Search
  • Follow NativePlanet
Share
» »புதிதாக கல்யாணம் ஆனவர்களா நீங்கள் – இந்த இடங்களுக்கு ஹனிமூன் சென்று வாருங்கள், இப்போ இதுதான் ட்ரெண்டு!

புதிதாக கல்யாணம் ஆனவர்களா நீங்கள் – இந்த இடங்களுக்கு ஹனிமூன் சென்று வாருங்கள், இப்போ இதுதான் ட்ரெண்டு!

மூடுபனி மூடிய மலைவாசஸ்தலங்கள் முதல் ஆர்பரித்து கொட்டுகின்ற நீர்வீழ்ச்சிகள் வரை, அமைதியான ஏரிகள் முதல் துடிப்பான தேயிலை தோட்டங்கள் வரை, வளமான கலாச்சார பாரம்பரியத்தின் நிலமாக காட்சியளிக்கிறது நம் இந்தியா. இந்தியாவில் மழைக்காலம் என்பது ஒரு வித அன்பு நிறைந்த மனதை மயக்கும் உணர்வைத் தருகிறது, இது தம்பதிகளுக்கு மறக்க முடியாத பயணங்களைத் தொடங்க சிறந்த நேரமாக அமைகிறது. இந்த நேரத்தில் உங்கள் துணையுடன் கீழே உள்ள இடங்களுக்கு சென்று வாருங்களேன்!

1

மூணாறு, கேரளா

மூணாரின் பசுமையான தேயிலை தோட்டங்கள் மற்றும் மூடுபனி மூடிய மலைகளுக்கு மத்தியில் பருவமழையின் மந்திரத்தை அனுபவிக்க இது ஒரு அருமையான வாய்ப்பாகும். பசுமையான பள்ளத்தாக்குகள் வழியாக கைகோர்த்து நடந்து, சூடான தேநீர் கோப்பைகளை ருசித்து, தூறல் மழை உங்களுக்கும் உங்கள் துணைக்கும் ஒரு நெருக்கமான சூழலை உருவாக்கை மூணாறு செல்லுங்கள்.

2

மஹாபலேஷ்வர், மகாராஷ்டிரா

மஹாராஷ்டிராவின் பசுமையான மேற்கு தொடர்ச்சி மலைகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் மஹாபலேஷ்வர் ஒரு அழகான மலைவாசஸ்தலம் ஆகும், இது மழைக்காலத்தில் இன்னும் வசீகரிமாக காட்சியளிக்கிறது. தம்பதிகள் பனிமூட்டமான சூழலில் மூழ்கி, அழகிய காட்சிகள், அருவிகள் மற்றும் பசுமையான பள்ளத்தாக்குகளை ஆராயலாம். இந்தியாவில் மழைக்காலத்தில் பார்க்க வேண்டிய குறைந்த பட்ஜெட் தேனிலவு இடங்களில் இதுவும் ஒன்றாகும்.

3

குடகு, கர்நாடகா

"இந்தியாவின் ஸ்காட்லாந்து" என்று அழைக்கப்படும் கர்நாடகாவில் அமைந்துள்ள குடகு, மழைக்காலத்தில் அழகிய சொர்க்கமாக மாறுகிறது. காபி தோட்டங்களில் உலாவி, விழும் நீர்வீழ்ச்சிகளின் கீழ் நனைந்து, வசீகரமான ஹோம்ஸ்டேகளில் உல்லாசமாக இருங்கள். இந்த பசுமையான புகலிடத்தின் காதல் உணர்வில் நீங்களும் உங்கள் துணையும் நிச்சயம் மூழ்கிவிடுவீர்கள்.

4

கொடைக்கானல், தமிழ்நாடு

தமிழ்நாட்டின் அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் மறைந்திருக்கும் கொடைக்கானல், இந்தியாவில் மழைக்கால தேனிலவு இடங்களில் முக்கிய இடத்தில் உள்ளது. பனிமூட்டமான வளிமண்டலம், குளிர்ந்த காலநிலை மற்றும் அழகிய நிலப்பரப்புகள் ஆகியவை தேனிலவுக்கு சிறந்த இடமாக அமைகிறது. தம்பதிகள் அமைதியான கொடைக்கானல் ஏரியில் படகு சவாரி செய்து மகிழலாம், பசுமையான நிலப்பரப்பு வழியாக பயணித்து, மயக்கும் தூண் பாறைகளை அடையலாம் மற்றும் வெள்ளி அருவியின் அழகில் மகிழலாம்.

5

டார்ஜிலிங், மேற்கு வங்காளம்

வலிமைமிக்க இமயமலையின் மடியில் அமைந்திருக்கும் மேற்கு வங்காளத்தில் உள்ள டார்ஜிலிங் இயற்கையை விரும்பும் தம்பதிகளுக்கு சொர்க்கமாக விளங்குகிறது. கம்பீரமான காஞ்சன்ஜங்கா மலையை மேகங்கள் பார்த்துக் கொண்டே ஒரு கோப்பை டார்ஜிலிங் தேநீரைப் பருகுவது வேறு எதிலும் இல்லாத ஒரு காதல் அனுபவம். பொம்மை ரயில் பயணத்தை ஆராய்வது, மடாலயங்களுக்குச் செல்வது மற்றும் மால் சாலையில் நிதானமாக நடப்பது ஆகியவை மயக்கும் டார்ஜிலிங் தேனிலவை நிறைவு செய்கின்றன.

6

வயநாடு, கேரளா

புதிதாக திருமணமான தம்பதிகள் இயற்கை அழகுக்கு மத்தியில் ஒருவரையொருவர் கண்டறிய சிறந்த இடங்களுள் ஒன்று. வயநாடு நீர்வீழ்ச்சி, பொங்கி வழியும் ஆறுகள் மற்றும் மூடுபனி நிறைந்த காலைப் பொழுதில் குறைவதில்லை, குறிப்பாக மழைக்காலங்களில் தேனிலவு கொண்டாடும் சுற்றுலாப் பயணிகளுக்கு இது ஒரு அழகிய இடமாக அமைகிறது.

7

பஹல்காம், ஜம்மு & காஷ்மீர்

இமயமலை மலைகளுக்கு மத்தியில் அமைந்துள்ள பஹல்காமின் அழகிய பள்ளத்தாக்குகளில் பருவமழைக் காதல் அனுபவத்தைப் பெற ஒரு அருமையான வாய்ப்பை வழங்குகிறது. பாய்ந்து செல்லும் லிடர் ஆற்றின் அருகே காதல் நடைப்பயிற்சி மேற்கொள்ளுங்கள், அழகிய நிலப்பரப்புகளில் குதிரை சவாரி செய்து மகிழுங்கள், இயற்கையின் அமைதியான அழகால் சூழப்பட்ட வினோதமான குடிசைகளில் சௌகரியமாக இருங்கள்.

8

ஆலப்புழா, கேரளா

கிழக்கின் வெனிஸ் என்று அன்புடன் அழைக்கப்படும் கேரளாவின் ஆலப்புழாவின் படகுகளில் சௌகரியமாக தங்குவது, உப்பங்கழி மற்றும் பசுமையான இயற்கை காட்சிகளால் சூழப்பட்டுள்ள இடங்களை ஆராய்வது உங்கள் தேனிலவின் சிறப்பம்சமாக இருக்கும். மழைக்காலங்களில், ஆலப்புழா ஒரு சொர்க்கமாக காட்சியளிக்கிறது, ஏனெனில் மழை பச்சை தோட்டங்கள் மற்றும் டர்க்கைஸ் கடற்கரைகளின் நிறத்தை மேம்படுத்துகிறது.

More News

    Read more about: travel guide
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+