Search
  • Follow NativePlanet
Share
» »சிறுவாணி- உலகத்தின் இரண்டாவது அதிக சுவையான நீர்

சிறுவாணி- உலகத்தின் இரண்டாவது அதிக சுவையான நீர்

கோயம்புத்தூர், தமிழ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான இது தொழில்துறை, விவசாயம், கல்வி, மருத்துவம் போன்ற பல்வேறு துறைகளில் வேகமாக வளர்ச்சி கண்டு வரும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. மேலும் இந்தியாவில் வாழ இனிமையான 20 நகரங்களில் ஒன்றாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறது. இனிமையான மக்கள், சுற்றிலும் மலைகள் சூழ அருமையான சீதோஷன நிலை நல்ல ஒரு நகரமான கோவையின் தவிர்க்க முடியாத அம்சம் 'சிறுவாணி நீர்' ஆகும். உலகின் இரண்டாவது மிக சுவையான நீர் என புகழப்படும் இது கேரளாவில் இருந்து உற்பத்தியாகிறது.

புகைப்படம்: Basheer Olakara

காவிரியாற்றின் துணை நதியான பவானி ஆற்றின் ஒரு கிளை நதிதான் சிறுவாணி ஆறு. இது பாலக்காடு வழியாக பாய்கிறது. இந்த சிறுவாணி ஆற்றின் குறுக்கே தான் சிறுவாணி அணை கட்டப்பட்டுள்ளது. இந்த சிறுவாணி நீர் உற்பத்தியாகும் இடங்களில் உள்ள பாறைகள் மற்றும் அங்குள்ள மண்ணின் தன்மை காரணமாகவே சிறுவாணி நீர் சுவையுள்ளதாக இருப்பதாக கூறுகின்றனர்.

புகைப்படம்: Basheer Olakara

இந்த சிறுவாணி ஆற்றின் குறுக்கே தான் சிறுவாணி அணை மற்றும் சிறுவாணி அருவி அமைந்திருக்கிறது. கோயம்பத்தூரின் மிக முக்கிய சுற்றுலாதலமான இது கண்களுக்கு இனிமையான இயற்கை காட்சிகளை நமக்கு அளிக்கிறது. இந்த சிறுவாணி அணை 'கோவை குற்றாலம்' எனவும் அழைக்கப்படுகிறது. கோவை சுற்றுவட்டாரப்பகுதிகளில் வைத்து இந்த ஒரு அருவி மட்டுமே உள்ளதால் இங்கு எப்பொதும் மக்கள் வந்துகொண்டே இருக்கின்றனர்.

புகைப்படம்: VasuVR

கோயம்பத்தூர் நகரில் இருந்து 35 கி.மீ தொலைவில் இருக்கும் இந்த அருவிக்கு காலை முதல் மாலை வரை போக்குவரத்து வசதி உள்ளது. அருவிக்கு தாண்டி மழையின் மீது அமைந்திருக்கும் சிறுவாணி அணையை பார்வையிட வனத்துறையினரிடம் சிறப்பு அனுமதி பெற வேண்டும்.

சிறுவாணி- உலகத்தின் இரண்டாவது அதிக சுவையான நீர்

புகைப்படம்: VasuVR

ஷாப்பிங் மால்கள், திரையரங்குகளை தவிர்த்து கோவையில் இருக்கும் நல்லதொரு பொழுதுபோக்கு இடம் இந்த சிறுவாணி அருவி மற்றும் சிறுவாணி ஆணை ஆகும். கோவைக்கு செல்கையில் இங்கே தவறாமல் ஒருமுறை சென்று வாருங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X