Search
  • Follow NativePlanet
Share
» »உணவுப் பிரியர்களுக்கு ஏன் சென்னை பெஸ்ட் ஸபாட் ஆக உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது

உணவுப் பிரியர்களுக்கு ஏன் சென்னை பெஸ்ட் ஸபாட் ஆக உள்ளது என்று ஆய்வில் தெரியவந்துள்ளது

சென்னையை அடுத்துள்ள கூடுவாஞ்சேரி பஸ் நிலையத்திற்கு நேர் எதிரே உள்ள ஒரு சிறய கடையில் காலை 11 மணிக்கெல்லாம் கூட்டம் அலைமோதுகிறது. 11 மணிக்கு தொடங்கும் பிரியாணி விற்பனை, இரவு 11 ஆன பின்னரும் முடிந்த பாடில்லை. எங்கிருந்து தான் வருகிறார்கள்? யாருக்காகத் தான் வாங்குகிறார்கள்? வாங்கியவர்களே தான் மறு நாளும் வாங்குகிறார்களா? என்றெல்லாம் ஒன்றும் புரியவில்லை. ஆனால் நாள் முழுவதும் இங்கு கூட்டம் அலைமோதுகிறது. சுவை இல்லாமல் இவ்வளவு கூட்டம் இங்கு கூடுமா? நிச்சயம் இல்லை! கூடுவாஞ்சேரியில் பெஸ்ட் பிரியாணி இது தானாம்!

Chennai Food

பாஸ்மதி அரிசி, இறைச்சி மற்றும் மிகவும் குறைந்த அளவிலான மசாலாக்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது. அதிகப்படியான காரம் இல்லை, அதனால் குழந்தைகளும் மிகவும் விரும்பி சாப்பிடுகின்றனர். செய்ய தேவையான பொருட்கள் என்னவோ குறைவு தான், ஆனால் சுவையில் ஒரு குறையும் இல்லை. பிரியாணியே பிடிக்காதவர்கள் கூட இந்த பிரியாணியை மிச்சம் வைப்பது இல்லை என்று கூறுகிறார்கள். சென்னையில் இது போன்று பல்வேறு வகையான உணவு வகைகள் மிகவும் பிரபலமாக உள்ளன. இப்பொழுது சென்னையின் உணவு சர்வே என்ன சொல்கிறது என்று பார்ப்போம் வாருங்கள்.

சிங்கார சென்னை பல்வேறு சுற்றுலாத் தலங்களுக்கும், சுவாரஸ்யமான இடங்களுக்கும், தீம் பார்க்குகளுக்கும், ஷாப்பிங் மால்களுக்குமே மட்டுமே இடம் கொடுக்கிறது என்று நினைக்க வேண்டாம். சென்னையின் இந்த பல தரப்பட்ட இடங்களிலும் பல்வேறு வித விதமான, சுவையான, ருசியான உணவுப் பொருட்கள் கிடைக்கின்றன. ஏன் உலகில் உள்ள பெருவாரியான சமையலையும் கூட இங்கே நாம் ருசித்திடலாம். சைனீஸ், இத்தாலியன், பிஃரெஞ்சு, இங்க்லீஷ், வட இந்திய மற்றும் தென் இந்திய உணவு வகைகள் சென்னையில் கிடைக்கிறது. பல விதமான உணவு வகைகளுக்கு அடைக்கலம் கொடுப்பதால் தான் சென்னை உணவுப் பிரியர்களுக்கான தாயகம் என்று ஒரு சர்வே கூறி இருக்கிறது. அதனைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்கள் இதோ!

மாநிலத் தலைநகராக மட்டுமல்லாமல் உணவுத் தலைநகரமாக விளங்கும் சென்னை

மாநிலத் தலைநகராக மட்டுமல்லாமல் உணவுத் தலைநகரமாக விளங்கும் சென்னை

சென்னை பரப்பளவில் ஒரு சிறிய மாவட்டமாக இருக்கலாம், ஆனால் தமிழ்நாட்டின் தலைநகராக பொருளாதார ரீதியாகவும், வணிக ரீதியாகவும், மக்கள் தொகையிலும் முன்னணியில் இருக்கிறது. நீங்கள் ஒரு சாப்பாட்டு பிரியரா? பலவகையான உணவுகளையும் சுவைக்க வேண்டும் என்ற ஆசையா? அப்படியானால் நீங்கள் வர வேண்டிய இடம் சென்னை தான். சென்னையில் கம்மி விலையில் இருந்து மிகவும் காஸ்ட்லியான உணவு வகைகள் வரை எல்லாமும் இங்கே உண்டு. மிகவும் பிரபலமான ரோட்டுக் கடைகளும் உண்டு, அதற்கு ஈடு கட்ட முடியாத பெரிய ஹோட்டல்களும் இங்கே உண்டு.

உணவு சர்வே சென்னை

உணவு சர்வே சென்னை

மெட்ராஸ் பல்கலைக் கழகத்தை சார்ந்த டாக்டர் சார்லெட் கிறிஸ்டினா மேற்கொண்ட ஆய்வின் ஒரு பகுதியாக உணவைப் பற்றிய சர்வே எடுக்கப்பட்டது. இதற்கு பதிலளித்தவர்களில் 37.4% பேர் 26 முதல் 35 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் அதில் பெருவாரியானவர்கள் பெண்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும் பெரும்பாலானோர் ரூ. 15,000 முதல் ரூ. 30,000 மாத வருமானம் பெறுபவர்கள் ஆகும். பதிலளித்தவர்களில் 41.5% பேர் எப்போதாவது உணவகங்களுக்குச் செல்கிறார்கள் மற்றும் 26.7% பேர் மாதத்திற்கு ஒருமுறை சாப்பிடுகிறார்கள். பதிலளித்தவர்களில் கிட்டத்தட்ட 61% பேர் வருகையின் போது ரூ. 1000 க்கும் குறைவாகவும், 28.5% பேர் சுமார் ரூ. 1000 முதல் ரூ. 2000 வரை செலவிடுகின்றனர். தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மற்றும் கர்நாடகா உணவு வகைகளை அவர்கள் விரும்பி சாப்பிடுகின்றனர்.

சர்வே கூறுவது என்ன

சர்வே கூறுவது என்ன

மிகுதியான சுவை - சென்னையில் உள்ள உணவகங்களில் வழங்கப்படும் உணவு நன்றாகவோ அல்லது சிறப்பாகவோ இருப்பதாக பதிலளித்தவர்களில் பெரும்பாலோர் கருத்து தெரிவித்துள்ளனர்.

உணவின் அளவு - 42.5% பேர் அளவு போதுமானதாக இருப்பதாகவும், 30.8% பேர் உணவு மிகவும் அதிகமாக இருப்பதாகவும் கூறியுள்ளனர்.

தூய்மை - 84.4% பேர் சென்னையில் உள்ள உணவகங்கள் சுத்தமாகவும், நன்கு பராமரிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.

உணவு வகைகளின் விலை - 45.4% நுகர்வோர் மெனு தெளிவாக இருப்பதுடன், 40.8% பேர் உணவின் விலையும் மிகவும் நியாயமானதாக இருப்பதாகக் கருதுகின்றனர்.

உணவகங்களின் சூழல் - பதிலளித்தவர்களில் பெரும்பாலோர் சென்னையில் உள்ள உணவகங்களின் சூழல் நன்றாக இருப்பதாக மதிப்பிட்டாலும், குறைந்தபட்சம் நான்கில் ஒரு பகுதியினர் சுற்றுப்புறத்தைப் பொறுத்தவரை நடுநிலையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர்.

சர்வே கூறுவது என்ன

சர்வே கூறுவது என்ன

நட்பான ஊழியர்கள் - 41.6% பேர் உணவகங்களின் ஊழியர்கள் மிகவும் நட்பானவர்கள் என்றும், 40.4% நல்ல சிரித்த முகத்துடன் உபசரிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மகிழ்ச்சி - 63.1% பேர் சென்னையில் உள்ள உணவகங்களில் சாப்பிடுவதை விரும்புகிறார்கள் என்றும், 59.2% நுகர்வோர் உணவகத்தைப் பார்வையிடுவதன் மூலம் மகிழ்ச்சியைப் பெறுகின்றனர் மற்றும் 56.3% பேர் உணவகத்தின் சேவையில் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்றும் தெரிகிறது.

மீண்டும் செல்ல விருப்பம் - 50% க்கும் அதிகமான நுகர்வோர் சென்னையில் உள்ள உணவகங்களில் திருப்தி அடைந்தாலும், 23.95% பேர் திருப்தியின் அளவு குறித்து நடுநிலையான கருத்துக்களைக் கொண்டுள்ளனர். 64% பேர் தங்களுக்குப் பிடித்த உணவகங்களைத் தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பரிந்துரைக்கின்றனர். 59.2% பேர் உணவகங்களை மீண்டும் பார்வையிட விரும்புகிறார்கள்.

சென்னையின் மக்களின் அன்றாட வாழ்வில் உணவகங்களும், உணவு வகைகளும் எப்படி ஒரு இடத்தைப் பிடித்து இருக்கின்றது என்று பாருங்களேன்! நீங்கள் சென்னையில் சாப்பிட்ட உணவு வகைகளில் உங்களுக்கு மிகவும் பிடித்தது எது?

Read more about: chennai tamil nadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X