Search
  • Follow NativePlanet
Share
» »குழந்தை பாக்கியம் தரும் ஆலபுழா ஸ்ரீ நாகராஜா ஆலயம் மற்றித் தெரியுமா? அதன் வரலாறை கொஞ்சம் தெரிந்து க

குழந்தை பாக்கியம் தரும் ஆலபுழா ஸ்ரீ நாகராஜா ஆலயம் மற்றித் தெரியுமா? அதன் வரலாறை கொஞ்சம் தெரிந்து க

By Balakarthik Balasubramanian

இயற்கையை வணங்காமல் நான் வேறு எவற்றை வணங்கபோகிறேன் என்னும் குரலை இந்தியர்கள் ஒவ்வொரிடமும் நம்மால் கேட்க முடியும் என்பதே உண்மை. ஆம், கவலையுடன் முடங்கி கிடக்கும் பலருக்கும் அசைந்து ஆடும்

மரங்கள் ஆறுதலாய் இருக்க, வார்த்தையின்றி ஏதோ சிந்தனையில் இருக்கும் நம்மை...குரல் கொடுத்து அழகிய கவனத்திற்கு கொண்டு செல்லும் விலங்குகள் இங்கே பல இருக்க, பாதை மாறி சென்று விட்டோமோ? என

வாழ்வில் பயந்து கடவுளிடம் போய் நிற்க...அங்கிருக்கும் பாம்பு நமக்கு ஆறுதலை கூற...இயற்கையை கடவுளாய் இந்தியர்கள் வணங்குவது ஒன்றும் தவறில்லை தானே. அப்படி நாகங்களால், கவலையை தீர்த்து மனதினை

கண்குளிர செய்யும் அழகிய இடம் தான் கேரளாவில் இருக்கும் இந்த மன்னரசாலா ஸ்ரீ நாகராஜா ஆலயம். அப்படி என்ன தான் இங்கே இருக்கிறது? வாங்க பார்க்கலாம்.

இந்த மன்னரசாலா ஸ்ரீ நாகராஜா ஆலயம் மிகவும் பழமை வாய்ந்த ஒரு ஆலயமாகும். சர்பத்திற்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்த இடம், அங்குள்ளவர்கள் இதழ்களில் புகழ்ச்சியின் உச்சியில் குடிகொண்டு மனதில் பக்தியை

விதைக்கிறது. மன்னரசாலாவின் புகழ்பெற்ற இந்த நாகராஜா ஆலயம் வனத்தில் அமைந்து நம் மனதை காட்சிகளால் கவர்கிறது. சர்ப்பங்களுக்கு அர்ப்பணிக்கப்பட்ட பல இடங்கள் இந்தியாவிலிருந்தாலும்...இங்கே தான் 30,000

பரிணாமங்களில் சர்பம் அமைந்து வெவ்வேறு வடிவத்திலும் அளவிலும் இருக்கிறது என ஆச்சரியத்துடன் இங்கே வருபவர்கள் இந்த ஆலயம் பற்றி பெருமை பொங்க பேசுகின்றனர். அந்த சர்ப்பங்களை சுற்றி பாதைகளும்

மரங்களும் அமைந்து அழகிய காட்சியை எதிர்ப்பார்ப்பின்றி கருவிழிகளுக்கு வழங்க...'கேரளாவில் இருக்கும் பெரிய ஆலயமும் நான் தான்..' என கர்வத்துடன் காட்சியளிக்கிறது இந்த கோவில்.

கேரள மாநிலத்தின் ஆழப்புழா மாவட்டத்திலுள்ள ஹரிப்பாத் நகரத்தில் அமைந்திருக்கும் இந்த ஆலயம், குழந்தைகள் அற்ற பெண்கள்...இங்கே வந்து வழிபடுவதன் மூலம் குழந்தை பாக்கியம் பெற்று மனம் மகிழ்கிறார்கள்

என்னும் அதிசய கருத்தையும் தாங்கிகொண்டு பெருமையுடன் நிற்கிறது. என்ன? நம்பமுடியவில்லையா? இங்கே வந்து வேண்டி செல்வோர்கள், மீண்டும் வரும்பொழுது குழந்தையை தோளில் சுமந்துகொண்டு வந்து சிறப்பு

பூஜைகள் செய்து ஆச்சரிய பார்வை பார்க்க...நம்மால் இதனை நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. ஆம், கைகளில் பாம்பு படத்தை தட்சனையாக தாங்கிகொண்டு வரும் நிறைய பெண்களை நம்மால் இங்கே பார்க்க முடிகிறது

என்பதே உண்மை.

இந்த தோற்றத்துடன் சம்பந்தப்பட்ட புராண கதைகளை நம்மால் கருதமுடியவில்லை. மன்னரசாலாவின் வளர்ச்சியாக நினைக்கப்படும் இந்த ஆலயம், சர்ப்பங்களை வணங்கும் கோவில்களில் முதன்மையான ஒரு இடத்தை

பெற்று சிவபெருமானோடு தொடர்புடையதாகவும் சொல்லபடுகிறது. ஆம், அவர் தான் இந்த கேரளாவை உருவாக்கியவர் எனவும் பல கதைகள் உண்டு.

 ஆலயத்தை காண ஏதுவான காலங்கள்:

ஆலயத்தை காண ஏதுவான காலங்கள்:

வருடத்தில் எப்பொழுது சென்றாலும் அருளை வழங்க காத்திருக்கும் இந்த ஆலயம், சிவராத்திரியின் போது மட்டும் கடும் கூட்டத்துடன் காணப்படுகிறது. அத்துடன் சில முக்கிய விசேஷ நாட்களிலும் இந்த ஆலயம்..பெரும்

திரளுடன் காணப்பட்டு கண்களிற்கு இனிய காட்சியை சமர்ப்பிக்கிறது.

official site

 கேரளாவின் எழுச்சிக்கு பின்னால் இருக்கும் கதை தான் என்ன?

கேரளாவின் எழுச்சிக்கு பின்னால் இருக்கும் கதை தான் என்ன?

பரசுராமர், ஷாஷ்திரிகளை கொன்ற பாவத்திலிருந்து விலகி வெளிவர வேண்டுமென எண்ணினார். அதனால் அவர் ஹோலி ரிஷிகளை சந்திக்க அவர்களோ...பிராமணர்களுக்கு ஒரு இடத்தை பரிசாக தரவேண்டுமென

பரிந்துரை செய்தனர்.

அதனால் பரசுராமர், வருண பகவானிடம் (கடல்களின் கடவுள்) தனக்கு சில நிலத்தை அளிக்குமாறு வேண்டிக்கொண்டு தன் கரங்களில் இருந்த கோடாரியை தூக்கி கடலுக்குள் எறிய, அதன் கடல் பரப்பு கொஞ்சம் கொஞ்சமாய்

மேலெழுந்தது. அதனை அவர் பிராமணர்களுக்கு பரிசாக அளிக்க, அந்த இடமே...இன்று கேரளா என அழைக்கபடுகிறது என ஒரு வரலாறு உண்டு.

இருப்பினும் அந்த நிலம், கடல் தெய்வம் மூலம் கிடைத்தமையால்...உப்பு கரிப்பின்மையை உணர்ந்து, ‘இது வாழத்தகும் இடமில்லை...' என முடிவு செய்தனர். இதனால் பெரும் துயரத்துக்கு தள்ளப்பட்ட பரசுராமர் மனம்,

சிவபெருமானிடம் சென்று ஒரு தவம் மேற்கொண்டார். அவரோ...இந்த உப்பு கரிப்புதன்மையை போக்க, ஒரே வழி கக்கும் பாம்புகளின் விஷமே என்றார்.

அங்கிருந்து மீண்டும் மற்றுமொரு தவத்தை நாக தெய்வத்திடம் பரசுராமர் வேண்ட முன் வந்தார். அவர் தனது சீடர்களுடன் இணைந்து, நாகராஜரை பிரியபடுத்த ஒரு வனபகுதிக்குள் சென்றார். இருப்பினும் அவரால்

அனுகமுடியவில்லை. அதனால் கடற்கரைக்கு மிக அருகில் ஒரு இடத்தை தேர்ந்தெடுத்த அவர், தீர்த்தஸ்தலம் ஒன்றினை அங்கே நிறுவி தன் தவத்தை தொடங்கியதாகவும் வரலாறு கூறுகிறது.

official site

 நாகராஜர் அவர் முன் தோன்றிய விதம்:

நாகராஜர் அவர் முன் தோன்றிய விதம்:

பரசுராமரின் தவத்தால் மகிழ்ச்சி அடைந்த நாகராஜர்... அவர் கண் முன் தோன்றி காட்சியளித்து, அவர் விருப்பத்தையும் அளிக்க தயாரானார். அதனால், அந்த முனிவர் நாகராஜரின் கால்களில் விழுந்து பிரார்த்தித்து தன்

எண்ணத்தை நாகராஜரின் முன் வைத்தார். அவரின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்த நாகராஜர், மூர்க்கத்தனமான பாம்புகளை அந்த இடத்திற்கு அனுப்பி வைத்தார். அந்த பாம்புகள், இடத்தை ஆக்கிரமித்து...கால்கா

விஷத்தினை எங்கும் கக்க தொடங்கியது.
அதன் பிறகு தான் கேரளாவில் வசிப்பதற்கான அனைத்து வசதிகளும் உருவாகி பசுமையாக மாறியது. அதனால் மகிழ்ச்சியடைந்த பரசுராமர், அந்த நிலத்திலேயே கடவுளை தங்கும்படி வேண்டிகொண்டார். அதற்கும் செவி

சாய்த்த நாகராஜர், அங்கேயே தங்கி...அங்கு வாழும் அனைவருக்கும் ஆசிகளை வழங்கிகொண்டிருப்பதாக புராண கதைகளின் வாயிலாக நமக்கு தெரிய வருகிறது.
official site

 நிறுவலை பற்றிய சில தகவல்கள்:

நிறுவலை பற்றிய சில தகவல்கள்:

பரசுராமர் சில வேத சடங்குகளுடன் இனிதே விழாக்களை செய்ய, அங்கே அருகிலிருந்த மந்த்ரா மரங்களில் நாகராஜர் தங்க ஆசைகொண்டார். அதனாலே அந்த இடத்திற்கு ‘மந்திரசாலா' என்னும் பெயர் வந்ததாகவும்

வரலாறு கூறுகிறது. காலப்போக்கில் அது ‘மன்னரசாலா' என்றும் அழைக்கப்பட்டது. அங்கே நிறுவப்பட்ட தெய்வங்கள், ஆனந்தத்தை குறிக்க...விஷ்னுபெருமான் தன்னையும், பக்தியுடன் சிவனை வணங்கிய வாசுகியையும்

பார்த்துகொண்டிருக்கிறார் எனவும் சொல்லப்படுகிறது.

பரசுராமர், பூஜைகளை செய்வதற்கு தந்திரிக வல்லுனர்களான பிராமனை நியமிக்க, மருத்துவர்கள் மத்தியில் உச்ச புகழை எட்டிய ஷாஷ்திரிகளையும், விவசாயிகளையும், அஷ்டவைத்தியர்களையும்

பரிந்துரைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதனால், அவர்களை கேரளாவுக்கு அழைத்து வந்து பசுமை மற்றும் செழிப்பினையும் தரவேண்டுமெனவும் எண்ணினர். மேலும் அவர், புனிதத்தன்மையை பாதுகாக்கும்

நோக்கத்துடன் சில அறிவுரைகளை வழங்கி சென்றதாகவும் வரலாறு கூறுகிறது.
official site

 வாசுதேவா மற்றும் ஸ்ரீ தேவியின் கதை:

வாசுதேவா மற்றும் ஸ்ரீ தேவியின் கதை:

எத்தனை தலைமுறைகள் கடந்தாலும்...ஒரு குறிப்பிட்ட குடும்பம் மட்டும் குழந்தையின்மை என்னும் கவலையால் வாடி தவித்து கொண்டிருந்தது. தன் கவலைகளுக்கு முடிவினை தேட எண்ணிய வாசுதேவனும், ஸ்ரீ தேவியும்

நாகராஜனை வழிபட...எதிர்பாராதவிதமாக காட்டில் தீ மூண்டு, அது நாகராஜனை சூழ்ந்து வனம் முழுவதும் தீக்கிரையாக தோன்றியது.

தீயின் தாக்கத்தால் தவித்த அங்கிருந்த பாம்புகள், அந்த கடின சூழ்நிலைகளை விட்டு தப்பிக்க வழிதேடி குழிகளுக்குள் சென்று மறைந்து கொண்டது. அதனை கண்ட அந்த ஜோடிகள், பாம்பினை கவனமாக பார்த்துகொள்ள

முற்பட, அவர்களுடைய தலையில் தீக்காயம் ஏற்பட்டு நிமிடத்திற்கு நிமிடம் தத்தளித்து மயங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். அவர்கள் இனிமை மிக்க புற்களையும், நெய்யுடன் தேன் மற்றும் எண்ணெயை கலந்து

ஊற்றி...காயங்களில் தடவி, சந்தனக்கட்டை பேஸ்டினை கொண்டு உருகிய உடலை ஒட்ட வைத்து இதமானதொரு உணர்வினை தேடி அலைந்தனர்.
official site

மன்னர்சாலா

மன்னர்சாலா


குழிகளுள் ஒளிந்துகொண்ட பாம்புகள் நலமடைய, ஆலமரத்தின் அடியில் தஞ்சம் புகுந்து அங்கே தங்குதவதற்கு ஏதுவான குழியினை தனக்கென உருவாக்கிகொண்டது. அந்த ஜோடிகள்... அங்கிருக்கும் பாம்புகளுக்கு நெய்,

பால், பாயாசம், அரிசி பவுடர், மஞ்சள் பவுடர், தேங்காய் சாறு, வாழைப்பழம், பசும்பால் ஆகியவற்றினை பிசைந்து பூஜைகளை செய்து நாகராஜனை வணங்கினர். அதனை ‘நூரம் பாளம்' என்றும் அழைத்தனர். அந்த பூஜை

முறை இன்று வரை பின்பற்றி வரப்படுவது நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.

இத்தகைய சடங்குகளால் பெரிதும் மகிழ்ச்சி அடைந்த நாகராஜர், அந்த ஜோடிகளின் முன்பு காட்சியளித்து...அவளுக்கு பிடித்த பாம்பு வடிவத்தை வேண்டிகொண்டு இங்கேயே தங்க...தான் குழந்தையாக அவதரிப்பதாக

அவர்களிடம் கூறினார். அவர் தந்த வரம் நிஜமாக...அந்த பெண் பிரசவித்தாள். அந்த பெண், ஐந்து தலை நாகத்தை ஈன்றெடுக்க, அத்துடன் ஒரு மனித குழந்தையும் பிறந்தது.
official site

 இரண்டு சகோதரர்கள் :

இரண்டு சகோதரர்கள் :

அண்ணன் தம்பி இரண்டு பேர் வளர்ந்து ஒன்றாக வாழ...இளைய சகோதரனிடம் நாகராஜர் விவாகத்தில் நுழையுமாறு அறிவுரை வழங்கினார். ஆம், ஒரு புனிதத்துவம் கொண்ட குடும்பத்தில் நிரந்தர இடத்தை பிடித்து...அங்கேயே

மரியாதை நிமித்தம் இருக்க வேண்டுமெனவும் அவர் கூறினார்.
அவரது அவதாரத்தின் நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டதாக நாகராஜர் உணர்ந்தபோது, அவன் தன் தாயிடம் ‘நான் இங்கே தான் இருப்பேன்' என திட்டவட்டமாக கூறி, சில சடங்குகளையும், விதிகளையும்

பரிந்துரைத்து...பாதாளத்தில் சென்று மறைந்துகொண்டான்.

இன்றும்...அந்த ஐந்து தலை நாகம் பாதாளத்தில் தவம் செய்துகொண்டிருப்பதாகவும், அவரது சார்பினாலே அந்த இடம் செழிப்புடன் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. வீட்டின் உறுப்பினர்கள் அவரை முத்தசன் மற்றும் அபோப்பன்

(தாத்தா) போல் நேசிக்கிறார்கள் ... அதனால் இந்த வனத்தின் உள்ளே அமைந்திருக்கும் கோவில் வளாகம் மூடப்பட...அதனை ‘அப்போப்பன் காவு' அல்லது ‘தாத்தாவின் குரோவ்' என்றழைக்கின்றனர்.

official site

 மன்னரசாலா அம்மா:

மன்னரசாலா அம்மா:

மற்ற ஆலயங்களை காட்டிலும் வித்தியாசமாக கடைப்பிடிக்கப்படும் நம்பிக்கைகளும், சம்பிரதாயங்களும் நம்மை ஆச்சரியத்தின் எல்லைக்கே அழைத்து செல்கிறது. அத்துடன் அரிதான ஆலயமான இங்கே நடக்கும்

பூஜைகளை பிராமண பெண் ஒருவர் செய்வது நம்மை சிலிர்க்க செய்கிறது. புராணத்தின் மூலம் நமக்கு தெரியவருவது என்னவென்றால்...முத்தாசன் பாதளத்திற்கு செல்லும்பொழுது. அவன் சில குறிப்புகளை தன் தாயிடம்

தந்துவிட... அவளும் அதனை கடைபிடித்து அவனுக்காக வழிபட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த குறிப்பிட்ட நாள்களில் மட்டுமே ஆண்கள் அனுமதிக்கப்படுகிறார்கள் என்ற உண்மை நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. ஒரு

குறிப்பிட்ட காலத்தில் மட்டும்... அந்த குடும்பத்தின் மூத்த பிராமண பெண் ஒருவரின் தாய்மையில் நிலை புலப்படுவதாக நம்பப்படுகிறது.
ஆலயத்திற்கு வரும் பக்தர்கள், அம்மாவை தான் தரிசனம் செய்கிறோம் என்பதை உறுதியும் செய்துகொள்கிறார்கள். அங்கே எழுந்தருளும் அம்மா. முழுமனதுடன் அனைவரையும் ஆசிர்வாதித்து பெருமை நீங்கா தன்மையுடன்

கண்களுக்கு அழகிய காட்சிகளை பரிசாக தருகிறாள்.
official site

 ஆலயத்தின் நேரம்:

ஆலயத்தின் நேரம்:


மன்னரசாலா நாகராஜ ஆலயம் காலை 5 மணி முதல் மதியம் 12 மணி வரை திறந்து காணப்படுகிறது. அதேபோல் மாலை 5.30 மணிக்கு திறக்கப்படும் இந்த ஆலயம், மாலை 7.30 மணிக்கு மூடப்படுகிறது.
official site

Read more about: travel temple
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X