Search
  • Follow NativePlanet
Share
» »மகாபாரத வில்லனான துரியாதனை கோவில் கட்டி கும்பிடுவது ஏன்? அதிர்ச்சி கிராமங்கள்!!

மகாபாரத வில்லனான துரியாதனை கோவில் கட்டி கும்பிடுவது ஏன்? அதிர்ச்சி கிராமங்கள்!!

மகாபாரத வில்லனான துரியாதனை கோவில் கட்டி கும்பிடுவது ஏன்? அதிர்ச்சி கிராமங்கள்!!

இந்த உலகத்துல கெட்டவங்க, நல்லவங்கனு யாராவது இருக்காங்களானு கேட்டா நீங்க என்ன சொல்வீங்க. உங்க மனச பொறுத்து இன்னார் இன்னார் நல்லவங்க, இவங்களாம் கெட்டவங்கனு சொல்வீங்க.

மகாபாரதத்தில் வரும் துரியோதனன் கதாப்பாத்திரம் நல்லவரா கெட்டவரா என்றால், நிச்சயம் கெட்டவர் என்றுதானே நம்மனதில் படும். அப்படிபட்ட துரியோதனனுக்கு கோயில் கட்டி திருவிழா எடுக்கும் அதிர்ச்சி விழாக்களை கொண்டாடும் மக்களும் இந்தியாவில் இருக்கிறார்கள்.

இவர்கள் துரியோதனனை கொண்டாட காரணம் என்னவென்று கேட்டால், நீங்களே ஒரு நிமிடம் வாயை பிளந்துவிடுவீர்கள். வாருங்கள் அந்த காரணத்தைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

துரியோதனன்

துரியோதனன்


மண்ணாசையால் பாண்டவர்களை காட்டுக்கு அனுப்பி, துரௌபதியோட துகிலுரிச்ச துரியோதனனுக்கு கோயில் எங்கெல்லாம் இருக்கு தெரியுமா?

உத்தரகண்டிலும், கல்வி அறிவு நிறைந்த மாநிலமான கேரளாவிலும். என்ன கேரளாவிலா?

வட இந்தியாவில்

வட இந்தியாவில்


துரியோதன் மந்திர், உத்தர்காஷியின் சவுர் கிராமத்தில் அமைந்துள்ள ஒரு அழகிய கோயிலாகும். இக்கோயில் இந்துக்களின் காப்பியமான மஹாபாரதத்தில் வரும் பாத்திரமான துரியோதனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும்.

 கட்டுமான அமைப்பு

கட்டுமான அமைப்பு

இந்த கோயிலின் கட்டுமான அமைப்பு அந்த மாநிலத்தின் சிறப்பு கட்டுமான வடிவத்தை ஒத்திருக்கிறது.

 துரியோதன் கோயிலில் சிவவழிபாடு

துரியோதன் கோயிலில் சிவவழிபாடு

இந்த கோயிலில் மிகவும் ஆச்சர்யமான ஒன்று நிகழ்கிறது. கோயில் என்னவோ துரியோதனுக்குத்தான் ஆனால் இங்கு சிவனுக்குத்தான் வழிபாடு நடத்தப்படுகிறது.

உத்தர்கண்ட்டில் சரி கேரளாவில்

உத்தர்கண்ட்டில் சரி கேரளாவில்


தென்னிந்தியாவில் துரியோதன‌னுக்கு இருக்கும் ஒரே கோவில் : கேரளாவில், கொல்லம் அருகே இருக்கிறது. கோவிலின் பெயர், பொருவழி பெருவிருத்தி மலநாட‌ கோவில். ஒரு சிறிய குன்றின்மீது இந்தக் கோவில் வீற்றிருக்கிறது.

 புரியாத தகவல்கள்

புரியாத தகவல்கள்

துரியோதனனுக்கு கோயில் கட்டி வழிபட்டாலும், இந்தக் கோவிலில் கோபுரம் கிடையாது என்பது சற்று ஆச்சர்யத்தை அளிக்கிறது. அதிலும் கோயிலுக்கான எல்லா அம்சங்களையும் கொண்ட இந்த இடத்தில் ஏன் கோபுரம் வைக்கப்படவில்லை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

தனித்துவமான கோயில்

தனித்துவமான கோயில்


இந்தியாவின் தனித்துவமான கோவில்களில் இதுவும் ஒன்றாகவும். துரியோதனன் வழிபாடு கேரளாவில் இருப்பது அனைவருக்கும் சற்று ஆச்சர்யமளிக்கும் விசயமாகத்தான் இருக்கும்.

மகாபாரத்தில் துரியோதனன்

மகாபாரத்தில் துரியோதனன்

மகாபாரத்தில் துரியோதனன் ஒரு வித்தியாசமான கதாபாத்திரம். கர்ணனனுக்கும் துரியோதனனுக்கும் உள்ள நட்பைப் பற்றி படித்திருக்கிறோம், படங்களில் பார்த்திருக்கிறோம். ஆனால், அந்த குணம் பாண்டவர்கள் மீது வரவில்லை. குருஷேத்திரப் போர் முடியும் வரை, துரியோதனன் அவர்கள் மீது அளவு கடந்த குரோதம் கொண்டிருந்தான்.

துரியோதனனின் உடல் என்னவாயிற்று?

துரியோதனனின் உடல் என்னவாயிற்று?

துரியோதனனது உடல் மின்னலாலானது என்று நம்ப‌ப்படுகிறது; அதி பலசாலி. துச்சாதனனால் பெரிதும் மதிக்கப்பட்டான். துரோணரிடம் போர்ப்பயிற்சி பெற்றான். கதாயுத்தத்தில் வலிமை பெற பலராமரிடம் சீடனாக சேர்ந்து பயிற்சி பெற்று, அவருக்குப் பிரியமான சீடனாக இருந்தான். கதாயுதத்துடன் கூடிய துரியோதனன் பீமனுக்கு நிகராக இருந்தான்.

 பின்னணி கதை

பின்னணி கதை


இந்தக் கோவிலின் பின்னே ஒரு கதை இருக்கிறது: பாண்டவர்களைத் தேடி துரியோதனன் இங்கு வந்தபோது மிகவும் களைப்புற்று, ஒரு குருக்கள் வீட்டிற்குத் தண்ணீர் கேட்டுச் சென்றிருக்கிறான். தாகம் தணிந்த பிறகு, இந்த ஊருக்குகாக நிறைய நிலங்களை கொடுத்து உதவியிருக்கிறான். மேலும், இந்தக் கோவில் இருக்கும் குன்றின் மீது ஊருக்காக தியானம் செய்ததாக ஐதீகம் இருக்கிறது. இதன் காரணமாக துரியோதனனிற்கு இங்கு உரிய மரியாதை அளிக்கிறார்கள்.

 எப்போது செல்லலாம்?

எப்போது செல்லலாம்?

ஒவ்வொரு வருடமும், மார்ச்-ஏப்ரல் மாதத்தில் திருவிழாக்கள் நடைபெறுகிறது. இன்றும், துரியோதனன் பெயரலியே கோவில் நிர்வாகம் அரசுக்கு வரி செலுத்துகிறது.

எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?


குன்னத்தூர், கொல்லதிலிருந்து 40 கி.மீ. வாடகை கார் எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கோவிலுக்குச் செல்ல குறிப்பிட்ட காலம் என்று ஒன்று கிடையாது. வருடம் முழுவதும் உகந்த காலம்தான்.

More News

    Read more about: travel temple
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+