உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டதா... என்ன புதுமாப்பிள்ளையா நீங்கள்.. திருமணத்துக்கு பிறகு உங்கள் மனைவியுடன் முதல் சுற்றுலாவை வெளிநாட்டில் கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டு நேரமின்மை காரணமாக கைவிட்டுவிட்டீர்களா.. செலவும் ஒரு பிரச்சினைதானே..
என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என அன்றே சொல்லிவிட்டனர் பெருமக்கள். பின்னர் வெளிநாடு போகமுடியாத கவலை எதற்கு.. உங்கள் மனைவியுடன் நேரத்தை செலவிட தனிமையாக ஒரு பிரதேசம் செல்லலாம். குறைந்த செலவில்.. நம் இந்தியாவில்...
ஏற்கனவே தேனிலவு சென்றுவந்தவர்கள் இந்தியாவிலுள்ள இந்த பகுதிகளுக்கு மீண்டும் தேனிலவு செல்லுங்கள். மாறுபட்ட அனுபவத்தைப் பெறலாம்.. முயற்சியுங்கள்...
இவை எப்போதும் உங்கள் தேனிலவு நாட்களை நெஞ்சில் நிலைத்திருக்கச் செய்யும்.

இலட்சத்தீவு
இலட்சத்தீவில் உள்ள மற்றொரு குட்டித் தீவு காத்மண்த். சுமார் 9 கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட இந்த அழகிய தீவு கடற்கரையை விரும்புபவர்கள், கடலில் விளையாடும் விரும்பமுள்ளவர்களும் மற்றும் தனிமை விரும்பிகளும் தேனிலவு செல்ல சிறந்த இடமாக அமையும்.
PC: Thejas

ஷிம்லா
தேனிலவுக்கெனவே நேர்ந்துவிட்டதொரு பிரதேசம் ஷிம்லா. மலையின் மீது அமைந்துள்ள நகரம்.
முற்றிலும் சிலுசிலுவென காற்று வீச உங்கள் துணையுடன் நீங்கள் ஆடி மகிழ சிறப்பான தருணத்தை இயற்கை அமைத்துத் தரும்.
கால்கா - ஷிம்லா ரயிலில் பயணம் செய்யும் வாய்ப்பை தவறவிடாதீர்கள்.
PC: Devashish

வயநாடு
வயநாடு மாவட்டத்திலேயே உயரமான சிகரமாக கருதப்படும் செம்பரா சிகரம் கடல் மட்டத்திலிருந்து 2100 மீட்டர் உயரத்தில் அமைந்திருக்கிறது. இந்த சிகரம் சாகச பிரியர்களின் விருப்பமான பகுதியாக விளங்குவதால் இதன் உச்சியில் எண்ணற்ற டிரெக்கிங் முகாம்களை நீங்கள் பார்க்கலாம்.
அதுமட்டுமல்லாமல் மாவட்ட சுற்றுலா மேம்பாட்டு கவுன்சிலே பயணிகளுக்கு தேவையான மரக் குடில்கள், காலணிகள், டிரெக்கிங் உபகரணங்கள் போன்றவற்றை வழங்கி வருகிறது.
PC: Samadolfo

குன்னூர்
கோயம்புத்தூரில் இருந்து ஊட்டி செல்லும் ஏறி வழியில் குன்னூரில் இறங்கிக் கொள்ளலாம். கோயம்புத்தூரில் இருந்து குன்னூர் செல்ல மூன்றரை மணி நேரம் பயணம் செய்ய வேண்டும்.
அழகிய காட்சிகள், சுற்றிப்பார்க்க பல இடங்கள், சாக்லேட்டுகள், தேயிலைத் தோட்டங்கள் மற்றும் இனிமையான காலநிலை போன்றவை குன்னூரை சுற்றுலாப் பயணிகள் மற்றும் தேனிலவுத் தம்பதிகள் அதிகம் நாடி வரும் இடமாக செய்துள்ளது.
PC: Thankaraj kumaravel

கோவா
கோவா ஒரு சுற்றுலாத் தலமாக அற்புதமான விடுமுறை கால கொண்டாட்டமாகவும், அடைவதற்கு சுலபமான இடமாகவும் இருக்கிறது. இந்த நகரத்தை தேடி உலகம் முழுவதிலுமிருந்து வரும் பயணிகள், இரவு விடுதி மற்றும் கடற்கரைகளை தாண்டி கோவாவில் காணக்கூடிய சுதந்திரத்தையும், குழப்பமான வீதிகளையும், நகரின் வெப்பநிலையையும், அங்கங்கு ஒட்டிக் கொண்டிருக்கும் இந்தியத்தன்மையையுமே பெரிதும் விரும்புகின்றனர்.
PC: Ian D. Keating

மணலி
பியாஸ் ஆற்று பள்ளத்தாக்கில் உள்ள மணலி என்னும் இடம் இந்தியாவில் இமாச்சலப் பிரதேச மலைகளில், குலு வாலியின் வடக்கு முனைக்கு அருகில் உள்ள ஒரு முக்கியமான மலை சுற்றுலாத் தலம் ஆகும்.
பனிச்சறுக்கு, ஹைகிங், மலையேற்றம், பாராகிளைடிங், ராப்டிங், ட்ரெக்கிங், கயாகிங், மற்றும் மலை பைக் ஓட்டம் ஆகிய துணிகர விளையாட்டுகளுக்கும் புகழ்பெற்றிருக்கிறது. யாக் ஸ்கையிங் என்பது இந்த பகுதிக்கென சிறப்பாக புகழ்பெற்றதாகும்.[4]. அதன் "தீவிரமான யாக் விளையாட்டுகளுக்காக" டைம் இதழின் "ஆசியாவின் சிறந்த இடங்கள்" பட்டியலிலும் மணாலி இடம்பெற்றுள்ளது.[4] வெந்நீர் ஊற்றுகள், மத வழிபாட்டுத் தலங்கள் மற்றும் திபெத்தின் புத்த ஆலயங்கள் ஆகியவையும் மணலியில் உள்ளன.
PC: Sreehari Sukumaran

அந்தமான் நிகோபார்
வங்காள விரிகுடாவில் அமைந்திருக்கும் அந்தமான் நிகோபார் தீவுகள் இந்தியாவில் தேனிலவு செல்ல மிகச்சிறந்த இடமாக கருதப்படுகிறது. இங்கிருக்கும் வெள்ளை மணல் கடற்கரைகள், பசுமையான மாங்குரோவ் காடுகள், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழமையான கட்டிடங்கள், ஸ்கூபா டைவிங் செய்ய ஏற்ற கடல் பகுதிகள் என எல்லாவிதமான அனுபவங்களையும் நமக்கு தரக்கூடியவை இந்த அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகும். குறைவான செலவில் அருமையான தேனிலவுக்கு நீங்கள் தாரளமாக அந்தமான் வரலாம்.

ஸ்ரீநகர்
ஜீலம் நதிக்கரையில் அமைந்துள்ள ஸ்ரீநகர் அழகிய ஏரிகள், படகு வீடுகள் மற்றும் கண்கவரும் வகையில் அமைந்துள்ள எண்ணற்ற முகலாய தோட்டங்கள் ஆகியவைகளுக்காக மிகவும் புகழ் பெற்ற நகரமாகும். இங்கு மிகவும் பிரசித்திபெற்ற தால் ஏரியில் உள்ள ஷிக்கரா எனும் படகு வீடுகள் காதல் விளையாட்டுக்காகவே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டதாகும்
PC: Basharat Alam Shah

தாஜ்மஹால்
ஷாஜஹான் என்னும் முகலாய மன்னன் தன் மனைவி மும்தாஜின் பிரிவை தாங்க முடியாமல் அவளுக்காக எழுப்பிய காவியம், தாஜ்மஹால். காதலின் சின்னமாக கருதப்படும் தாஜ்மஹால் உலக அதிசயம் என்றால் அந்தத் தாஜ்மஹாலின் கட்டிடக்கலை பற்றிய செய்திகள் நம்மை வியப்பில் ஆழ்த்தும்.
இங்கிருந்து பார்த்தால் ஆக்ரா கோட்டையின் ஒரு பகுதி தெரியும். கோட்டையின் நீண்ட சுவர்களும், அங்குள்ள வெள்ளை கோபுரங்களும் மிக அற்புதமாக இருக்கும்.
தாஜ்மஹால் உங்கள் மனைவியுடன் செல்ல சிறப்பான பகுதியாகும்.
PC: jit bag

உதய்ப்பூர் கோட்டை
காதலி அல்லது மனைவியுடன் செல்ல உதய்ப்பூர் கோட்டை சிறப்பான இடமாக இருக்கும். அதுவும் இந்த ஜனவரி மாதத்தில் குளிர்ந்த தென்றல் இதமாக வீச உங்கள் காதல் அரும்பும் தருணத்தை நீங்கள் அனுபவித்து பாருங்கள். நல்ல அனுபவமாக இருக்கும்.
PC: Edwin poon

நைனிடால்
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மிகவும் ரம்மியமான மலைத்தலம் நைனிடால்.
தேனிலவு தம்பதிகளுக்கான மிகச் சிறந்த இடமாக நைனிடால் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம்.
மனதைக் கொள்ளை கொள்ளும் ஏரிகளும் ரம்மியமான இயற்கை காட்சிகளும் படகு சவாரியும் உங்கள் தேனிலவு பயணத்தைச் சிறப்பானதாக மாற்றும்.
PC: Arjun Singh Kulkarni

டல்ஹௌசி
ஹிமாச்சல பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ல டல்ஹௌசி கண்களுக்கு குளிர்ச்சியான இயற்கை காட்சிகள் நிறைந்திருக்கும் ஓரிடமாகும்.
ஆப்பிள் தோட்டங்கள், பசுமையான புல்வெளிகள், ட்ரெக்கிங் செல்ல தகுந்த மலைப்பாதைகள் என தனிமையை விரும்பும் ஜோடிகளுக்கு மிகச்சிறந்த இடம் இந்த டல்ஹௌசி.
PC: Rachitplah27

குமரகோம்
வேம்பநாடு ஏரியின் பின்புறத் தோற்றத்தில், குமரகோம் மிக அழகாக காட்சியளிக்கும். கேரளாவின் மிகப் பரந்த ஏரியான வேம்பநாடு, கோட்டயம் அருகில் அமைந்துள்ளது.
இந்த நதியில் பயணம் செய்வது அலாதியான பிரியமாக இருக்கும். உங்கள் மனைவியுடன் இந்த நதியில் படகில் சென்று ஆனந்தத்தை அனுபவியுங்கள்.
PC: ponnana saichandra

ஜோத்பூர்
பழமையான இடங்கள், கட்டடக்கலைக்கு பெயர் பெற்ற கோட்டைகள் ராஜஸ்தானின் இரண்டாவது பெரிய நகருக்கு பெருமை சேர்க்கிறது.
சூரிய நகரம் என்று அழைக்கப்படும் இந்நகரம் வருடம் முழுவதும் வெய்யில் கொளுத்தும் நகரமாக உள்ளது. எனினும் உங்கள் மனைவியுடன் இந்த மாதத்தில் செல்வதாயின் வெயில் குறைந்து நல்ல கனிவான சூழலை உருவாக்கித் தரும் இயற்கைமயமான ஜோத்பூர் நகரத்தில்....
PC: A Vahanvati

மைசூர்
கர்நாடக மாநிலத்தின் கலாச்சார தலைநகரம் மைசூரு. ராஜ கம்பீரத் தோற்றம் இதனை புகழ்பெறச் செய்கிறது. குளுமையான சூழ்நிலையும், பழைமைவாய்ந்த கட்டடங்களும் இங்கு வரும் பயணிகளின் மனதை குதூகலப்படுத்துகின்றன.
PC: Jim Ankan Deka

ஜெய்ப்பூர்
பிங்க் சிட்டி என்றழைக்கப்படும் ஜெய்ப்பூர் ராஜஸ்தானின் முதல் பெரிய நகரமாகும்.
ஆக்ரா மற்றும் டெல்லியுடன் இணைந்து தங்க முக்கோண தரிசனம் சுற்றுலாவை தருகிறது இந்த ஜெய்ப்பூர்.
PC: Knowledge seeker

முசோறி
பசுமையான மலைத் தொடர், வண்ண வண்ண பூக்கள் நிறைந்த முசோறி உத்தரகாண்ட் மாநிலத்தின் டேராடூன் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
உங்கள் மனைவியுடன் சுற்றுலா செல்ல ஏற்ற இடமாக இது அமைந்துள்ளது.
PC: Rajatvash

ஷில்லாங்
மேகங்களின் ஊர்வலம் நடத்தும் ஷில்லாங் மேகலாயா மாநில தலைநகராகும். அன்பின் சொர்க்கபூமியான இது எப்போதும் பசுமையாக காட்சியளிக்கும்.
PC: ChanduBandi

டையூ
யூனியன் பிரதேசமான டையூ அரபிக்கடலோரத்தில் அமைந்துள்ளது.
கணவன் மனைவி தனிமையாக பொழுதைக் கழிக்க ஏற்ற இடமாக உள்ளது டையூ
PC: Rashmi.parab

ஜம்மு மற்றும் காஷ்மீர்
ஜம்மு மற்றும் காஷ்மீரின் தலைநகரமான ஸ்ரீநகர் இந்தியாவின் சுவர்க்க பூமி என்று அழைக்கப்படுகிறது.
லஸ் பள்ளத்தாக்கு, ஸ்ப்பார்க்கிளிங் ஏரி, மிக உயரமான அழகான மலைச்சிகரங்கள் என நீங்கள் எப்போதும் உங்கள் தேனிலவை நினைவில் கொள்ளும்படியான பல இடங்கள் இங்கு உண்டு.
PC: Sujit Mahapatra

கூர்க்
கர்நாடக மாநிலத்தின் முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான கூர்க் மிக முக்கியமானது.
மிகச்சிறிய மலைப்பகுதியாக இருந்தாலும் கொடைக்கானலைப் போன்று அழகான பகுதி.
இதனை இந்தியாவின் ஸ்காட்லாந்து என்றும் அழைக்கப்படுகிறது.
PC: Sami Taipale

ஜெய்சல்மர்:
உங்கள் ஹனிமூனை மிக காஸ்ட்லியாக மாற்றிக் கொள்ள விரும்பினால் அதற்கு மிகச் சிறந்த தேர்வு ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள ஜெய்சல்மர் தான்.
பல வரலாற்று நினைவுகளைக் கொண்ட மிக கம்பீரமான,அழகான நகரம் இது.
இங்கு யானை சவாரி, ஒட்டகச்சவாரி ஆகியவற்றின் மூலம் உங்கள் துணையை குஷிப்படுத்த முடியும்.
இதைத்தவிர இங்கு மவுண்ட் அபு, ஜெய்ப்பூர், உதய்ப்பூர் என ஏராளமான தேனிலவு சுற்றுலாத் தளங்கள் உள்ளன என்பது குறிப்படத்தக்கது.
PC: Daniel Mennerich

கொச்சின்:
கேரள உள்ள சுற்றுலாத் தளங்களில் மிக முக்கியமானது கொச்சின்.
இங்குள்ள படகு வீடு ஒன்றே போதும் உங்களுடைய தேனிலவை இனிக்கச் செய்ய.
திரும்பிய பக்கமெல்லாம் தண்ணீரும் ஏரிகளும் தென்னை மரங்களும் இயற்கையான சூழ்நிலையே சூழ்ந்திருக்கும்.
இதை இயற்கை அன்னையின் இருப்பிடம் என்று கூட கூறலாம். தனிமையை விரும்பிகளுக்கும் இங்கு ஏராளமான இடங்கள் சுற்றிப் பார்ப்பதற்கு உண்டு.
PC: christian



Click it and Unblock the Notifications



