Search
  • Follow NativePlanet
Share
» »தாம்பரம்-கோயம்புத்தூர் இடையே சிறப்பு ரயில் – சிதம்பரம், கும்பகோணம், திண்டுக்கல், பொள்ளாச்சி மக்களுக்கு குட் நி

தாம்பரம்-கோயம்புத்தூர் இடையே சிறப்பு ரயில் – சிதம்பரம், கும்பகோணம், திண்டுக்கல், பொள்ளாச்சி மக்களுக்கு குட் நி

ஆயுத பூஜை, தீபாவளி மற்றும் மற்ற பண்டிகைகளுக்காக சென்னையில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்கள் நோக்கி படையெடுக்கின்றனர். இதனால், ஏற்படும் கூடுதல் கூட்ட நெரிசலை சமாளிக்க தென்னக ரயில்வே ஒரு முடிவு எடுத்துள்ளது. அதன் முடிவாக சென்னையில் இருந்து தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது தாம்பரத்தில் இருந்து துவங்கி திண்டிவனம், சிதம்பரம், மயிலாடுதுறை, திண்டுக்கல், பழநி வழியாக இயங்கும் சிறப்பு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது!

சொந்த ஊர் நோக்கி படையெடுக்கும் மக்கள்

சென்னை தமிழக தலைநகராக நவீனமும், கலாச்சாரமும் நிறைந்த ஒரு பெருநகரமாக மட்டுமல்லாமல், வந்தாரை வாழ வைக்கும் சென்னையாக பல லட்ச மக்களுக்கு வாழ்வாதாரம் அளித்து வருகிறது. பொங்கல், தீபாவளி, ஆயுத பூஜை மற்றும் நீண்ட விடுமுறை நாட்களில் சென்னையில் தங்கி வேலை பார்க்கும் பல லட்ச மக்களும் தங்களின் சொந்த ஊர்கள் நோக்கி படையெடுக்கின்றனர். எவ்வளவு சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கினாலும் போதுமானதாக இருப்பது இல்லை. இருப்பினும், தென்னக ரயில்வே ஒரு சூப்பர் முடிவை எடுத்துள்ளது.

தாம்பரம்-கோயம்புத்தூர் இடையே சிறப்பு ரயில் இயக்கம்

எதிர் வரும் பூஜை, தீபாவளி மற்றும் பிற பண்டிகை காலங்களில் பயணிகளின் கூடுதல் கூட்டத்தை சமாளிக்கும் வகையில், தாம்பரம்-கோவை கோட்டத்தில் வாராந்திர சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த திருவிழா சிறப்பு ரயில்கள் அதிக தேவையை பூர்த்தி செய்ய கூடுதல் சேவைகளை வழங்கும். ஏற்கனவே சென்னையிலிருந்து நாகர்கோவில் மற்றும் சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு ஏற்கனவே சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது தாம்பரத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு சிறப்பு ரயில் அறிவிக்கப்பட்டுள்ளது.

southernrailwayannounced

தாம்பரத்தில் இருந்து கோவைக்கு வாரந்திர சிறப்பு ரயில்

ரயில் எண். 06184 தாம்பரத்தில் இருந்து மாலை 6 மணிக்கு கிளம்பும் தாம்பரம் - கோயம்புத்தூர் வாராந்திர சிறப்பு ரயில் புறப்பட்டு, மறுநாள் காலை 8.10 மணிக்கு கோவையை சென்றடையும். இந்த ரயில் அக்டோபர் மாதம் 11, 18, 25 தேதிகளிலும் மற்றும் நவம்பர் மாதம் 1, 8, 15, 22, 29 ஆகிய தேதிகளிலும் இயக்கப்படும்.

ஞாயிற்றுக்கிழமைகளில் கோவை to சென்னை

மறு மார்க்கமாக, ரயில் எண். 06185 கோவையில் இருந்து ஞாயிற்றுக்கிழமைகளில் 23:45 மணிக்குப் புறப்பட்டு மறுநாள் மதியம் 12:30 மணிக்கு தாம்பரம் வந்தடையும். இந்த ரயில் அக்டோபர் மாதம் 13, 20, 27 ஆகிய தேதிகளிலும், நவம்பர் மாதம் 3, 10, 17, 24 தேதிகளிலும், டிசம்பர் 1 ஆம் தேதியும் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குஷியில் தென் மாவட்ட பயணிகள்

இந்த ரயில் தாம்பரத்தில் இருந்து துவங்கி செல்ங்கல்பட்டு, திண்டிவனம், விழுப்புரம், பண்ருட்டி, கடலூர், சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழநி, உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் வழியாக செல்வதால் தென் மாவட்ட பயணிகள் இந்த சிறப்பு ரயில் இயக்கத்தை மிகவும் வரவேற்றுள்ளனர்.

Tambaram-Coimbatore till November

தாம்பரம்-கோயம்புத்தூர் சிறப்பு ரயிலில் டிக்கெட் முன்பதிவு

ஆன்லைன் முன்பதிவு:

1. இந்திய ரயில்வேயின் அதிகாரப்பூர்வ இணையதளமான IRCTCஐப் பார்வையிடவும்.

2. உங்களிடம் கணக்கு இல்லையென்றால் உள்நுழையவும் அல்லது உருவாக்கவும்.

3. பயண விவரங்களை (தாம்பரத்திலிருந்து கோயம்புத்தூர் வரை) தேடல் பட்டியில் விருப்பமான தேதிகளுடன் உள்ளிடவும் (சிறப்பு ரயில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயக்கப்படுகிறது).

4. ரயில் எண் 06184 (தாம்பரம்-கோவை) அல்லது 06185 (கோயம்புத்தூர்-தாம்பரம்) தேர்வு செய்து, உங்களுக்கு விருப்பமான வகுப்பைத் தேர்ந்தெடுக்கவும் (ஸ்லீப்பர், 3A, 2A, முதலியன).

5. பயணிகளின் விவரங்களை உள்ளிட்டு பணம் செலுத்துவதன் மூலம் முன்பதிவை முடிக்கவும்.

மொபைல் செயலி மூலம்:

1. Android மற்றும் iOS இல் மொபைலில் IRCTC Rail Connect பயன்பாட்டைப் பதிவிறக்கவும்.

2. இணையதளத்தில் முன்பதிவு செய்வது போன்றே அனைத்து தகவல்களை உள்ளிடவும். சிறப்பு ரயிலைத் தேடவும், உங்களுக்கு விருப்பமான வகுப்பைத் தேர்ந்தெடுத்து, டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும்.

ஆஃப்லைன் முன்பதிவு:

முன்பதிவு படிவத்தை பூர்த்தி செய்து பயண விவரங்களை வழங்குவதன் மூலம் எந்த ரயில் நிலையத்தின் முன்பதிவு கவுண்டரிலும் நீங்கள் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

திருவிழாக் காலங்களில் அதிக தேவை இருப்பதால் முன்கூட்டியே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்வதை உறுதி செய்யவும்.

More News

Read more about: indian railways news tamilnadu
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+