» »அறிவியல் உலகையே அதிர்ச்சியடையச் செய்த அபூர்வ கோயில்கள் பற்றி தெரியுமா?

அறிவியல் உலகையே அதிர்ச்சியடையச் செய்த அபூர்வ கோயில்கள் பற்றி தெரியுமா?

Written By: Udhaya

இந்தியா ஒரு ஆன்மீக நாடு. பல்வேறு மத இன மொழி மக்கள் வாழும் நாடு. இங்கு சுற்றுலா என்பது அவ்வளவு எளிதானது அல்ல. ஏனெனில் வரலாறு தொடர்பானவைகள் அனைத்துமே ஆன்மீகத்துடன் பின்னிப்பிணைந்து காணப்படுகிறது. அது அந்த குறிப்பிட்ட இடத்தை எந்த மதத்துடன் சேர்ப்பது, யாரால் உருவாக்கப்பட்ட இடம் அது என்று புரிந்துகொள்ளமுடியாததாக்கி விடுகிறது.

அப்படிப்பட்ட அறிவியல் உலகையே அதிர்ச்சியடையச் செய்த அற்புத கோயில்களுக்கு ஒரு பயணம் செல்வோம்.

 உலகிலேயே பெரிய கோபுரம்

உலகிலேயே பெரிய கோபுரம்


கர்ப்பகிரகத்துக்கு மேல் உலகின் எந்த இடத்திலும் இல்லாத அளவுக்கு 216 அடி உயரத்தில் கோபுரம் அமைக்கப்பட்டுள்ள ஒரே கோயில் இது.

உருவமற்ற கடவுளின் குறியீட்டை உணர்த்தும் வகையில் 13 அடி உயர பெரிய சிவலிங்கம் கொண்ட கோயில்

கர்ப்பகிரகத்துக்கு நேராக 12அடி உயர 12டன் எடைகொண்ட மிகப் பெரிய நந்தி கொண்ட கோயில்.

கோபுரத்தின் உச்சியில் 81டன் எடை கொண்ட கல் மற்றும் வட்டவடிவ சிகரம் கொண்ட ஒரே கோயில்..

Robert Helvie

 9 மைல் தூரத்துக்கு சாரம்

9 மைல் தூரத்துக்கு சாரம்


ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஓவியங்கள் இன்றும் சிறப்பாக காட்சியளிக்கும் ஒரே கோயில் உலகத்திலேயே இது மட்டும்தான்.

முழுக்க முழுக்க கருங்கற்களால் கட்டப்பட்ட கோயில் இதுவாகும்.

குறைந்தபட்சம் 85 கல்வெட்டுக்களும், அவற்றில் இந்த கோயிலைக் கட்ட உதவிய ஒவ்வொருவரின் பெயரும் பதிக்கப்பட்டுள்ளது.

கோயில் கட்ட 9 மைல் தூரத்துக்கு சாரம் கட்டியுள்ளதாக தெரிகிறது.

இத்தனை தகவலிலும் நீங்கள் இந்த கோயிலைக் கண்டுபிடிக்கவில்லை என்றாலும், இந்த ஒரு பெயர் போதும் இது எந்த கோயில் என்று கண்டுபிடிக்க.

ராஜராஜசோழன்.

Vijay Ramanathan.G

தஞ்சை பெரிய கோயில்

தஞ்சை பெரிய கோயில்

தஞ்சை எனப்படும் தஞ்சாவூரின் அடையாளமாக வீற்றிருக்கும் இந்த பிரகதீஸ்வரர் கோயில் அல்லது பெருவுடையார் கோயிலின் ஆதிப்பெயர் ‘ராஜராஜுச்சுரம்' என்பதாகும். பழந்தமிழ் பேரரசாக விளங்கிய சோழ சாம்ராஜ்ஜியத்தின் ஒரே வரலாற்றுச்சான்றாக இந்த மஹோன்னத ஆலயம் தமிழ்நாட்டில் தஞ்சாவூர் நகரில் வீற்றிருக்கிறது. வேறெந்த சோழர் கால கோட்டைகளோ அரண்மனைகளோ நகர இடிபாடுகளோ காலத்தின் ஊடே நமக்கு மிஞ்சவில்லை. எதிரியும் மயங்கும் உன்னத கலையம்சத்தை கொண்டிருப்பதால் இந்த பிரம்மாண்டம் காலத்தே நீடித்து இன்றும் சுயபிரகாசத்தோடு ‘தட்சிண மேரு' எனும் கம்பீரப்பெயருடன் வீற்றிருக்கிறது.

Nandhinikandhasamy

அருகில் காணவேண்டிய சுற்றுலாத் தளங்கள்

அருகில் காணவேண்டிய சுற்றுலாத் தளங்கள்

ஷ்வார்ட்ஸ் தேவாலயம், முருகன் கோயில், மனோரா கோட்டை, தஞ்சாவூர் கலைக்கூடம், புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில், பிரகதீஸ்வரர் கோயில், சரஸ்வதி மஹால் நூலகம், சங்கீத மஹால், விஜயநகர கோட்டை என்பன தஞ்சாவூரில் கட்டாயம் காணவேண்டிய இடமாகும்.

Emayabharathi

பயண வழிகள்

பயண வழிகள்


சாலை வழியாக

தமிழ்நாட்டின் மற்ற நகரங்களுடன் தஞ்சாவூர் நல்ல முறையில் இணைக்கப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும் தஞ்சாவூர் நகருக்கு மாநில அரசுப்போக்குவரத்துக்கழக பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவை தவிர சென்னையிலிருந்து சொகுசுப்பேருந்து சேவைகளும் கிடைக்கின்றன. திருச்சி, மதுரை, சேலம், கோயமுத்தூர், பாண்டிச்சேரி போன்ற தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களிலிருந்து மிக எளிதாக பேருந்துகள் மூலம் தஞ்சாவூர் நகருக்கு வரலாம்

ரயில் வழியாக

தஞ்சாவூரில் உள்ள ரயில் நிலையத்தின் வழியாக பல ரயில்கள் செல்வதோடு மட்டுமல்லாமல் இங்கிருந்து 58 கி.மீ தூரத்திலுள்ள திருச்சி ரயில் சந்திப்பிலிருந்து நாட்டின் பல நகரங்களுக்கும் ரயில் சேவைகள் உள்ளன. மதுரை மற்றும் திருவனந்தபுரம் செல்லும் ரயில்கள் என அதிகமான சேவைகள் திருச்சி ரயில் நிலையம் வழியாக இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

ரயில்கள் பற்றிய தகவல்களுக்கு சொடுக்குங்கள்

விமானம் வழியாக

தஞ்சாவூருக்கு அருகில் திருச்சி விமான நிலையம் 61 கி.மீ தூரத்தில் மிக முக்கியமான விமானப்போக்குவரத்து கேந்திரமாக அமைந்துள்ளது. இங்கிருந்து 1000 ரூபாய் வாடகையில் டாக்சி மூலம் தஞ்சாவூருக்கு வரலாம். இது தவிர 322 கி.மீ தூரத்தில் சென்னை விமானநிலையமும், 433 கி.மீ தூரத்தில் பெங்களூர் விமான நிலையமும் உள்ளன.

விமானங்கள் புக் செய்ய

சிவன், விஷ்ணு, வீரபத்திரருக்கு ஒரே தலம்

சிவன், விஷ்ணு, வீரபத்திரருக்கு ஒரே தலம்

ஆந்திர மாநிலத்தில் உள்ள இந்த கிராமத்தில் சிவன், விஷ்ணு, வீரபத்திரர் ஆகியோருக்கும் தலங்கள் இருக்கின்றன. அதிலும் மூன்று தலங்களிலுமே பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

ஆமையின் முதுகு போல ஒரு குன்று இங்கு அமைந்துள்ளது இது அதிக அளவில் பயணிகளை ஈர்க்கிறது.

இந்த கோயிலில் காணப்படும் அழகிய சிற்பங்கள் காண்போரை கண்இமைக்கவிடாமல் ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

Bikashrd

ராமாயணம் மகாபாரதம்

ராமாயணம் மகாபாரதம்

இந்த கோயிலின் சுவர்களில் ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்ட காவியங்களின் காட்சிகளை கண்டு ரசிக்கலாம்.

மேற்கூரையிலும் ஓவியங்கள் தீட்டப்பட்டுள்ளன.

இந்த கோயிலில் ஒரு தூண் அந்தரத்தில் தொங்கும்படி, கீழ் பகுதியில் எந்த பிணைப்பும் இன்றி காணப்படுகிறது.

என்ன கண்டுபிடித்துவிட்டீர்களா? ஆம் லேபாக்ஷி

Vu2sga

 லேபாக்ஷி கோயில்

லேபாக்ஷி கோயில்


இங்கு நுண்ணிய வேலைப்பாடுகளுடன் காட்சியளிக்கும் மண்டபங்கள் கோயிலின் கட்டிடக்கலை அழகுக்கு மேலும் அழகு சேர்க்கக் கூடியவை. இதில் குறிப்பாக ஒரே ஒரு மண்டபம் நடனக் கலைஞர்கள் மற்றும் இசை விற்பன்னர்களின் பிரம்மாண்ட உருவங்களை கொண்ட தூண்களுடன் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. அதோடு கோயிலில் உள்ள ஓரே கல்லாலான நந்தியின் சிலை பக்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். மேலும் பல்வேறு சிறப்புகளை கொண்ட வீரபத்ரர் ஆலயம் நாடு முழுவதுமிருந்து ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்களையும், பயணிகளையும் ஈர்த்து வருகிறது.

rajaraman sundaram

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

கங்கம்பள்ளி காடுகள், புட்டபர்த்தி, காதிரி காடுகள், திம்ம மரிமன்னு, வெள்ளிகல்லு அணைக்கட்டு, பேடபள்ளி அணை உள்ளிட்ட இடங்கள் இங்கு காணப்படுகின்றன.

Vu2sga

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்


பேருந்து வழியாக

லேபாக்ஷி கிராமம் அனந்தபூர் நகரிலிருந்து 15 கிலோமீட்டரிலும், ஹைதராபாத்திலிருந்து 476 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்திருக்கிறது. அதோடு நீங்கள் பெங்களூர் நகரிலிருந்து லேபாக்ஷி கிராமத்துக்கு வருபவராக இருந்தால் தேசிய நெடுஞ்சாலை 7-இன் மூலமாக வரலாம். மேலும் ஆந்திராவின் அனைத்து பகுதிகளிலிருந்து லேபாக்ஷி கிராமத்துக்கு எண்ணற்ற அரசு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாமல் ஹைதராபாத் மற்றும் பெங்களூரிலிருந்து லேபாக்ஷி கிராமத்துக்கு டீலக்ஸ் பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில் மூலமாக

லேபாக்ஷி கிராமத்துக்கு வெகு அருகில் அனந்தபூர் ரயில் நிலையம் அமைந்திருக்கிறது. இந்த ரயில் நிலையம் பெங்களூர், ஹைதராபாத், சென்னை, டெல்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களுடன் நன்றாக இணைக்கப்பட்டிருக்கிறது. எனவே பயணிகள் இந்த ரயில் நிலையத்துக்கு வந்து சேர்ந்த பிறகு எந்த சிரமமுமின்றி லேபாக்ஷி கிராமத்தை அடையலாம்.

ரயில்கள் குறித்த விவரங்களுக்கு


விமானம் மூலமாக

லேபாக்ஷி கிராமத்தின் அருகாமை விமான நிலையமாக ஹைதராபாத் விமான நிலையம் அறியப்படுகிறது. இந்த விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கும், இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் தினமும் எண்ணற்ற விமானங்கள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் இந்த விமான நிலையத்துக்கு வந்து சேர்ந்த பின் வாடகை கார்கள் மூலம் வெகு சுலபமாக லேபாக்ஷி கிராமத்தை அடைந்து விடலாம்.

விமானம் புக் செய்ய

பல லட்சம் கோடி புதையல்கள்

பல லட்சம் கோடி புதையல்கள்


வைரம், வைடூரியம் உட்பட பல லட்சம் கோடி மதிப்புள்ள நகைகள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டு, மிகுந்த பரபரப்பை ஏற்படுத்திய கோயில் இது.

திருவரங்கம் ரங்கநாதர் மற்றும் திருவள்ளூர் வீரராகவர் போல பள்ளிகொண்ட கோலத்தில் காட்சி தரும் பெருமாள் கோயில் இது.

இந்த சிலையை ஒரே வாசல் வழியாக பார்க்கமுடியாது. ஒரு வாசலில் தலையும், மறு வாசலில் மார்பையும், வேறொரு வாசலில் காலும் காட்சி தருகிறது.

 மார்த்தாண்ட மகாராஜா

மார்த்தாண்ட மகாராஜா

இந்த கோயில் மார்த்தாண்ட மகாராஜாவால் 260 ஆண்டுகளுக்கு முன்னர் புனரமைத்துக் கட்டப்பட்டது. 150 ஆண்டுகளாக மூடி இருக்கும் அறைகளைத் திறந்தால் கோடி கோடியாக நகைகள், பணம் கிடைக்கும்.

20கழுத்துகுடங்களும், தங்க எழுத்தாணி ஒன்றும், தங்ககுடம் 1, சிறிய வகை தங்க குடங்கள் 340, வெள்ளி விளக்கு 3, பால்கிண்டி 30, சிவன், நாகர் சிலைகள், மோதிரங்கள், வளையல்கள் என 450 கோடிக்கும் அதிக மதிப்புள்ள நகைகள் கிடைத்துள்ளன. ஆம். பத்மநாபசுவாமி கோயில்தான். .

பத்மநாபசுவாமி கோயில்

பத்மநாபசுவாமி கோயில்

திருவனந்தபுரம் நகரின் மையத்தில் இந்த ஸ்ரீ பத்மநாபஸ்வாமி கோயில் அமைந்துள்ளது. இந்த கோயிலின் மூலவராக ஸ்ரீ மஹாவிஷ்ணு வீற்றுள்ளார். இது இன்றும் திருவாங்கூர் ராஜ வம்ச சந்ததியினரால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இக்கோயிலின் கட்டுமானம் திராவிடப்பாணியில் அமைந்துள்ளது. இக்கோயிலில் அமைக்கப்பட்டிருக்கும் அருள்மிகு பத்மநாபஸ்வாமி சிலை மிக சக்திவாய்ந்ததாக அறியப்படுகிறது. பாம்பின் மீது பள்ளி கொண்டவராக பக்தர்களுக்கு தரிசனம் அளிக்கும் மஹாவிஷ்ணுவின் சன்னதியில் துணைவியரான ஸ்ரீதேவி மற்றும் பூதேவியையும் உடன் காணலாம். 12000 சாளக்கிராம கற்களை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த சன்னதி ‘கட்டுசக்கர யோகம்' எனும் விசேஷ கலவையால் பூசப்பட்டுள்ளது. இக்கோயிலுக்கு 90000 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உள்ளன என்பது மலைக்க வைக்கும் உண்மையாகும்.

Aravind Sivaraj

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்


நெய்யாறு அணை, வனவிலங்கு சரணாலயம், நேப்பியர் அருங்காட்சியகம், சித்ரா ஆர்ட் கேலரி, அகத்தியர் மலை சிகரம், ஆக்குளம், கனகக்குண்ணு, கரமனா ஆறு, ஹேப்பிலேண்ட் வாட்டர் தீம் பார்க், அறிவியல் தொழில்நுட்ப அருங்காட்சியகம், சாலை பஜார், வனவிலங்கு பூங்கா திருவனந்தபுரம் உள்ளிட்ட ஏராளமான இடங்கள் சுற்றுலா அம்சங்களோடு திகழ்கின்றன.

Unknown

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

சாலை வழியாக

எல்லாத்திசைகளிலிருந்தும் சாலை மார்க்கமாக திருவனந்தபுரத்தை எளிதில் சென்றடையலாம். தமிழ்நாட்டின் எல்லா முக்கிய நகரங்களிலிருந்தும், கேரளாவின் இதர பகுதிகளிலிருந்தும் அரசு மற்றும் தனியார் சேவைகள் தினசரி அதிக எண்ணிக்கைகளில் இயக்கப்படுகின்றன.

திருவனந்தபுரம் ரயில் நிலையம் ஒரு முக்கிய ரயில் சந்திப்பு என்பதால் நிறைய ரயில் இணைப்புகள் இந்த நகரத்துக்கு உள்ளன. இங்கிருந்து இந்தியாவின் எல்லாப்பகுதிகளுக்கும் தினசரி ரயில் சேவைகள் ஏராளம் உள்ளன.

ரயில்கள் குறித்த தகவல்களுக்கு சொடுக்கவும்

விமானம் வழியாக

திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் மூலம் பயணிகள் வெளிநாடு மற்றும் உள்நாட்டு விமான நிலையங்களிலிருந்து வருகை தரலாம். இது நகரிலிருந்து 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. எல்லா முக்கிய இந்திய நகரங்களிலிருந்தும் திருவனந்தபுரத்துக்கு நேரடி விமான சேவைகள் உள்ளன.

65மில்லியன் வயது

65மில்லியன் வயது


ஒரே கல்லில் குடையப்பட்ட கோயில்

ஒரே கல்லில் குடையப்பட்டு உலகப் புகழ்பெற்ற கோயில் இதுவாகும்.

குகைக்கோயில்கள் என்றால் இதற்கு தனிப்பெயர் உண்டு

மழைக்காலங்களில் இந்த கோயிலுக்கு செல்வது அப்படி சிறந்த காட்சியாகும்.

65மில்லியன் வருடங்களுக்கு முன்பே உருவான மலை இதுவாகும்.

Ms Sarah Welch

நதிகளின் மூலதனம்

நதிகளின் மூலதனம்


பல நதிகள் உருவாகி ஊற்றெடுக்கும் அற்புத மூலம் இது.

தெற்கு மற்றும் மேற்கு பகுதிகளில் இந்த மலைகள் எழும்பியுள்ளன. மேலும் இங்குள்ள குகைகள் நிறைய வினாக்களை நமக்குள் எழுப்புகின்றன.

ஏலியன் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதா என்ன என்று வியக்கும் அளவுக்கு சிறந்த மலைக்கோயில் இது. ஆம். எல்லோராவில் கட்டப்பட்டுள்ள கைலாசாகோயில்தான்.

Vu2sga

 கைலாசா கோயில்

கைலாசா கோயில்


எல்லோரா குகைகளில் முதலில் குடைந்து உருவாக்கப்பட்ட கோயில்கள், அதன் முதல் 12 கோயில்களான புத்த கோயில்களே ஆகும். இந்த கோயில்கள் அனைத்தும் 450 மற்றும் 700 ஆம் ஆண்டுகளுக்கு உட்பட்ட காலங்களில் கட்டப்பட்டது. இதன் முதல் 5 கோயில்கள் ஒரு பிரிவாகவும், அடுத்த 7 கோயில்கள் இன்னொரு பிரிவாகவும் கொள்ளப்படுகின்றன. இங்குள்ள பிராமணிய குகைகளே ஹிந்து கோயில்கள் என்று பரவலாக அழைக்கப்படுகின்றன. இவை அனைத்தும் 13 முதல் 29-ஆம் குகைகள் வரை மொத்தம் 17 குகைக் கோயில்களாக மேற்கு பக்கத்தில் அமைந்திருக்கின்றன. இந்த குடைவறைக்கோயில்கள் ஒவ்வொன்றும் பல்வேறு கால கட்டங்களில் கட்டப்பட்டவை.

Swapnil Kortikar

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

எல்லோராவை சாலை மூலமாக அடைய 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஔரங்கபாத் நகரமே சிறந்தது. இந்த ஔரங்கபாத் நகருக்கு மகாராஷ்டிரா மற்றும் நாட்டின் மற்ற நகரங்களிலிருந்தும் ஏராளமான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. எனவே பயணிகள் ஔரங்கபாத் வந்து அதன் பின்பு ஆட்டோ மூலம் எல்லோராவை அடையலாம்.

ரயில் மூலமாக

எல்லோராவுக்கு அருகாமை ரயில் நிலையமாக ஔரங்கபாத் ரயில் நிலையம் இருந்து வருகிறது. இங்கிருந்து எல்லோராவை அடைய 45 நிமிட நேரம் ஆகும். இந்த ரயில் நிலையம் நாட்டின் அனைத்து நகரங்களுடனும் இணைக்கப்பட்டிருப்பதால் பயணிகள் சுலபமாக எல்லோராவை அடையலாம்.

ரயில் புக்கிங்கிற்கு

விமானம் மூலமாக

எல்லோராவுக்கு மிக அருகில், 20 கிலோமீட்டர் தொலைவில் ஔரங்கபாத் விமான நிலையம் இருக்கிறது. இந்த ஔரங்கபாத் விமான நிலையத்திற்கு மும்பை, உதைப்பூர், டெல்லி உள்ளிட்ட இந்தியாவின் அனைத்து நகரங்களிலிருந்தும் ஏராளமான விமானங்கள் தினந்தோறும் வந்து செல்கின்றன.

விமான புக்கிங்கிற்கு

கோனார்க் சூரிய கோயில்

கோனார்க் சூரிய கோயில்


கொனார்க் நகரம் உலகெங்கிலுமிருந்து சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பல்வேறு புராதன கட்டிடக்கலை அம்சங்களை தன்னுள் அடக்கியிருக்கிறது. இந்த நகரத்தின் முக்கிய அடையாளமாக ‘சூரியக்கோயில்' எனும் அதிஅற்புதமான கோயில் இடம் பெற்றுள்ளது. உலகத்திலுள்ள அற்புதமான கட்டிடக்கலை படைப்புகளில் இந்த சூரியக்கடவுள் கோயிலும் ஒன்று என்பது இந்தியர் அனைவருமே பெருமைப்படத்தக்க விஷயம். கொனார்க் எனும் பெயரும் கூட ‘கோனா' மற்றும் ‘அர்க்கா' எனும் சொற்களிலிருந்து பிறந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ‘கோனா' என்பது கோணத்தையும் ‘அர்க்கா' என்பது சூரியனையும் குறிக்கிறது. சூரியனுக்கான கோயில் அமைந்துள்ள இடம் என்பதால் இந்த பெயர் வழங்கப்பட்டிருக்கிறது

கோயில் அமைந்துள்ள இடம் என்பதால் இந்த பெயர் வழங்கப்பட்டிருக்கிறது. சூரியக்கோயில் வளாகத்தில் மாயாதேவி கோயில் மற்றும் வைஷ்ணவா கோயில் போன்றவை பார்வையாளர்களை வெகுவாக கவரும் அம்சங்களாக அமைந்திருக்கின்றன. இவை தவிர ராமசண்டி கோயில் எனும் கோயிலும் இங்கு முக்கியமான கோயிலாக காட்சியளிக்கிறது. குருமா எனும் புராதனமான புத்தமடாலயம் அமைந்திருந்த தொல்லியல் ஸ்தலத்தில் காணப்படும் எச்சங்களும் அகழ்ந்தெடுக்கப்பட்ட புத்தர் சிலையும் பயணிகள் ரசிக்க வேண்டிய மற்றொரு சுவாரசிய அம்சமாகும்.

Subhrajyoti07

Read more about: travel, temple