Search
  • Follow NativePlanet
Share
» »சோலாப்பூருக்கு ஒரு சிறப்பான சுற்றுலா செல்வோம் #மராத்திஉலா 3

சோலாப்பூருக்கு ஒரு சிறப்பான சுற்றுலா செல்வோம் #மராத்திஉலா 3

சோலாப்பூருக்கு ஒரு சிறப்பான சுற்றுலா செல்வோம் #மராத்திஉலா 3

மஹாராஷ்டிரா மாநிலத்தின் பிரதான நகரங்களில் ஒன்று சோலாப்பூர். இதன் மாவட்டம் 14,850 சதுர கிலோ மீட்டரில் அமைந்துள்ளது. சோலாப்பூர் மாவட்டத்துக்கு வடக்கில் ஓஸ்மானாபாத், அஹ்மத்நகர் மாவட்டங்களும் மேற்கில் சதாரா புனே மாவட்டங்களும் தெற்கில் பீஜாபுர் சாங்க்லி மாவட்டங்களும் கிழக்கில் குல்பர்கா மாவட்டமும் அமைந்துள்ளது. வாருங்கள் சோலாப்பூரைப் பற்றி காண்போம். இது மராத்திஉலாவின் மூன்றாவது பகுதி ஆகும்.

 வரலாறு

வரலாறு

வரலாற்று காலத்தில் சோலாப்பூர் சாளுக்கிய வம்சம், யாதவ வம்சம், ஆந்திரபிரத்யா வம்சம், ராஷ்டிரகூட வம்சம் மற்று பாமனி வம்சம் போன்ற பல்வேறு ராஜவம்சங்களின் ஆளுகையில் இருந்திருக்கிறது. முதலில் பாமனி அரசாட்சியின் கீழ் இருந்த சோலாப்பூர் மாவட்டம் பிறகு பிஜாபூர் மன்னர்களால் கைப்பற்றப் பட்டது. அது பின்னர் மராத்திய மன்னர்களின் கைக்கு மாறியது.
பேஷ்வாக்களின் வீழ்ச்சிக்கு பிறகு 1818 ல் ஆங்கிலேயர்கள் அஹ்மத் நகரின் ஒரு துணை மண்டலமாக மாற்றினர். 1960 ஆண்டில் சோலாப்பூர் தனி மாவட்டம் என்ற அந்தஸ்தைப் பெற்றது. ஸீனா நதிக்கரையில் அமைந்துள்ள சோலாப்பூர் ஜைனர்களுக்கான பிரசித்தி பெற்ற ஆன்மீக ஸ்தலமாக விளங்குகிறது. இந்த நகரத்துக்கு சோலாப்பூர் என்ற பெயர் வந்ததற்கான காரணமாக வரலாற்றாசிரியர்கள் பலவிதமான கருத்துகளைக் கொண்டிருக்கின்றனர்.

Dharmadhyaksha

 பெயர்க்காரணம்

பெயர்க்காரணம்

சோலா என்றால் ஹிந்தியில் பதினாறு என்பது பொருள், எனவே சோலா+ஊர் (அதாவது 16 ஊர்களை கொண்டது) என்ற அடிப்படையில் இந்த சோலாப்பூர் என்ற பெயர் வந்திருக்கலாம் என்பது ஒரு கருத்து. மற்றொன்று இந்நகரம் முஸ்லிம் ஆட்சியின்போது சந்தல்பூர் (சந்தல் = சந்தனம்) என்று அழைக்கப்பட்டு அது பின்னாளில் சோலாப்பூர் என்று திரிந்திருக்கலாம் என்பது. பிரிட்டிஷ் காலத்தில் இது ஷோலாப்பூர் என்று அழைக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத் தக்கது.

Siddhartha8

எங்குள்ளது

எங்குள்ளது

சோலாப்பூர் மும்பை பெருநகரத்திலிருந்து 400 கி.மீ தொலைவிலும் புனேயிலிருந்து 245 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. சோலாப்பூர் - சுற்றுலா அம்சங்களின் கலவை தக்‌ஷிண் காசி என்று அழைக்கப்படும் பந்தர்பூர் ஸ்தலத்துக்காக சோலாப்பூர் மிகவும் பிரசித்தி பெற்று விளங்குகிறது. இங்குள்ள விட்டோபா கடவுளின் கோயிலுக்காக இது ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த இடமக இந்தியா முழுவதும் அறியப்பட்டுள்ளது.

Dharmadhyaksha

கொண்டாட்டமும் குதூகலமும்

கொண்டாட்டமும் குதூகலமும்

கார்த்திகை மற்றும் ஆஷாதி ஏகாதசி போன்ற திருவிழாக்களின் போது இங்கு நான்கிலிருந்து ஐந்து லட்சம் மக்கள் வரை இங்கு கூடுகின்றனர். சோலாப்பூரை ஒட்டிய அக்கல்கோட் எனும் இடமும் ஒரு புனித யாத்ரீக ஸ்தலமாகும். தத்தாத்ரேய கடவுளின் அவதாரம் என்று கருதப்படும் ஷீ ஸ்வாமி சமர்த்த மஹராஜிற்கு இது அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள வடவிருக்‌ஷா கோயிலும் சுவாமி மடமும் கட்டாயம் பார்க்க வேண்டிய இடங்களாகும். இங்குள்ள ஆன்மீக ஸ்தலங்களில் ஒன்றாக துல்ஜா பவானி தெய்வத்துக்கு உருவாக்கப்பட்டுள்ள துல்ஜாபூர் விளங்குகிறது.

Mohan3012

இயற்கையும் உயிரினங்களும்

இயற்கையும் உயிரினங்களும்

இங்குள்ள மோதிபாக் நீர்த்தேக்கம் பலவித பறவைகள் வாழும் சரணாலயமாக திகழ்கிறது. குளிர்காலத்தில் பல பிரதேசங்களிலிருந்தும் பறவைகள் இங்கு வருகை தருகின்றன. இந்த நீர்த்தேக்கத்தை ஒட்டி ரேவணசித்தேஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. மேலும் இந்த ஏரியின் அருகில் உள்ள நன்னஜ் எனும் இடத்தில் அமைந்துள்ள காட்டு மயில்(கான மயில்) சரணாலயம் காட்டுயுர் ஆர்வலர்களுக்கு மிகவும் பிடித்தமான இடமாகும்.

Madhukar B V

 எப்போது செல்லலாம்

எப்போது செல்லலாம்

மழைக்காலத்தில் வெப்பம் தணிந்து நகரமும் கழுவி விட்டாற்போன்று காட்சியளிப்பதால் அக்காலத்தில் சோலாப்பூருக்கு வரலாம். குளிர்காலமான ஜனவரி மாதத்தில் இங்கு சீதோஷ்ண நிலை 90C ஆக காணப்படுகிறது. அம்மாதத்தில் இங்குள்ள சுற்றுலா ஸ்தலங்களை சுற்றுப்பார்க்கவும் புனித யாத்ரீக ஸ்தலங்களை தரிசிக்கவும் மிகவும் வசதியாக இருக்கும். போக்குவரத்துக்கு மிகவும் வசதியாக சோலாப்பூர் நகரம் ஹைதராபாதிலிருந்து மும்பை செல்லும் நெடுஞ்சாலை மற்றும் ரயில் பாதையின் வழியில் அமைந்துள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம் மற்றும் இந்தியாவின் பல முக்கிய நகரங்களுக்கு இந்த ரயில் நிலையத்திலிருந்து பல ரயில்கள் உள்ளன.


Dr. Pramod Patil

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X