» »நவக்கிரக தோஷம் போக்க விஷேச பரிகாரத்துக்கு சூரியனார் கோவிலுக்கு வாங்க!

நவக்கிரக தோஷம் போக்க விஷேச பரிகாரத்துக்கு சூரியனார் கோவிலுக்கு வாங்க!

Posted By: Udhaya

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து கிழக்கு திசையில் கும்பகோணம்-பூம்புகார் சாலையில் அமைந்துள்ளது இந்த சூரியனார் கோவில் .

வரலாறு

சில வருடங்களுக்கு முன்னர் இக்கோவிலில் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அதில் குறிப்பிட்டுள்ள கி.பி 1060 - 1118 ம் ஆண்டுகளில்தான் இந்த கோவில் கட்டப்பட்டிருக்கவேண்டும் என்று வரலாற்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். கோவிலில் கண்டெடுக்கப்பட்ட கல்வெட்டிலிருந்து பெறப்பட்ட ஆண்டுகளில் குலோத்துங்கச்சோழரின் ஆட்சி நடைபெற்றது என தெரிய வருகிறது.

கட்டிடக்கலை

இக்கோவில் கட்டிடக்கலைக்கு பெயர்பெற்றது. சோழர்களின் கட்டடக்கலை பற்றி சந்தேகமே கொள்ளவேண்டாம். அந்த அளவுக்கு நேர்த்தியான கட்டட திட்டங்களை இக்கால பொறியாளர்கள் கூட கண்டு வியக்கின்றனர்.

கும்பகோணம் - மயிலாடுதுறை சாலைக்கும் ஆடுதுறைக்கும் இடையே 2 கிமீ தூரம் உள்ளது. திருபனந்தாள் மற்றும் கீழ் அனைக்கட்டிலிருந்து நேரடி சாலை வசதி உள்ளது.

ராஜகோபுரம்

இக்கோயிலின் ராஜகோபுரம் சோழர்களுக்கே உரித்தான முறையில் சிறப்பாக கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் நான்கு பிரகாரங்களுடன் கூடிய சுற்று சுவருடன் நடுவே ராஜகோபுரத்துடன் எழும்பியுள்ளது. .

இறைவன் :

இறைவன் :

இக்கோயிலின் தலையாக கடவுளாக தல அதிபதியாக சூரியன் உள்ளார். நவக்கிரகங்களின் முதன்மை கடவுள் சூரியனை வழிபட்டால், சகல பாவங்களும் நீங்கி வாழ்வில் வெளிச்சம் பிறக்கும் என்பது நம்பிக்கை.

சிவப்பு நிறத் துணி அணிந்து தாமரை அல்லது எருக்கு மலரால் அபிஷேகம் செய்து வழிபட்டால் சூரியன் உங்கள் வாழ்வில் ஒளியேற்றுவார் என்கிறார்கள் பக்தர்கள்.

தோஷம் போக்க

தோஷம் போக்க

சூரிய திசை, சூரிய பார்வை, தோஷம் போக்க ஞாயிற்றுக்கிழமைகளில் இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர் பக்தர்கள்.

மேலும் காரியத்தடை விலகவும், நவக்கிரக தோஷம் போக்கவும் இக்கோயிலுக்கு வந்து வழிபடுகின்றனர்.

தலச் சிறப்பு

தலச் சிறப்பு

இக்கோயிலில் சூரியபகவான் இடப்புறத்தில் உஷா தேவியுடனும், வலப்புறம் பிரத்யுஷா தேவியுடனும் இரு கரங்களிலும் செந்தாமரை மலர் ஏந்தி மேற்கு நோக்கி நின்று அருள்பாலிக்கிறார்.

நடை திறக்கும் நேரம்

நடை திறக்கும் நேரம்

காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் நடை திறக்கப்படுகிறது.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

ஆடுதுறை இரயில் நிலையத்தில் இறங்கி அணைக்கரை செல்லும் பேருந்தில் ஏறி இக்கோவிலை அடையலாம். திருமங்கலக்குடி காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்றுத் தொலைவு நடந்து கோவிலை அடையலாம். இந்த கோவில் ஒன்பது நவக்கிரகக்கோயில்களில் முதன்மையானதாகும்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

தொடர்ந்து இணைந்திருங்கள். நேட்டிவ் பிளானட் தமிழ்

Read more about: travel, temple