Search
  • Follow NativePlanet
Share
» »விடை தெரியா மர்மங்களை பெற்றிருக்கும் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாவ சுவாமி ஆலயம் பற்றிய அரிய தகவல்கள்!

விடை தெரியா மர்மங்களை பெற்றிருக்கும் திருவனந்தபுரம் ஸ்ரீ பத்மனாவ சுவாமி ஆலயம் பற்றிய அரிய தகவல்கள்!

By Balakarthik Balasubramanian

ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் தோற்றம் பண்டைக்கால நாட்களால் இழக்கப்படுகிறது. இங்கே எவற்றையும் நாம் துல்லியமாக கண்டுபிடிக்க முடிவதில்லை. இங்கே நாம் பார்க்கும் வரலாற்று ஆவணங்களும், ஆதாரங்களுமென எவற்றையும் நம்மால் தெரிந்துக்கொள்ளமுடியாமல் போக, இங்கே தெய்வங்களுக்கு நிறுவப்பட்ட அசல் சிலைகள் வரலாற்றை புரட்டி பார்க்க வைக்கிறது.

பிரம்ம புராணம், மத்ஸைய புராணம், வராஹ புராணம், பகவதா புராணம், மஹாபாரதம் என பல ஹிந்து வார்த்தைகள் ஆலயத்தின் வரலாற்றை கூறுகிறது. பகவத்கீதையின்படி...இந்த ஆலயத்துக்கு பலராமன் வந்ததாகவும் கடவுளுக்கு மரியாதை செலுத்தியதாகவும் தெரியவர...இங்கே காணும் சங்க கட்டிடக்கலையின் மூலமாக கி.மு.500 முதல் கி.பி 300 வரையிலான இடைப்பட்ட காலங்களில் இந்த ஆலயமானது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், கலியுகத்தின் 950ஆவது வருடம், இந்த சிலைகள் மீண்டும் நிறுவப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது.

கேரளா பாணியில் இந்த ஆலயம் அமைக்கப்பட, தமிழ் நாட்டில் காணப்படும் ஆலயங்களின் திராவிட கட்டிடக்கலையின் பாணிகளும் இங்கே காணப்படுகிறது. இந்த கோயிலின் கோபுரம் அல்லது முக்கிய நுழைவாயில் பதினாறாம் நூற்றாண்டில் கட்டப்பட்டதாகும்.

தெய்வத்தின் அசல் இடம் :

தெய்வத்தின் அசல் இடம் :

காசர்கோடில் உள்ள ஆனந்தபுரம் ஆலயம் தான் இந்த தெய்வத்தின் மூலஸ்தனமாகும். திருவனந்தபுரத்து இந்த ஆலயத்தின் பிரதியாக கன்னியாகுமரியின் ஆதிகேசவ பெருமாள் ஆலயம் காணப்படுகிறது.

இந்த தெய்வத்தினாலே திருவனந்தபுரத்து நகரம் இப்பெயர் பெற்றதாக தெரியவர, மலையாளத்தில் ‘ஆனந்த கடவுளின் நகரம்' என்ற விளக்கத்தையும் இது தருகிறது.
ஆனந்தஷயனம் கோலத்தில் விஷ்ணு பெருமான் முக்கிய தெய்வமாக காட்சியளிக்கிறார். அவர் இங்கே, யோக சாஸ்திர முறைப்படி...ஆதிசேஷன் என்னும் பாம்பு அல்லது ஆனந்தத்தின்மேல் உறங்குவதுபோல் காட்சியளிக்க... திருவாங்கூரின் அரச குடும்பத்தினரால், இந்த ஸ்ரீ பத்மநாபசுவாமி ஆலயமானது குடும்ப தெய்வமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

Sarathshenoy

இங்கே வருவதற்கு ஏற்ற நேரங்கள்:

இங்கே வருவதற்கு ஏற்ற நேரங்கள்:

கடலுக்கு அருகில் காட்சியளிக்கும் இந்த திருவனந்தபுரத்தை வருடத்தில் எப்பொழுது வேண்டுமென்றாலும் நாம் பார்க்க வரலாம். அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் கால நிலையானது அருமையாகவும், குளுமையாகவும் இருக்க, நாம் பார்க்க சிறந்த நேரமாக இந்த காலங்கள் அமைகிறது.

Official site

இணையான புராணம்:

இணையான புராணம்:


விஷ்ணு பெருமானின் மிகப்பெரும் பக்தராக வில்வமங்கலம் சாமியார் காணப்பட்டார். இவர் யாரென்றால், தனக்கு தரிசனம் தரவேண்டி கடவுளை சென்று பார்க்க...அவர் இந்த வில்வமங்கலம் சாமியார் கண்களுக்கு ஓர் நபராக காட்சியளித்தாராம். ஆம், அவர் பிரார்த்தனைக்கு இணங்க, விஷ்ணு பெருமான் ஒரு சிறிய பாலகனாக வடிவம் கொண்டு அவரை அடைந்திருக்கிறார். அந்த பாலகனுக்கு தனித்தன்மை மிக்க குணங்கள் காணப்பட, சாமியாரை அவன் குணாதிசயங்கள் ஈர்த்துவிட, தன்னுடனே தங்கிவிடுமாறு சாமியார் பாலகனை வேண்டிக்கொண்டார்.

அந்த பாலகனும் அவர் சொல்லுக்கு செவி சாய்த்தபோதிலும், ஒரு நிபந்தனையை அவன் விதிக்க அதற்கு சாமியாரும் கட்டுப்பட்டார். ஒருவேளை அவன் நிபந்தனையை சாமியார் நிறைவேற்ற தவறினால், அவரை விட்டு தான் சென்றுவிடுவதாகவும் கூறி, அந்த பாலகன் அவருடன் புறப்பட்டான். அந்த முனிவர் அவனை நன்றாக கவனித்துக்கொள்ள, அவனுடைய குழந்தை தனமான குறும்புகளையும் சகித்துக்கொண்டார்.

ஒரு நாள், வில்வமங்கலம் தனது பிரார்த்தனைகளை கடவுளுக்கு அளிக்க, அந்த பாலகன் பரிசுத்த சாலிகிராமை எடுத்துக்கொண்டு, கற்களை தன் வாயில் போட்டுக்கொண்டான். அவன் கடவுள் என்பதை அறியாத அந்த முனிவர் இச்செயலால் கடும்கோபத்துக்கு தன்னை ஆட்படுத்திக்கொள்ள, அந்த பாலகனை திட்டிவிட்டார்.

அவனின் நிபந்தனையை முனிவர் மீறிவிட, அவன் அந்த இடத்தை விட்டு உடனடியாக கிளம்பி சென்றான். அவன் ஆனந்தக்காட்டில் சென்று மறைந்துக்கொள்ள, அவன் செல்லும்பொழுது வார்த்தை ஒன்றையும் உரைத்திருந்தான். "நீ என்னை மீண்டும் பார்க்க வேண்டுமெனில், ஆனந்தகாட்டில் என்னை தேடிக்கண்டுபிடி" என முனிவரிடம் சொன்னப்பிறகே வீட்டை விட்டு புறப்பட்டான்.

அதன் பிறகே... அந்த பாலகன் தான் கடவுள் என்பதனை புரிந்துகொண்ட முனிவர், அவனை தேடி ஆனந்தகாட்டில் காணும் மரங்களை நோக்கி விரைந்தார். அங்கே அவன் தென்பட, பின் சட்டென ஒரு பெரிய ஐயப்ப மரத்தில் மறைந்து கொண்டான்.

அப்பொழுது, திடீரென அந்த மரமானது நிலத்தில் வீழ, ரோஜாவிலிருந்து மஹா விஷ்ணு தன் வடிவத்தில் மிகப்பெரிய உருவத்தில் காட்சியளித்தார்.

Rajeevvadakkedath

கடவுள் தன்னை தானே சுருக்கிக்கொண்டார்:

கடவுள் தன்னை தானே சுருக்கிக்கொண்டார்:


அவர் தெய்வீக வடிவத்தில் காட்சியளிக்க, அவருடைய சிரமானது, இப்பொழுது ஆலயம் இருக்கும் இடத்திலிருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் திருவல்லத்தில் இருக்க, கால்பகுதியோ ஆலயத்திலிருந்து 5 கிலோமீட்டர் தொலைவில் காணப்படும் திரிப்பப்பூரில் காணப்பட்டது. இத்தகைய பெரும் வடிவத்தில் அவர் காட்சியளிக்க, முனிவர், கடவுளின் வடிவத்தை சுருக்கிக்கொண்டு முறையான தரிசனத்தை தரவேண்டுமென அடிபணிந்து வேண்ட, அவர் அதற்கு சம்மதம் தெரிவித்து தன் சகல மேனியையும் சுருக்கிகொண்டு முனிவருக்கு காட்சியளித்ததாக வரலாறு கூறுகிறது.

ஆம், அவர் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட கடவுள், சுவாமியாரின் நீளத்தை விட மூன்று மடங்கு தன்னை சுருக்கிகொள்ள, இன்றும் மரத்தில் காணப்படும் தெய்வத்தின் வடிவமானது முழுவதுமாக அவர் கண்களுக்கு தெரிவதில்லை என்று சொல்லப்படுகிறது.

கடவுள் அந்த முனிவருக்கு தன்னை மூன்று பாகங்களாக பிரித்து தரிசனம் தர, முதலில் முகத்தை காண்பித்து, பின் தன் தொப்புள் கொண்ட இடையை இரண்டாவதாக காண்பித்து, மூன்றாவதாகவே கால் பகுதியை முனிவருக்கு காண்பித்ததாகவும் வரலாற்றின் மூலம் நமக்கு தெரிய வருகிறது. இன்றும், கடவுளை மூன்று கதவுகளின் வழியாக இத்தகைய நிலையில் தான் காட்டப்படுகிறதாம்.

Kamaljith K V

பத்மநாப தாசா:

பத்மநாப தாசா:

திருவாங்கூர் ராஜ வம்சத்தின் குடும்ப தெய்வமாக இந்த சிலையானது காணப்பட, அந்த குடும்பத்தின் அனைத்து ஆண் உறுப்பினர்களையும் பத்மநாப தாசா என்றழைக்கப்படுகிறது. அல்லது பத்மாநாப கடவுளின் ஊழியர்கள் என்றழைக்கப்படுகிறது. கி.பி.1750 ஆண்டு மார்த்தாண்ட வர்மனால், பத்மநாப தாசா என்ற பட்டம் தரப்பட்டது.

மார்த்தான்ட வர்மா, திருவாங்கூரின் ஒத்தகால் மண்டபத்தின் படிகளில் தன் மகுடத்தையும், வீரவாளையும் சமர்ப்பிக்க, அங்கேயே திருவங்கூரில் பத்மநாப சுவாமி நிறுவப்பட்டது என்றும் சொல்லப்படுகிறது. இறுதியாக அரசன், தன்னை தானே இறைவனிடம் சிரம் பணிய, ‘ஸ்ரீ பத்மநாப தாசா' என்னும் பெயர் வழங்கப்பட்டதாகவும் தெரிய வருகிறது.P. Shungoonny Menon

ஒத்தகால் மண்டபம்:

ஒத்தகால் மண்டபம்:


கடவுளின் தரிசனம் கிடைக்க, நாம் ஒரு கல்லின் உச்சியில் ஏறி அந்த செதுக்கப்பட்ட அழகிய அமைப்பை அடைய வேண்டும். இந்த மண்டபத்தின் வரையரையானது, 20 சதுர அடியில் 2.5 அடி இருக்க 1731 ஆம் ஆண்டு அர்ப்பணிக்கப்பட்ட தெய்வமானது இங்கே காணப்படுகிறது.
மற்ற ஆலயங்களை காட்டிலும், மரபுகளின் படி கடவுளின் முன்னால் யாரும் சிரம் பணிந்து இந்த மண்டபத்தில் வேண்டுவதில்லை என்றும், இதற்கு திருவங்கூரின் அரசர்களுக்கே அனுமதி என்றும் தெரிய வருகிறது.

மரபு ரீதியாக யார் ஒருவர் இந்த தெய்வத்தின் முன்னே தன் சிரம் தாழ்த்தி வேண்டுகிறாரோ, அவர் தனது உடமைகளை கடவுளுக்கு அர்ப்பணிக்கப்படுவதாய் நம்பப்படுகிறது. அரசன் ஏற்கனவே இத்தகைய காரியத்தை செய்து தன் உடமைகளை ஒப்படைத்ததால், அவர்களுக்கு மட்டுமே இந்த மண்டபத்தில் சிரம் தாழ்த்தி வேண்ட அனுமதிக்கப்படுகிறது.

Ashcoounter

Read more about: travel temple

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்

We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Nativeplanet sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Nativeplanet website. However, you can change your cookie settings at any time. Learn more