந்த இடம் பூட்டப்பட்டு 1989 வரை இந்த நிலை தொடர்ந்தது.

ராமர் மற்றும் சீதையின் சிலைகள்

ராமர் மற்றும் சீதையின் சிலைகள்

ஆனால் 1949ல் ராமர் மற்றும் சீதையின் சிலைகள் பாபர் மசூதியினுள் ரகசியமாகக் கொண்டு போய் வைக்கப்பட்டதாக பரலவலான பேச்சுக்கள் இருந்தன.

பாரதீய ஜனதா கட்சி

பாரதீய ஜனதா கட்சி

1980களில் இந்துத்துவ அமைப்புகள் அந்த இடத்தில் இராமருக்கு கோவில் கட்ட வேண்டும் என்று வலியுறுத்தத் தொடங்கின. இப்பிரச்சனை பாரதீய ஜனதா கட்சியால் (பாஜக) அரசியல் பிரச்சாரத்துக்கு பயன்படுத்தப்பட்டது.

மோதல்கள்

மோதல்கள்

1989ல் அலஹாபாத் நீதிமன்றம் இந்துக்களுக்கு அங்கு பூஜை செய்ய அனுமதி அளித்தது. இதனால் இந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் இடையே மோதல்கள் நிகழத் தொடங்கின.

சங் பரிவார் அமைப்புகள்

சங் பரிவார் அமைப்புகள்

மசூதியை இடித்து விட்டு அங்கு இராமருக்கு கோவில் கட்ட வேண்டுமென சங் பரிவார் அமைப்புகள் நாடு முழுவதும் போராட்டங்களை நடத்தின. டிசம்பர் 6, 1992 அன்று கர சேவகர்கள் என்றழைக்கப்படும் இந்துத்துவ அமைப்பின் உறுப்பினர்கள் பாபர் மசூதியை இடித்து விட்டு அங்கு ஒரு சிறு கோவிலை கட்டினர். இதனால் நாடெங்கும் கலவரங்கள் மூண்டன.

தொல்லியல் துறை

தொல்லியல் துறை

இதுக்கு அப்பறம், தொல்லியல் துறை நடத்தின ஆய்வில் இப்போ இருக்குற இடத்துல இருந்து சரியாக 200 மீ தொலைவில் வராகம், ஆமை முதலிய ராமருக்கு நெருக்கமான பொருள்களுடன் கூடிய உடைக்கப்பட்ட தூண்களின் துணுக்குகள் கிடைத்துள்ளன.

கோயில் கட்டிடம்

கோயில் கட்டிடம்

இது 10ம் நூற்றாண்டை சேர்ந்த கோயில் கட்டிடம் என்றும், கிமு 1300ம் ஆண்டிலிருந்தே இங்கு மனித புழக்கம் இருந்திருக்கலாம்னும் தெரிய வருகிறது.

சுற்றியுள்ள சுற்றுலாத் தளங்கள்

சுற்றியுள்ள சுற்றுலாத் தளங்கள்

இதை சுற்றியுள்ள சுற்றுலாத் தளங்களான அனுமான் ஹர்கி, ராமஜென்ம பூமி, கனக் பவன் கோயில், ராம்கி பைடி, ராஜ் சதன், ஸ்ரீ ராம் வல்லபா குஞ்ச் ஜானகி காட் ஆகியவை சிறப்பு பெறுகிறது.

சுற்றுலாத் தளங்கள்

சுற்றுலாத் தளங்கள்

சீதா கி ரசோய், நாகேஸ்வர்நாத் கோயில், மணிராம் தாஸ் சாவனி, துளசி அருங்காட்சியகம்,

தில்லி

தில்லி

அயோத்தியிலிருந்து தலைநகர் தில்லி 675 கிமீ தொலைவில் உள்ளது. தில்லியிலிருந்து பேருந்து மற்றும் ரயில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

 லக்னோ

லக்னோ


உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவிலிருந்து 136 கிமீ தொலைவில் அமைந்துள்ளது அயோத்தி. லக்னோவில் பார்ப்பதற்கென்று பல இடங்கள் உள்ளன. பாரா இம்பாரா, சத்தர் மண்ஸில், சௌவுக், சோட்டா இம்பாரா, ஃபிராங்கி மஹால், புத்தர் பூங்கா, ஜம்மா மசூதி, ஹஸ்ரத்கஞ்ச் சந்தை, கேய்சர்பாக் அரண்மனை, ராமகிருஷ்ணா மத் என நிறைய இடங்கள் உள்ளன.

கான்பூர்

கான்பூர்


உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியிலிருந்து 230 கிமீ தொலைவில் அமைந்துள்ளது கான்பூர். இங்கு அல்லன் காடுகள் மற்றும் உயரியல் பூங்கா, ஜெயின் கண்ணாடி கோயில், கம்லா ஓய்விடம், பத்தார் காட், கான்பூர் நினைவு தேவாலயம், நானா ராவ் பூங்கா, பித்தார்கோன், வால்மீகி ஆஸ்ரமம், துவாராகாதீஷ் என பல இடங்கள் நீங்கள் கட்டாயம் செல்லவேண்டிய பட்டியலில் உள்ளன.

வாரணாசி

வாரணாசி

அயோத்தியிலிருந்து வாரணாசி 212 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்துக்களின் புனித நகரமாக கருதப்படும் இடமான காசி பாவம் தொலைக்கும் நகரமாக உள்ளது.

Read more about: travel, temple, mystery