
பழந்திராவிடர்களின் பெருமையை இன்று உலகம் உணரக்காரணமாக இருப்பவை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர்கள் கட்டிய கோயில்கள் தான். மெய்யுருகி, உடல்வருந்தி அவர்கள் படைத்த கற்சிலைகளுக்கு நிகரென்று இவ்வுலகில் எதுவும் இல்லை எனலாம்.
கோயில்களில் நாம் செய்யக்கூடாத சில விஷயங்கள்
மீன் போன்ற கண்ணும் அக்கண்ணின் உள்ளே விழியும் விழியினருகே இருக்கும் நுண்ணிய நரம்பையும் கல்லில் வடிக்கும் ஆற்றல் கொண்டிருந்ததோடு மட்டும் அவர்கள் நின்றுவிடவில்லை யாழ் மீட்டுவது போல தட்டினால் சப்த ஸ்வரங்களை எழுப்பும் இசைத்தூண்களையும் திராவிட சிற்பிகள் வடித்துள்ளனர்.
ஸ்ரீ பத்மநாப சுவாமி கோயிலின் கருவறை மர்மங்கள் பற்றி தெரியுமா?
விஞ்ஞானத்தால் விளக்க முடியாத இந்த அதிசய தூண்கள் எங்கிருக்கின்றன என்பதை அறிந்துகொள்வோம் வாருங்கள்.

விருபாக்ஷி நாதர் கோயில், ஹம்பி:
கர்நாடக மாநிலத்தில் இருக்கும் ஹம்பி நகரம் ஒரு காலத்தில் உலகிலேயே மிகவும் செல்வச்செழிப்பான நகரமாக திகழ்ந்ததாகும். விஜயநகர பேரரசின் வீழ்ச்சிக்கு பிறகு பாழடைந்து போன இந்நகரில் விஜயநகர மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்ட அரிய பொக்கிஷங்கள் இன்றும் இருக்கின்றன. அவற்றில் ஒன்று தான் இந்த இசைத்தூண்கள் ஆகும்.

ஹம்பி:
ஹம்பியில் உள்ள 'விட்டாலா' என்ற கோயிலில் தான் இந்த இசைத்தூண்கள் உள்ளன. பிரிட்டிஷ் காலத்தில் இந்த தூண்களில் இருந்து எப்படி இசை வெளிவருகிறது என்பதை தெரிந்துகொள்ள ஒரு இசைத்தூணை பெயர்த்து எடுத்துச்சென்றிருக்கின்றனர்.

ஹம்பி:
இதனை சோதித்துப்பார்த்த ஆங்கிலேயே விஞ்ஞானிகள் இந்த தூண்கள் வெறும் கற்களால் ஆனதை கண்டு வியந்திருக்கின்றனர். இதிலிருந்து எப்படி இசை வருகிறது என்பது இன்னமும் விடுக்கப்படாத புதிராக உள்ளது.

ஹம்பி:
ஹம்பியில் உள்ள புராதன கோயில்கள் யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளன. இசைத்தூண்கள் மட்டுமில்லாது பாதவ லிங்கம், சந்தமுலேஸ்வரர் கோயில், மால்யவந்தா ரகுநாதசுவாமி கோயில், ஹசாரா ராமா கோயில், கிருஷ்ணா கோயில், இசைத்தூண்கள் உள்ள விட்டாலா கோயில் போன்றவற்றையும் நாம் நிச்சயம் பார்க்க வேண்டும்.

ஹம்பி:
ஹம்பியில் இசைத்தூண்களை காட்டிலும் அரிய பொக்கிஷமென்று இங்குள்ள முழுக்க முழுக்க கல்லில் குடையப்பட்ட தேரை குறிப்பிடலாம்.
இசைத்தூண்கள் உள்ள அதே விட்டலா கோயில் வளாகத்தில் தான் இதுவும் உள்ளது. இந்தியாவிலேயே இதுபோன்ற கற்தேர் மூன்றே இடங்களில் தான் உள்ளது.

ஹம்பி:
ஹம்பி நகரம் கர்நாடக மாநிலத்தில் தலைநகரான பெங்களூருவில் இருந்து 341கி.மீ தொலைவில் உள்ளது.
சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதத்தில் கர்நாடக சுற்றுலாத்துறையினால் 'ஹம்பி உத்சவ்' என்ற விழா நடத்தப்படுகிறது.

ஹம்பி:
உலகம் கண்ட மிகப்பெரிய ஹிந்து சாம்ராஜ்யத்தை கொண்டாடும் விழா எது தெரியுமா ?

ஹம்பி:

திருநெல்வேலி:
திருநெல்வேலி நகரமானது தமிழகத்தில் நாகரீகம் தழைத்த பழமையான இடங்களில் ஒன்றாகும். கி.மு 200 ஆம் ஆண்டு வாக்கில் மதுரையை தலைநகரமாக கொண்டு தென் தமிழகத்தை ஆட்சி செய்த பாண்டியர்களின் ஆட்சியின் கீழ் இந்நகரம் இருந்ததற்கான குறிப்புகள் கிடைத்திருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர் .

திருநெல்வேலி:
தமிழகத்தில் இருக்கும் மிகப்பழமையான சிவாலங்களில் ஒன்று தான் திருநெல்வேலி நகரின் மையத்தில் அமைந்திருக்கும் நெல்லையப்பர் கோயில் ஆகும். நின்றசீர் நெடுமாறன் என்ற அரசனால் கி.பி ஏழாம் நூற்றாண்டில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இங்கே நெல்லையப்பர் சந்ததியும் அவரது உமையாள் காந்திமதி அம்மன் சந்ததியும் தனித்தனியாக அமைந்திருக்கின்றன.

திருநெல்வேலி:
இக்கோயிலில் தான் தமிழர் கட்டிட்டக்கலையின் மகத்துவத்தை உலகுக்கு உணர்த்தும் 'இசைத்தூண்கள்' இருக்கின்றன. மணிமண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தூண்களை தட்டினால் ஒவ்வொரு தூணும் பிரத்யேகமான இசையை எழுப்புகின்றன. இன்றுவரை இது எப்படி சாத்தியம் என்பதை எவராலும் கண்டறிய முடியவில்லை.

திருநெல்வேலி:
திருநெல்வேலி என்றாலே நம் நினைவுக்கு வருவது அல்வா தான். 1900களில் நெல்லையப்பர் கோயிலை ஒட்டி ஆரம்பிக்கப்பட்ட இருட்டுக்கடையில் தயாரிக்கப்பட்ட அமிர்தத்துக்கு இணையான அதியற்புதமான சுவையுடைய அல்வா திருநெல்வேலியின் புகழை உலகெங்கும் கொண்டு சென்றது என்றே சொல்லலாம்.
மாலை நேரத்தில் மட்டுமே அல்வா விற்கப்படும் இக்கடையின் முன்பாக அல்வா வாங்குவதற்கு தினமும் கிட்டத்தட்ட அடிதடியே நடக்கிறது.