Search
  • Follow NativePlanet
Share
» »குடும்பத்தில் சண்டையா? கடன் தொல்லையா? உடனே தீர்க்கும் தலங்கள்! இப்போதே செல்லுங்கள்!

குடும்பத்தில் சண்டையா? கடன் தொல்லையா? உடனே தீர்க்கும் தலங்கள்! இப்போதே செல்லுங்கள்!

குடும்பத்தில் சண்டையா? கடன் தொல்லையா? உடனே தீர்க்கும் தலங்கள்! இப்போதே செல்லுங்கள்!

By Udhaya

ஜாதகம், தோஷங்களில் நம்பிக்கை இருப்பவர்களுக்கு ஒரு விசயம் எப்போதும் உறுத்திக்கொண்டே இருக்கும். அதாவது, ஜாதகத்தில் நல்ல காலம் போட்டிருக்கிறதே ஆனால் நிகழ்காலம் அப்படி இருக்கவில்லையே என்பதுதான் அது. அப்படி கருதுபவர்களில், பலருக்கு கடன் தொல்லை, சச்சரவுகளால், வீட்டில் சண்டை என குடும்ப உறவுகள் கலங்கப்படும் வகையில் இருக்கும். சில சமயங்களில் பேசித் தீர்க்கவேண்டிய விசயங்களைக் கூட சண்டையில் கொண்டுவந்து, ஆத்திரத்தில் நடக்கக்கூடாது நடந்துவிடும் அளவுக்கு போய்விடும். நாக தோஷம் இதையெல்லாம் செய்யுமா என்றால், அதற்கு இன்னும் பல காரணங்களும் இருக்கின்றன என்கிறார்கள் ஜோதிடர்கள். இதற்கு பரிகாரமாக அவர்கள் கூறுவது இந்த ஐந்து திருத்தலங்கள்தான்.

நாக தோஷம் நீக்கும் பரிகாரத் தலங்கள்! இன்றே செல்லுங்கள்!நாக தோஷம் நீக்கும் பரிகாரத் தலங்கள்! இன்றே செல்லுங்கள்!

இந்த திருத்தலங்களுக்கு நீங்கள் சென்று வந்தால், குடும்பத்தில் சச்சரவு நீங்கி, நல்ல காலம் பிறக்கும் என்கிறார்கள் அவர்கள். சரி அந்த தலங்கள் எவையென்று பார்க்கலாமா?

திருவேற்காடு

திருவேற்காடு

திருவேற்காட்டில் குடிகொண்டிருக்கும் தேவி கருமாரியம்மன் இரண்டு வடிவம் கொண்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

நாகப்பாம்பாகவும், சுயம்பாகி அம்பிகையாகவும் காட்சிதருகிறாள். கருமாரியம்மன் கோயில் அருகே ஒரு கருநாகப்புற்று உள்ளது. இங்கு பக்தர்கள் பாலூற்றி வழிபடுகின்றனர். அப்படி செய்தால் நாக தோஷம் நீங்குவதுடன், வீட்டில் சுப காரியங்கள் நடக்கும் என்றும் நம்பிக்கை உள்ளது. மேலும் பிரச்சனைகளால் சூழப்பட்ட குடும்பம், சிக்கல்களிலிருந்து விலகி நல்ல நிலையை அடைய இந்த கோயிலுக்கு வருகை தந்தால் போதும் என்கிறார்கள் இந்த பக்தர்கள்.

Official site

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அஷ்ட லட்சுமி கோயில், மெரினா பீச், மாங்காட்டு காமாட்சி கோயில், கிஷ்கிந்தா, காளிகாம்பாள் கோயில், கபாலிசுவரர் கோயில், ராமகிருஷ்ணா மடம், தக்சனசித்ரா, பெசன்ட் நகர் கடற்கரை, பார்த்தசாரதி கோயில், பிர்லா கோளரங்கம், ஜகன்னாதர் கோயில், மால்கள், சாந்தோம் தேவாலயம், வடபழனி முருகன் கோயில், நவகிரககோயில்கள் என எக்கச்சக்க இடங்கள் இங்கு காணப்படுகின்றன.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

சென்னை பூவிருந்தவல்லி தேசிய நெடுஞ்சாலையில், வேலப்பன் சாவடி என்ற இடத்திற்கு அருகே திருவேற்காடு அமைந்துள்ளது. இது தமிழகமெங்கும் புகழ்பெற்று விளங்கும் ஊர்.

தென்பிராந்திய ரயில்வேயின் முக்கிய நிலையமாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் திகழ்கிறது. இது தவிர எக்மோர் ரயில் நிலையம் எனும் பழமையான ரயில் நிலையம் ஒன்று சென்னையில் உள்ளது. சமீப காலமாக புறநகர்ப்பகுதியில் உள்ள தாம்பரம் ரயில் நிலையமும் மற்றொரு ரயில் நிலையமாக இயங்கி வருகிறது. சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகிலேயே தென்னக ரயில்வேயின் பிராந்திய அலுவலகமும் அமைந்துள்ளது.

ரயில் விவரங்களுக்கு சொடுக்கவும்

சென்னை விமான நிலைய வளாகம் தென்னிந்தியாவிலேயே மிக முக்கியமான விமானப்போக்குவரத்து கேந்திரமாக அமைந்துள்ளது. இதில் அண்ணா சர்வதேச விமானச்சேவை வளாகம் மற்றும் காமராஜ் உள்நாட்டு விமானச்சேவை வளாகம் என்று இரண்டு பிரத்யேக பிரிவுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. பல்வேறு வெளிநாட்டு நகரங்களுக்கும் இங்கிருந்து விமான சேவைகள் உள்ளன. இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் உள்நாட்டு சேவைகள் இயக்கப்படுகின்றன. சமீபத்தில் முற்றிலும் புதிய வடிவமைப்புடன் சர்வதேசத்தரத்துடன் சென்னை விமான நிலையம் வளாகம் புதுப்பிக்கப்பட்டிருக்கிறது.

விமானம் புக் செய்ய சொடுக்கவும்

கீழ்ப்பெரும்பள்ளம்

கீழ்ப்பெரும்பள்ளம்

ராஜகோபுரம் அற்ற ஒரு கோயில் இது. கோயிலின் முன்பு நாகத் தீர்த்தம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் ஒரு பக்கத்தில் அரசும். மற்ற பக்கத்தில் வேம்பும் அமைந்துள்ளது. இந்த கோயில் கிழக்குமுகமாக அமைந்துள்ளது.

நாக தோஷம் இருப்பவர்கள் இந்த மரத்தின் அடியில் நாகப் பிரதிஷ்டை செய்யலாம். வலது புறமாக விநாயகர், வள்ளி தெய்வானையுடன் முருகர், துர்க்கை, லட்சுமி நாராயணர் உள்ளிட்ட பல தெய்வங்கள் இங்கு காணப்படுகின்றன.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்


மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, திருவரங்கம், கொள்ளிடம், திருவானைக்காவல், ஆலங்குடி, திருச்சி, காரைக்குடி, மகாபலிபுரம், வேடந்தாங்கல், திருவெண்காடு நாகூர் உள்ளிட்ட பல இடங்கள் இங்கிருந்து செல்ல ஏதுவானதாக அமைந்துள்ளன.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

நாகை மாவட்டத்தின் தரங்கம்பாடி அருகே கீழ்ப்பெரும்பள்ளம் எனும் ஊர் அமைந்துள்ளது. நாகப்பட்டினத்திலிருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக சென்னை செல்லும்போது, காரைக்கால், தரங்கம்பாடியைத் தாண்டியதும் இந்த ஊர் வருகிறது.

நாகப்பட்டினத்திலிருந்து 62கிமீ தூரத்தில் அமைந்துள்ளது.. மேலும் இது 2 மணி நேர பயணமாகும்.

திருப்பாம்புரம்

திருப்பாம்புரம்


திருப்பாம்புரம் மட்டும் வந்தால் போதும், குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழ்ப்பெரும்பள்ளம் உள்ளிட்ட எல்லா நாக தலங்களையும் தரிசித்த பலன் கிடைக்கும்.

சிவராத்திரி அன்று ஆதிஷேஷன் வழிபட்ட நான்கு தளங்களுள் இதுவும் ஒன்றாக நம்பப்படுகிறது. இந்த தலத்துக்கு வந்து தீர்த்த நீராடிச் சென்றால் குடும்ப சச்சரவுகள் நீங்கிவிடும் என்கிறார்கள் பக்தர்கள்.

Aravind Sivaraj

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகில் கும்பகோணம் எனும் கோயில் நகரம் அமைந்துள்ளது. இங்கு கும்பேஸ்வரர் ஆலயம், கம்பகரேஸ்வரர் ஆலயம், ராமாசுவாமி ஆலயம், சாரங்கபாணி ஆலயம், வெங்கடாசலபதி, உப்பிலியப்பன், பட்டிஸ்வரம் துர்க்கையம்மன், சோமேஸ்வரர் ஆலயம் என எக்கச்சக்க ஆலயங்கள் அமைந்துள்ளன.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

கும்பகோணத்திலிருந்து வெறும் 30கிமீ தூரத்தில் அமைந்து்ள்ளது இந்த இடம்.. 50 நிமிடங்களில் அடையும் அளவுக்கு துரிதமான சாலை வசதிகளும் அமைந்துள்ளன.

திருநாகேஸ்வரம்

திருநாகேஸ்வரம்

நாகேஸ்வரம் கோயில் அளவில் பெரியது. இது நான்கு புறங்களிலும் கோபுரங்களைக் கொண்டது. மண்டபங்களும், கற்தூண்களும், அரிய சிற்பங்கலும் நிறைந்தது. அவை நம்மை கலைப்பார்வைக்குள் இட்டு செல்லும்.

நாகநாதமூர்த்தி, சண்முகநாத பெருமான் நுதல் அம்மையார் என நிறையசன்னிதிகள் இங்கு காணப்படுகின்றன.

இந்த கோயிலின் சிறப்பாக, அர்த்தநாரீஸ்வரர் உக்கார்ந்த கோலத்தில் காட்சிதருகிறார்.

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

ஒன்பது நவக்கிரக தலங்களில் ஒன்றான திருநாகேஸ்வரத்தை சுற்றிலும் மீதமுள்ள எட்டு நவக்கிரகத்தலங்களும் அமைந்துள்ளன. திருநள்ளாறு( சனிபகவான்), கஞ்சனூர்( சுக்கிரன்), சூரியனார் கோவில்( சூரியன்), திருவெண்காடு(புதன்), திங்களூர்( சந்திரன்), கீழப்பெரும்பள்ளம்( கேது), ஆலங்குடி( குருபகவான்), வைத்தீஸ்வரன்கோவில்(செவ்வாய்) ஆகிய ஊர்கள் திருநாகேஸ்வரத்திலிருந்து வெகு அருகாமையிலேயே அமையப்பெற்றிருக்கின்றன.

Official site

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

கும்பகோணத்துக்கு கிழக்கே காரைக்கால் செல்லும் வழியில் சுமார் ஆறேழு கிமீ தூரம் சென்றால் திருநாகேஸ்வரத்தை அடையலாம்.

காளஹஸ்தி

காளஹஸ்தி

காளத்தி வேடனாகிய காளப்பன் முக்தி பெற்ற இடமாக கருதப்படும் இந்த இடம், புனித தலமாக பார்க்கப்படுகிறது. காலத்திநாதர் நாக வடிவில் காட்சிதருகிறார். இங்கு பரிகாரமந்திரம் தமிழில் சொல்லப்படுகிறது.

ராகு கேது சாந்திநிலையம் என்ற பெயர் கொண்ட மண்டபத்தில் இந்த பூசை செய்யப்படுகிறது. இங்கு ஒரு பாதாள விநாயகர் கோயில் உள்ளது இது புற்றின் தலைப் போல காட்சியளிக்கும்.

రవిచంద్ర

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்


கண்ணப்பர் கோயில், துர்கா கோயில், சுப்பிரமணியர் கோயில், சக்கரேசுவரர் கோயில், துர்காம்பிகா கோயில், பிரசன்ன வரதராஜ சுவாமி கோயில் என நிறைய கோயில்கள் இங்கு அமைந்துள்ளன.

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

சென்னையிலிருந்து திருப்பதி செல்லும் சாலையில் அமைந்துள்ளது காளஹஸ்தி கோயில்.

ஆந்திர மாநில அரசுப்போக்குவரத்துக்கழகம் எல்லா முக்கிய நகரங்கள், சிறு நகரங்கள் மற்றும் முக்கிய கிராமங்களிலிருந்து காளஹஸ்திக்கு நல்ல முறையில் பேருந்துகளை இயக்குகிறது. சென்னை, திருப்பதி, பெங்களூர், ஹைதராபாத், நெல்லூர் மற்றும் விஜயவாடா போன்ற நகரங்களிலிருந்து காளஹஸ்திக்கு அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. தனியார் பேருந்துகளும் முக்கிய நகரங்களிலிருந்து காளஹஸ்திக்கு அதிக அளவில் இயக்கப்பட்டாலும் அரசுப்பேருந்துகளோடு ஒப்பிடும்போது இவற்றில் கட்டணம் கூடுதல் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ரயில் மற்றும் விமான வழி செல்ல இதைக் கிளிக் செய்யவும்

Read more about: travel temple tamilnadu
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X