Search
  • Follow NativePlanet
Share
» »உலகம் கண்ட மிகப்பெரிய ஹிந்து சாம்ராஜ்யத்தை கொண்டாடும் விழா எது தெரியுமா ?

உலகம் கண்ட மிகப்பெரிய ஹிந்து சாம்ராஜ்யத்தை கொண்டாடும் விழா எது தெரியுமா ?

By Naveen

கடந்த ஆயிரம் ஆண்டுகளில் இந்திய திருநாடு சந்தித்த படையெடுப்புகள் ஏராளம். எண்ணற்ற போர்களும், படையெடுப்புகளும் இந்தியாவின் உண்மை முகத்தையே சிதைத்துவிட்டன என்று சொல்லலாம். ஆப்கானியர்கள் தொடங்கி முகலாயர்கள் மற்றும் பிரிட்டிஷ்க்காரர்கள் ஆகியோரின் படையெடுப்புகள் இந்தியாவின் சமூக, பொருளாதார மற்றும் கலாச்சார அடையாளங்களில் மிகப்பெரிய மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

இந்த படையெடுப்புகள் இந்தியாவை எவ்வளவு சிதைத்திருக்கின்றன என்பதை உலகம் கண்ட மிகப்பெரிய ஹிந்து பேரரசு என்று சொல்லப்படும் விஜயநகர பேரரசின் வரலாற்று பக்கங்களை புரட்டும் போது அறிந்துகொள்ளலாம். நாகரீகத்தின் உச்சம் தொட்ட இப்பேரரசும் கால ஓட்டத்தில் அந்நியர் படையெடுப்பின் காரணமாக சிதைந்துபோனது.

இந்த விஜயநகர பேரரசின் பெருமையை கொண்டாடும் விதமாக வருட வருடம் கர்னாடக மாநில அரசினால் ஹம்பி உத்சவ் என்னும் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை பற்றி தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.

ஹம்பியின் வரலாறு:

ஹம்பியின் வரலாறு:

15ஆம் நூற்றாண்டில் தோன்றிய விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகரமாக ஹம்பி நகரம் இருந்திருக்கிறது. அந்த காலத்தில் இந்நகரில் மட்டும் 5லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்ந்திருக்கின்றனர். இது அப்போது உலகத்தில் இருந்த மொத்த மக்கள் தொகையில் ஒரு பகுதியாகும்.

மேலும் சீனாவில் உள்ள பெய்ஜிங் நகருக்கு அடுத்து அப்போதைய உலகின் இரண்டாவது மிகப்பெரிய நகரமாகவும், பாரிஸ் நகரை காட்டிலும் மூன்று மடங்கு பெரியதாக இந்த ஹம்பி நகரம் இருந்துள்ளது.

Photo: Roehan Rengadurai

ஹம்பியின் வரலாறு:

ஹம்பியின் வரலாறு:

ஒரு பக்கம் துங்கபத்திரை நதியாலும் மற்ற மூன்று பக்கங்களும் மலைகளால் சூழப்பட்டிருப்பதால் பாதுகாப்பு மற்றும் ராணுவ முக்கியத்துவம் கருதி விஜயநகர அரசர்களால் இந்த ஹம்பி நகரம் விஜயநகர பேரரசின் தலைநகராக தேர்ந்தேடுக்கப்பட்டிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.

ஹம்பியின் வரலாறு:

ஹம்பியின் வரலாறு:

1565ஆம் ஆண்டு நடந்த அந்நிய மன்னர்களின் படையெடுப்பின் போது நடந்த போரில் நிகழ்ந்த தோல்வியே இந்த சாம்ராஜ்யம் அழிந்துபோக காரணமாக இருந்திருக்கிறது. அன்றிலிருந்து இன்றுவரை மீண்டும் ஹம்பி உயிப்பெறவே இல்லை.

இதனை மீட்டெடுக்கும் விதமாகவும், விஜயநகர பேரரசின் சிறப்புகளை கொண்டாடவும் ஆரம்பிக்கப்பட்டதே இந்த 'ஹம்பி உத்சவ்' விழா ஆகும்.

Photo: Aparajith Bharathiyan

ஹம்பி உத்சவ்:

ஹம்பி உத்சவ்:

சுற்றுலாவை ஊக்குவிக்கும் பொருட்டு ஒவ்வொரு வருடமும் ஜனவரி மாதம் ஹம்பி உத்சவ் கொண்டாடப்படுகிறது.

2016ஆம் ஆண்டுக்கான ஹம்பி உத்சவ் வருகின்ற 9ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்களுக்கு நடைபெறவிருக்கிறது.

ஹம்பி உத்சவ்:

ஹம்பி உத்சவ்:

கன்னடிகர்களின் கலாச்சாரத்தை உலகுக்கு எடுத்துச் சொல்லும் விதமாக நடன நிகழ்ச்சிகள், நாடகங்கள், சங்கீத உற்சவங்கள், கண்காட்சிகள் போன்றவை நடத்தப்படுகின்றன.

இவ்விழாவில் இந்தியா முழுக்க இருந்து முன்னணி கலைஞர்கள் கலந்துகொள்கின்றனர்.

ஹம்பி உத்சவ்:

ஹம்பி உத்சவ்:

இந்த விழாவில் விஜயநகர பேரரசின் காலத்தில் வழக்கத்தில் இருந்த பொம்மலாட்டம், கைப்பாவை நாடகங்கள், பழமையான வாத்தியங்கள் கொண்டு நடைபெறும் இசை நிகழ்ச்சிகள் நம்மை ஐந்து நூற்றாண்டுகள் பின்னோக்கி அழைத்துச்சென்று விடும்.

ஹம்பி உத்சவ்:

ஹம்பி உத்சவ்:

ஹம்பி உத்சவின் ஒரு பகுதியாக சுற்றுலாப்பயணிகள் ஹம்பியின் சிதலங்களை முழுமையாக பார்வையிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்படுகின்றன.

ஹம்பி உத்சவ்:

ஹம்பி உத்சவ்:

ஹம்பியில் விஜயநகர பேரரசின் உன்னத சிற்பக்கலையின் அடையாளமாக இருப்பது இங்கிருக்கும் கற்த்தேர் ஆகும். இது பார்ப்பவர்களை பிரம்மிப்பின் உச்சத்துக்கு கொண்டுசெல்லும்.

ஹம்பி உத்சவ்:

ஹம்பி உத்சவ்:

அதோடு இங்கிருக்கும் விருபாக்க்ஷி கோயிலும் மிகப்பிரபலமான சுற்றுலா ஈர்பாகும். யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த கோயிலில் சிவபெருமான் 'விருபாக்ஷா' தேவராக காட்சியளிக்கிறார்.

பழமையான கோயில்களுக்கு செல்வதில் ஆர்வமுடையவர்கள் நிச்சயம் இந்த கோயிலுக்கு வாருங்கள்.

ஹம்பி உத்சவ்:

ஹம்பி உத்சவ்:

பழமையான கோயில்கள், கலைநிகழ்சிகள் மட்டுமில்லாது சுற்றுலாப்பயணிகளை கவரும் விதமாக சாகச விளையாட்டுகளும் இங்கே நடத்தப்படுகின்றன.

ஹம்பி உத்சவ்:

ஹம்பி உத்சவ்:

இந்த விழா நடக்கும் மூன்று நாட்களுக்கு இங்கே கைவினைப்பொருட்கள் கொண்ட ஷாப்பிங் மேளா ஒன்றும் நடக்கிறது. இதில் இந்தியா முழுக்க இருக்கும் முன்னணி கைவினைக் கலைஞர்களினால் செய்யப்பட்ட பொருட்கள் கொண்ட விற்ப்பனைக்கு வைக்கப்படுகின்றன.

ஹம்பி உத்சவ்:

ஹம்பி உத்சவ்:

இந்த புது வருடத்தில் சுற்றுலா செல்லும் திட்டம் வைத்திருந்தால் நிச்சம் இந்த 'ஹம்பி உத்சவ்' விழாவிற்கு சென்று வாருங்கள். இந்த இடம் பெங்களூருவில் இருந்து 350கி.மீ தொலைவில் உள்ளது.

ஹம்பி நகரை பற்றிய பயண தகவல்களை இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X