» »டேனிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஒரே தமிழக நகரம் எது தெரியுமா?

டேனிஷ் ஆட்சியின் கீழ் இருந்த ஒரே தமிழக நகரம் எது தெரியுமா?

Posted By: Staff

போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோட காமா ஐரோப்பாவில் இருந்து இந்தியாவை அடையும் கடல் வழியை கண்டுபிடித்த பிறகு இந்தியாவின் செல்வச்செழிப்பை பற்றி கேள்வியுற்றிருந்த நாடுகள் அனைத்தும் கடல் மார்கமாக இந்தியாவை அடைந்து வாணிபத்தில் ஈடுபட்டனர். 

ஆங்கிலேயர்கள், போர்த்துகீசியர்கள், பிரஞ்சுக்காரர்கள், டேனிஷ்க்காரர்கள், டச்சுக்காரர்கள் என 14-15ஆம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் ஆதிக்கம் செலுத்தியவர்கள் எல்லாம் இந்தியாவிற்கு வந்தனர். பின்னாளில் இந்தியாவிலேயே அவர்களுக்குள் பல போர்களும் நடந்திருக்கின்றன. இறுதியாக 18ஆம் நூற்றாண்டில் மொத்த இந்தியாவும் ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.

இன்றும் இந்தியாவில் பிரஞ்சுக்காரர்கள் ஆதிக்கம் செலுத்திய பாண்டிச்சேரி, போர்த்துகீசியர்களிடம் இருந்த கோவா போன்ற நகரங்களில் அந்நாட்டவர்களின் தாக்கத்தை காண முடியும். அப்படி டேனிஷ்க்காரர்கள் வசம் இருந்த ஒரு தமிழக நகரம் தான் தரங்கம்பாடி ஆகும். அந்நகரைப் பற்றிய சுவாரஸ்யமான விஷயங்களை தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்.   

தரங்கம்பாடியின் வரலாறு:

தரங்கம்பாடியின் வரலாறு:

முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியன் என்ற மன்னன் வழங்கிய நிலத்தில் கி.பி 1306ஆம் ஆண்டு மாசிலாமணி நாதர் என்ற சிவன் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இக்கோயில் கட்டப்பட்டதிலிருந்தே தரங்கம்பாடியின் வரலாறு துவங்குகிறது.

Sankara Subramanian

தரங்கம்பாடியின் வரலாறு:

தரங்கம்பாடியின் வரலாறு:

கி.பி 1620இல் டேனிஷ்க்காரர்கள் வரும் வரை தரங்கம்பாடி தஞ்சை நாயக்கர்கள் வசம் இருந்துள்ளது. பின்னர் இங்குவந்த டேனிஷ் கவர்னர் ஓவே க்ஜெட்டே என்பவர் கடல் வாணிபத்தில் ஈடுபட தரங்கம்பாடி சரியான இடமாக இருக்கும் என கருதவே அப்போதைய தஞ்சை நாயக்க மன்னன் ரகுநாத நாயக்கரிடம் அனுமதி பெற்று 'டென்ச்போராக்' என்ற கோட்டையை நிறுவியிருக்கிறார்.

Joseph Jayanth

தரங்கம்பாடியின் வரலாறு:

தரங்கம்பாடியின் வரலாறு:

இந்த கோட்டைதான் அடுத்த 150 ஆண்டுகளுக்கு டேனிஷ் வர்த்தகத்தின் தலைமை இடமாகவும், டேனிஷ் கவர்னரின் வசிப்பிடமாகவும் இருந்திருக்கிறது.

இன்று இக்கோட்டையினுள் டேனிஷ்க்காரர்கள் பயன்படுத்திய பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டு அருங்காட்சியகமாக செயல்படுகிறது.

Joseph Jayanth

கிருத்துவ மிஷனரிகள் வருகை:

கிருத்துவ மிஷனரிகள் வருகை:

தமிழகத்தில் முதன்முதலாக கிருத்துவ மிஷனரிகள் வந்த இடங்களில் தரங்கம்பாடியும் ஒன்று. கி.பி 1706ஆம் ஆண்டே ஜெர்மனியை சேர்ந்த இரண்டு ப்ரோடஸ்டன்ட் கிருத்துவ பாதிரியார்கள் தங்கள் மதத்தை பரப்புவதற்காக இங்கே வந்திருக்கின்றனர்.

கி.பி 1714ஆம் ஆண்டு புதிய ஏற்பாடு பைபிள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு அச்சு நூலாக வெளியிடப்பட்டிருக்கிறது.

Chenthil

ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பு:

ஆங்கிலேயர் ஆக்கிரமிப்பு:

1803-1815 ஆண்டுகளில் ஐரோப்பாவில் நெப்போலியன் தலைமையிலான போர் நடந்த வேளையில் 1808ஆம் ஆண்டு ஆங்கிலேயர் படை தரங்கம்பாடியை ஆக்கிரமித்தது.

பின்னர் 1814ஆம் ஆண்டு போடப்பட்ட கில் ஒப்பந்தத்தின் படி டேனிஷ்காரர்களிடமே தரங்கம்பாடி திரும்ப ஒப்படைக்கப்பட்டது.

Sankara Subramanian

ஆங்கிலேயரிடமே விற்கப்பட்ட தரங்கம்பாடி:

ஆங்கிலேயரிடமே விற்கப்பட்ட தரங்கம்பாடி:

1845ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்த இரண்டே டேனிஷ் காலணிய பகுதிகளான தரங்கம்பாடியையும், வங்காளத்தில் இருக்கும் செரம்ப்பூரையும் ஆங்கிலேயரிடமே விற்றுவிட்டனர் டேனிஷ்க்காரர்கள்.

இந்தியா முழுக்க ரயில் பாதைகளை அமைத்து பிரிட்டிஷ் அரசின் கிழக்கிந்திய கம்பெனி வர்த்தகம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்திருந்ததே இப்படி செய்ய காரணமாக சொல்லப்படுகிறது.

Joseph Jayanth

டேனிஷ் அருங்காட்சியகம்:

டேனிஷ் அருங்காட்சியகம்:

தரங்கம்பாடியில் இருக்கும் டேன்ஷ்போராக் கோட்டையினுள் டேனிஷ்க்காரர்கள் பயன்படுத்திய வாள்கள், கேடயங்கள், ஈட்டிகள் போன்ற போர்த்தளவாடங்கள், கண்ணாடிப் பொருட்கள், கற்சிற்பங்கள், பீரங்கி குண்டுகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

இந்தியாவில் டேனிஷ்க்காரர்கள் விட்டுச்சென்ற கடைசி ஆவணப்பாதுகாப்பு மையமாக இந்த அருங்காட்சியகம் திகழ்கிறது.

Mukulfaiz

புதிய ஜெருசலம் சர்ச்:

புதிய ஜெருசலம் சர்ச்:

ராயல் டேனிஷ் மிஷனரியால்1718ஆம் ஆண்டு கட்டப்பட்டது தான் இந்தபுதிய ஜெருசலம் சர்ச் ஆகும். 2004ஆம் ஆண்டு ஏற்ப்பட்ட சுனாமியால் கடுமையாக பாதிக்கப்பட்ட இந்த சர்ச் இப்போது புதிதாக மறுநிர்மாணம் செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் பிரார்த்தனை கூட்டம் இங்கே நடைபெறுகிறது.

Chenthil

புதிய ஜெருசலம் சர்ச்:

புதிய ஜெருசலம் சர்ச்:

தரங்கம்பாடியில் புதிய ஜெருசலம் சர்சை நிர்மாணித்த ராயல் டேனிஷ் மிஷனரியை சேர்ந்த பர்தலோமியோ சீசிங்ப்ளாக் அவர்களின் சிலை.

Michael Gaebler

கடற்கரை:

கடற்கரை:

டேனிஷ் கோட்டை தவிர மெரீனா கடற்கரை போல நீளமான கடற்கரை ஒன்றும் இருக்கிறது. இந்த கடற்கரையில் அலைகள் வந்து மோதும் போது ஏதோ பாடல் பாடுவது போன்ற காதுக்கு இதமான ஓசை கேட்கும்.

இதனாலேயே 'அலைகள் கவிபாடும் தரங்கம்பாடி' என இவ்விடம் அழைக்கப்படுகிறது.

Sankara Subramanian

தரங்கம்பாடி படங்கள்:

தரங்கம்பாடி படங்கள்:

தரங்கம்பாடியின் சில அழகிய புகைப்படங்களின் தொகுப்பை காணலாம்.

Joelsuganth

தரங்கம்பாடி படங்கள்:

தரங்கம்பாடி படங்கள்:

தரங்கம்பாடியின் சில அழகிய புகைப்படங்களின் தொகுப்பை காணலாம்.

Mukulfaiz

தரங்கம்பாடி படங்கள்:

தரங்கம்பாடி படங்கள்:

தரங்கம்பாடியின் சில அழகிய புகைப்படங்களின் தொகுப்பை காணலாம்.

Joseph Jayanth

தரங்கம்பாடி படங்கள்:

தரங்கம்பாடி படங்கள்:

தரங்கம்பாடியின் சில அழகிய புகைப்படங்களின் தொகுப்பை காணலாம்.

Mukulfaiz

தரங்கம்பாடி படங்கள்:

தரங்கம்பாடி படங்கள்:

தரங்கம்பாடியின் சில அழகிய புகைப்படங்களின் தொகுப்பை காணலாம்.

Mukulfaiz

தரங்கம்பாடி படங்கள்:

தரங்கம்பாடி படங்கள்:

தரங்கம்பாடியின் சில அழகிய புகைப்படங்களின் தொகுப்பை காணலாம்.

Sankara Subramanian