Search
  • Follow NativePlanet
Share
» »சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?

சூரிய சுற்றுலாவா? இது என்ன புதிய சுற்றுலாவா இருக்கே – இதை பார்க்க எங்கு செல்வது?

குளிர் காலத்தில் தான் சுற்றுலா செல்ல வேண்டும் என்று ஒன்று நம் நாட்டில் ஒரு எண்ணம் இருக்கிறது அல்லவா. குளிர் காலம் தான் நம் நாட்டில் "பீக் சீசன்" (Peak Season) - சுற்றுலா செல்வதற்கு ஏற்ற சீசன். அக்டோபர் முதல் பிப்ரவரி வரையிலான காலத்தில் இந்தியாவில் பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர். ஆனால் அது இப்போது ட்ரெண்ட் இல்லை, ட்ரெண்ட் மாறி வருகிறது. இப்போது புதிதாக "சூரிய சுற்றுலா" (Sun Tourism) என்று ஒன்று பிரபலமாகி வருகிறது. இந்த சுற்றுலாவை அனுபவிக்க நீங்கள் இந்தியாவில் எப்போதும் குளிராக இருக்கும் இமாச்சலப் பிரதேசத்திற்கு செல்ல வேண்டும். இதில் என்ன ஸ்பெஷல் இருக்கிறது என்று கீழே காண்போம்!

இமயமலை சாரலில் புதிதாக உருவெடுக்கும் சூரிய சுற்றுலா

இமயமலை சாரலில் புதிதாக உருவெடுக்கும் சூரிய சுற்றுலா

பல சுற்றுலாப் பயணிகள் கோடைக் காலத்தில் இந்தியாவின் பிரபலமான மலைப்பிரதேசங்களுக்கு செல்ல விரும்புகின்றனர். பல பார்வையாளர்கள் பனியை மட்டுமல்ல, வெயில் காலநிலையையும் விரும்புகிறார்கள். குளிர்காலத்தில் கூட சிறிது வெயில் இருந்தால் பனி மலைகளுக்கு நடுவே சூரியனைக் கண்டு ரசித்தால் நன்றாக இருக்கும் தானே! ஆனால் குளிர்காலத்தில் கூட வெயிலை அனுபவிக்க இந்தியாவின் இமயமலை சாரலில் உள்ள மாநிலங்களுக்கு நீங்கள் செல்ல வேண்டும். குறிப்பாக இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் ஆகிய இடங்களுக்கு செல்ல வேண்டும்.

இமாச்சலில் சூரிய சுற்றுலா

இமாச்சலில் சூரிய சுற்றுலா

இப்போது இமாச்சலில் தான் சூரிய சுற்றுலா பிரபலமாகி வருகிறது. பனி மூடிய மலைகள், கேபிள் கார் சவாரி, பனி சிகரங்களின் பிரமிக்க வைக்கும் காட்சிகள் மற்றும் பனிச்சறுக்கு எஸ்கேப்கள் ஆகியவை உங்களை இமாச்சல் நோக்கி கவர்ந்து இழுக்கின்றன தானே? ஆனால் ஹஇமாச்சல் தற்போது ஒரு புதிய போக்கைக் கண்டு வருகிறது, அதுதான் சூரிய சுற்றுலா. மணாலி, சம்பா, பாலம்பூர் மற்றும் தரம்ஷாலா ஆகிய இடங்களில் நீங்கள் சூரிய சுற்றுலா மேற்கொள்ளலாம்.

சூரிய சுற்றுலா என்றால் என்ன?

சூரிய சுற்றுலா என்றால் என்ன?

சமவெளியில் அடர்ந்த மூடுபனி மற்றும் குளிரில் இருந்து தப்பிக்க வேண்டுமானால், மலைகளுக்குச் சென்று, மெல்லிய வெயிலில் குளிக்கலாம். பனிமூட்டம் சூரியனைப் பார்க்கும் வட சமவெளிகளுடன் ஒப்பிடும்போது குளிர்காலத்தில் அதிக குளிர்ச்சியான நாட்களைப் பெறுவதால், இமாச்சலப் பிரதேசத்தில் 'சன் டூரிஸம்' வேகமாக வளர்ந்து வருகிறது. நீங்கள் குளிரையும் வெயிலையும் ஒரே நேரத்தில் அனுபவிக்கலாம். பனி போர்த்திய மலைகளின் மேல் நின்று கொண்டு, சூரியனின் சூட்டையும் உணரலாம்.

சூரிய சுற்றுலாவைக் காண இமாச்சலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

சூரிய சுற்றுலாவைக் காண இமாச்சலில் குவியும் சுற்றுலாப் பயணிகள்

குளிர்காலத்தில் மலைப்பாங்கான இடங்களுக்குச் செல்வது சிறந்ததாகத் தெரிகிறது அல்லவா? மூடுபனி, இருண்ட வானிலை, லேசான மழை மற்றும் கடுமையான குளிர் ஆகியவை சுற்றுலாப் பயணிகளை குளிர்காலத்தில் பயணிக்க வைக்கிறது. ஆனால் சூரிய ஒளி இல்லாமை, சூரிய ஒளி புகைப்படங்கள் மற்றும் சூடான வானிலை ஆகியவற்றை விரும்பும் பயணிகளுக்கு, குறிப்பாக கோடைக் காலத்தை விரும்புவோருக்கு இது சற்று ஏமாற்றமாக இருக்கும். அதோடு முழு நேரமும் குளிரிலும் நம்மால் வாடி வதங்க முடியாது தானே! அதனால்தான் இமாச்சலப் பிரதேசத்தில் சூரிய சுற்றுலா வேகமாக வளர்ந்து வருகிறது போல!

அழகிய இமாச்சலப் பிரதேசத்திற்கு ஒரு பயணத்தை நினைத்துப் பாருங்கள், உடனடியாக இப்போதே உங்களது பயணத்தைத் திட்டமிடுவீர்கள்!

இது ஒரு புறம் இருக்க, புவி வெப்பமடைவதால் தான் வெயில் இங்கு அதிகமாக இருக்கிறதோ என அப்பகுதி மக்களும், விஞ்ஞானிகளும் கவலை தெரிவித்து வருகின்றனர்!

Read more about: himachal pradesh
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X