» »என்னங்க சொல்றீங்க! இந்த மாதிரி இடங்கள் கூட இந்தியாவுல இருக்கா?

என்னங்க சொல்றீங்க! இந்த மாதிரி இடங்கள் கூட இந்தியாவுல இருக்கா?

Written By: Udhaya

என்னதான் மனிதன் அறிவுள்ளவனாகவும், திறமையும், பலமும் கொண்டிருந்தாலும் இயற்கையை எப்போதுமே வெல்ல முடியாது என்பதற்கு ஏராளமான உதாரணங்கள் இருக்கின்றன. என்னதான் பிரமிடுகளும், தாஜ்மஹால்களும் மனிதனால் கட்டப்பட்டாலும் இயற்கை நிகழ்த்தும் அதிசயங்கள் நம் கற்பனைக்கும் எட்டாதவை. அப்படித்தான் இந்தியாவில் இயற்கை அன்னை தன அதிசயங்களை நிகழ்த்தும் இடங்கள் சில இருக்கின்றன. வாருங்கள் அவை என்னென்ன என தெரிந்து கொள்வோம்.

ரான் ஆப் கட்ச்

ரான் ஆப் கட்ச்

குஜராத் மாநிலத்தில் தார் பாலைவனத்தை ஒட்டி இருக்கும் ரன் ஆப் கட்ச் மனிதர்கள் வசிக்கும் தன்மையற்ற ஒரு உப்புப் பாலைவனமாகும். இந்த இடத்தில் ஒரு பெரிய ஏரி இருந்ததாகவும் இந்தியாவை படையெடுத்து வருகையில் அலெசாண்டரின் படைகள் அந்த ஏரியை கடந்து இந்தியாவினுள் பிரவேசித்ததாகவும் குறிப்புகள் இருக்கின்றன. ஆனால் வெப்பம் அதிகரித்த காரணத்தினால் முழுவதும் வற்றிபோய் உப்பு படிமானங்கள் மட்டுமே இன்று எஞ்சி இருக்கின்றன. ஆர்டிக் பனிப்பிரதேசங்களில் நிகழ்வது போன்ற ஒளி மாயாஜாலம் இங்கும் இரவு நேரங்களில் நடைபெறுகிறது. இதைதான் சிர் பட்டி அதாவது பேய் ஒளி என மக்கள் விழிக்கின்றனர். பெரும்பாலும் இரவு 8 மணிக்கு மேலே இது நடைபெறுகிறதாம். அமானுஷ்ய விஷயங்களை புகைப்படம் எடுக்க நினைப்பவர்கள் நிச்சயம் இங்கே வரவேண்டும்.

photo: anurag agnihotri

 எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

சாலை வழியாக

மாநிலப் போக்குவரத்து பேருந்துகள் மற்றும் தனியார் நிறுவனப் பேருந்துகள் மூலம் புஜ் நகரை எளிதாகவும், வசதியான முறையிலும் அடையலாம். சாய்வான படுக்கைகளைக் கொண்டிருப்பதனால் மிக வசதியான பயணத்தை வழங்கக்கூடிய தனியார் ஸ்லீப்பர் பேருந்துகள் பல உள்ளன. அஹமதாபாத்திலிருந்து புஜ் வரை செல்லும் ஏராளமான நான்-ஸ்லீப்பர் சொகுசுப் பேருந்துகளும் காணப்படுகின்றன.


ரயில் வழியாக

புஜ் எக்ஸ்பிரஸ் மற்றும் கட்ச் எக்ஸ்பிரஸ் ஆகிய இரு இரயில்கள் தினந்தோறும் புஜ் மற்றும் அஹமதாபாத் ஆகியவற்றுக்கு இடையே இயக்கப்படுகின்றன.

விமானம் வழியாக

தினந்தோறும் புஜ் மற்றும் மும்பை ஆகியவற்றுக்கு இடையே ஏராளமான விமானங்களை இயக்கும் விமான நிலையம் ஒன்று புஜ் நகரில் உள்ளது.

Superfast1111

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்


குட்ஜ் பகுதியிலிருந்த குதிர் என்ற தீவில் செய்யப்பட்ட அகல்வாராய்ச்சியில் ஹராப்பா நாகரீக கால ஆபரணங்கள் கண்டெடுக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆபரணங்களின் மூலம் பண்டைய இந்தியாவின் ஒரு பகுதியாக குட்ஜ் இருந்ததை இந்தப் பொருள்கள் நிரூபிக்கின்றன

புஜ் நகரின் ஹமீர்ஸர் ஏரியின் வடகிழக்கு மூலையில் அமைந்துள்ளதான அயினா மஹால் அல்லது "கண்ணாடிகளின் கூடம்", ஒரு அற்புதமான மாளிகையாகும். 18 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இது, தேர்ந்த கலைநுட்ப வல்லுநரான ராம் சிங் மாலம் என்பவரால், இந்திய-ஐரோப்பிய பாணிகளைத் தழுவி அற்புதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஷரத் பௌக், 1991-ஆம் ஆண்டில் கட்ச்சின் கடைசி மன்னரான மதன்சிங் இறக்கும் வரையில், அரச குடும்பத்தினரின் வசிப்பிடமாக இருந்துள்ளது. தற்போது அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு விட்ட இந்த பிரம்மாண்டமான அரண்மனை, அழகிய கலைப்பொருட்களை கொண்டிருப்பதோடு, பூக்கும் செடிகள் மற்றும் மருத்துவ குணம் கொண்ட செடிகளுடன் கூடிய அழகிய தோட்டத்தையும் தன்னகத்தே கொண்டுள்ளது.

புஜ் நகரின் தெற்குப் பகுதியில் சுமார் 22 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கேரா, சோலாங்கி ஆட்சியாளர்களின் காலத்தைய சிவன் கோயில் ஒன்றைக் கொண்டுள்ளது.

அருகிலுள்ள இடங்கள் பற்றி மேலும் தெரிந்துகொள்ள
Kaushik Patel

சிரபுஞ்சி

சிரபுஞ்சி


இந்தியாவின் தென் கிழக்கு மாநிலமான சிரபுஞ்சி உலகத்திலேயே அதிகம் மழை பொழியும் இடமாக இருக்கிறது. ஒரு வருடத்திற்கு இங்கு மட்டும் 425 செண்டி மீட்டர் மழைப்பொழிவு இருக்கிறது. உலகின் மற்ற பசுமையான இடங்களைக்காட்டிலும் இது 100% அதிகமாகும். எப்போதும் ஒரு விதமான சொதசொதப்புடனே காணப்படும் இந்த இடத்திற்கு முடிந்தால் ஒருமுறை சென்று பாருங்கள். ஏனென்றால் இது மாதிரி ஒரு இடம் உலகத்தில் வேறெங்குமே இல்லை.

ஸோஹ்ரா என்று உள்ளூர்வாசிகளால் அறியப்படும் சிரபுஞ்சி, மேகாலயா உலகம் முழுவதும் புகழ் பெற்றிருப்பதற்கான முக்கிய காரணங்களுள் ஒன்றாகும். பூமியின் ஈரப்பதமான பகுதியாக ஒரு காலத்தில் விளங்கிய சிரபுஞ்சி, மனம் மயக்கும் ஆற்றல் படைத்ததாகும். அலை அலையாக மேடு பள்ளங்களுடன் காணப்படும் மலைகள், ஏராளமான நீர்வீழ்ச்சிகள், வங்கதேசத்தின் நீள அகலங்கள் நன்றாக துலங்கும் பூரண காட்சி, மற்றும் உள்ளூர் மலைஜாதியினரின் வாழ்க்கைமுறையை கண்ணுறும் வாய்ப்பு போன்றவை சிரபுஞ்சி பயணத்தை நம் நினைவில் நீங்கா இடம் பெறச் செய்யக்கூடியவையாகும்.

photo: Alex M George

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்


சிரபுஞ்சி செல்வதற்கான முக்கிய போக்குவரத்து மார்க்கம் சாலை வழி போக்குவரத்தே ஆகும். சிரபுஞ்சி மற்றும் ஷில்லாங் ஆகியவற்றுக்கு இடையிலான தூரம் சுமார் 55 கிலோமீட்டர்கள் ஆகும். எனவே இங்கு செல்வதற்கு சுமார் 2 மணி நேரம் பிடிக்கும். மேகாலயா சுற்றுலாத்துறை, சிரபுஞ்சி செல்வதற்கு தினந்தோறும் ஒரு சுற்றுலாப் பேருந்து சேவையை இயக்குகிறது. இப்பேருந்து, சுற்றுலாப் பயணிகளை இங்கு உள்ள முக்கிய சுற்றுலா ஸ்தலங்களுக்கு இட்டுச் செல்கிறது.

குவஹாத்தி இரயில் நிலையமே சிரபுஞ்சிக்கு அருகாமையில் உள்ள இரயில் நிலையம் ஆகும். சிரபுஞ்சியிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்நிலையம் நாட்டின் மிகப் பரபரப்பான இரயில் நிலையங்களுள் ஒன்றாகும். இது இந்தியாவின் அனைத்து பகுதிகளுடனும் நன்கு இணைக்கப்பட்டுள்ளது. சுற்றுலாப் பயணிகள் இந்நிலையத்திலிருந்து சோஹ்ரா செல்வதற்கு வசதியாக நேரடி போக்குவரத்து சேவைகள் பல உள்ளன.

கொல்கத்தாவை இணைக்கக்கூடியதான ஷில்லாங்கிலுள்ள ஒரு விமான நிலையமே, சிரபுஞ்சிக்கு அருகாமையில் அமைந்துள்ள விமான நிலையம் ஆகும். எனினும், தற்போது இந்த விமான நிலையம் இயங்கும் நிலையில் இல்லை. அதனால், சுமார் 170 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குவாஹத்தி விமான நிலையமே சோஹ்ராவிற்கு அருகாமை விமான நிலையமாக செயல்பட்டு வருகிறது. குவாஹத்தி விமான நிலையத்திலிருந்து சிரபுஞ்சி செல்வதற்கு சுமார் நாலரை மணி நேரம் ஆகிறது.

Sayowais

 அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

சிரபுஞ்சிக்கு அருகில் உள்ள நோகலிகை நீர்வீழ்ச்சியே, இந்தியாவின் உயரமான முங்கு நீர்வீழ்ச்சியாகும். ஒவ்வொரு வருடமும் பெய்யும் அபரிமிதமான மழைப்பொழிவுக்கு பெயர் போன சிரபுஞ்சியில் அமைந்துள்ள இந்த நீர்வீழ்ச்சி, முக்கியமாக இந்த மழைகளிலிருந்தே அதன் நீர் வரத்தைப் பெறுகிறது. எனவே, டிசம்பர் முதல் பிப்ரவரி வரையிலான வறண்ட காலத்தின் போது, இதுவும் குறிப்பிடத்தக்க அளவு வறண்டு போய் காணப்படும். மிகச் சரியாக இந்த நீர்வீழ்ச்சியின் கீழ்ப்புறத்தில், நீலம் மற்றும் பச்சை நிறங்கள் பாரித்த நீர் நிறைந்த அழகிய முங்கு குளம் ஒன்று உருவாகியுள்ளது.

மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி, மேகாலயாவின் கண்கவர் நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றாகும். மௌஸ்மாய் கிராமத்துக்கு மிக அருகில் உள்ள இந்த நீர்வீழ்ச்சி, சிரபுஞ்சி செல்லும் வழியில் அமைந்துள்ளது. நோஸ்ங்கிதியாங் நீர்வீழ்ச்சி என்று உள்ளூரில் அறியப்படும் மௌஸ்மாய் நீர்வீழ்ச்சி, சுமார் 315 மீட்டர் உயரத்துடன், இந்தியாவின் நான்காவது உயரமான நீர்வீழ்ச்சிகளுள் ஒன்றாக இருப்பதனால் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இது, ஏழு சிறிய நீர்வீழ்ச்சிகளாகப் பிரிந்து, கடுமையான சுண்ணாம்புக் கல்லாலான செங்குத்தான பாறைகளின் வழியே பொங்கிப் பிரவகித்து ஓடும் அமைப்பைக் கொண்டு "ஏழு சகோதரிகளின் நீர்வீழ்ச்சி" என்றும் வழங்கப்படுகிறது.

நோங்சாவ்லியா, சோஹ்ராவிற்கு (சிரபுஞ்சி) அருகில் அமைந்துள்ள ஒரு மிகப் பிரபலமான சுற்றுலா ஸ்தலமாகும். வருடந்தோறும் இது உலகெங்கிலும் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளால் நிறைந்து காணப்படுகிறது. வடகிழக்கு இந்தியாவின் முதல் தேவாலயத்தைக் கொண்டிருக்கும் பெருமை வாய்ந்த இது, வெல்ஷ் மிஷனரிகளால் 1848 ஆம் ஆண்டில் நிர்மாணம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயர்களின் காலத்தின் போது விளங்கிய அழகிய கட்டுமான பாணியை, இந்த தேவாலயத்தின் வடிவில் தெளிவாகக் காணலாம்.

Rishav999

லாடாக்

லாடாக்


லாடாகில் இருக்கும் மிகப்பெரிய நகரமான லெஹ்இல் இருந்து 30கி.மீ தொலைவில் இருக்கிறது இந்த காந்த மலைகள். கடல் மட்டத்தில் இருந்து 14,000 அடி உயரத்தில் அமைந்திருக்கும் இங்கு அளவுக்கு அதிகமான அறிவியலாளர்களால் இன்றும் விளக்க முடியாத அளவு அதீத புவியிர்ப்பு ஷக்தி இருக்கிறது. இதன் காரணமாக நாம் வாகனங்களை இயக்கா விட்டாலும் 20 கி.மீ வேகத்தில் அவை நகர்கின்றன. அவைகளை நாம் பிடிகா விட்டாலும் கீழே விழுவதில்லை. மேலும் இந்த பகுதியின் மேல் பறக்கும் விமானங்களும், ஹெலிகாப்டர்களும் இந்த அதீத புவி ஈர்ப்பில் இருந்து தப்பிக்க கூடுதல் வேகத்துடனேயே பறக்கின்றன. லடாக்கிர்க்கு சுற்றுப்பயணம் செய்தால் இங்கும் தவறாமல் சென்று வாருங்கள்.

Photo: Rajesh

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

லடாக்கிற்கு ஜம்மு மற்றும் ஸ்ரீநகரில் இருந்து தரை வழியே வருவதற்கு வசதிகள் உள்ளன. ரொஹ்தங் பாஸ் வழியாக மணாலியிலிருந்து லடாக் செல்லும் பாதை ஜூலை முதல் செப்டம்பர் வரை திறந்து விடப்படும். சோஜி பாஸ் வழியாக ஸ்ரீநகரிலிருந்து லடாக் செல்லும் பாதை ஜூன் முதல் அக்டோபர் வரை திறந்திருக்கும். இந்த இரண்டு ரோடு தான் இந்த மூன்று நகரத்தையும் இணைக்கிறது. ஜம்மு & காஷ்மீர் போக்குவரத்து கழகமும் (JKSRTC) ஹிமாச்சல் போக்குவரத்து கழகமும் (HRTC) லடாக்கிற்கு தேவையான பேருந்து சேவைகளை அளிக்கின்றன. மேலும் பயணிகள் வாடகை கார் அல்லது ஜீப்களையும் பயன்படுத்தலாம்.

லேவிற்கு அருகில் இருக்கும் ரயில் நிலையம் ஜம்மு தாவி உள்ளன. இது லடாக்கிலிருந்து 712 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. ஜம்மு ரயில் நிலையத்திலிருந்து நாட்டிலுள்ள முக்கிய நகரங்களான புது டெல்லி, மும்பை, பூனே, சென்னை போன்றவைகளுக்கு ரயில் சேவை உள்ளது.

லடாக் விமான நிலையத்திலிருந்து மாநிலத்தின் முக்கிய நகரங்களுக்கு விமான சேவை உள்ளது. இருப்பினும் ஜம்மு விமான தளம் தான் ஜம்மு & காஷ்மீரில் உள்ள முக்கிய விமான தளம். இங்கிருந்து இந்தியாவிலுள்ள பல முக்கிய நகரங்களான டெல்லி, மும்பை, புனே, சென்னை போன்றவைகளுக்கு விமான சேவை உள்ளது. டெல்லியிலிருக்கும் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் மூலம் லடாக்கிற்கு வெளிநாட்டுப் பயணிகள் வந்து சேரலாம்.

Deeptrivia

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

உலகின் மிக முக்கியமான இரண்டு மலைத்தொடர்களான கரகோரம் மற்றும் இமயமலையின் நடுவில், கடல் மட்டத்தின் மேல் 3500 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ளது லடாக். கூடுதலாக, இணைத்தொடர்களான சன்ஸ்கர் மற்றும் லடாக், லடாக் பள்ளத்தாக்கை சுற்றி உள்ளது.

லடாக் என்பது ஆரம்ப காலத்தில் மூழ்கிய ஏரியின் ஒரு பகுதியாகவும், பின் சில புவிச்சரிதவியல் மாற்றங்களின் காரணமாக பள்ளத்தாக்காக மாறியது என்று நம்பப்படுகிறது.

தலைநகரமான லெஹ்ஹை தவிர லடாக்கிற்கு அருகாமையில் அல்ச்சி, நூப்ரா பள்ளத்தாக்கு, ஹெமிஸ், லமயுரு, சன்ஸ்கர் பள்ளத்தாக்கு, கார்கில், பன்கொங்க் சோ, சோ கர் மற்றும் சோ மோரிரி போன்ற சுற்றுலாத் தலங்கள் உள்ளன.


Mufaddal Abdul Hussain

 சுந்தரவனகாடுகள்

சுந்தரவனகாடுகள்


யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டு பாதுகாக்கப்படும் இந்த சுந்தரவனகாடுகள் மலைபூட்டும் அளவு தன்னுள் இயற்கையின் அற்புதங்களை தன்னுள் கொண்டிருக்கின்றன. இங்குதான் மிகவும் அரிதாகி வரும் ராயல் வங்கப்புலிகள் அதிகமாக வாழ்கின்றன. இந்தியாவில் வேறெங்கும் இல்லாத தாவர மற்றும் விலங்கினங்கள் இங்கே தழைத்து வாழ்கின்றன. இந்த காடுகளுக்குள் ஓடும் ஆற்றில் படகு மூலம் காட்டின் எந்த மூலையையும் அடைய முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

Photo: Prosenjit Das Neogi

எப்படி செல்லலாம்

எப்படி செல்லலாம்

கொல்கத்தாவிலிருந்து தினமும் தொடர்ச்சியான பேருந்து சேவைகள் சுந்தரவனக் காடுகளுக்கு இயக்கப்படுகின்றன. தினமும் பல்வேறு முறை இங்கிருந்து பேருந்துகள் கிளம்பிச் செல்கின்றன. கொல்கத்தாவிலிருந்து 100 கிமீ தொலைவில் இருக்கும் சுந்தரவனக் காடுகளுக்கு சுமார் 3 மணி நேர சாலை பயணத்தில் சென்று விட முடியும்.

கொல்கத்தாவின் ஹெளரா இரயில் நிலையத்துடன் சுந்தரவனக் காடுகள் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளது. ரயில் பற்றிய அறிவிப்புகளுக்கு இங்கு செல்லுங்கள்

100 கிமீ தொலைவில் இருக்கும் கொல்கத்தா விமான நிலையம் சுந்தரவனக் காடுகளுக்கு அருகில் உள்ளது. விமானம் தேர்வு செய்ய இங்கு செல்லுங்கள்

Soumyajit Nandy

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

உங்கள் வாழ்க்கையின் மறக்க முடியாத அனுபவத்தைத் தரும் இடமாக சுந்தரவனக் காடுகள் இருக்கும். மேலும், இந்த பகுதியில் உள்ள யுனெஸ்கோ-வின் பாரம்பரிய தலங்களில் ஒன்றாகவும் இது உள்ளது.

மிகவும் பெரிய மாங்குரோவ் காடுகளில் ஒன்றான சுந்தரவனக் காடுகள் சுமார் 4200 ச.கிமீ பரப்பளவிற்கு பரந்து விரிந்துள்ளது. இந்த காடுகளில் உலகத்திலேயே மிகவும் மோசமாக, அழிந்து வரும் உயிரினங்களில் ஒன்றான இந்தியப் புலிகளுக்கான காப்பகமும் உள்ளது.

சுந்தரவனக்காடுகளின் சூழலுக்கேற்ப, உப்பு நீரில் வாழ தன்னைத் தயார் படுத்திக் கொண்டு, கம்பீரமாக உலவிக் கொண்டிருக்கும் இந்தியப் புலிகளை காண வாய்ப்பு கிடைத்தால் நீங்கள் அதிர்ஷ்டசாலி தான்!

சுமார் 250 புலிகள் மட்டுமல்லாமல், சேட்டல் மான்களும் மற்றும் ரீசஸ் குரங்குகளும் வசிக்கும இடமாக சுந்தரவனக் காடுகள் உள்ளன. மேலும் இராஜ நாகம் மற்றும் வாட்டர் மானிடர் போன்ற மிகவும் விஷத்தன்மை வாய்ந்த பாம்புகளின் வசிப்பிடமாகவும் சுந்தரவனக் காடுகள் இருப்பதால், சற்றே எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியதும் அவசியம்.

Soumyajit Nandy

இமாலய மலைத்தொடர்கள்

இமாலய மலைத்தொடர்கள்

சில லட்சம் ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய இளமையான மலைகள் என்று அழைக்கப்படும் இமாலய மலைத்தொடர்களில் தான் உலகின் உயரமான சிகரங்கள் இருக்கின்றன. உலகின் மூன்றாவது உயரமான சிகரமும் இந்தியாவின் மிக உயர்ந்த சிகரமுமாக இருக்கும் கஞ்செஞ்சுங்கா இந்த ஹிமாலய மலைத்தொடர்களில் தான் அமைந்திருக்கிறது. இதிலிருந்து உற்பத்தியாகும் ஆறுகள் தன் உலகின் பாதி மக்கள் தொகைக்கு உயிர் ஆதாரமாக விளங்குகிறது. இதன் சாரில் தான் இந்தியாவின் மூன்றில் ஒரு பாதி மாநிலங்கள் இருக்கின்றன. ஏராளமான சுற்றுலாதலங்கலும், ஆன்மீக ஸ்தலங்களும் இருக்கின்றன. வாழ்வில் ஒருமுறையாவது இந்த ஹிமாலய மலைகளின் பேராற்றலை தரிசிக்க வேண்டும்.

Photo: Koshy Koshy

 எப்படி செல்லலாம்?

எப்படி செல்லலாம்?


ரிஷிகேஷ், டேராடூன், கோட்த்வாரா மற்றும் ஹரித்துவாரில் இருந்து மாநில அரசு பேருந்துகள் கோபேஸ்வருக்கு தொடர்ச்சியாக இயக்கப்பட்டு வருகின்றன. கோபேஸ்வரிலிருந்து கால்நடையாகவே ருத்ரநாத்திற்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும்.

ருத்ரநாத்தில் இருந்து 215 கிமீ தொலைவில் உள்ள ரிஷிகேஷ் இரயில் நிலையம் தான் மிகவும் அருகில் இருக்கும் விமான நிலையமாகும். இந்த இரயில் நிலையம் இந்தியாவின் முக்கியமான நகரங்களுடன் தொடர்ச்சியான இரயில் சேவைகளை பெற்றுள்ள இடமாகும். இரயில் நிலையத்திலிருந்து முன்பணம் செலுத்தி செல்லும் டாக்ஸிகளை வாடகைக்கு அமர்த்திக் கொண்டு கோபேஸ்வர் நோக்கி சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியும்.

230 கிமீ தொலைவில் உள்ள டேராடூனின் ஜாலி கிராண்ட் விமான நிலையம் ருத்ரநாத்திற்கு மிகவும் அருகிலுள்ள விமான தளமாகும். புது டெல்லியின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்துடன் தொடர்ச்சியான விமான சேவைகளால் இணைக்கப்பட்டுள்ள இடமாக இந்த விமான நிலையம் உள்ளது. இந்த விமான நிலையத்திலிருந்து 230 கிமீ தொலைவில் உள்ள கோபேஸ்வருக்கு செல்ல டாக்ஸி வசதிகளும் உண்டு.

shrimpo1967

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்

அருகிலுள்ள சுற்றுலாத் தளங்கள்


இந்தியாவின் வடபகுதியில் உள்ள இந்த உத்தரகண்ட் மாநிலமானது உலகெங்கிலுமிருந்தும் சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் அளவிற்கு பிரசித்தமான சுற்றுலா கேந்திரமாக புகழ் பெற்று விளங்குகிறது. ‘தேவர்களின் பூமி' என்றும் ‘பூலோக சொர்க்கம்' என்றும் அழைக்கப்படும் இந்த எழிற்பிரதேசத்தின் அழகு வாழ்நாளில் ஒருமுறை இந்தியர் அனைவரும் தரிசிக்க வேண்டிய ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை. உத்தரகண்ட் மாநிலம் வடக்கில் திபெத் நாட்டையும் கிழக்கில் நேபாள நாட்டையும் எல்லைகளாக கொண்டு அமைந்திருப்பதால் இந்திய புவியியல் அமைப்பில் ஒரு குறிப்பிடத்தக்க மாநிலமாகவும் விளங்குகிறது. இதன் வடமேற்கில் ஹிமாசலப்பிரதேச மாநிலம் மற்றும் தெற்கே உத்தரப்பிரதேச மாநிலம் ஆகியவை அண்டை மாநிலங்களாக சூழ்ந்துள்ளன. உத்தராஞ்சல் என்று அழைக்கப்பட்ட இந்த மாநிலம் 2007ம் ஆண்டு ஜனவரியில் இருந்து உத்தரகண்ட் என்று அதிகாரபூர்வமாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

Sundeep bhardwaj

Read more about: travel, india, gujarat, himalayas