» »லால் பாக் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 உண்மைகள்

லால் பாக் பற்றி நீங்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய 6 உண்மைகள்

Posted By: Udhaya

லால் பாக் மாளிகை மகாராஜா சிவாஜி ராவ் ஹோல்கரால் கட்டப்பட்டது. இது 1886ல் தொடங்கி 1921ம் காலக்கட்டத்துக்குள் கட்டப்பட்டிருக்கும்.

கான் ஆற்றின் கிளைகளில் கட்டப்பட்ட இந்த மாளிகை மூன்று பகுதிகளை கொண்டதாகும். அது மரத்தா பகுதியை ஆட்சி செய்த மன்னர்களின் கட்டுமான முறையைப் பின்பற்றி கட்டப்பட்டதாகும்.

113 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பரப்பு கொண்ட இந்த லால் பாக் மாளிகை மீண்டும் புதுப்பிக்கப் பட்டு அழகாக மாற்றப்பட்டது.

இந்த மாளிகையில் அந்த காலத்து முகலாயர்களின் நாணயங்கள் சேகரிக்கப்பட்டு காட்சிபடுத்தப்பட்டுள்ளது.

நீங்கள் கட்டாயம் தெரிந்து கொள்ளவேண்டிய இந்த மாளிகை பற்றிய அந்த 6 உண்மைகள் இவைதான்.

அபாரமான நுழைவு வாயில்

அபாரமான நுழைவு வாயில்


இங்கிலாந்தில் உள்ள பக்கிங்காம் மாளிகையின் அச்சு அசலாக இங்கு அமைக்கப்பட்டுள்ள வாயிலை நீங்கள் பார்க்க நேர்ந்தால் அப்படியே மயங்கிவிடுவீர்கள்.

அந்த அளவுக்கு அழகான அலங்கரிக்கப்பட்ட நுழைவுவாயில் இது.

சிவப்பு ரோஜா வரவேற்பு

சிவப்பு ரோஜா வரவேற்பு

இந்த மொத்த வளாகமும் 28 ஏக்கர் நிலப்பரப்பாகும். இதன் முக்கால் வாசி பகுதியில் பெரிய ரோஜா தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது.

இதுதான் இந்தியாவின் மிக அதிக பரப்பளவில் வளர்க்கப்படும் ரோஜா தோட்டம் ஆகும்.

கலை வடிவம், ஓவியம்

கலை வடிவம், ஓவியம்

இதனுள் வரையப்பட்டுள்ள ஓவியங்கள் மற்றும் கலை வடிவங்கள் அனைத்தும் இந்திய இத்தாலிய கலப்பாகவும், காண்பதற்கு உற்சாகத்தையும் தரும் அளவுக்கு அமைந்துள்ளது.

இந்திய இத்தாலிய உறவு அந்த காலத்திலேயே இருந்துள்ளது பாருங்களேன்.

அலங்காரம்

அலங்காரம்


இத்தாலிய மார்பிள் கற்களைக் கொண்டு கட்டங்கள், வட்டங்கள் என பல வடிவங்களில் பெரிசியன் நாட்டு வரவேற்பு மற்றும் பறக்கும் மங்கையர்களின் உருவங்களும் அந்தரத்தில் அமைக்கப்பட்டு பார்வையாளர்களுக்கு ஒரு சிறந்த உணர்வை அளிக்கிறது.

பால் அறை

பால் அறை

மாளிகையின் முன்பக்க அறைக்கு பால்அறை என்று பெயர். முகப்பு அறை மிகவும் விசாலமாகவும், வண்ணங்களால் பரப்பப்பட்டும், கலை வடிவங்களால் அலங்கரிக்கப்பட்டும் உள்ளது.

இது இந்த மாளிகைக்கு கூடுதல் அழகை தருகிறது.

உயிரோட்டம் தரும் மாளிகை

உயிரோட்டம் தரும் மாளிகை

மரவேலைப்பாடுகள் செய்யப்பட்ட அறைகள், அழகான அந்தரங்கள், உச்சவரம்பு என அனைத்தும் இந்த மாளிகைக்கு உயிரை தருகிறது.

இந்த மாளிகையின் அறைகள் சற்று மாற்றியமைக்கப்பட்டு தற்போது அருங்காட்சியகமாக செயல்படுகிறது.

Read more about: travel