Search
  • Follow NativePlanet
Share
» »தென்மலை - செங்கோட்டையருகே ஒரு சொர்க்கம்

தென்மலை - செங்கோட்டையருகே ஒரு சொர்க்கம்

By Staff

தென்மலை எனும் சுற்றுலா தலம் கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில், புனலூருக்கு அருகே அமைந்துள்ளது. தென்மலை, இந்தியாவில், திட்டமிட்டு அமைக்கப்பட்ட‌ சூழலியல் சுற்றுலா தலமாகும் (Eco-Tourist Place).

Thenamalaidam

Photo Courtesy : Junaidpv

மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருக்கும் ஊர் தென்மலை, செங்கோட்டையிலிருந்து 29 கி,மீ தொலைவில் இருக்கிறது. இயற்கையின் மொத்த குத்தகையாய் இருக்கும் தென்மலை அவசியம் காண வேண்டிய சுற்றுலா தலமாகும்.

தென்மலை பெயர் காரணம்: மலையாளத்தில் தென் என்றால் தேன், மல என்றால் மலை. சுற்றியும் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் கொண்ட செடிகள், தாவரங்கள் செழித்து வளரும் இடம். உள்ளூர் முதல் வெளிநாட்டுப் பயணிகள் வரை விரும்பி வரக்கூடிய இடம்.

தென்மலையில், சாகசம், ஓய்வு, கலாச்சாரம் என்று மூன்றுவிதமான மண்டலங்கள் இருக்கின்றன. இந்த மூன்று மண்டலங்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும் என்பது குறிப்பிடத்தக்கது.

படகுத்தளம், கயிறு பாலம், மலையேற்றம், இசை நீரூற்று என பல வகை சுற்றுலா ஈர்ப்புகள் இருக்கின்றன.

இதைத்தவிர பாலருவி என்ற அழகிய நீர்வீழ்ச்சியும் இருக்கிறது. மான்கள் புனர்வாழ்வு மையம் இருக்கிறது. சுற்றுலா பயணிகள், மான்களை தங்களின் வனத்திலேயே பார்த்து மகிழலாம். இந்த உலகத்தின் தொடர்பிலிருந்து சில நாட்கள் விடுபடவேண்டுமென்றால் காட்டுக்குள் இதற்காகவே மரவீடுகள் இருக்கின்றன.

Thenmalai

Photo Courtesy : Wikipedia

செங்கோட்டையிலிருந்து புனலூருக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

செங்கோட்டையிலிருந்து மீட்டர் கேஜ் ரயில்கள் இயக்கப்பட்டன. இப்போது அகலப்பாதைக்கான வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

தளபதி படத்தில் வரும் முதல் ரயில் காட்சிகள் எல்லாம் இங்கு தான் படமாக்கபட்டது.

Read more about: shenkottai thenmalai punalur
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X