Search
  • Follow NativePlanet
Share
» »ஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில்! வேற்றுலக மர்ம வாசல்! அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்!

ஏலியன் கட்டிய தஞ்சை பெரிய கோவில்! வேற்றுலக மர்ம வாசல்! அதிர்ச்சியில் ஆராய்ச்சியாளர்கள்!

வார்ம் ஹோல்ஸ். டைம் டிராவல் எனும் காலப்பயணம் சாத்தியமா என்ற கேள்விக்கு இதுதான் பதிலாக வரும். ஆம் வார்ம் ஹோல்ஸ் எனப்படும் ஊடுறுவல் துளை உள்ளிட்ட பல ரகசியங்கள் நம்ம தஞ்சாவூர் கோயில்ல இருக்காம் தெரியுமா?

By Udhaya

வார்ம் ஹோல்ஸ். டைம் டிராவல் எனும் காலப்பயணம் சாத்தியமா என்ற கேள்விக்கு இதுதான் பதிலாக வரும். ஆம் வார்ம் ஹோல்ஸ் எனப்படும் ஊடுறுவல் துளை உள்ளிட்ட பல ரகசியங்கள் நம்ம தஞ்சாவூர் கோயில்ல இருக்காம் தெரியுமா?

விண்வெளியில் காலப்பயணம் குறித்த தகவல்களை தேடிப் படிப்பவர்களுக்கு மிகவும் பிடித்த விசயமாக இது இருக்கிறது. அதிலும் உலகின் பல இடங்களில் இருக்கும் வார்ம் ஹோல்களில் ஒன்று நம் தஞ்சை பெரிய கோயிலில் இருக்கிறது என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளதுதான் தற்போது நமக்கு கிடைத்த அவல். பிரகதீசுவரர் கோயிலின் பல்வேறு ரகசியங்கள், வரலாறு பற்றி ஏற்கனவே பார்த்திருக்கிறோம்தானே. அதனுடன் அறிவியல் தொடர்பான இந்த வார்ம் ஹோல்ஸ் பற்றியும் தெரிந்துகொள்வோம் வாருங்கள்.

அதற்கு முன் மறக்காம மேல இருக்க பெல் பட்டன தொட்டு சப்ஸ்கிரைப் பண்ணிக்கோங்க. நம்ம முகநூல் பக்கத்தையும் பின்தொடருங்க. வாங்க உலகம் அதிரும் தஞ்சாவூரின் ரகசியங்களைப் பற்றி பார்க்கலாம்.

 வார்ம் ஹோல்ஸ்

வார்ம் ஹோல்ஸ்

வார்ம் ஹோல்ஸ் எனப்படுபவை ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் இருப்பதில்லை. அதை எப்படி வரையறுப்பது என்பதும் சற்று கடினமான விசயம்தான். ஏனெனில் இது கண்களுக்கு புலப்படாத ஒரு துளை. நாம் இப்போது நம் கண்களால் பார்ப்பது முப்பரிமாண உருவங்களைத் தான். வார்ம் ஹோல்ஸ் எனப்படுபவை பத்து அல்லது பதினொறு பரிமாணங்களில் இருக்கலாம் என்று யூகிக்கப்படுகிறது. பேரலல் யுனிவர்ஸ் என்ற தத்துவத்தையே நம்மால் இன்று வரை புரிந்துகொள்ள முடியவில்லை. இது பத்து பரிமாணங்கள் கொண்டது என்றால் கண்ணுக்கு பார்க்கமுடியாதுதான். சரி இப்படிப்பட்ட வார்ம் ஹோல்ஸ் தற்போது எங்கே இருக்கிறது தெரியுமா. நம்ம தஞ்சாவூர் பெரிய கோவில்லதான். இது நாங்க சொல்லல சில அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் சொல்லிருக்காங்க.

 தஞ்சை பெரிய கோவில் ரகசியங்கள்

தஞ்சை பெரிய கோவில் ரகசியங்கள்

ஏராளமான ரகசியங்களும் விசித்திரங்களும் தஞ்சை பெரிய கோவில்ல மறஞ்சிருக்கு. அயல் நாடுகளுடன் அந்த காலத்திலேயே வாணிபம், மாபெரும் கட்டிடக் கலை நுணுக்கங்கள், அறிவியல் சார்ந்து கட்டப்பட்ட மகா அதிசயம் இந்த கோவில். இதைக் காட்டிலும் மிகப் பெரிய ஒரு அறிவியல் சார்ந்த கண்டுபிடிப்பு தற்சமயம் அறிவியலாளர்களால் ஆராய்ச்சி செய்யப்பட்டுட்டு இருக்குற வார்ம் ஹோல்ஸ். அது நம்ம பெரிய கோவில்ல இருக்குதுனு சிலர் சொல்றாங்க. .

பா.ஜம்புலிங்கம்

 ரகசிய வாயில்

ரகசிய வாயில்

தஞ்சை பெரிய கோவிலுக்குள் வார்ம் ஹோல்ஸ். இன்னொரு உலகத்தின் நுழைவு வாயில். ஆராய்ச்சியாளர்கள் வெளிப்படுத்து அதிர்ச்சி தகவல்கள்னு நிறைய விசயங்கள் உங்க கிட்ட பகிர்ந்துக்க வேண்டி இருக்கு.

இதுக்கு முன்னாடி நம்ம பக்கத்துல தஞ்சை பெரிய கோவிலின் ரகசியங்கள் பற்றி எழுதும்போது பலத்த வரவேற்பு கொடுத்துருந்தீங்க. அதோட தஞ்சை பெரிய கோவிலின் எல்லா தகவல்களும் முடிஞ்சதாகத்தான் நாங்களும் நினச்சிட்டு இருந்தோம். ஆனால் இன்னும் தேட தேட கிடைத்துக்கொண்டே இருக்கும் சில விசயங்கள் நம்மை அண்டத்தின் மறு உலகைப் பற்றி சிந்திக்கத் தூண்டுகிறது. ஆம். வார்ம் ஹோல்ஸ் மூலம் வேற்று உலகங்களுக்கு பயணிக்க முடியுமாம். அந்த வார்ம் ஹோல்ஸ் பெரிய கோவிலின் ஒரு பகுதியில் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக தெரிவிக்கின்றனர் அறிவியலாளர்கள்.

பா.ஜம்புலிங்கம்

 கோயிலின் முன்புற வாயில் மர்மங்கள்

கோயிலின் முன்புற வாயில் மர்மங்கள்


இந்த கோயில் கட்டப்பட்டு கிட்டத்தட்ட 1020 வருடங்கள் ஆன பிறகும் சில மர்மங்கள் இன்றும் விளங்காமல் இருக்கிறது என்றால் பாருங்களேன். அவற்றில் ஒன்று இந்த முன்வாசல் வழி மர்மம். இந்த கோயிலைக் கட்டிய சோழ மன்னர்கள் அவர்களின் சந்ததிகள் யாவருமே இந்த கோயிலுக்கு முன் வாசல் வழியாக செல்வதில்லையாம். இது சில வரலாற்று ஆய்வாளர்களும் உறுதி செய்த தகவல்தான். அதற்கான காரணம் இன்றும் தெரியவில்லை. தனியே காரணம் எதுவும் இருக்கிறதா, அல்லது அரண்மனையிலிருந்து நேரடியாக கோவிலுக்குள் செல்ல வழி இருந்ததால் இப்படி நிகழ்ந்ததா என்பதும் வெளிப்படையாக யாரும் தெரிவிக்கவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.

Mugilkmv

 சித்தர்களின் கலை

சித்தர்களின் கலை

சித்தர்களின் கலை என்பது ஓர் ஆன்மீகப் பயணம் ஆகும். ஆன்மீகப் பயணம் என்றவுடன் கோயில்களுக்கு பயணிக்கும் நிகழ்வு என நினைத்துவிடவேண்டாம். இது ஆன்மீகத் தேடல் பயணம். உடலை விட்டு மனதால் பயணிப்பது என்கிறார்கள் சித்தர்களின் இந்த கலையை பயிற்சி செய்து வருபவர்கள். நம் கண்களால் பார்க்கும்போது இருக்கும் இந்த தஞ்சை பெரிய கோவிலின் வடிவமே ஆன்மீகப் பயணத்தில் சித்தர்களின் வழியில் சென்றால் வேறு மாதிரியாக இருக்கும் என்கிறார்கள். நம்ம உலகம் முப்பரிமாணத்துல இருக்குறது ஆனா கண்களுக்கு புலப்படாத இன்னும் பல பரிமாணங்கள் இருக்கின்றன. அதனால் அதன் வடிவம் ஒவ்வொரு பரிமாணத்திலும் வேறு வேறாக இருக்கும் என நம்பப்படுகிறது. இதுவே தஞ்சைப் பெரிய கோவிலினுள் இருக்கும் வார்ம் ஹோல்ஸ்க்கான சூத்திரம் என்று கருதப்படுகிறது.

Thamizhpparithi Maari

 30 அடி மனிதர்கள்

30 அடி மனிதர்கள்


கேட்பதற்கு கேலியாகவோ, இல்லை விளையாட்டாகவோ இருக்கலாம். விசித்திரமான தகவல்கள் முதலில் முட்டாள்தனமானதாகவே தோன்றும். ஆனாலும் இப்படி ஒரு கருத்து இருக்கிறது. பல்லாயிரம் யானைகளைக் கொண்டு பெரிய கோவில் கட்டப்பட்டது என்பது பலரின் கூற்றுதான். அதே நேரத்தில் இன்னும் சிலர் முப்பது அடி உயர மனிதர்கள் கதையைக் கூறுகிறார்கள்.

உண்மையில் அறிவியலில் மேம்பட்டதாக நம்பிக்கொண்டிருக்கும் 21ம் நூற்றாண்டிலேயே மனிதர்களின் மரபணுவை மாற்றி 30 அடிக்கு உயரமாக்க முடியும் என்பது அதிர்ச்சியளிக்கு எளிதில் நம்பமுடியாததாக இருக்கிறது. மரபணு மாற்றம் செய்து ஆயிரக்கணக்கான 30 அடி கொண்ட வீரர்களை உருவாக்கி அவர்கள் மூலம் கட்டப்பட்டது இந்த கோவில் என்ற கருத்துக்களை சிலர் கூறுகின்றனர். இதை நிரூபிப்பதற்கான சான்றுகள் பெரிய அளவில் இல்லை என்பதே உண்மை.

Thamizhpparithi Maari

நம்பாவிட்டாலும் ஏலியன்கள் வந்தது உண்மை

நம்பாவிட்டாலும் ஏலியன்கள் வந்தது உண்மை


நமக்கு நம்பிக்கை இல்லை என்றாலும் ஏலியன் வந்தது உண்மை என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்களில் சிலர். தற்போது வேற்று கிரகவாசிகள் இருப்பை உறுதி செய்வதற்காக பல்வேறு சமிக்ஞைகள் அடங்கிய சிக்னல்களை வெளி உலகுக்கு அனுப்பி வருகின்றனர் அறிவியலாளர்கள். இவர்களே இன்னும் ஏலியனைக் கண்டுபிடிக்கமுடியாத போது ஆயிரம் வருடங்களுக்கு முன் எப்படி ஏலியன்கள் என்ற சந்தேகம் இருந்தாலும், இதை மெய்ப்பிக்க முயல்வோர், ஏலியன்கள் இந்த உலகத்துக்கு வந்து அவர்களின் அறிவியல் வளர்ச்சி காரணமாக இங்குள்ளவர்களுடன் இணைந்து இந்த மாதிரியான கட்டமைப்பை உருவாக்கியுள்ளனர் என்கிறார்கள்.

Thamizhpparithi Maari

ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகர தகவல்கள்

ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அதிர்ச்சிகர தகவல்கள்


ஏலியன்கள் வந்து செல்ல உதவியாக இருக்கும் வார்ம் ஹோல்களை தஞ்சை பெரிய கோயிலில் அமைத்திருப்பதாக இந்த ஆய்வாளர்கள் கருதுகின்றனர். எல்லாமே யூகத்தின் அடிப்படையில் என்றாலும், இதை மெய்ப்பிக்கும் வகையில் புற காரணிகளையும் எடுத்துக்காட்டுகிறார்கள் அவர்கள். வேற்று கிரகங்களிலிருந்து பூமிக்கு வந்து செல்ல ஒரு ஊடுறுவு பாதையாக அமைக்கப்பட்டதே இந்த பெரிய கோவில் என்றும் அதை சாதாரண மனிதர்கள் கட்டவில்லை என்றும் கூறி அதிர வைக்கிறார்கள் ஆய்வாளர்களில் சிலர்.

Nandhinikandhasamy

 கோயில்களில் கருவூலங்கள்

கோயில்களில் கருவூலங்கள்

கோயில்கள் வெறுமனே வழிபாட்டுத் தலங்களாக உருவாக்கப்பட்டவை அல்ல என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள். அந்த காலத்தில் மன்னர்கள் கருவூலங்களைப் பாதுகாக்க கோவில்களை உருவாக்கி, அதற்குள் யாரும் செல்ல முடியாத ரகசிய பாதைகள் உருவாக்கி, நம்பிக்கை உடையவர்களுக்கு மட்டும் தெரிந்த வகையில் வைத்துள்ளனர். இதற்கு மேல் கோயில்களைக் கட்டி, வெளி மக்கள் செல்லா வண்ணம் தடுத்திருக்கிறார்கள். உண்மையில் கோயில்கள் கடவுள் வழிபாட்டுக்காக மட்டுமல்ல கருவூலங்களைப் பாதுகாக்கவும்தான் என்கிறார்கள். சில மன்னர்கள் தங்களின் கருவூலங்களை கடவுள் காப்பார் என்பதற்காக கோயில்களை அமைத்ததாகவும் நம்புகின்றனராம். இப்போதும் கூட பெரும்பான்மையான கடைகளில் கல்லா பெட்டிக்கு மேல் அல்லது அருகில் கடவுளின் புகைப்படம் இருப்பதை பார்க்கலாம். இது அப்படியான ஒரு பழக்கத்தை தொடர்ந்து வந்ததாகவே நம்பப்படுகிறது.

அதை மெய்யாக்கும் வகையில் திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலின் கருவறையில் இருந்த பொக்கிஷங்கள் குறித்த தகவல்கள் வெளியானது.

உலகம் அழியும் நாள்: பத்மநாபசுவாமி கோயிலின் கடைசி அறையில் புதைந்துள்ள மர்மங்கள்

IM3847

 தஞ்சை கோயில் பொக்கிஷங்கள்

தஞ்சை கோயில் பொக்கிஷங்கள்

இதைப் போல தஞ்சை பெரிய கோயிலிலும் பொக்கிஷங்கள் இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. இங்கு இருக்கும் பொக்கிஷங்களை எடுத்தால் உலகம் அழியும், கெட்டது நடக்கும் என்று மக்களை நம்பவைத்திருக்கலாம் எனக் கூறுகிறார்கள் அறிவியலாளர்கள். சோழர்கள் தங்கள் ஆட்சிக் காலத்தில் உலகின் எத்தனை சாம்ராஜ்யங்களை பணிய வைத்து அவர்கள் மூலமாக வருமானம் பெற்றனர் என்பது வரலாறு மூலம் தெரியமுடிகிறது. அப்படியென்றால் இத்தனை சொத்துக்களும் எங்கே என்ற கேள்வியும் எழுகிறதல்லவா. அந்த பொக்கிஷங்கள் அனைத்தும் தஞ்சை பெரிய கோவிலுக்குள்ளேயே இருப்பதாக கூறுகிறார்கள். இப்படி இந்தியாவில் இருக்கும் எத்தனை எத்தனை கோவில்களையும் கணக்கிட்டால் பொக்கிஷங்களை அப்பப்பா தலை சுற்றுகிறதல்லவா?

Shanedeepak

 தலையாட்டி பொம்மையின் அறிவியல்

தலையாட்டி பொம்மையின் அறிவியல்

தஞ்சாவூருக்கு சுற்றுலா செல்பவர்கள் நிச்சயம் தெரிந்து வைத்திருப்பவர் தலையாட்டி பொம்மையை. அந்த பொம்பை எப்படி ஆட்டி விட்டாலும் மீண்டும் பழைய இடத்துக்கே வந்துவிடும். அப்படி ஒரு அறிவியல் அந்த பொம்மையில் இருக்கிறது. கீழே அரை வட்ட வடிவில், கோள வடிவ அடித்தளத்தை கொண்டிருக்கும். அதுதான் எந்த நிலையில் விட்டாலும் மீண்டும் பழைய நிலைக்கே திரும்பும் தொழில் நுட்பம்.

Satishmcc

 பெரிய கோவிலின் தொழில்நுட்பம்

பெரிய கோவிலின் தொழில்நுட்பம்

இப்போது தஞ்சை பெரிய கோவிலின் வடித்தை பாருங்கள். மேலே தஞ்சாவூர் தலையாட்டி பொம்மையைப் போலவே நீளமான உருவம். கீழே மண்ணில் புதைந்திருக்கும் பகுதி. நீங்கள் மண்ணில் புதைந்திருக்கும் பகுதியின் அடித்தளத்தின் தொழில்நுட்பத்தை பார்த்தால் புரியும். அது ரகசியமானது. இப்படியும் இருக்கலாம். பொம்மையின் அடித்தளத்தைப் போல எப்படி சரிந்தாலும் மீண்டும் எழும்படியான தொழில்நுட்பம். நிலநடுக்கம் உள்ளிட்ட எந்த இயற்கை சீற்றங்களாலும் பாதிக்கப்படாது இது.

Nicholas.iyadurai

 நம்பிக்கையை உடைக்கும் இவர்களின் பேச்சு

நம்பிக்கையை உடைக்கும் இவர்களின் பேச்சு


இது பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வரும் ஆய்வாளர்கள் சிலர் ஏலியன்கள்தான் இந்த கோவிலை கட்டியிருக்கவேண்டும் என்று அடித்து கூறுகின்றனர். இது நிச்சயமாக மனிதர்களின் தொழில்நுட்பமாக இருந்திருக்காது. யானைகளைக் கொண்டு குறிப்பிட்ட காலத்தில் இப்படி கட்டுவது என்பது சாத்தியப்படாது என்கிறார்கள் இவர்கள்.

Manavasi Krishnaswami Rangaswami

 அழித்தொழிக்கப்பட்ட 30 அடி மனிதர்கள்

அழித்தொழிக்கப்பட்ட 30 அடி மனிதர்கள்

கோவில் கட்டி முடிக்கப்பட்டதும் அவர்களில் 30 அடி மனிதர்கள் நிச்சயமாக அழிக்கப்பட்டிருப்பர் என நம்பப்படுகிறது. அவர்கள் மூலம் இன்னொரு சந்ததி வந்துவிடக் கூடாது என்பதிலும் ஆட்சியாளர்கள் கருத்தாக இருந்ததாகவும் நம்பப்படுகிறது. இது தற்கால அறிவியலுக்கு ஒத்து வந்தாலும்கூட இதன் பின்னணியை யோசியுங்கள். அத்தனை பெரிய மனிதர்களுக்கு எப்படி உணவளிப்பது, கட்டுப்படுத்துவது. அவர்களின் எண்ணிக்கை பெருகினால் மக்கள் உயிருக்கு அச்சம் ஏற்படும் என கருதியவர்கள்தான் அவர்களை ஒட்டுமொத்தமாக கொன்று புதைத்தனர் எனவும், அவர்களின் ஆத்மாவை அடங்கச் செய்யவே இப்படி ஒரு பிரம்மாண்ட சிவலிங்கமும், அதன் முன் நந்தியும் வைக்கப்பட்டுள்ளதாக நம்புகின்றனர்.

Allwyn Kingsley

சுற்றுலா அம்சங்கள்

சுற்றுலா அம்சங்கள்

என்னதான் இத்தனை விசித்திரங்கள் நமக்கு தெரியவந்தாலும் தஞ்சை பெரிய கோவிலுக்குள் நாம் செல்லும்போது அமைதியாகத்தான் இருக்கிறது. முற்றிலும் சுத்தமான, அழகிய வேலைப்பாடுகள் கொண்ட கோவில் கட்டிடங்களைப் பார்க்கும்போது அடடா எவ்வளவு பிரம்மாண்டம் என்றே சொல்லத் தோன்றுகிறது. உண்மையில் வேற்றுகிரக வாசிகள் வந்து செல்லும் வழி இதுவாக இருந்தால் ஏன் இப்போது வரவில்லை என்ற பகுத்தறிவு கேள்விகளுடன் தஞ்சாவூரின் முக்கிய அம்சங்களை சுற்றிப் பார்க்கலாம் வாருங்கள்.

தஞ்சைப் பெரிய கோவில்

நிச்சயமாக நீங்கள் பார்க்கவிரும்பும் இடம். அழகிய சுற்றுப்புறம். கோவில் மிகவும் நேர்த்தியான கட்டிடக் கலைகளால் ஆனது.

தலையாட்டி பொம்மைகள்

கோவிலுக்கு வெளிப்புறத்திலேயே மிக அழகான கைவினைப் பொருள்கள் விற்கப்படுகின்றன. தலையாட்டி பொம்மைகள் அவற்றில் முக்கியமானவையாகும்.

மனோரா கோட்டை

தஞ்சை நகரத்திலிருந்து 60 கிமீ தூரத்தில் அமைந்துள்ள இந்த கோட்டை முக்கிய சுற்றுலாத் தளமாகும்.

புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில்

தஞ்சாவூருக்கு வருபவர்கள் நிச்சயம் செல்லவேண்டிய கோவில்களுள் ஒன்று. 4 கிமீ தொலைவிலேயே இது அமைந்துள்ளது சுற்றுலாப் பயணிகளுக்கு எளிமையானதாக இருக்கும்.

Ramesh M

More News

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+