Search
  • Follow NativePlanet
Share
» »தமிழகத்தின் தனித்தீவு “அழகிய தெங்குமரஹடா” – வெளி ஆட்களுக்கு கட்டாயம் அனுமதி கிடையாது!

தமிழகத்தின் தனித்தீவு “அழகிய தெங்குமரஹடா” – வெளி ஆட்களுக்கு கட்டாயம் அனுமதி கிடையாது!

தமிழகத்தில் பலருக்கும் தெரியாத கேள்விப்பட்டிராத 'தெந்குமரஹடா' என்கிற அழகிய மலைவாழ் கிராமம் தமிழகத்தின் தனித்தீவு என்றே அழைக்கப்படுகிறது. இந்த கிராமத்திற்கு உள்ளே செல்ல, வெளி ஆட்களுக்கு கட்டாயம் அனுமதி இல்லையாம். ஆம்! அப்படி ஒரு வித்தியாசமன ஊர் நீலகிரி மாவட்டத்தில் இருக்கும் தெந்குமரஹடா, ஒரு பக்கம் சத்தியமங்கலம் மறுபக்கம் நீலகிரி மலைத்தொடர்களால் சூழப்பட்டிருக்கும் தெந்குமரஹடாவை அனுமதியின்றி எவரும் அணுக முடியாது. உள்ளூரில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே அனுமதி, நீங்கள் திருட்டுத்தனமாக செல்ல முயன்றாலும் திருப்பி அனுப்பப்படுவீர்கள். அப்படி என்ன தான் இருக்கின்றது இந்த மலைவாழ் கிராமத்தில், எதனால் இவ்வளவு பாதுகாப்பு என்று தெரிந்துக் கொள்வோம் வாருங்கள்!

1

வனவிலங்குகளை பாதுகாக்கவே வெளி ஆட்களுக்கு அனுமதி இல்லை

வெளி ஆட்களுக்கு அனுமதி கொடுக்காத இந்த தெந்குமரஹடா என்ற அழகிய கிராமம் நீலகிரி மாவட்டத்தில் மாயாறு நதிக்கு அமைந்துள்ளது. இந்த நதியில் எப்போது நீர்வரத்து அதிகமாக இருக்கும் எப்போது குறைந்து காணப்படும் என்பது அந்த உள்ளூர் மக்களாலே கணிக்க முடியாத விஷயமாகும். ஒரு பக்கம் சத்தியமங்கலம் புலிகள் சரணாலயமும் மறுபக்கம் முதுமலை புலிகள் சரணாலயமும் இந்த அழகிய மலைவாழ் கிராமத்தை சூழ்ந்துள்ளது. தேவையின்றி வன விலங்குகளுக்கு எந்தவித தொந்தரவுகளும் ஏற்படக்கூடாது என்பதற்காகவே இங்கு வெளியாட்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாக தெரிகிறது.

உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இருந்தால் உள்ளே செல்லலாம்

அது என்னவென்றால் உங்களுக்கு தெரிந்த நண்பர்களோ அல்லது உறவினர்களோ அந்த ஊரில் வசித்தால் நீங்கள் தெந்குமரஹடாவிற்கு சென்று வரலாம். சுற்றிப்பார்க்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இப்படி பொத்தி பொத்தி வைத்து இருக்கிறார்களே, அப்படி என்ன தான் இங்கே இருக்கிறது, ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்ற நோக்கில் பலர் அத்துமீறி உள்ளே நுழைவதால், வனத்துறையினர் கட்டுப்பாடுகளின் கீழ் அனுமதி கொடுத்து வருகின்றனர். நீங்கள் வனத்துறையிடம் சிறப்பு அனுமதி வாங்கிய பின்னர் தெந்குமரஹடாவிற்கு வருகை தரலாம்.

உள்ளூர் மக்களுக்கும் சோதனை கட்டாயம்

அதே போல இந்த ஊருக்கு நீங்கள் உங்கள் சொந்த வாகனங்களில் செல்ல இயலாது. 30 கி.மீ முன்னரே தடுத்து நிறுத்தப்பட்டு மலைவழியாக செல்வதற்கு அறிவுறுத்தப்படுவீர்கள். இந்த ஊருக்கு 2 பேருந்துகள் இரண்டு வெவ்வேறு ஊர்களில் இருந்து இயங்குகின்றன. ஒரு பேருந்து கோயம்புத்தூரிலிருந்தும், மற்றோரு பேருந்து கோத்தகிரியிலிருந்தும் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் இரண்டும் பவானி சாகர் அணைக்கு அருகே இருக்கும் சோதனைச்சாவடியில் நிறுத்தப்பட்டு உள்ளே இருக்கும் பயணிகள் உள்ளூர் மக்கள் தானா என்று சரிபார்க்கப்படுவார்கள்.

2

5 மணிநேர ஒற்றை வாகன சவாரி

வனவிலங்குகளுக்கு தொந்தரவு இல்லாத சுற்றுலாவை ஊக்குவிக்கும் விதமாக வனத்துறையே பாதுகாக்கப்பட்டக் காடுகள் வழியாக சஃபாரிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகங்கள் புலிகள் மற்றும் பாலூட்டிகளின் எண்ணிக்கையில் கணிசமான அதிகரிப்பைக் கொண்டிருப்பதால், இந்த சவாரிகள் எப்போது வேண்டுமானாலும் இடைநிறுத்தப்படலாம். ஆனால் அனுமதி கொடுக்கப்படும் போதே நீங்கள் இந்த அழகிய ஊருக்கு சென்று வாங்களேன். ஒரு தலைக்கு 650 என்ற பெயரளவு விலையில் 5 மணிநேர காடுகளின் ஒற்றை வாகன சவாரியை இந்தியாவில் எங்கும் நீங்கள் அனுபவிக்க முடியாது.

மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும் தெந்குமரஹடா

நீலகிரி சரிவுகள் மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலையின் திம்பம் மலைகளின் அற்புதமான காட்சிகளைக் கொண்ட பிரபலமான சுற்றுலாத் தலமான கோத்தகிரிக்கு அருகிலுள்ள கோடநாடு காட்சிப் புள்ளியில் இருந்து தீப்பெட்டி அளவில் இந்த கிராமத்தைக் காணலாம். மேற்கு மற்றும் கிழக்கு தொடர்ச்சி மலைகளுக்கு நடுவே அமைந்து, சத்தியமங்கலம் மற்றும் முதுமலை புலிகள் காப்பகங்களால் சூழப்பட்டு, வெளியாட்களின் தடைகள், முறையான சாலை, பாலங்கள், போக்குவரத்து, தெங்குமரஹாடா வாழ்க்கை ஒரு தனித்துவமான அனுபவத்தை உங்களுக்கு கொடுக்கும்.

பலதரப்பட்ட வன விலங்குகளையும் காணும் அரிய வாய்ப்பு

இந்த பகுதி ஒரு காலத்தில் சந்தன மர வீரப்பனால் ஆளப்பட்டது, ஆனால் அவர் இறந்ததிலிருந்து வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. எனவே இந்த கிராமத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. வனத்துறையிடமிருந்து அனுமதி பெறுவதே சிறந்த வழி, நீங்கள் சத்தியமங்கலத்தில் உள்ள DFO அலுவலகத்திலிருந்து அனுமதி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. நீங்கள் செல்லும் வழியில், புள்ளிமான்கள், கருங்குரும்புகள், கௌர், யானைகள் மற்றும் சாம்பார் போன்ற வனவிலங்குகளைக் கண்டறிய நிறைய வாய்ப்புகள் உள்ளன. சிறுத்தை, புலி, கரடி, காட்டுப் பூனை போன்றவற்றின் அடையாளங்களையும் நீங்கள் காணலாம்.

எப்படி செல்வது

தேங்குமரஹடா "நீலகிரியின் அரிசிக் கிண்ணம்" சீகூர் பீடபூமியில் மோயார் பள்ளத்தாக்கில் உள்ள ஏழு பழங்குடியின கிராமங்களில் மிகப்பெரியது. நீலகிரி மாவட்டத்தின் ஓரங்களில் அமைந்திருந்தாலும், ஈரோடு மாவட்டம் பவானிசாகரில் இருந்து 3 கி.மீ தொலைவில் உள்ள கராச்சிக்கொரையிலிருந்து தொடங்கும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் வழியாக இக்கிராமத்திற்கு ஒரே குண்டும் குழியுமான சேறு நிறைந்த சாலை உள்ளது. கராச்சிக்கொரையில் உள்ள போலீஸ் மற்றும் வனச் சோதனைச் சாவடி நுழைவாயில் வழியாக செல்லலாம். செல்வதற்கு முன் வனத்துறையினரிடம் அனுமதி பெற்றிருப்பது அவசியம்.

இதைப் படிக்கும் வனவிலங்கு ஆர்வலர்கள் எவருக்கும் இந்த 5 மணி நேர 50 கிமீ சவாரியை அனுபவிப்பது உங்கள் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவமாக இருக்கும்!

More News

    Read more about: nilgris tamilnadu
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+