» »வசமாக சிக்கிய தினகரன் - ரெய்டின் போது எங்கு சென்றார் தெரியுமா?

வசமாக சிக்கிய தினகரன் - ரெய்டின் போது எங்கு சென்றார் தெரியுமா?

Posted By: Udhaya

வருமான வரித்துறை சோதனை நடைபெற்றுவரும் வேளையில், திடீரென கண்களை தப்பிக்கொண்டு தினகரன் தன் குடும்பத்துடன் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள ஒரு கோயிலுக்கு சென்றுவந்துள்ளார். அந்த கோயில் மிகவும் சக்திவாய்ந்த கோயில் ஆகும். அது பற்றி விரிவாக பார்க்கலாம்,

கோயில்

கோயில்


சக்தியின் வடிவமாக கருதப்படும், பெண் தெய்வமாக நம்பப்படும் பிரத்தியங்கிரா தேவி என்பதே அந்த கடவுளின் பெயர். அவருக்கு விழுப்புரம் மாவட்டத்தில் கோயில் அமைந்துள்ளது.

Unknown

எங்குள்ளது

எங்குள்ளது


விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே செம்மேடு எனும் கிராமத்தில் உள்ளது பிரத்யங்கிரா தேவி கோயில்.அந்த பகுதியில் மிகவும் பிரபலமான இந்த கோயிலில் நேர்ச்சை வைத்து வணங்கினால், நிச்சயமாக அப்படியே பலிக்குமாம்.

பலவித வடிவங்கள்

பலவித வடிவங்கள்


இந்து தொன்மவியலின் படி பிரத்தியங்கரா விஷ்ணு, காளி, துர்க்கை ஆகியோரின் வடிவமாகவும் கருதப்படுகிறார். இப்பிரத்யங்கரா நான்கு சிங்கங்கள் பூட்டிய ரதத்தில் சிம்ம முகத்தோடும் எட்டு கைகளோடும், மிகக் கோபமான பார்வையோடும், உக்கிரமான வேகத்தோடும் காணப்படுகிறார்.

மிளகாய் யாகம்

மிளகாய் யாகம்


பிரத்யங்கிரா தேவிக்கு உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு, கடுமையான யாகம் நடத்தப்படும். அதில் ஒன்றுதான் மிளகாய் யாகம்.

தேவியின் வடிவம்

தேவியின் வடிவம்


இந்த கோயிலில் சிங்க முகம், 18 கைகளுடன், கறுப்பு நிறத்துடன் சூலம், பாசம் ஆயுதங்களை ஏந்திவாறு இருக்கிறார் தேவி.

Wayoyo

 சரபரின் மனைவி

சரபரின் மனைவி

பிரத்தியங்கிரா தேவி சரபரின் மனைவியருள் ஒருவராவார். சரபரின் நெற்றியில் இருந்து தோன்றியதாகவும் பிரத்தியங்கிரா தேவியை குறிப்பிடுவர்.

Wayoyo

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?

திண்டிவனத்திலிருந்து மேற்கு திசையில் செஞ்சி நோக்கி 1 மணி நேரத்தொலைவில் அமைந்துள்ளது இந்த கோயில். விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே செம்மேடு கிராமத்தில் உள்ளது இந்த கோயில்.

 அருள்மிகு பிரத்யங்கிரா தேவி திருக்கோவில்

அருள்மிகு பிரத்யங்கிரா தேவி திருக்கோவில்

செஞ்சி கோயில் மட்டுமல்ல, தமிழகத்தில் வேறு சில கோயில்களும் பிரத்யங்கிரா தேவிக்கு அமைக்கப்பட்டுள்ளது. அதில் முக்கியமானது, கும்பகோணம் வட்டத்தில் அமைந்துள்ள அய்யாவாடி பிரத்யங்கிரா தேவி கோயில்.

 வழித்தடம்

வழித்தடம்

கும்பகோணத்திலிருந்தும், திருநாகேஸ்வரத்திலிருந்தும் எளிதில் செல்லும் வகையில் அமைந்துள்ளது.

ஐவர்பாடி

ஐவர்பாடி

பஞ்சபாண்டவர்கள் ஐவரும் வந்து வழிபாடு செய்ததாகவும், இதனால் இந்த இடம் ஐவர்பாடி என்று அழைக்கப்படுவதாகவும் நம்பிக்கை. அமாவாசைதோறும் இங்கு சிறப்பு யாகம் நடைபெறும். அதில் கலந்துகொண்டால், பகை அகன்று, நினைத்து நடக்கும் என்றும் நம்பிக்கை உள்ளது.

பிரத்தியங்கிரா தேவி கோயில், ஒசூர்

பிரத்தியங்கிரா தேவி கோயில், ஒசூர்

ஒசூரில் இரண்டாவது சிப்காட் அருகே மோரனப்பள்ளி என்ற பகுதியில் அமைந்துள்ள ஒரு கோயில் இதுவாகும். இக்கோயிலின் முதன்மை கோபுரத்தில் பிரம்மாண்டமான பிரத்தியங்கரா தேவியின் சிலை அமைக்கப்பட்டுள்ளது

Wayoyo

சுற்றுலா மற்றும் ஆன்மீக அம்சங்கள்

சுற்றுலா மற்றும் ஆன்மீக அம்சங்கள்

இக்கோயிலுக்கு வார இறுதியிலும், வார நாட்களிலும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பக்தர்கள் பலர் வருகின்றனர். இக்கோயிலில் பிரத்தியங்கிரா தேவி , சரபேசுவரர், நரசிம்மர், மாரியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு சந்நிதிகள் அமைந்துள்ளன.

Read more about: travel temple villupuram hosur

இப்போதே பெறுங்கள் சிறந்த சலுகைகளைப் பயணங்களிலும், பயண டிப்ஸ்களும், பயணக் கதைகளும் உடனுக்குடன்